தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10258 topics in this forum
-
கோவை: கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில், அசோக்கு…
-
- 0 replies
- 445 views
-
-
விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: சங்கர் ஜிவால் மின்னம்பலம்2021-09-05 சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று அரசின் அறிவிப்பை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். வருகிற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. ஆனால், தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி உண்டு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்…
-
- 0 replies
- 400 views
-
-
00:50:31 Friday 2013-10-11 ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மரைன் போலீசார் நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரிச்சல்முனை கடற்கரையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண், 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சிஸ்லி அம்மாள்(48), இவரது பேரன்கள் சியாக்கின்(6), லெட்சன்(2) என்பதும் அதிகாலையில் படகில் வந்திறங்கியதாகவும் தெரிவித்தனர். சிஸ்லி அம்மாள் போலீசாரிடம் கூறுகையில், ''மருமகன் பிரதீபன்(29) வாங்கிய கடனுக்காக கந்து வட்டி கும்பல் மிரட்டுகிறது. இதற்கு பயந்து வந்துள்ளேன்'' என்றார். 2 நாளுக்கு முன் பேரன்களுடன் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு மன்னார் வந்து பின்னர் நேற்று முன்தினம் இரவு த…
-
- 0 replies
- 572 views
-
-
சஞ்சீப் பானர்ஜி: "ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்" - ஊழியர்களுக்கு உருக்கமான கடிதம் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடையயைும் தவிர்த்து விட்டு சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளார். கார் மூலமாக தமது குடும்பத்தினருடன் சென்ற அவர் அவரது பூர்விகமான மேற்கு வங்கத்துக்கு செல்கிறாரா அல்லது தனக்கு இடமாற்றல் வழங்கப்பட்ட மேகாலயா மாநிலத்துக்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அதே சமயம், அவர்…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 3ஆம் திகதி முதல், 6 தொடக்கம் 12 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையின்றி செயற்படும் எனவும் அறிவிக்கப்பட…
-
- 0 replies
- 305 views
-
-
"இலங்கை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்", - உதவி பொருட்களை படகுகளில் அனுப்ப முன்வரும் ராமேஸ்வரம் மீனவர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய (மே 1) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசை அனுமதிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனையடுத்து, தங்களின் படகுகளில் உதவி பொருட்களை அனுப்ப தயாராக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தலைவரான ஜேசு ராஜா தெரிவித்துள்ளதாக 'டெய்லி மிரர்' செய்தி இணையதளம் தெ…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
தமிழகத்தில் செயற்பட்டு வரும் தமிழ்நாடு விடுதலை இயக்கத்தின் 6 உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் முன்னாள் மத்திய அமைச்சர்களான பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோரை, குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு நிறுவனம் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சுதந்திரமான தமிழ்நாட்டை நோக்காக கொண்டு தமிழர் விடுதலைப்படை என்ற பெயரில் இயங்கிவரும் இந்த இயக்கம் நக்ஸலைட் இயக்கமாக செயற்பட்டு வருகிறது. குறித்த இரண்டு அமைச்சர்களும் கூடங்குளம் அணுமின்சார திட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றமைக்கு எதிர்ப்பை காட்டும் முகமாகவே …
-
- 0 replies
- 381 views
-
-
பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை - 1970களில் மும்பையில் என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES “லுங்கி ஹடாவ், புங்கி பஜாவ்“ “ஸாலா மதாராஸி ஹட்டாவ்“ 1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும். பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புல…
-
- 0 replies
- 751 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ் ‘காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’ என்ற கழுகார், வாட்ஸ் அப் மூலம் சில செய்திகளை அனுப்பியிருந்தார்... தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு மத்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி., தமிழக சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பல ஐ.பி அதிகாரிகள் உள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான ரிப்போர்ட்களை அனுப்புவதற்காக எஸ்.பி லெவலில் உள்ள அதிகாரி ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்துள்ளனர். அந்த சிறப்பு அதிகாரி, ‘ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், தி.மு.க தொண்டர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் சச்சரவுகள் வராது’ என ரிப்போர்ட் கொடுத்திருக…
-
- 0 replies
- 802 views
-
-
திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு படத்தின் காப்புரிமை Thirumavalavan/fb எதிர்வரும் மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 652 views
-
-
01 JUL, 2024 | 12:03 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றியதோடு, அவற்றில் இருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை (1) காலை கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பாம்பன் வீதியில்உள்ள பாலத்தில் மீனவர்கள் நடத்திய வீதி மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெ…
-
- 0 replies
- 507 views
- 1 follower
-
-
அரக்கோணத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்! சென்னை: மழை வெள்ளம் காரணமாக கடந்த இரு தினங்களாக நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து நாளை (4-ம் தேதி) அரக்கோணத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக நேற்று (2-ம் தேதி) சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இன்று ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடற்கரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையும் நாளை (4-ம் தேதி) முதல்…
-
- 0 replies
- 335 views
-
-
மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் திகதி மரணம் அடைந்தார். அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்…
-
- 0 replies
- 280 views
-
-
ரியாத்திலிருந்து சென்னை வந்த சவுதி அரேபியன் ஏா்லைன்ஸ் விமான சீட்டின் பின்பக்க பையில் ரூ.22.5 லட்சம் மதிப்புடைய 585 கிராம் தங்க நெக்லெஸ்கள், கம்மல்களை சுங்கச்சாவடி சோதனைக்கு பயந்து பயணி விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து போயிங் விமானம் ஒன்று நேற்று வந்தது. விமானம் நின்றவுடன் பயணிகள் இறங்கிச் சென்றவுடன் ஊழியர்கள் விமானத்தை ஆய்வு செய்தபோது ஒரு சீட்டின் முன் பக்கம் உள்ள கவரில் பெரிய பை ஒன்று இருந்தது. அதில் சிவப்புக்கலர் டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் ஒன்று இருந்ததால் ஊழியர்கள் வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்துபோய் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள், வெடிகுண்டு …
-
- 0 replies
- 478 views
-
-
'போடுங்கம்மா ஓட்டு அதுக்குதான் இந்த பாட்டு'..தேசிய அளவில் ட்ரெண்டாகும் சிம்பு! சென்னை: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சிம்பு எழுதி, பாடியிருக்கும் ஓட்டுப் போடல் சற்றுமுன் வெளியானது. நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. மற்றொருபுறம் மக்களை 100% வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இதற்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை வைத்து பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். சிம்புவுடன் இணைந்து விடிவி கணேஷ் பாடியிருக்கும் இந்தப் பாடல் தற்போது …
-
- 0 replies
- 477 views
-
-
இரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று; சென்னையில் 972 பேர் பாதிப்பு தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 972 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 14,798 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது. 1,162 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 83.72 சதவீதத் தொற்று சென்னையில் (972) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 23,495-ல் சென்னையில் மட்டும் 15,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.26 சதவீதம் ஆகும் மொத்த எண்ணிக்கையில் 184 பேர் இறந்துள…
-
- 0 replies
- 420 views
-
-
திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி பாமக சார்பில் அடையாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பா.ம.க.வை தவிர வேறு எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால்தான் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எனவேதான் எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையில் புதிய அரசியலைப் பற்றி பேசுகிறோம். தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செ…
-
- 0 replies
- 657 views
-
-
இன்றும் திருச்சியில் மாணவர்களால் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.இன்று காலை திருச்சி கயாமலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புறப்பட்டு திருச்சி தபால் நிலைய சந்தியில் மறியல் போராட்டம் நடத்தினர். பின் அங்கிருந்து பேரணியாக சென்று திருச்சி தொடருந்து நிலையத்திற்குள் புகுந்து திருச்சியில் இருந்து பாலைக்காடி நோக்கி செல்லவிருந்த தொடரூந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து ஈழதேசம் நிருபர் சற்றுமுன் எமக்கு தெரிவித்துள்ளார். இதே போன்றே திருச்சியில் வேறு பல முக்கிய பகுதிகளிலும் மாணவர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றது.இது தொடர்பான செய்திகள் ஈழதேசம் இணையத்தில் எதிர்பாருங்கள். http://www.eeladhesam.com/index.php?…
-
- 0 replies
- 379 views
-
-
டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திட்டக்கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவுடன் வந்திருந்தார். அப்போது அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர் கூட்டமைப்பினர் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பினர். அமித் மித்ரா தாக்கப்பட்டார். போலீசார் தலையிட்டு மம்தாவை காப்பாற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிண…
-
- 0 replies
- 559 views
-
-
அ.தி.மு.க.,வின் பொது செயலராக சசிகலாவை தேர்வு செய்யும் முன்னரே, அவரது மன்னார்குடி சொந்தங்கள் மத்தியில், தங்களுக்குள், 'பவர் சென்டர்' யார் என்ற, யுத்தம் துவங்கியுள்ளது. இது தொடர்பாக, போயஸ் கார்டனில் நடந்த களேபரங்கள் பற்றிய பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. சென்னை, வானகரத்தில், வரும், 29ல் நடைபெறவுள்ள, அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், சசிகலாவை பொதுச் செயலராக தேர்ந்தெடுக்க, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்,தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். எதிர்ப்புக்கொடி துாக்குவோரை, மிரட்டியும், பணம் கொடுத்தும் பணியவைக்கும் வேலைகளும் ஜரூராக நடந்து வருகின்றன. அதேநேரத்தில், சசிகலா பொதுச்செயலர் ஆகிவிட்டால், கட்சியையும், ஆட்சியையும் ஆட்டுவிக்கும…
-
- 0 replies
- 560 views
-
-
சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள், விரைவில் அம்பலமாகும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பான விசாரணையின் போது, ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்த அறிக்கையை, தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது; இந்த சந்தேகம், கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. 'ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., மற்றும் மருத…
-
- 0 replies
- 573 views
-
-
உலகையே திரும்பி பார்க்க வைத்த, மாணவர்களின், சென்னை, மெரினா போராட்டத்தை, தேச விரோத சக்திகள் தங்களின் விஷமத்தால், கொச்சையாக்கி விட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதி வழியில் நடந்த, ஒரு வார போராட்டத்தை வன்முறையாக்கி, அதில் குளிர் காய்ந்தனர். காவல் நிலையங்கள், குடிசைகளுக்கு தீ வைத்து, கலவரத்தை துாண்டினர். போலீசுக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் மறியல்களால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பெண்கள், பள்ளி மாணவர்கள் பரிதவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, ஜன., 17 காலை, சென்னை, மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லம் முன், மாணவர்கள் அமைதியாக போராட்டத்தை துவங்கினர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கடற்கரையை சுத்தம் செய்தல் உள்ளிட்…
-
- 0 replies
- 531 views
-
-
கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்க வைப்பு? - சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர் | கோப்பு படம்: ம.பிரபு. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டை யன் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா வில் கலந்து கொள்ளாமல் கூவத்தூர் விடுதியிலேயே தங்கியதாக அதிமுக வட்டாரங் களில் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கம் அடுத்த கூவத்தூரில் கடற் கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பின ரால் கடந்த 8 நாட்களாக த…
-
- 0 replies
- 187 views
-
-
'எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் என்பதை ஏற்க மாட்டோம்!' - தமிழர்களின் ஒருமித்த குரல் #SurveyResults #ShockResult #VikatanExclusive “குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.” குடிமக்களின் கருத்தை மதித்து, அவர்களை அன்போடு அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். இது, செங்கோன்மை குறித்த திருவள்ளுவர் வாக்கு. இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் அரசியல், அரசு குறித்த விழுமியங்கள்... மதிப்பீடுகள் மாறி இருக்கலாம். ஆனால், ஓர் அரசு ஸ்திரமாக இருக்க வேண்டுமென்றால், அது மக்களின் கருத்துக்குக் கொஞ்சமேனும் செவிசாய்க்க வேண்டும். சரி... அரசின் கொள்கைகள் மக்களின் கருத்தைக் கேட்டபின் கட்ட…
-
- 0 replies
- 623 views
-
-
சசிகலா மீது பாயும் கிரிமினல் வழக்கு!? - டெல்லி சிக்னலின் அடுத்தகட்டம் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தாலும், தமிழக அரசியல் களம் சசிகலாவை மையப்படுத்தியே நகர்கிறது. 'ஆட்சி அதிகாரத்தைப் பின்வாசல் வழியாக இயக்குகிறார் தினகரன்' என்ற குற்றச்சாட்டுகளும் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. 'பொதுச் செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டதற்கு தினகரன் அளித்த பதிலை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. தன்னுடைய விளக்கமாக சசிகலா எதை முன்வைத்தாலும், கிரிமினல் வழக்கு பாய்வதற்கு வாய்ப்புள்ளது' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். சென்னை, வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. பொதுக…
-
- 0 replies
- 453 views
-