Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்த இடைக்காலத்தடை! நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கியதையடுத்து, இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவை மறு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், நியூட்ரினோ திட்டம் தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று(வெள்ளிக்கிழமை) நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலு…

  2. சிதம்பரத்தைக் காவலில் எடுக்க அமுலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல்… November 1, 2018 ஏர்செல் மக்சிஸ் வழக்கில் முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க அமுலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சட்டத்துக்குப் புறம்பாக, ஏர்செல் நிறுவனத்தில் 3.500 கோடி வெளிநாட்டு நிதிக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும் அமுலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்ற நிலையில் இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதி…

  3. மேல்முறையீடு இல்லை; தேர்தலை சந்திக்கிறோம்! தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள தினகரன், “20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை சந்திக்கத் தயார்” என்று அறிவித்துள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கடந்த 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார். இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் மதுரையில் தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டுக்குச் செல்வது குறித்து தினகரன் தரப்பினர் குழப்ப மனநிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. தங்களின் இறுதி முடிவை அக்…

  4. இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான ‘ட்ரெய்ன் 18’யின் சோதனை ஓட்டம் நிறைவு சென்னையிலுள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான ‘ட்ரெய்ன் 18’ இன் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை- பெரம்பூரிலேயே ‘ட்ரெய்ன் 18’ அறிமுக விழா நடைபெற்று, சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. குறித்த ‘ட்ரெய்ன் 18’, என்ஜின் இல்லாமல் இயங்கக் கூடியதாகவும் அதிவேக ரெயிலான சதாப்தியை விட 15 சதவிகிதம் பயண நேரத்தை குறைவாக்க கூடியதாகவும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்த ‘ட்ரெய்ன் 18’, 100 கோடி ரூபாய் செலவில் சென்னை- பெரம்பூரிலுள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ட்ரெய்ன் 18’ ரயில் தொடர்பாக பொறியாளர் உதயகுமார் கூற…

  5. கலைஞருக்குச் சிலை: மாநகராட்சி அனுமதி! மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவச் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்குச் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து கலைஞரின் நினைவாக அவரது 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை திமுகவின் தலைமை கழகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படும் என்று திமுகவினர் தெரிவித்து வந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் கலைஞரின் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திமுக தலைவர் ஸ…

  6. ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: டெல்லி ஹைகோர்ட் அதிரடி.ஆடிட்டர் குருமூர்த்து மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் கவுதம் நவாஸ்கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை விமர்சித்து ஆடிட்டரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான குருமூர்த்தி ட்விட்டரில் கருத்துப்பதிவு செய்திருந்தார்.அதில் நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கம் புகுத்தி கருத்து கூறினார். இதை அறிந்த டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குருமூர்த்து மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கிரிம…

  7. மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்: கமல்ஹாசன் இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை. ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மஹிந்த பிரதமராக வந்துள்ளமையால் அவர் தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று யாரும் எண்ண வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏனைய நாடுகளின் அரசியல் விவகாரத்தில் தலையீடு செய்வது சிறந்ததில்லையெனவும் கமல் சுட்டிக்காட்டியு…

  8. ஸ்டாலின் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.. அமைச்சர் பாண்டியராஜன் பகீர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இப்போது பாலியல் குற்றச்சாட்டுகள் சொல்லும் காலம் போலும்! மீ டூ விவகாரம் கடந்த ஒரு மாத காலமாகவே பரபரப்பாக போய்க் கொண்டிருகிறது. தமிழகத்தில் சின்மயி வைரமுத்து மேல் பாலியல் குற்றச்சாட்டை சொல்லி இதனை ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராக களம் இறங்கி புகார்களை பதிய ஆரம்பித்து விட்டார்கள்.மீடூதான் இப்படி காலில் சக்கரம் கட்டி சுழன்று வருகிறது என்றால் அதிமுக அமைச்சரின் பாலியல் சம்பந்தமான புகாரை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கொளுத்தி போட அ…

  9. சீனாவின் தூண்டுதலில் தான் மஹிந்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்: திருமாவளவன் சீனாவின் தூண்டுதலில் காரணமாகதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் தற்போதைய பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மஹிந்த இலங்கையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இனப்படுகொலை குற்றவாளியான மஹிந்த இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்க…

  10. ராஜபக்சே பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் – வைகோ அறிக்கை nilavanOctober 27, 2018 in: இந்தியா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத்தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி அதிபர் பொறுப்பிலிருந்த மகிந்த ராஜபக்சே என்பதை ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு ராஜபக்சே அரசு நடத்திய இன…

  11. இலங்கையில் அரங்கேறியுள்ள அரசியல் மாற்றம் ஒட்டுமொத்த தமிழர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின் இலங்கையில் அரங்கேறியிருக்கும் அரசியல் மாற்றங்கள் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ, தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை மத்திய அரசு செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவித்துவரும் ஏழ தமிழர் விடுதலை தள்ளிப் போவதும், இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா எனக் கேள்வியெழுப்பிய மு.க.ஸ்டாலின், தமிழ…

  12. இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்துள்ளதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: அன்புமணி ராமதாஸ் இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்திருப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்த போது, அவருக்கு இந்தியா வலிந்து சென்று உதவினாலும் அவர் சீனாவுக்கு மட்டு…

  13. என்னையும் எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது : நடிகர் ரஜினிகாந்த் என்னையும் எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அதன் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை வாழவைத்த அன்புத்தெய்வங்களான ரசிகர்களுக்கு என்று குறிப்பிட்டு “நான் கடந்த 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்றச் செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளைச் சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதிலுள்ள உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்…

  14. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும்: பன்னீர்செல்வம் 20 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை சபாநாயகர் உறுதி செய்து இருந்தார். சென்னை உயர்நீதிமன்றமும் நீதி வழங்கி இருக்கிறது. இதனால் தர்மம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வெற்றிடமாகவுள்ள 2 தொகுதிகளைச் சேர்த்து இப்போது 20 தொகுதிகள் காலியாகி விட்டது. இந்த தொகுதிகளில் இடைத்த…

  15. பா.ஜ.க.வின் தலைவர்கள் கிங் மாஸ்டர்கள்: தமிழிசை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகிய இருவரும், கிங் மாஸ்டர்கள் என, மாநிலங்களவை தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இருவரும் ரிங் மாஸ்டர்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் தெரிவித்த கருத்திற்கு நேற்று (புதன்கிழமை) பதில் கருத்து வழங்கிய அவர் மேற்படி கூறியுள்ளார். பா.ஜ.க.வின் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்பதற்கு முன்னாள், நான்கு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை தாம் பொறுப்பேற்ற பின்னர் 22 மாநிலங்களுக்கு விரிவுபடுத்திய கிங் மாஸ்டர்கள் குறித்த தலைவர்கள் எனக் கூறியுள்ளார். அதேபோன்று இன்று காங்கி…

  16. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image caption தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையும் புதிதாக கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இடமும் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான வரையறைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநில எல…

  17. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலும் சிறையில் அளிக்கப்பட்ட உணவு ஏற்படுத்திய ஒவ்வாமையால் நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். அவர் கைதுசெய்யப்பட்ட பின்னணி, அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஆகியவை குறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து: கேள்வி. பெங்களூர் விமான நிலையத்தில் நீங்கள் கைதுசெய்யப்பட்ட தினத்தன்று என்ன நடந்தது? பதில். அந்த வாரக் கடைசியில் பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதனால், வெளிநாட்டில் இருந்து நேரடியாக பெ…

  18. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சாதகமாக தீர்ப்பு!(2ஆம் இணைப்பு) சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவே சரி என்றும், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் தவறில்லை என்றும், நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் குறித்த வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி, “சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் சட்டவிரோதமானதல்ல, சபாநாயகரின் முடிவில் தவறில்லை” எனக் கூறியுள்ளார். குறித்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றில் நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இ…

    • 2 replies
    • 502 views
  19. முல்லை பெரியாறு அணையின் கீழ் புதிய அணை: பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் -துரைமுருகன் முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்ட கேரளா அரசு முதல் அனுமதி பெற்றிருப்பது தமிழகத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என, தி.மு.க.வின் பொருளாயர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். அண்மையில் கேரளாவில் மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சபரிமலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை விவகாரங்களையும் கடந்து கேரளா அரசு புதிய அணை கட்டும் விடயத்தை சாதித்துள்ளது. மற்றொரு அணை முல்லைப் பெரியாற்றின் கீழ் வருமாயின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை பொருட்படுத்தாமல் நடவட…

  20. இன்று தகுதி நீக்க தீர்ப்பு... தினகரனின் ஆரூடம் பலிக்குமா? தகுதிநீக்க தீர்ப்பு வெளியானால் அதிமுக ஆட்சி கவிழுமா அல்லது தப்புமா இல்லாவிட்டால் ஆட்களை இழுக்கும் வேலைகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதனிடையே கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் 18 பேரும் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 3 ஆவது நீதிபதி சத்தியநாராயணா இன்று தீர்ப்பளிக்கவுள்ளார்.தகுதி நீக்க வழக்கு செல்லாது என்று தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றால…

  21. சி.பி.ஐ. மூலம் மத்திய அரசிற்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறது: தம்பிதுரை குற்றச்சாட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சி.பி.ஐ. மூலம் தி.மு.க. எவ்வற்றையாவது செய்ய வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “அகில இந்திய அளவில் நடக்கக்கூடிய சி.பி.ஐ.யின் நிலைமை இப்படி மாறிக்கொண்டிருக்கிறது. முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் என்ன சொன்னார்கள், சி.பி.ஐ. என்பது Congress Bureau of Investigation என்றார்கள். இப்போது Centre for Bjp Investication என்று ஆகிவிட்டது. சி.பி.ஐ. எந்த அளவுக்கு திமுகவுக்கு ஆதரவாக உள்ளது என்பதைக் குறிப்ப…

  22. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை The India Today Group பட்டாசு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சுற்றுச்சூழல் நலன் கருதி பலரும் வரவேற்றுனர். இந்நிலையில் இது பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தை உண்டாக்கும் என்பதை விளக்குகிறார் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரான ராதாகிருஷ்ணன். இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன…

  23. காஞ்சீபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு October 24, 2018 காஞ்சீபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சீபுரம் நாகலூத்துமேட்டில் வசித்து வரும் மத்தின்பாய் என்பவர் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி அவற்றினை சில்லறை விற்பனைக்காக வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்துள்ளார். அவை அனைத்தும் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் நாட்டு வெடி வகையை சேர்ந்த பட்டாசுகள் என தெரிவிக்கப்படும் நிலையில் நேற்றையதினம் தாஹிராபானு என்பவரும் அவரது மகனும் பட்டாசுகளை சில்லரை விற்பனைக்கு ஏற்றவகையில் பிரித்து சிறிய பாக்கெட்டுகளாக அடைத்துக் கொண்டிருக…

  24. ஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்! ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுவரின் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் இன்றுவரை முடிவெடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காததை பாமக கண்டிக்கிறது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன்…

  25. தீபாவளியன்று இரவு 8-10 மணிக்குள்தான் பட்டாசு வெடிக்கலாம்.. ஆன்லைன் விற்பனைக்கு தடை: உச்சநீதிமன்றம். தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நாடு முழுக்க புகை காரணமாக மாசு அதிகரித்துள்ளதாகவும், எனவே பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நவம்பர் 6, 7ஆம் தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பட்டாசு விற்பனைக்கு முழு தடை விதிக்கவில்லை என்றபோதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.