Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கட்சி, ஆட்சியை விட்டு... சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்.. அதிமுக (அம்மா) திடீர் அறிவிப்பு! அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு இதனை அவர் அறிவித்தார். ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டு மொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென்றால் டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வை…

  2. தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா? சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, 'தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்' என்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனை நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இன்று காலை அவரை சந்தித்து பேசி வருகின்றனர். அ.தி.மு.க.,வில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பல பரபரப்பான சம்பவங்கள் நடந்தேறின. மதுரை செல்வதற்கு முன் நிருபர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'இரு அணிகளும் இணைய நிபந்தனை ஏதும் இல்லை 'என்றார். ஆனால், அவரது அணியை சேர்ந்த மதுசூதனன், 'ஒரே …

  3. சசிகலா எதிர்ப்பு: அம்மா சமாதி முதல் பெரியகுளம் வரை பேச்சு மாறாத பன்னீர்செல்வம்! சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியில் இணைவது குறித்து பேசியதும், தமிழக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் கட்சியில் இணையப் போவதாகவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அம்மா அதிமுக அணி சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் பரபரத்தன. சசிகலாவின் குடும்ப ஆட்சி முறையே எதிர்த்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம், தினகரன் தலைமையின் கீழ் எப்படி இணைவார் என்றும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த மர்மங்கள் அன…

  4. ‘பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - தினகரனை ஓரம்கட்டிய ‘கொங்கு லாபி’ அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் காக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளனர். 'சசிகலா குடும்பத்தைத் தவிர்த்த அ.தி.மு.கவைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். நேற்று அமைச்சர்கள் நடத்திய கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கும் முடிவில் முதல்வர் இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று தலைமைச் செயலகத்துக்கு இரண்டு முறை வருகை…

  5. சைலன்ஸ்!’ சசிகலா, டி.டி.வி.தினகரனின் ‘அமைதி’ பின்னணி! சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகள் இணைவதற்கான முயற்சிகள் நடந்துவருவதற்கு சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராகும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டார். இந்தச் சூழ்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சிறைக்குச் சென்றதால் முதல…

  6. இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம் அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'ஐஎன்எஸ் சென்னை' கடற்படை போர்க் கப்பலைப் பார்வையிடுவதற்காக கப்பலில் உள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (திங்கள்கிழமை) இரவு 26 அமைச்சர்கள் கூடி இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்த…

  7. பிரதமர் மோடி வேடமணிந்து சாட்டையடி! நூதனப்போராட்டத்தில் விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமணிந்த விவசாயி ஒருவர், பிற விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்று செய்கை செய்து வருகிறார். டெல்லியில் 36-வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேற…

  8. பெங்களூருவில் 'தண்ணி காட்டிய' தினகரன் பெங்களூரு: பெங்களூருவில் டில்லி போலீசார் கைது செய்ய வந்திருப்பதை தெரிந்து கொண்ட தினகரன், சசிகலாவை சந்திக்காமல், தமிழக எல்லையான அத்திப்பள்ளியுடன் திரும்பி வந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசியை சந்திக்க செல்வதாக கூறி தினகரன் பெங்களூரு சென்றார். ஆனால் சந்திக்காமல் சென்னை திரும்பினார். டில்லி போலீஸ் வருகை: இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தினகரனை சந்திக்க அனுமதி கேட்டு சசி இன்னும் சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கவில்லை. சிறை விதிகளின்படி திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பார்வையாளர்களை சந்திக்க முடியும். இனி சசியை சந்திக்க வெள…

  9. சென்னையில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை..! சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதிமுகவில் இரு அணிகளும் இணைவதற்கான இனக்கமான சுழல் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்க்க வருமாறு எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தற்போது அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற…

  10. “தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! “சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்” என அமைச்சர்களிடம் தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான் தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள் செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை, எதற்காக இவர் கட்சியை கைப்பற்ற துடிக்கின்றார் என்று மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர். அடுத்து இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதும் அ.தி.மு.கவில் அடித்தளத்துக்கே ஆபத்து வந்ததை அக்கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உணரத்துவங்கினார். சின்னத்தை மு…

  11. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர, சசிகலாவின் அக்கா மகன், தினகரன் முயற்சித்தது அம்பலமாகி உள்ளது. இடைத்தரகராக செயல்பட்டவன், 1.30 கோடி ரூபாயுடன் டில்லியில் சிக்கியதை அடுத்து, தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வந்துள்ள டில்லி போலீசார், இன்று அவரிடம் விசாரணை நடத்தியதும், கைது செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து, ஓட்டுக்களை பெற முற்பட்ட தினகரனின், அடுத்த தில்லாலங்கடி தற்போது அம்பலமாகி உள்ளது. இரட்டை இலை சின்னத்துக்கு, தேர்தல் கமிஷனில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் உரிமை க…

  12. ஆலோசனை நடத்தியதற்கான காரணம் என்ன? - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை: அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது, ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த கருத்து குறித்தும் ஆலோசனை நடத்திய…

  13. ஜெயலலிதா மரண மர்மம்: பிரதமர் மோடி மவுனம் ஏன்?- பொதுநல வழக்கு தாக்கல்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் சர்ச்சை, ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கால் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டாலும், ஒரு மாதத்துக்குப் பின்னர் உடல்நிலை மோசம் அடைந்ததாகவும், நுரையீரல் தொற்று, உடலில் அதிக சர்க்கரை, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 4-ம்…

  14. சசி, தினகரனை விரட்டி... இணையும் ஓபிஎஸ் - எடப்பாடி அணிகள்! இருதரப்பு பேச்சுக்கு.... தலா ஐவர் குழு அமைப்பு! சசிகலா, தினகரனை ஓரம் கட்டி அதிமுகவையும் கட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. இது தொடர்பாக இருதரப்பிலும் தலா 5 பேர் கொண்ட ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. சசிகலா, தினகரனின் ஆதிக்கத்தால் அதிமுக சுக்கு நூறாக சிதைந்து போய் எஞ்சிய 4 ஆண்டுகால ஆட்சி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் இனி அதிமுக ஆட்சிக்கே வரமுடியாத நிலை உள்ளது. இதனால் ஆட்சிக் காலத்தை தக்க வைப்பதில் அதிமுக மூத்த தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். குறிப்பாக சசிகலா, தினகரனை ஓரம்கட்டினால் ஓபிஎஸ் அண…

  15. விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை ஜூ.வி லென்ஸ் ‘‘டேய், மனுஷனா பொறந்தா லட்சியம் இருக்கணும்.’’ ‘‘குனிஞ்சு தேங்காய் பொறுக்கிறதால லட்சியம் இல்லைனு நினைச்சுடாதீங்க. பின்னால தெரியுதுல அரண்மனை...’’ ‘‘அதுல வேலைக்குச் சேர்த்துவிடவா?’’ ‘‘இல்லீங்க, அந்த அரண்மனையை ஒரு நாள் எனக்கு சொந்தமாக்கிடணும்.’’ ‘‘அடேங்கப்பா!” ‘‘காலையில ஒருவர் தேங்காய் உடைச்சாரு. அதை பொறுக்கிறதுல எனக்கும் நாய்க்கும் சரியான போட்டி.’’ ‘‘நாய் ஜெயிச்சுடுச்சா?’’ ‘‘இல்லை... நான்தான் ஜெயிச்சேன். நாயைக் கொன்னுட்டேன்!’’ ‘‘அடப்பாவி... நாயை பலி போட்டிருக்கான்.’’ ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன... ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்கணும்.’’ -‘…

  16. பெங்களூரு சிறைக்கு தினகரன் வரவில்லை: பண்ணை வீட்டில் தங்கலா? டிடிவி தினகரன் | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவை பார்க்க புறப்பட்டுச் சென்ற டிடிவி.தினகரன் திட்டமிட்டபடி சிறைக்கு வரவில்லை. இதனால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தினகரன் பெங்களூரு வந்துவிட்டார் ஆனால் சிறைக்கு வராமல் நட்சத்திர விடுதியிலோ அல்லது அவரது நண்பரின் பண்ணை வீட்டிலோ தங்கியிருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்து கிடக்கிறது. கட்சி சின்னமும் முடக்க…

  17. சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழக அமைச்சராக 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை பதவி வகித்தவர் சி.அரங்கநாயகம். இவர் அமைச்சராக பதவி வகித்த காலக்கட்டத்தில் தன் பெயரிலும், தன் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடிக்கு சொத்துச் சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர…

  18. டெல்லியில் இன்று விவசாயிகள் புல்-வைக்கோல் தின்னும் போராட்டம் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், இன்று மாடுகளைப் போன்று புல் மற்றும் வைக்கோலைத் தின்னும் போராட்டம் நடத்தினர். புதுடெல்லி: தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர்மந்தரில் வெயில், குளிர், மழை என்று பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எலிக்கறி, பாம்புக்கறி தின்று போராட்டம், மொட்டை அடித்து, மண் சோறு சாப்பிட்டு, சேலை அணிந்து, தாலி அறுத்து போராட்டம், குட்டிக்கரணம் அடித்து போராட்டம் என தினமும் வித்தியாசமான முற…

  19. பரபரப்பான அரசியல் சூழலில்... அதிமுகவின் 122 எம்.எல்.ஏக்களும் சென்னைக்கு வர எடப்பாடி திடீர் அழைப்பு. தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் 122 எம்.எல்,ஏக்களும் நாளை சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 122 பேரும் நாளை சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்துள்ளார். நாளை சென்னை வரும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - தற்ஸ் தமிழ்.-

  20. இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் மீது வழக்குப் பதிவு! ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க் கொடி தூக்கியதை அடுத்து, அந்தக் கட்சி இரண்டாகப் பிரிந்தது. பிறகு, நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர்செல்வம் அணிகள், தனித்தனியாகப் போட்டியிட்டன. இதையடுத்து, இரு அணியினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோர, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக, அ.தி.மு.க அம்மா அணியின் தினகரனிடமிருந்து ரூ. 5…

  21. பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறார்களா வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதன் பிறகு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். பன்னீர்செல்வம் அணியில் தற்போது 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும், 10 எம்.பி-க்களும் பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். குறிப்பாக, அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன் உள்பட முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் அவரது அணியில் உள்ளனர். அதேபோல், தியாகு, பாத்திமா பாபு , நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட நட்சத்திரப்…

  22. விஜயபாஸ்கரை வளைத்த வணங்காமுடிகள்! - ஐ.டி சோதனை பின்னணி 1 நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடன் வலம் வருகிறார்கள். இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக இருக்கிறார். "ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப் போகும் முன் தேடுதல் பணியில் மிகக் கவனமாக இருப்பார்கள். விஜயபாஸ்கர் விவகாரத்தில் ஆதாரங்கள் துல்லியமாகக் கிடைப்பதற்குக் காரணமே வருமான வரித்துறையின் இரண்டு அதிகாரிகள்தான்" என்கின்றனர் அதிகாரிகள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முன்வைத்து ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க. கடந்த டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி வளைக்கப…

  23. நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கிய வைகோ! 2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விரைந்து முடிக்க, வைகோ கோரியிருந்தார். இதுகுறித்து, எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்திருந்த மனுவில், வழக்கை விரைவாக நடத்தவில்லை என்றால், தன்னைக் கைதுசெய்ய அவர் கோரியிருந்தார். குறிப்பாக, ஜாமீனில் வெளிவர விருப்பமில்லை என்று அவர் கூறினார். இதனால், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றுடன், அவரது 15 நாள் காவல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, அவர் எழும்பூர்…

  24. ஜெயலலிதாவின் வாரிசு யார்? ஆர்டிஐ அளித்த அதிரடி பதில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு சட்டப்படி வாரிசுதாரர் எவர் பெயரும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என்பதால் அவரது அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார். தகவல் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களையும் வெளியிடுபவர் சமூக ஆர்வலர் பாஸ்கரன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர் என எவரையும் குறிப்பிடப்படவில்லை என்பதை அறிந்துள்ளார். இதனால் ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழகச் சொத்தாக அறிவிக்க வேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். …

  25. அமைச்சர்கள் கைது எப்போது? போலீஸ் அதிகாரிகள் மும்முரம் சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில், அமைச்சர் களை கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இடைத்தேர்தல் நடக்க இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்வதற்கான ஆதாரங்கள் சிக்கின. அப்போது, அமைச்சர்கள்காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், விஜயபாஸ்கர் வீட்டிற்குள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.