Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜல்லிகட்டை தடை செய்யகோரி பீட்டா அமைப்பு மீண்டும் வலியுறுத்தல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வலியுறுத்தி பீட்டா விலங்குகள் நல அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பீட்டா அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ஆய்வறிக்கையில், இவ்வாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 மாடுகளும் உயிரிழந்தமையை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த போட்டிகளின் போது காளைகள் சுமார் 16 மணிநேரம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக உயிர்களுக்கு பாதுகாப்பற்ற இத்தகைய நிகழ்வுகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை …

  2. தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டன. மத்திய அரசின் தொழில்துறை அமைச்சகம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற விதியை பரிந்த…

  3. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குங்கள்... மு.க.ஸ்ராலின் அதிரடி..! மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்ராலின் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் மு.க.ஸ்ராலின் மரியாதை செலுத்தினார். அவருடன் தயாநிதி மாறன், அன்பழகன், சுப்பிரமணியன் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்ராலின், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழிசை கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என்பதை சுட்டிக்காட்டினார். மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந…

  4. ஏழு பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரும் முஸ்லிம் தலைவரான காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெயக்குமார் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆளுநரே அரசியலமைப்பின் தலைவர், அவரே எந்ததொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு அதிகாரமுடையவர். அந்தவகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளது. இத…

  5. நீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள். நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் ரிதுஸ்ரீயை தொடர்ந்து மற்றொரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டுகோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இரு தற்கொலை நிகழ்வுகளும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த இரு மாணவிகள் அடுத்தடுத…

  6. மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சை தத்தை எந்த அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்தார்களோ அதே விதிமுறையைப் பின்பற்றி பேரறிவாளனை விடுதலை செய்யவேண்டும் என்று அவரது தாயார் அற்புதம் அம்மாள் கோரியுள்ளார். சஞ்சய் தத்தை முன்கூட்டி விடுதலை செய்ய மத்திய அரசு இசைவு தெரிவிக்காதபோதும், மாநில அரசு முன்வந்து முன்கூட்டியே அவரை விடுதலை செய்தது என, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் தெரிவிக்கிறது என்கிறது பேரறிவாளன் தரப்பு. 1993ல் மும்பையில் நடந்த…

    • 1 reply
    • 715 views
  7. முகிலன் உயிரோடு இருக்கிறாரா?- தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் ‘சூழலியல் போராளி முகிலன் உயிரோடு இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்’ என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் முகிலன் மீட்பு கூட்டியக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது போராட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வந்த முகிலன், கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ‘கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?’ என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றைச் ச…

  8. கடும் எதிர்ப்புக்கு பின்னர் பணிந்தது மத்திய அரசு.. தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என அறிவிப்பு தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என திருத்தம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு தாய் மொழி , ஆங்கிலம் மற்றும் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.கஸ்தூரி ரங்கன் குழு: மூன்றாவது மொழியாக இந்…

  9. இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசை முன்னோடியாக எடுத்துகொண்டு, நாங்கள் நிறைய இரத்தத்தை தந்துவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் என்றே பிரபாகரனும் போராடுவதற்கு வந்தாரெனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, …

    • 4 replies
    • 1.5k views
  10. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னையில் போராட்டம் June 2, 2019 சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி, நேற்றையதினம் ; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிரேஸ்ட தலைவர் நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் என்னவென்பதைத் தெரிவிக்கும் வகையில் சில ஆதாரங்களை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பெப்ரவரி 15 ம்திகதி முதல் காணாமல் போயுள்ளார் முகிலன் காணாமல் போனது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள நிலையில் 17 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வ…

  11. மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. பகல் 2:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 347 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 88 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதனால், பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “மரியாதைக்குரிய அன்பு நரேந்திர மோடி அவர்களே, மனமார்ந்த வாழ்த்துகள். சாதித்துவிட்டீர்கள்... இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” …

  12. விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்! தனியன் தமிழக அரசியலில் கமலோ, சீமானோ விஜயகாந்த் அளவுக்குக்கூடச் செல்வாக்கில்லாதவர்கள் என்பதையே இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் காண்பித்திருக்கின்றன. விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். அடுத்த ஓராண்டில் (2006) அவரது கட்சி போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8.4% வாக்குகளைப் பெறுகிறது. அடுத்து அவர் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 10.3%. இதற்கு மாறாக இந்தத் தேர்தலில் சீமான் கட்சி பெற்ற வாக்குகள் 3.87%. கமல்ஹாசன் கட்சி பெற்ற வாக்குகள் 3.78%. இதே தேர்தலில் “மற்ற” கட்சிகள் 4.94% வாங்கியிருக்கின்றன. NOTAவுக்கு 1.28% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. …

  13. முன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் "டாக்டர்" கவிதா திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் ஒருவர் கணவருடன் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருகலைப்பு நடைபெறுவதாக எஸ்பிக்கு புகார் எழுந்தது. இதையடுத்து திருவண்ணாமலை முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த கடை உரிமையாளர் கவிதாவிடம் (32) போலீஸார் விசாரித்தனர். அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. அப்போது கடையில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் கருக்கலைப்பு செய்ய வந்ததாக கூறின…

    • 1 reply
    • 1.1k views
  14. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ‘சிங்கம்’ இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் சூர்யா மிகவும் ஸ்ட்ரிக் ஆபீஸராகவும் ரவுடிகளைப் பிடிப்பதில் அதிரடியும் காட்டி வருவார். அவரின் சிங்கம் கேரக்டர் போலவே நிஜத்திலும் ஒரு போலீஸ் உள்ளார். அண்ணாமலை என்ற அவரை அவரின் ரசிகர்கள் ‘சிங்கம் அண்ணாமலை’ என்றே அழைத்து வருகின்றனர். தமிழகத்தின் கரூரை சொந்த ஊராகக் கொண்ட அண்ணாமலை 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ் முடித்தார். தற்போது கர்நாடக மாநிலத்தின் துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து ரவுடிகள், சமூக விரோதிகளும் இவரது பெயரைக் கேட்டாலே அலறுவார்களாம். இதனால் கர்நாடகாவில் அண்ணாமலைக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், அவர் தற்போது தன் ஐ…

    • 0 replies
    • 1.2k views
  15. கல்வெட்டுல எம்.பி... இப்ப மத்திய அமைச்சர்... ஓபிஎஸ் மகன் ஆதரவாளர்களின் அமர்க்களம்! துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனும் தேனி எம் பி.யுமான ரவீந்தரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சடித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே தேனி அருகே கோவில் ஒன்றில் வைக்கப்பட்ட கல்வெட்டில் ரவீந்தரநாத்குமார் எம்.பி. குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் விவாதப் பொருளானது.இதையடுத்து சர்ச்சைக்குரிய கல்வெட்டை அமைத்தவர் கைது செய்யப்பட்டார். தற்போது எம்.பி.யாக வென்றுவிட்ட ரவீந்தரநாத்குமார் மத்திய அமைச்சரவையில் இடம்பெற பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருக்கு இணை அமைச்சர் பதவியாவது கிடைக்கும் என அவரது ஆதரவாளர…

  16. பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் …

  17. இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைத் தாண்டி வந்தமைக்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் விடுவிக்கக்கோரி குறித்த மீனவர்களின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நாளை காலை சந்தித்து மனுவொன்றை கையளிக்க உள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் குறித்த படகு மூழ்கியது. இந்நிலையில் படகிலிருந்த நான்கு மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து கடந்த 180 நாட்களாக யாழ்பாணம் சிறையில் வைத்தனர். இதையடுத்து க…

  18. நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்கள் எனச் சமமாக வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சி, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. பல தொகுதிகளில் 3, 4 இடங்களைப் பெற்றுள்ளனர் அக்கட்சியின் வேட்பாளர்கள். 2010ம் ஆண்டு கட்சி தொடங்கிய சீமான், 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றார். இந்த முறை இந்த விகிதம் உயரத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், தேர்தல் முடிவுகளால் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். சீமானிடம் பேசினோம். தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ``என்னத்த பார்க்கிறது... படித்த இளைஞர்களும் மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்தத் தேர்தலில் எங்களு…

    • 1 reply
    • 1.5k views
  19. இந்தியாவின் பாராளுமன்றத்திற்கான ( ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்) வாக்களிப்புகள் சில மாநிலங்களில் தொடங்கிவிட்டது தமிழகத்தில் வாக்களிப்பு வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ இந்திய அரசியல் ஆனது எமது அரசியலுடனும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது , இந்தியாவில் அமையும் அரசு தொடர்பாக உங்களின் எதிர்வுகூறல்களை பதியுங்கள் நன்றி

  20. ஆட்சிப் பீடத்தில் அமருவாரா ஸ்ராலின் !! கருணாநிதி நினைவிடத்தில் திடீரென அஞ்சலி செலுத்தி ஆசி வாங்கியதால் பரபரப்பு !! தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி இருந்து வந்தது. திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி மறைவுக்கும் பிறகு அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல். அதே போல் அதிமுகவும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற இந்த தேர்தல்களில் பதிவான வாக்குக்குள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில்,…

  21. மக்களவைத் தேர்தலில் மோடி அலையை கடந்தமுறை அதிமுக தடுத்து நிறுத்தியதுபோல் இம்முறை திமுக தடுத்து நிறுத்தியுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியா முழுவதும் வீசியது. மோடி அலையால் வெல்வோம் என மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்டோர் மெகா கூட்டணி அமைத்தனர். மறுபுறம் திமுக கூட்டணி தனியாகவும், அதிமுக தனியாகவும் இயங்கியது. அந்தத் தேர்தலில் மோடி அலை இங்கு ஒன்றும் செய்யாது, மோடி அல்ல இந்த லேடி என ஜெயலலிதா கர்ஜித்தார். சொன்னதைச் செய்தும் காட்டினார். இந்தியாவெங்கும் வீசிய மோடி அலை தமிழகத்தில் எழும்பவே இல்லை. அதிமுக 37 தொகுதிகளை வென்றது. பாஜக கூட்டணிக்கு 2 தொகுதிகள் கிடைத்தன. இம்முறையும் அதேபோன்று மெகா கூட்டணி அதைவிட வலுவாக அமைந்தது. அதிமுக, பாமக, தேமுதிக என வலுவான…

    • 3 replies
    • 1.2k views
  22. விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றங்கள், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகான தேர்தல், அரசியல் கட்சிகளிடம் பிளவு, கட்சிக் கூட்டணிகள் போன்ற பல காரணங்களால் தமிழ்நாட்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத சில கட்சிகள் மீதும் பலரின் கவனம் படிந்திருந்தது. குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் கவனம் பெற்றன. தேர்தல் அணுகுமுறை இரண்டு கட்சிகளுமே வெற்றி பெறுவதிலும், கணிசமான வாக்குகளை பெறுவதிலும்…

  23. புதிதாக உருவான கட்சிக்கு இது பெரிய சாதனைதான் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: "14 மாதங்களே ஆன குழந்தையை எழுந்து மக்கள் ஓட விடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை நம்பி நேர்மையாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்களுக்கும், எங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நான் வெற்றி வேட்பாளர்களாகவே பார்க்கிறேன். இவர்களுக்கு அற்புதமான ஒத்திகையையும், வரவேற்பையும் தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம் . எல்லோரும் எங்களை கொக்க…

  24. திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, புதிய சக்திகளாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் முடிவடைந்த தேர்தலில் கிடைத்துள்ள வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்தி உள்ளன. இரு கட்சிகளும் ஏறத்தாழ தலா 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஆளுக்கு 15 லட்சம், 16 லட்சம் என வாக்குகளைப் பெற்றுள்ளமையானது மிகப் பெரிய சாதனையாக நோக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியை இனவாத, தமிழ் தேசியவாத கட்சியாக மட்டுமே பலரும் பார்த்து வந்த நிலையில் தாம் உறுதியாகவே களத்தில் இருப்பதாக சீமானும், நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமானவர்கள் என மக்களும் இந்த தேர்தலில் …

  25. க.சே.ரமணி பிரபா தேவி க.சே.ரமணி பிரபா தேவி சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். மோடி ஆழிப் பேரலையைத் திடமாக எதிர்த்து நின்ற திமுக அலையும் அதிமுக எதிர்ப்பலையும் மட்டுமே இதற்குக் காரணமல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, சாதியம் வளர்க்காமல், சமூக நீதிக்கு ஆதரவாக நிற்கும் திருமாவளவன் என்ற பிம்பமும் இதற்கு முக்கியக் காரணம். தவறவிடாதீர் நகரவாசிகளையும் கொங்கு மண்டலத்தையும் ஈர்த்த மக்கள் நீதி மய்யம்; விஜயகாந்த் இடத்தில் கமல்? சிதம்பரம் தொகுதியில் 2011 மக்கள் தொகை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.