Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி! - தினகரன் மாஸ்டர் பிளான் தினகரன் அணி எம்.எல்.ஏ-க்களின் நீதிமன்றப் போராட்டங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஓர் இடத்தில்போய் முட்டிக்கொள்ள... கிட்டத்தட்ட விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார் தினகரன். அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிருப்தி ஏற்பட, கொஞ்சம் ஆடித்தான் போனார். தன் தளபதியாக தினகரன் நினைத்துக்கொண்டிருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெளிப்படையாகவே எதிர்ப்பைக் காட்ட ஆரம்பிக்க, மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளானார். இந்நிலையில், தினகரன் தரப்பில் தற்போது திடீர் உற்சாகம் தென்பட ஆரம்பித்துள்ளது. ‘‘ஏதாவது ஓர் அதிரடி ஆட்டம் ஆடியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் சிக்கிக்க…

  2. பிரகாஸ்ராஜை கொல்ல திட்டம்? கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேசை படுகொலை செய்த நபர்கள் நடிகர் பிரகாஸ்ராஜ் உட்பட மேலும் 35 பேரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கவுரிலங்கேஸ் பெங்களுரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கேல் என்ற நபரிடமிருந்து டயறியொன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த டயரி மூலம் பிரகாஸ்ராஜ் உட்பட 35 பேரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. இதற்காக இந்து மதத்துடன் தீவிர ஆர்வம் கொண்டுள்ள 50 பேரை பயன்படுத்த திட்டமிடப்பட்டமையும் டயரி மூல…

  3. பிரபல ரவுடி ஆனந்தன், போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. சென்னையில் பரபரப்பு.சென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில், ரவுடி ஆனந்தன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (22). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 12 வழக்குகள் நிலுவையில் இருந்தன. நேற்று, ராயப்பேட்டை பகுதியில் கூட்டாளிகளுடன் பெண்களை கேலி செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, காவலர் ராஜவேலுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார் ஆனந்தன். இதில் ராஜவேலுக்கு உடலின் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் சக கூட்டாளிகள் அரவிந்தன், வேல்முருகன், மகேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்…

  4. தமிழகத்து அரசியலில் வெற்றிடம் உள்ளதா? அதை யார் நிரப்புவது?

  5. ஸ்டெர்லைட் போராட்டம்: மக்கள் அதிகார மையத்துக்கு எதிராக மனுக்கள் ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களே காரணம் என மீனவ அமைப்புகள் சிலவும் மடத்தூர் கிராமத்தினரும் அடுத்தடுத்து மனு அளித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை…

  6. மிஸ்டர் கழுகு: கொள்ளைக் கூட்டணி... கொந்தளிக்கும் ஐ.ஜி! “புதிய உத்தரவுகள், அதிர்வூட்டும் நியமனம், அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் என்று கடந்த சில நாள்களாக நீதிமன்றங்களை மையமாக வைத்தே, தமிழகம் பரபரப்பாக இருந்தது’’ என்று சொல்லிக்கொண்டே வந்தமர்ந்தார் கழுகார். “தினகரன் அணி இப்போது, கொஞ்சம் தெம்பாக இருப்பதாக நம் நிருபர்கள் கட்டுரை கொடுத்திருக்கிறார்களே’’ என்றபடி, கட்டுரையை அவர் முன்பாக வைத்தோம். ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோ போல ‘சர்சர்’ரென்று கண்களுக்கு முன்பாக அந்தக் கட்டுரை அடங்கிய பக்கங்களை வீசியவர், “18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா விசாரிக்கக் கூடாது என்பதில்தான் தினகரன் தரப்பு குற…

  7. நான் மிகவும் விரும்பும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: கமல்ஹாசன் ட்விட் பதிவு கமல் விஜய் கோப்புப் படம் ட்விட்டரில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தான் மிகவும் விரும்பும் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் #AskKamalHaasan @ikamalhaasan கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்ற தலைப்பில் ட்விட்டரில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறார். அதிக கேள்விகள் உள்ளதால் இன்று பிக்பாஸ் ஷூட்டிங்கின் இடையிடையே பதிலளிப்பதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சில கேள்விகள் அவர் பதிலளித்ததில் சுவாரஸ்யமாக…

    • 1 reply
    • 539 views
  8. பதநீர் விற்று பள்ளிக்கூடம் நடத்தும் கிராம மக்கள் பகிர்க அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்ற நிலையில், தூத்துக்குடி அருகே கடந்த 15 ஆண்டுகளாக கல்வி வளர்ச்சிக்காக பதநீர் விற்று வருகின்றனர் ஒரு கிராம மக்கள். தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அந்தோணியார்புரம் கிராமம். சுற்றிலும் பனைமரங்கள் மிகுதியாக காணப்படும் இந்த கிராமத்தில் பனை தொழிலாளர்கள் அதிகம். ஒரு காலத்தில் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்து வந்த இந்த கிராம மக்கள், அதில் போதுமான வருமானம் கிடைக்காததால் தற்போது பதநீராகவே விற்பனை …

  9. சமாதி சபதம் முதல் ஷாப்பிங் வரை... சசிகலாவின் 500 நாள் சிறைவாசம்! #Sasikala500 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி, போயஸ்கார்டன் வீட்டிலிருந்து கிளம்பிய சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கே சமாதியில், மூன்று முறை தனது கையால் ஓங்கியடித்து சபதம் செய்தார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில், சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக பெங்களூரு கிளம்பிச்சென்றார்... இன்றுடன் 500 நாட்கள் சிறை வாசத்தை நிறைவு செய்திருக்கிறார் சசிகலா! பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன், கைதி எண் 9234-ஐ சசிகலாவுக்கும், 9235-ஐ இளவரசிக்கும், 9236-ஐ சுதாகரனுக்கும் ஒதுக்கிக் கொடுத்தார். சசிகலா சிறை சென்ற பிறகு திண்டு…

  10. இது தமிழக முஸ்லிம்களின் பிளவு மறையும் நேரம்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) "வட இந்திய - தென்னிந்திய முஸ்லிம்களுக்கு இடையிலேயான கல்வி மற்றும் வியாபாரம் குறித்த ஒப்பீட்டு ஆய்வு" என்ற தலைப்பில் வட இந்திய பத்திரிக்க…

  11. `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு பெருமைப்படும் நூலகங்களுக்கு மத்தியில், உலகம் அறிந்திராத மொழியின் பிரதிகளை, சுவடிகள் வடிவில் கொண்டு சிறப்புப் பெருமை பெறுகிறது சென்னை நூலகம். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள தமிழக அரசினர் கீழ்த…

  12. மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை! ‘‘கவர்மென்ட் என்பது ‘கவர்னர்’மென்ட் என்று வேகவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது’’ என்று சொன்னபடியே என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘கிண்டி கவர்னர் மாளிகை மார்க்கமாகப் பறந்து வந்திருக்கிறீர்களா?’’ என வரவேற்புக் கொடுத்தோம். ‘‘மாநில கவர்னரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கவர்னர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கவர்னர் மாளிகையை நோக்கி எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. முந்தைய கவர்னர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், எப்போதுமே ராஜ்பவனிலிருந்து அறிக்கை வெளியானதில்லை. தமிழக அரசின் சார்பில…

  13. சென்னையில் போலிக் கடவுச்சீட்டு தயாரித்த 3 இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது…. சென்னையில் போலிக் கடவுச்சீட்டு தயாரித்த 3 இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 92 போலிக் கடவுச்சீட்டுக்கள் மற்றும் கடவுச்சீட்டுத் தயாரிக்கும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, மத்திய குற்றப்பிரிவின், போலிக் கடவுச்சீட்டு தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் டிராவல்ஸ் உரிமையாளர் பெருங்குடியைச் சேர்ந்த வீரகுமார்(47) அவரது தம்பி எழும்பூரில் வசிக்கும் பாலு (எ) பாலசுப்ரமணியன்(45) கடையில் வே…

  14. பசுமை வழிச்சாலை.. பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.. நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு உத்தரவு. பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் விளைவாக விவசாயிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றன…

  15. ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையாம்! ஆளுநர் பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். இது மாநில உரிமைக்கு எதிரான செயல் என திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் ஆய்வு நடத்த வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளையும் பலூன்களையும் வீசினர். இது தொடர்பாக 293 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைதை கண்டித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கைது…

  16. மிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி! - டெல்லி நெக்ஸ்ட் பிளான் கழுகார் வந்ததுமே அலுவலக நூலகத்துக்குள் போனார். பழைய ஜூ.வி ஃபைல்களுடன் வந்தவர், ‘‘தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சத்தமில்லாமல் நடந்துவருகின்றன. சட்டமன்ற அலுவலகத்தில் சீனியர் அதிகாரிகள் சிலர் இதற்காகத் தனியாக உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள். எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், அநேகமாக இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ‘சட்ட மேலவையை மீண்டும் அமைப்பதற்கான மசோதா’ அறிமுகம் செய்யப்படலாம்’’ என்றார். ‘‘அவ்வளவு வேகமாகவா வேலை நடக்கிறது?’’ ‘‘ஆமாம். ஜெயலலிதா உறுதியாக எதிர்த்த சட்ட மேலவையை, பி.ஜே.பி-க்காக மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியி…

  17. மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - அத்தியாயம் - 1 Chennai: ஆண்டுகள் எத்தனை... ஆட்சிகள் எத்தனை... வழக்குகள் எத்தனை... இழப்புகள் எத்தனை... பிரச்னைகள் எத்தனை... வன்முறைகள் எத்தனை என இந்தப் பிரச்னையின் பின்னணியில் உள்ள எத்தனையோ வலிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தப் பிரச்னை வேறு எதுவுமல்ல, காவிரி விவகாரம்தான்..! உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், நடுவர் மன்றம் என எந்த மன்றத்தின் உத்தரவைக் கேட்டும் நியாயமில்லை காவிரிக்கு. காலங்கள் கடந்தபோதும் இதுவரை இந்தப் பிரச்னைக்கு எந்தவொரு நிரந்தரத் தீர்வும் ஏற்படவில்லை. இது, இன்று... நேற்றல்ல... மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது. ‘காவிரிக்க…

  18. மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன் ‘‘தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம். ‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் …

  19. ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு- மாவட்ட ஆட்சியர். ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதை அப்புறப்படுத்தப்படும் பணி நாளை தொடங்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று மாலை அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 2 மாதமாக இயங்கவில்லை. ஆலை வளாகத்தில் அமிலங்கள…

  20. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை.. மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது. தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மது…

  21. பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பா.ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய ரயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் நீதிமன்றத்தி…

  22. சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களில் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த பல தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிப்பதற்காக தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த மே மாதம் 26ஆம…

  23. தேர்தல் ஆணையத்தில் கமல் மனு! மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்வதற்காக, இன்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றார் கமல்ஹாசன். கூடிய விரைவில் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமென்று, அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப் பெயரையும் கொடியையும் மதுரையில் தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும…

  24. மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி! 2018ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுகிரீத்தி வாஸ் பெற்றுள்ளார். 55ஆவது மிஸ் இந்தியா விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் நேற்று (ஜூன் 19) இரவு நடைபெற்றது. ஃபெமினா மாத இதழ் நடத்திய இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட அனுகிரீத்தி சிறந்த இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற மானுஷி சில்லர் அவருக்கு கிரீடத்தை சூட்டி கௌரவப்படுத்தினார். இரண்டாம் இடத்தை ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரியும் மூன்றாம் இடத்தை ஆந…

  25. ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம் June 20, 2018 1 Min Read தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் திகதி நடந்த பேரணியின் போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக முறைப்பாடுகள் வந்ததால் மாவட்ட உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தபோது ஸ்டெர்லைட் ஆலைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.