தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
தமிழ்நாட்டில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் January 19, 2019 தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுவதால் அதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியதில் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்ததுடன் சிலர் உயிரிழந்துமிருந்தனர். இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால் பன்றிக்காய்ச்சல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கி உள்ளதாகவும் தமிழ்நாட்டில் கடந்த முதலாம் முதல் 13ம் திகதி வரையான காலப்பகுதியில் 48 பேர் பன்றிக்காய்ச்சல…
-
- 0 replies
- 504 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் உலகின் இரண்டாவது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை சென்னையைச் சேர்ந்த டி குகேஷ் பெற்றிருக்கிறார். இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ், டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தபடி இருக்கும் குகேஷிடம் களைப்பின் சுவடே இல்லை. சுறுசுறுப்பாக, அதே நேரம் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சற்றுத் தள்ளியிருந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் குகேஷின் தந்தை ரஜினிகாந்த், "களைப்பாக இருக்கிறது. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறத…
-
- 2 replies
- 1.2k views
-
-
கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம் பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில் வசித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை (50). இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 16ம் திகதி 110 கிமீ வேகத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், செல்லத்துரையின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. புதிய வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதியில்லாத செல்லத்துரையின் குடும்பத்தினர், தங்குவதற்கு வேறு இடமின்றி அர…
-
- 0 replies
- 568 views
-
-
3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக். பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் விற்பனை அதிகம் ஆகும். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் பண்டிகையின் போது தீபாவளி பண்டிகையை விட கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் …
-
- 9 replies
- 2.4k views
-
-
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள். ராமநாதபுரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். இங்குள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவச் சமுதாயத்தினர் ஒவ்வோர் ஆண்டும் ஊர்க்கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட ஏழு …
-
- 0 replies
- 1k views
-
-
மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு… January 17, 2019 சென்னை மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு, ஆடம்பரமான விழா எதுவும் இல்லாமல் இன்று திறக்கப்பட்டுள்ளது அரச சார்பில் 2.52 கோடி ரூபா செலவில் இதன் பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்ஜிஆர் வளைவை திறக்கக்கூடாது குறித்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் வளைவை திறக்க தடை விதித்து பின்னர், ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஐந்து நிமிட நிகழ்ச்சியாக மெரினாவில் எம்.…
-
- 0 replies
- 673 views
-
-
எம்.ஜி.ஆரின், உருவம் பொறித்த சிறப்பு நாணயம்... முதல்வர் இன்று வெளியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். எம்.ஜி.ஆரின், 102வது பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்படும் உருவப்படத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர், மரியாதை செலுத்துகின்றனர்.மேலும், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. முன்னதாக, எம்.ஜி.ஆர் உருவம் பொதித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை ரிசர்வ் வங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜெயலலிதா. கொடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறையால் தில்லியில் கைதுசெய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மறுத்திருக்கிறது. காரணம் என்ன? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த வீடியோவில் பேசியிருந்த கே.வி. சயன், வாளையார் மனோஜ் ஆகியோர் தமிழக காவல்துறையால் தில்லியில் கைதுசெய்யப்பட்டனர். …
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னையில் கழிவுநீரை சுத்திகரித்து விநியோகிக்கும் நடவடிக்கை January 15, 2019 சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவை அதிகரித்துவரும் நிலையில், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடி ஏற்படுகின்ற நிலையில், கழிவுநீரை சுத்திகரித்து விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அனைத்துமே வறண்டுபோயுள்ளன. பெரும்பாலான காலங்களில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் சென்னைக் குடிநீர் வாரியம், நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து சோதனை முறையில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. …
-
- 0 replies
- 468 views
-
-
சென்னையில் இந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று காற்றுமாசு குறைவு January 15, 2019 சென்னையில் போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் மாசு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெகுவாகக் குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு பாடு அதிகரித்துவந்தது. மாசுபாட்டினால், ஓடுபாதை தெரியாத காரணத்தில் கடந்த சில ஆண்டுகளாக போகிப் பண்டிகை தினத்தன்று சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டதுடன் சில விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டு கடந்த ஆண்டினை விட காற்றுமாறு குறைவாக இருந்தத…
-
- 0 replies
- 405 views
-
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்…
-
- 8 replies
- 2.6k views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, "இந்த அவையிலே இன்றைய தினம் " உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்தத் தீர்மா…
-
- 0 replies
- 647 views
-
-
மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர் ! மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்களில்தான் வர்ணம் என்ற ஒன்றைத் திணித்துள்ளார்கள் என்று எண்ணவேண்டாம். மாடுகளிலும் பசு என்றால் உயர் வருணம்; எருமை என்றால் பஞ்சம - சூத்திர இனம் - பிறவியிலேயே அது கருப்பு என்ற நிலை இங்குண்டு. அதனால்தான் பசுவை மட்டும் ‘கோமாதா’ என்று கொண்டாடுகிறார்கள் - தூக்கி நிறுத்துகிறார்கள். வருண பேதம் எங்கிருந்தாலும் அதனை எதிர்க்க வேண்டியவர்களாகவே மனிதநேயர்களான நாம் உள்ளோம். இவ்வளவுக்கும் பசுவைவிட அதிக பால் கொடுக்கக்கூடியது எரும…
-
- 2 replies
- 1.5k views
-
-
சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பொங்கல் தினத்தை முன்னிட்டு, சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழா தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலேயே இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டதாக ஆட்சியர் ரோகிணி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி ஆத்தூர் கூலமேட்டிலும் 20 ஆம் திகதி கெங்கவல்லிலும், 21ஆம் திகதி நாகியம்ப்பட்டியிலும் 27 ஆம் திகதி தம்மம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்ட…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது... வாட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு. பெங்களூர்: மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்று கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார் .கர்நாடகாவில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேகதாது விவகாரத்தில், தமிழகத்தை ஆலோசிக்காமல், முடிவு எடுக்கப்படாது என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு எதிர்ப்பு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், 5,912 கோடி ரூபாய் செலவில், 66 டி.எம்.சி., கொள்ளளவு உடைய, புதிய அ…
-
- 0 replies
- 1k views
-
-
படத்தின் காப்புரிமை THE INDIA TODAY GROUP தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து கொலைகளுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சுமத்திய குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கொடநாடு கொலை - கொள்ளை குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பதவி விலகி முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் கூறியுள்ளனர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
நான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி சென்னை: கமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை ஷகீலா விருப்பம் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். கமல் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. இந்தக் கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன், இயக்குனர் அமீர் உள்பட நிறைய சினிமா பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். நேரடியாக கட்சியில் யாரும் உறுப்பினராக இல்லாவிட்டாலும், கமலுக்கு சினிமா உலகில் நிறைய சப்போர்ட் எப்போதுமே இருக்கிறது. பெரும்பாலும் யாரும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளனர். நடிகை ஷகிலா ஒருபக்கம் நடிகர்கள் நடிப்பில் கிடைக்கும் புகழை தக்க வைத்து கொள்ள சினிமாவில…
-
- 0 replies
- 559 views
-
-
சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் பறிமுதல் January 12, 2019 சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் பெறுமதியான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் இரு பெண்களையும் கைது செய்துள்ளனர். இன்று காலை ஹொங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த வேளையில் தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களின் பயணப்பொதிகளில் இருந்து குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரு பெண்களிடமும் அவர்கள் சென்னையில் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள் என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://globalt…
-
- 1 reply
- 573 views
-
-
மதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி! முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, ஜனவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக 160க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டை நடத்தியிருந்தனர். இந்தக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பத்திரிகையாளர்கள் சங்க அலுவலகக் கட்டடத்தில் இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 விழுக்காடு …
-
- 1 reply
- 1k views
-
-
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் : January 11, 2019 புகையால் பாதிப்பு ஏற்படுவதால் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் போகி பண்டிகை 14ம் திகதி கொண்டாடப்படவுள்ளநிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அதிக அளவு ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அளவு காற்றின் வேகம் காரணமாக சென்னை மாநகராட்சி…
-
- 0 replies
- 681 views
-
-
இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலம் January 11, 2019 ராமேஸ்வரத்தையும் தமிழகத்தின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலத்தைக் கட்ட இந்திய புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது. இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமையவுள்ள இந்தப் பாலத்துக்கு 250 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக 63 மீற்றர் நீளத்துக்குத் தூக்கு பாலம் அமைக்கப்படும் எனவும் இந்தப் பாலம் 18.3 மீற்றர்ர் நீளம் கொண்ட 100 ஸ்பான்களையும், 63 மீற்றர் நீளம் கொண்ட நவிகேஷனல் ஸ்பானையும் கொண்டிருக்கும் எனவும் இது தற்போதைய பாலத்தை விட மூன்று மீற்றர் அதிக உயரம் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவி…
-
- 0 replies
- 622 views
-
-
பொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம் ;1000 ரூபாய்க்கு ஆப்பு..!! பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றம் அந்த உத்தரவிற்கு தடைவிதித்துள்ளது. தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை வழங்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி இந்த பொங்கல் ப…
-
- 1 reply
- 863 views
-
-
ஐய்யப்பன் விரதமிருந்த 14 பேர் பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அருகே காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் காஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு ஒரு சுற்றுலா வானில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர், தமிழகம் வந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக ந…
-
- 0 replies
- 766 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் …
-
- 0 replies
- 1k views
-
-
படத்தின் காப்புரிமை Reuters தமிழக அரசு சரியான வாதங்களை முன்வைக்காததால்தான் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது என்று ஆலை எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டியும், அந்த ஆலையை மூட வலியுறுத்தியும் மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆலை எதிர்ப்புப் போராட்டம் ஒன்றின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பொதுமக்க…
-
- 0 replies
- 534 views
-