Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘குடும்பச் சண்டையில் அவர்களே அழிவார்கள்!’ - எம்எல்ஏ-க்களிடம் சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள சண்டையை மௌனமாக கவனித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘தினகரன் தரப்பினர் அளிக்கும் பரிந்துரைகளை முதல்வர் அலுவலகம் ஏற்பதில்லை.' குடும்பச் சண்டையில் அவர்களே அழிந்து போவார்கள். நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை' என்பதுதான் முதல்வரின் மனநிலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். திகார் சிறையில் இருந்து வெளிவந்த அன்று, 'கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன்' என தினகரன் அறிவித்த தினத்தில் இருந்தே, மன்னார்குடி குடும்ப உறவுகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது. திவாகரனும் நடராசனு…

  2. கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் குமார். இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் குமார் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஆல்லைன் மூலம் 29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது. அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவரின் மனைவியின் கணக்கிற்கு இவ்வளவு பணம் ஒரே நேரத்தில் வந்ததால், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வங்கியின் அதிகாரிகள், அம்பிகா மற்றும் அவரது கணவர் கும…

    • 0 replies
    • 641 views
  3. ‘கைலாசா’ நாடு பெயர் மாறியது- நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள நித்யானந்தா ‘கைலாசா’ என்ற பெயரில் சாமியார் நித்யானந்தா உருவாக்கியுள்ள நாட்டின் பெயரை ‘ஸ்ரீகைலாசா’ என மாற்றியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களைத் தொடர்பு கொண்ட நித்யானாந்தா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கைலாசா என்ற இணையத் தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 8 இலட்சம் பேர் என்ற நிலையில் அதன் சேர்வர் தடைப்பட்டதாகவும் இதனால் வேறு சேர்வர் மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது வரை கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கார்த்தி…

  4. சேலம்-சென்னை எழும்பூர் ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) சென்னையில் கைது செய்யப்பட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி இரவு சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் மூலம் ரூபாய் 342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த வி.பி.எச்-08831 பெட்டி இணைக்கப்பட்ட இரயிலானது 8ஆம் தேதி இரவு 11 மணியளவில் சேலம் சந்திப்பிலிருந்து புறப்பட்…

  5. ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது – குஷ்பு ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறீர்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே,குஷ்பு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளனர். ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கின்றது. 5 ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரவில்லை என்…

  6. ‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்? ப.திருமாவேலன், ஓவியம்: பாரதிராஜா `அம்மா’வை வாழ்த்தி எழுதிய பாசுரங்களை, `சின்ன அம்மா’வுக்காகச் சின்னத் திருத்தங்களுடன் ரத்தத்தின் ரத்தங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதே கதை, அதே காட்சி, அதே நடிப்பு, அதே பாட்டு... விசிலடிக்கும் ரசிகர்களும் ஒன்றுதான். நடிக்கும் ஆள் மட்டுமே மாறியிருக்கிறார். முன்னர் ஜெயலலிதா; இதோ இப்போது சசிகலா! ‘நமது எம்.ஜி.ஆர்’ சித்ரகுப்தனுக்குச் சொல்லியா தர வேண்டும்? ‘வங்கக் கடலோரம் உறங்குகிற தாய்க்கு வரமாகக் கிடைத்தவர் வலக்கரமாய் வாய்த்தவர் வல்லூறுகள் வாலறுந்த நரிகள் ஏவுகின்ற பழிகளை வாழ்வெல்லாம் சுமப்பவர் வரும்பகை தூவிய வசவுகளை வாழ்வெல்லாம் சகித்தவர் தாயே உலகமென தவம்க…

  7. ‘சசிகலா குடும்பத்தின் தயவு தேவையில்லை!’ - தினகரன் கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க. குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன ஆளும் பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும். 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசின் ஆதரவு இருப்பதால்தான், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அமைதியாக இருக்கின்றன. 'தன்னை நோக்கி பா.ஜ.க தலைமை வரவேண்டும்' என எதிர்பார்த்தார் தினகரன். அவரது நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை கடந்த 5 ஆம் தேதி சந்தித்தார் டி.டி.வி.தினகரன். 'கட்சி ஒன்றுபட வேண்டும் என்று நினைத்ததால் ஒதுங்கி இருந்தேன். கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன். அறுபது நாள்கள…

  8. ‘சசிகலா சிறை விவகாரத்தில் சென்னை அ.தி.மு.க. பிரமுகருக்குச் சிக்கல்!’ ஏ.சி, பிரிட்ஜ், இண்டக்‌ஷன் ஸ்டவ் சப்ளை செய்தது அம்பலம் #VikatanExclusive சென்னை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் கடை பெங்களூரில் உள்ளது. அங்கிருந்துதான் சசிகலா சிறை அறைக்கு குளிர்சாதன பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி.களுக…

  9. ‘சசிகலா பெயரை ஏன் தவிர்க்கிறார் தினகரன்?!’ - ஆர்.கே.நகர் கலவர நிலவரம் ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் நடந்து முடியும் வரையில், தொகுதி மக்களுக்கு நிம்மதியான உறக்கம் என்பது கேள்விக்குறிதான். ‘அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா பெயரைச் சொல்லாமலேயே தொகுதிக்குள் வலம் வருகிறார் தினகரன். கட்சித் தலைமையின் பெயரை மறைப்பது, சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துகிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தண்டையார்பேட்டையில், தினகரன் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடந்தது. ‘பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக உறுதியான தகவல் வந்ததன் அடிப்படையிலேயே சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது. தே…

  10. ‘சசிகலாவின் அன்-அக்கவுண்ட் எங்கே?’ - விவேக்கை வளைக்கும் வருமான வரித்துறை #VikatanExclusive இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார் டி.டி.வி.தினகரன். இதையடுத்து, அ.தி.மு.க அணிகள் இணைப்பின் ஒரு பகுதியாக தலைமைக் கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. 'சசிகலாவிடம் உள்ள பதிவு செய்யப்படாத சொத்து ஆவணங்களைத் துருவிக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு. இந்த உண்மைகளை முழுமையாக அறிந்த விவேக் ஜெயராமன் வளைக்கப்பட இருக்கிறார்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். சசிகலா குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது பா.ஜ.கவின் அகில இந்திய தலைமை. அ.தி.மு.…

  11. ‘சசிகலாவின் கணவர்’ என்ற அடையாளத்துடன் தமிழ் பற்றாளர் ம.நடராஜனின் மரணம் கடந்து போனது.. காலைக்கதிர் ஆசிரியர் தலையங்கம்… ஈழத்தமிழரின்பால் நீங்காப் பற்றுக்கொண்டிருந்த ஒரு தமிழ் உணர்வாளனின் மரணம், வெறும் தமிழக அரசியல்வாதி என்ற ஏளனப் பார்வையுடன் கடந்து போயிருக்கின்றது. ‘சசிகலாவின் கணவர்’ என்ற அடையாளத்துடன் தமிழ் பற்றாளர் ம.நடராஜனின் மரணத்தை இலங்கைத் தமிழர்கள் வெறும் செய்தியாக நோக்கி, அத்தோடு புறம் தள்ளிச் சென்றிருக்கின்றமை வேதனையிலும் வேதனை. ஈழத் தமிழர்களுக்காக என்றும் கொதித்துக் கொண்டிருந்த இதயம் அது. இலங்கைத் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோத…

  12. ‘சசிகலாவின் சிறை வீடியோ வெளியானது எப்படி?’ - வில்லங்கத்தை விவரிக்கும் கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி #VikatanExclusive பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபாவை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் வீடியோக்கள் வெளியானததற்கு கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கிடையே நடக்கும் ஈகோவே காரணம் என்று சொல்லப்படுகிறது. சசிகலாவும் சிறை வீடியோவும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிமுறை மீறி சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா, பகிரங்கக…

  13. ‘சசிகலாவுக்கு திகார் சிறைதான் சரியான சாய்ஸ்!’ - கர்நாடக அரசை நெருக்கும் அமைப்புகள் #VikatanExclusive கர்நாடக சிறையில் இருந்து சென்னை, புழல் சிறைக்கு சசிகலாவை மாற்றும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. 'பாதுகாப்பு கருதி இப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தால், அவருக்கு திகார் சிறை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்' என ஊழல் எதிர்ப்பு அமைப்புகள், கர்நாடக உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகே, முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்ற…

  14. மிஸ்டர் கழுகு: ‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார். ‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம். ‘‘அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கைப்பற்றி விட்டது என்று வெளியில் இருப்பவர்கள் மொத்தமாகச் சொன்னாலும் அதனை அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ‘கட்சியை தினகரன் கைப்பற்றிவிட்டார்’ என்றே பிரித்துச் சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்ததும், கட்சி சசிகலா கைக்கு வந்தது. ‘கட்சி திவ…

  15. சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார். மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு வெளிப்படையாக சவால் விட்டுள்ளார். மேலும், முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் அவர…

  16. ‘சிட்டி’யின் சிறகுகளை வெட்டிய சசிகலா! - பாவம் பன்னீர் பன்னீர்செல்வம் 3-வது முறையாகக் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல்வர் ஆனபோது, ‘இந்த முறையாவது மிச்சம் இருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு நம்மை ஆளவிடுவார்களா’ என்ற மைண்ட் வாய்ஸ் அவரது எண்ணத்தில் ஓடியிருக்கும். ஆனால், இப்போது மூன்றாவது முறையாகவும் அவரது பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. டான்சி வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வர் பதவி வகிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் 2001-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்புச் சொன்னபோது, ‘அடுத்த முதல்வர் யார்?’ என்று அ.தி.மு.க-வில் மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. அப்போது சசிகலாவின் ஆதரவாளர் என்று அறியப்பட்ட - முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன ஓ.பன்னீர்செல்…

  17. ‘சிறையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த எம்.நடராஜன்’ - முக்கிய வாக்குறுதியால் கலக்கத்தில் முதல்வர் #VikatanExclusive திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, இருவரும் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட்டாரம் தீவிர ஆலோசனையில் இருப்பதாகத் தகவல் படபடக்கிறது. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என்ற முடிவோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதிய அணியை உருவாக்கியுள்ளார். அந்த அணியின் குறிக்கோளுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு அணிகளும் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்…

  18. ‘சுரங்கம்’ சேகர் ரெட்டி- நெட்வொர்க் - 1 தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த ரெய்டு இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. அதிகாரிகளில் உச்சபட்ச அதிகாரியான தலைமைச் செயலாளர் அலுவலகத்திலேயே சோதனை போட்டிருக்கிறார்கள் வருமானவரித் துறையினர். இந்த சோதனையின் ஆணிவேர் சேகர் ரெட்டிதான். அவர் வீட்டில் நடந்த சோதனைக்குப் பிறகுதான் ராம மோகன ராவ் வளைக்கப்பட்டார். ரெட்டியும் ராவும் மட்டும் கூட்டணி போட்டு நடத்திய விஷயம் இல்லை. இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அந்த நெட்வொர்க் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பக்கங்களில் பார்ப்போம். முதலில் சேகர் ரெட்டி! போயஸ் கார்டனில் இருந்து, சசிகலா 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியேற்றப்பட்டார். அந்த சசிபெயர்ச்சி…

  19. ‘சுவாதி படுகொலை அன்றே, ராம்குமார் ஊருக்கு கிளம்பியது ஏன்?’ -களமிறங்கிய உண்மை கண்டறியும் குழு சுவாதி படுகொலை வழக்கின் உண்மைகளைக் கண்டறிய எவிடென்ஸ் அமைப்பினர் களமிறங்கியுள்ளனர். ‘படுகொலை வழக்கை அவசர கதியில் முடித்து வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். குறிப்பாக, ராம்குமார் பேசிவிட்டால் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் சிறையில் கெடுபிடி செய்கிறார்கள்’ என்கிறார் எவிடென்ஸ் கதிர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ‘ படுகொலை வழக்கின் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். அவரைக் கை…

  20. ‘சூப்பர் ஸ்டார் புகழை இழந்து விடுவீர்கள்’ ரஜினிகாந்துக்கு உதயகுமார் திறந்த மடல் ‘சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்து விடுவீர்கள்’ ரஜினிகாந்துக்கு உதயகுமார் திறந்த மடல். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளார் என்றும் அவரை பாஜக தங்கள் கட்சிக்குள் கொண்டு வர தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளன. தமிழ் அமைப்புகள் ஏற்கனவே ரஜினி தமிழக அரசியலில் வரக் கூடாது என்று குரல் எழுப்பியுள்ளன. தமிழ் நாட்டை தமிழினம் தான் ஆள வேண்டும் , தமிழர் அல்லாத ஒருவர் தமிழ் நாட்டின் முதல்வராக வரக் கூடாது என்றும் குரல் எழுப்பி உள்ளனர். இந்நிலையில் அணு உலைப் போராளி உதயகுமார் அவர்கள் ரஜினி ஏன் தமிழக அரசியலில் வரக் கூடாது என்று ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். தி…

  21. ‘செல்லாக்காசு’... விரிசல் விழுந்த ம.ந.கூ. அ.தி.மு.க., தனது புதிய தலைமையைத் தேர்வு செய்துள்ளது. தி.மு.க தனது தலைமையை உறுதிசெய்கிற முடிவில் இருக்கிறது. இத்தகைய அரசியல் சூழலில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகுவதாக, அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோ வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வைகோ விலகலுக்கு, பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ நடவடிக்கை தொடர்பான கருத்துவேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணங்கள் வேறு! ஒருங்கிணைப்பாளர் பதவி ‘நோ’! கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முதலில் எடுத்தவர் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன். இந்த முழக்கத்தை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள…

  22. ‘ஜெயலலிதா மகள்’ என வைரல் ஆகும் படத்தில் இருப்பவர் உண்மையில் யார்? சின்மயி விளக்கம் மேலே இருக்கும் படம்தான் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் ஒரு மொபைல் விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். 'இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்" என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரையே அழைத்து கேட்டோம். "இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வ…

  23. ‘ஜெயலலிதா மரணத்தோடு வழக்கும் செத்துவிட்டது!’ சசிகலா வைக்கும் முன் உதாரணத் தீர்ப்புகள் ‘முதல் குற்றவாளியாக ஓர் ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்ட நபர் மரணம் அடைந்துவிட்டால், அவர் சார்ந்த வழக்கும் செயலற்றது ஆகிவிடும். எனவே, மற்றவர்கள் மீதான குற்றங்களும் விலக்கப்படும்’ என்று கடந்த 91-ம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதுபோன்ற முன் உதாரணத் தீர்ப்புகள் பலவற்றை சுட்டிக் காட்டி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்ததால், அவர் தொடர்பான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது உச்ச நீத…

  24. ‘ஜெயில் கதவை திற... எங்க அம்மாவைப் பாக்கணும்..!’ பரப்பன அக்ரஹாரவை பரபரப்பாக்கிய பெண் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறை வளாகம் பரபரப்பு மிகுந்து காட்சியளிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறை வளாகம் முழுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது…

  25. ‘டி.டி.வி.தினகரனை ஏன் விட்டுச்சென்றது டெல்லி போலீஸ்?’ - வெளிவராத பரபர பின்னணி டி.டி.வி.தினகரனிடம் சம்மனை கொடுத்த டெல்லி போலீஸார், சுகேஷ் சந்திரசேகர் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு டி.டி.வி.தினகரன், அவர் யார் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, வரும் 22-ம் தேதி விசாரணைக்கு டெல்லிக்கு வரச் சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, புரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை பறிமுதல்செய்ததுடன் அவரையும் கைதுசெய்தது டெல்லி போலீஸ். அடுத்து, நேற்றிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.