தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10298 topics in this forum
-
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் மதகு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கேரள எம்.எல்.ஏ., தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவிலுள்ள பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ. பிஜிமோள், தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேருடன், அதிவிரைவு படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று சென்றார். அப்போது அங்கு அத்துமீறி அணை பகுதியில் நுழைந்த அவர்கள், வேகமாக மதகு பகுதிக்கு சென்றிருக்கின்றனர். மேலும், அங்குள்ள சில இடங்களை இடித்து சேதப்படுத்தினார்களாம். இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன் அங்கு செல்லக்கூடாது எனவும், சில இடங்களை இடித்ததையும் தட்டிக்கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த பிஜிமோள் மற்றும் அவரது ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 454 views
-
-
பட மூலாதாரம்,NIFYAFURNITURE/INSTAGRAM 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் பல விஷயங்கள் வைரலாகி சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும். இந்த வைரல் சம்பவங்களில் பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சாமானியர்களும் இடம் பெறுவார்கள். அப்படி, தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான வைரல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முக்கியமான, சுவாரஸ்யமான 10 வைரல் நிகழ்வுகளை மீண்டும் திரும்பிப் பார்ப்போம். 600 மதிப்பெண்கள் எடுத்த நந்தினி பட மூலாதாரம்,MK STALIN/X கடந்த மே மாதம், 2022-2023 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், இதற்கு முன்பு நடக்காத முன்மாதிரியாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தா…
-
- 0 replies
- 289 views
-
-
மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன – ஸ்டாலின்! தற்போது ஆட்சியில் உள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன எனவும், இதற்கான விடிவுகாலம் எதிர்வரும் 23ஆம் திகதி கிடைக்கும் எனவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேதின பேரணி ஒன்று நடைபெற்றது. குறித்த பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டின் 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகள் 4.5 corporate companiகளிடம் அடக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், பல நாட்களாக டெல்லியில் போராட…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொடர்ந்து மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் மாரியப்பன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். …
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, சிவானந்தா காலனி, கோவை கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி செய்தியாளர் 13 அக்டோபர் 2024 கோவையில் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. இன்று மாலை 3 மணிக்கு மேல், மிகக்கடுமையான இடியும், மின்னலுமாக இருந்தது. சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்த அடர்மழை காரணமாக, கோவை மாநகரமே ஸ்தம்பித்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டலச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 25 மாவட்டங்களில், அக்டோபர் 13-ஆம் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்று வானில…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
நாகை மாவட்டம், கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள் மீட்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோயிலிலிருந்த முருகன், வள்ளி , தெய்வானை, மாரியம்மன் ஆகிய நான்கு சிலைகள் கடந்த 16 - ம் தேதி இரவு மர்ம நபர்களால் களவாடப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே உள்ளூர் பெண் சாமியாடி ஒருவர், ``களவுபோன சிலைகள் இந்த எல்லைக்குள் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன" என்று அருள்வாக்கு கூறியதை நம்பி நான்கு நாள்களாக கிராமத்தினர் வேலைக்கும் போகாமல் பல்வேறு கு…
-
- 0 replies
- 480 views
-
-
'மாஸ்' காட்டிய கழகம்; 4 மணி நேரம் திணறித் தவித்த மக்கள்: 8 தகவல்களுடன் திமுக ஆர்ப்பாட்டம் சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன். செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்கள் குவிந்ததால் சென்னை வாலாஜா சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக, திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்க…
-
- 0 replies
- 493 views
-
-
6 முனை போட்டி எந்தக் கட்சிக்கு சாதகம்? - மூத்த பத்திரிகையாளர்கள் கணிப்பு தனித்து போட்டியிடுவது என்ற தேமுதிகவின் முடிவால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு 6 முனை போட்டி ஏற்பட்டால் விளைவுகள் எப்படி இருக்கும்? வாக்குகள் பிரிவது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்களின் கணிப்பு: ஞாநி (மூத்த பத்திரிகையாளர்) ஒரு கட்சியின் வாக்கு வங்கி என்பது தேர்தலுக் குத் தேர்தல் மாறக் கூடியது. தேமுதிகவின் பலம் 5 சதவீதத்திலிருந்து 2 ஆக குறையலாம். அல்லது 12 சதவீதமாகக் கூட அதிகரிக்கலாம். எனவே, 6 முனை போட்டி ஏற்பட்டால் யாருக்குச் சாதகம்…
-
- 0 replies
- 549 views
-
-
சொன்னீங்களே... செஞ்சீங்களா? (வீடியோ இணைப்பு) அ.தி.மு.க. அரசின் செயற்பாடுகளை விமர்சித்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், ‘சொன்னீங்களே... செஞ்சீங்களா?' என்ற விளம்பரத்தை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, பதவியில் அமர்ந்ததும் அ.தி.மு.க. அரசு செய்யத் தவறி விட்டதாகக் குறிப்பிட்டு, தி.மு.க.வினால் தனியார் தொலைக்காட்சிகளில் விதவிதமான விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச நிலம் போன்ற வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படவில்…
-
- 0 replies
- 436 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 அதிகரித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவோடு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு …
-
- 0 replies
- 547 views
-
-
விற்பனை நேரத்தை அதிகரித்தும் நோ யூஸ்.. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை சரசரவென சரிவு. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கிடுகிடுவென குறைந்து விட்டது. நேற்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.98.5 கோடிக்கு கீழ் மதுவிற்பனை நடந்துள்ளது. 41 நாட்களுக்கு மே 7ம் தேதி மதுக்கடைகள் தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அதிக அளவில் குடிமகன்கள் கூடினர். மே 7 மற்றும் மே 8 ஆகிய இரு நாட்களில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கியது. இரு நாளில் மட்டும் 290 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடைய உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவால் மே 16 தேதி திறக்கப்பட்டது. முதல் நாள் ரூ.163.5 கோடிக்கு மதுவிற்பனையாகியது. அடு…
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களில் முதல் ஐ.ஏ.எஸ்.! துணை ஆட்சியராக நியமனம் இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ்-ஸில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர் காளிமுத்து. இவரின் முன்னோர், கடந்த 1823 ம் ஆண்டு இலங்கைக்குக் குடி பெயர்ந்தனர். ஆங்கிலேயர்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோரை அழைத்துச் சென்றனர். அதில் இன்பசேகர் காளிமுத்துவின் முன்னோர்களும் அடங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, இலங்கை அரசு இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்…
-
- 0 replies
- 398 views
-
-
தமிழர்கள் மூன்று பேருக்கு கத்தார் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் பெண் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோருக்கு 2015ம் ஆண்டு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. க…
-
- 0 replies
- 418 views
-
-
சசிகலா புஷ்பாவுக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏன்? சசிகலா புஷ்பா. | கோப்புப் படம். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு விசாரணையில் ஆஜராக வந்த அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, அதிகபட்ச பாதுகாப்பு அளித்தது தொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராகினர். இவருக்கு எதிராக போராட்டம் நடத்த அதிமுகவினர் தயாராக இருந்தனர். சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஏதாவது நடைபெற்றால் தமிழக அரசுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி நீதிமன்றத்தின் அவப்பெயருக்…
-
- 0 replies
- 572 views
-
-
70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! சென்னையை கண்கலங்க வைத்த சோகம் (வீடியோ) 'தென்னையப் பெத்தா இளநீரு.... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து பலர் தவறிவிடுகின்றனர். வசதி படைத்தவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். வறுமையில் வாடுபவர்களுக்கு வீதிகளே வீடுகளாகிறது. சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடக்க முடியாத முதியவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். பசியின் கொடுமையைவிட அவரது மனம் கடும் இறுக்கத்தில் இருந்தது. காரணம், பெற்ற மகனே தன்னை கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்…
-
- 0 replies
- 573 views
-
-
சென்னை: "காங்கிரசில் சேரப்போவதாக எனக்கு வேண்டாதவர்கள் வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்" என்று கூறிய நடிகை குஷ்பு, தி.மு.க.வில்தான் இருக்கிறேன், தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன் என்றார். தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினைத்தான் நான் முன்மொழிவேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பேட்டி ஒன்றில் கூறினார். இதனை நடிகை குஷ்பு விமர்சித்திருந்தார். இதையடுத்து, திருச்சியில் நடிகை குஷ்பு மீது மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியதோடு., சென்னையில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. இதனிடையே, இந்த தாக்குதலை கண்டித்த தி.மு.க. தலைமைக் கழகம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை நடவ…
-
- 0 replies
- 530 views
-
-
கார்டனில் கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா! கலக்கத்தில் அமைச்சர்கள் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் முகம் பதித்த கேக்கை கார்டனில் சசிகலா வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டையொட்டி அவர் கேக் வெட்டியதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அடுத்து சசிகலாவை கார்டனில் சந்தித்தவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாம். அந்த கையெழுத்தை சசிகலாவை முதல்வராக்கப் போகிறது என்ற தகவல் அமைச்சர்களை கலக்கத்தில் ஏற்படுத்தி இருக்கிறதாம். அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் காட்சிகள் கடும் அதிர்வலைகளையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருவதாக அடிமட்ட தொண்டர்கள் முனுமுனுக்கத் தொடங்கிவிட்டனர். கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சசிகலா நடராஜன் வந்து விட்டார். அடுத்து அ…
-
- 0 replies
- 540 views
-
-
ஜல்லிக்கட்டு தடைக்கு தீர்வு என்ன? #YoutubeLive ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர் மற்றும் சென்னை மெரினாவில் ஆரம்பித்த போராட்டம் சங்கிலித் தொடர்போல... கோவை, சேலம், கடலூர், திருச்சி, சேலம், டெல்லி என எங்கும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கான போரட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் என மூன்று மாவட்டங்களில் மட்டும் நடந்துவந்த ஜல்லிக்கட்டு, இளைஞர்களின் எழுச்சியால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றி இளைஞர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், யூடியூப் லைவ்வில் அவற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்…
-
- 0 replies
- 632 views
-
-
தமிழ் நாட்டில் அதிமுக கட்சியின் தொழிநுட்ப பிரிவு நடத்திய, தொலைபேசி ஆதரவு கணக்கெடுப்பு ஆரம்பித்து 48 மணித்தியாலயங்களில், சுமார் 33 இலட்சம் பேர், தமது ஆதரவை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக தமிழகம் மற்றும் ஏனைய மாநிலங்களிலிருந்தும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவளித்து வந்த அதிமுக கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில நடிகர்கள், தற்போது முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தமது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்…
-
- 0 replies
- 652 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு: முதல்வர், தலைமைச் செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டசபை செயலாளர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். மேலும், சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 15 …
-
- 0 replies
- 274 views
-
-
சசிகலாவை திட்டி கடிதம் எழுதும் தமிழக மக்கள்: திக்குமுக்காடும் சிறை நிர்வாகம் பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது. சசிகலாவுக்கு வந்த கடிதங்களில் ஏராளமானவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என்று கூறி சசிகலாவை சபித்து எழுதப்பட்டிருப்பதாக பரப்பன அக்ரஹார மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி சிறையில் சரணடைந்த நாள் முதல் தற்போது வரை 'சசிகலா, மத்திய சிறைச்சாலை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூர் - 560100' என்ற முகவரிக்கு…
-
- 0 replies
- 292 views
-
-
சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை 31 நாட்களில் 28 முறை பார்வையாளர்கள் சந்தித்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சசிகலாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் தவிர, அவரைச் சந்தித்த ஒரே அந்நிய நபர், மகுன்டா சீனிவாசலு ரெட்டி. யார் இவர்... எதற்காக சசிகலாவைச் சந்திக்க வேண்டும்... என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல் அதிர வைத்தது. சசிகலாவை இவர் சந்தித்ததற்கும், டாஸ்மாக் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு முடிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது! சீனிவாசலு ரெட்டி ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆந்திராவின் ஓங்கோல் தொகுதியின் எம்.பி-யாக இருந்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் ஆந்திரா இரண்டாகப் பி…
-
- 0 replies
- 529 views
-
-
கோடநாட்டில் என்ன தான் நடக்குது? சட்டசபையில் தி.மு.க., கேள்வி சென்னை:''கோடநாடு பங்களாவில் வேலை செய்த, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஊழியர்க ளுக்கே, இந்த கதி என்றால், மற்றவர்களின் நிலை என்னாகும்,'' என, சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அதிர்ச்சிதெரிவித்தார். சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்: தி.மு.க., - ஜெ.அன்பழகன்: நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில் வேலை செய்த டிரை வர், விபத்தில் சிக்குகிறார்; அவரது மனைவி மற்றும்குழந்தை விபத்தில் உயிரிழக்கின் றனர்.அதில் தொடர்புடைய, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் முதல்வரின் ஊழியர்களுக்கே,இந்த ந…
-
- 0 replies
- 379 views
-
-
மிஸ்டர் கழுகு: “ஆட்சியைக் கலைத்தால் ஆயுள் முழுக்க சிறை!” மிரட்டிய பி.ஜே.பி... பதுங்கும் தினகரன்? ஒரு சிறுவனைப் போன்ற குதூகலத்துடன் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை சுற்றியபடி வந்த கழுகாரைப் பார்க்க விநோதமாக இருந்தது. ‘‘இதைச் சுழற்றி விளையாடுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்! விஜயகாந்த் விட்ட பம்பரத்தின் 2.0 வெர்ஷன் என்று இதைச் சொல்லலாம். உலகம் முழுக்கப் பள்ளிக் குழந்தைகளின் விருப்ப விளையாட்டாக இது மாறியிருக்கிறது. ‘குழந்தைகளின் மன அழுத்தத்தை நீக்கும், கற்றல் குறைபாட்டுக்குத் தீர்வு தரும்’ என்றெல்லாம் பல பள்ளிகளில் ஆசிரியர்களே இதைக் குழந்தைகளுக்கு வாங்கித் தரச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இதை விளையாடும் குழந்தைகளுக…
-
- 0 replies
- 2.4k views
-