Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா இடத்தில் சசிகலா... சசிகலா இடத்தில் திவாகரன்! பரபரக்கும் மன்னார்குடி 'கள நிலவரம்' "உங்களுக்கு துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை; உறவுமில்லை. உங்களுக்கு உண்மையான தங்கையாகவே இருக்கவே விரும்புகிறேன். அவருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்" - 2011-ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய சசிகலா, 2012-ம் ஆண்டு துவக்கத்தில் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி தான் இது. இதை அறிக்கையாகவும் வெளியிட்டார் சசிகலா. இந்த கடிதத்தை ஏற்று சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்று, மீண்டும் கட்சிக்குள்ளும், கார்டனுக்குள்ளும் சசிகலாவை அனுமதித…

  2. இதெல்லாம் எங்க தொகுதி... பிரசாரத்தில் தன்னிச்சையாக குதித்த பாஜக.. அதிர்ச்சியில் அதிமுக.! சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் எவை எவை? என தீர்மானிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் தொடங்கி 40-ல் வந்து நின்றது பாஜக. ஆனால் இவ்வளவு தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கவே முடியாது என்கிற திட்டவட்டமான நிலையை அதிமுக தெரிவித்து வந்தது. இதையடுத்து அதிமுக அணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. அதேநேரத்தில் எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இந்த தொகுதி உடன…

  3. ஓ.பன்னீர்செல்வம் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு அணியாக பிரிந்துள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தவர் ஆவார். பன்னீர்செல்வம் அணிக்கு ஏற்கெனவே11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அருண்குமாரின் வருகையால், ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/83443-coimbatore-north-constituency-mla-arunkumar-supports-panneerselvam-camp.html

  4. ஈழ தமிழர்கள் பிரச்சினை குறித்து மு.க.ஸ்டாலின் ஐ.நா.வில் உரையாற்ற உள்ளார் ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவில் ஜூன் 12ம தேதி நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் உரையாற்ற, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியான அறிக்கையில், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் இந்த ஆண்டுக்கான ஐ.நா. அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திமுகவும், டெசோ அமைப்பும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் ஐ.நா.வில் பதிவாகி அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக திமுக எ…

  5. நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலைத் தோட்டயில் பணியாற்றும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் | உள்படம்: எம்.எஸ்.செல்வராஜ் இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல, நீலகிரி மலையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் பரிவுகாட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். தமிழக கிராமங்களில் வறட்சி, வறுமை, பஞ்சத்தால் பாதிக்கப…

    • 0 replies
    • 327 views
  6. சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நான் எப்போதுமே கருத்து தெரிவிப்பதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்... கேள்வி - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பதவி நீடிப்பு வழங்க வேண்டுமென்று, ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பற்றி தங்கள் கருத்து என்ன? கருணாநிதி - உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ, உயர்நீதிமன்றத் தீ…

  7. தினகரனைக் கட்டம் கட்டும் சசிகலா குடும்பம்! - கொதிப்பைக் கூட்டிய சிறை சந்திப்புகள் ' அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் துணைப் பொதுச் செயலாளரான எனக்கு உண்டு' என தினகரன் அறிவித்திருப்பதன் மூலம், கட்சிக்குள்ளும் சசிகலா குடும்பத்துக்குள்ளும் ஒரே நேரத்தில் புகைச்சல் கிளம்பியுள்ளது. ' எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் வேலைகளில் திவாகரன் ஈடுபட்டு வருகிறார். தினகரனை ஓரம்கட்டும் வேலைகள் தீவிரமடைந்ததால், தனக்கான கட்சி அதிகாரத்தை முன்னிலைப்படுத்துகிறார் தினகரன்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று சசிகலாவை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அவருக்கு அடுத்து, தினகரனும்…

  8. இலங்கைக்கு கடல்வழியாக கடத்தவிருந்த கேரள கஞ்சா மீட்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கஞ்சா மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் தப்பியோடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகுமூலம் கேரளா கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து மண்டபம் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரியமாண் கடற்கரை அருக…

  9. பட்ஜெட் 2022: காவிரி - பெண்ணாறு உட்பட 5 நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு வரைவு அறிக்கை தயார் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 2022-23 நிதியாண்டுக்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அதில், விவசாயம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை: வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 2.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரசாயன உரங்கள் அற்ற இயற்…

  10. அமெரிக்காவின் ”அயோக்கிய” தீர்மானத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று வேளச்சேரியில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான KFC ஐ பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த 20 மாணவர்கள் முற்றுகையிட்டனர். 1) தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து. 2) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை உடனே நடத்து. என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்களின் முற்றுகை அமைந்தது. கடையில் இருந்தவர்களிடம் இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு குறித்த விடயங்களை துண்டறிக்கைகளாக கொடுத்து அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிக்க கோரினர். கடைக்கு வெளியே கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியும், கடையில் அமர்ந்திருதவர்களுக்கு மத்தியில் சென்று இனப்படுகொலை மற்றும் தமிழீழம் தொடர்பான முழக்கங்களும் எழுப்பபட்டன.அதை கண்டு சாப்பிட …

  11. கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வரும் 14ம் தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி, கடலில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம் ஆவதை காணலாம். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் வரும் 14ம் தேதி (புதன்கிழமை) சித்ரா பவுர்ணமி அன்று மாலை சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அபூர்வம் நிகழ்கிறது. இந்த காட்சியை பார்ப்பதற்கு தமிழகம் மற்றும் பலவேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து குவிவார்கள். இந்த அபூர்வ காட்சி இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்க முடியும். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு சிறப்பு அப…

    • 0 replies
    • 701 views
  12. குடும்ப தலைவிகளுக்கு... மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்க... நடவடிக்கை – மு.க.ஸ்டாலின் நிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தேர்தல் நேரத்தில் தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் எஞ்சிய 30 சதவீத திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான விசாரணை அறிக்கைகளை விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல்…

  13. ஒரே மாதிரியாக வாக்களிப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்! - பிரணாய் ராய் பேட்டி இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான பிரணாய் ராய் பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்டவர். ‘என்டிடிவி’யின் நிறுவனர்களில் ஒருவர். தோரப் ஆர்.சோபரிவாலாவுடன் இணைந்து பிரணாய் ராய் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக்‌ஷன்ஸ்’ புத்தகம் 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வாக இருக்கிறது. புத்தகத்தின் மிக சுவாரஸ்யமான பகுதி, தேர்தல் முடிவுகளை எப்படியெல்லாம் கணிக்கிறார்கள் என்பதுதான். மூத்த பத்திரிகையாளரான என…

    • 0 replies
    • 912 views
  14. மாணவர், மக்கள் போராட்டத்தை வன்முறை என்று வர்ணித்த ரஜினி.. வெடித்துக் கிளம்பும் கடும் கண்டனங்கள்! குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த ரஜினியின் கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கி உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்த இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சிறுபான்மையினர் அகதிகள் மத துன்புறுத்தலால் 2014 டிசம்பர் 31க்கு முன்பு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் குடியுரிமை சட்டம் மதபாகுபாடு காட்டு…

  15. மணல் யாருக்கு? - மன்னார்குடி குடும்பத்துக்குள் ஜல்லிக்கட்டு! மண்ணைப் பொன்னாக்கும் வாய்ப்பை யாருக்கு வழங்கலாம் என்பதற்கான பரீட்சையை நடத்திக்கொண்டிருக்கிறது மன்னார்குடி. சசிகலாவின் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோதான ஆட்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை மணல் குவாரிகள் மூலம் கொட்டிய கரன்சி கட்டுகளில் ஒரு பகுதி மட்டுமே மன்னார்குடி பக்கம் சென்று கொண்டிருந்தது. ஜெயலலிதா மறைவு, மணல் பிசினஸைத் தன் கையில் வைத்திருந்த சேகர் ரெட்டி கைது என அடுத்தடுத்த நிகழ்வுகளால் தமிழகத்தின் மணல் குவாரிகள் தற்காலிகமாக செயல் இழந்துள்ளன. ‘ஆறுமுகசாமி, படிக்காசு, சேகர் ரெட்டி வரிசையில் அடுத்தது யார்’ என்பதுதான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி. இதற்காகப் ப…

  16. சசிகலா பதவியேற்ப்பு விழாவிற்க்கு மறுப்பு : ஆளுநர் வித்யாசகர் ராவ் !! உங்க விளையாட்டுக்கு நா வரல !

  17. மாற்றம் வேண்டும் மாறாத மாற்றம் வேண்டும்,

  18. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள்: ஆவணங்களை சரிபார்ப்பதாகத் தகவல் அமைச்சர் விஜயபாஸ்கர்| படம்: பிடிஐ தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடந்த சோதனையின்போது சில ஆவணங்களைக் கைப்பற்றி ஓர் அறையில் வைத்துப் பூட்டிச் சென்றனர். தற்போது ஏற்கெனவே கைப்பற்றிய ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இதற்காக திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட குழு வந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இருந்தாலும் தற்போது…

  19. தி.மு.க vs அ.தி.மு.க: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள் என்ன? களம் யாருக்கு சாதகம்? - தமிழக அரசியல் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ``இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தி.மு.கவுக்கு சாதகமான முயற்சிகள் அரங்கேற உள்ளன,'' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். உண்மையில் என்ன நடக்கிறது? தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கடந்த 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அத…

  20. தேக்கடி: மது பாட்டில்களுடன் வந்ததாகக் கூறி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஐந்து பேரை கேரள போலீஸார் அடாவடியாக கைது செய்து சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்துள்ளனர். கேரளாக்காரர்களின் அட்டகாசத்திற்கும், அநியாயத்திற்கும் அளவே இல்லை. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை பொறுப்பில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அவர்கள் ரொம்பவே அவமானப்படுத்தும் வகையில் நடத்துவது வழக்கம். இதை உறுதியுடன் எதிர்க்க இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள், கேரளத்தினரிடம் தொடர்ந்து அவமரியாதைகளைச் சந்தித்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் தேக்கடியில் அதேபோல், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம், பொறியா…

  21. வருகின்ற ஞாயிறு 12-01-2014 காலை 10 மணிக்கு திவ்யோதயா அரங்கில் கோவையில், 12-01-2014 மாலை 5 மணிக்கு திருப்பூரில், பொதுக்கூட்டம். ”தமிழீழ படுகொலை ஒரு இனப்படுகொலையே, மற்றும் இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்தின் பங்கு” மேலும்” பொதுவாக்கெடுப்பு- பிப்ரவரி12 ஐ.நா அலுவலக முற்றுகை”யின் நோக்கம் பற்றிய பிரச்சாரக் கூட்டம். கோவையில் பங்கேற்போர் : தோழர். கு.ராமகிருட்டிணன், தோழர். நெல்லை முபாரக், தோழர்.பாமரன், தோழர். உமர்கயான், தோழர். திருமுருகன். திருப்பூர் : தோழர் ரபீக், தோழர். உமர்கயான், தோழர். திருமுருகன் (மற்றும் இதர தோழர்கள் பெயர்களை உறுதி செய்த பிறகு நாளை பதிகிறோம்..) தோழர்கள் மிகக் குறுகிய காலம் இருப்பதால் சக தோழர்களிடத்தில் செய்தியைப் பரப்பி உதவுங்கள். Thirumurugan Gandh…

  22. சென்னை அடையாரில் உள்ள ஐ.நாவின் யுனிசெவ் அலுவலகத்தை தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞரகள் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் முற்றுகையிட்டனர். இன்று (13.02.14) 11.30 மணி அளவில் திடீரென முற்றுகையிட்ட அவர்கள் பின்னர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்து அங்கு இருந்த ஐ.நா அவையின் கொடிகளையும், அமெரிக்க கொடியையும் அகற்றினர். யாரும் எதிர்பாராத வகையில் உள்நுழைந்த மாணவர்கள் உள்பக்கமாக அனைத்து கதவுகளுக்கும் பூட்டு போட்டனர்... ஐநா அலுவலகத்தின் உள்ளே நுழைந்த மாணவர்கள் அங்கு காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். இலங்கைக்கு ஆதரவான ஐ.நா வின் தீர்மானத்தை எதிர்த்தும், பொது வாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை கோரியும் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தை …

  23.  இந்த வாரம் தமிழக அமைச்சரவை... மாற்றம்! அ.தி.மு.க., என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும், முதல்வர் பழனிசாமி அணிக்கு கிடைத்ததும், இந்த வாரம், தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. ஆட்சியில் உள்ள, 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள், நான்கு பேருக்கு, 'கல்தா' கொடுக்கப்படுவதோடு, சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படும், 27 மாவட்ட செயலர்களை, பதவியில் இருந்து நீக்கவும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.…

  24. "இலங்கையில் மக்கள் சக்தி வென்றிருக்கிறது" - ராமதாஸ் கருத்து சென்னை: "இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபக்ச குடும்பம் அதை மறைக்க தமிழர்களை இனப்படுகொலை செய்தது, அதற்காக கடன் வாங்கியது, இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதித்தது ஆகியவை தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கையை திவாலாக்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் மக்கள் சக்தி வென்றிருக்கிறது. மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் …

  25. கேரள ஆளுநர் கோரிக்கையை மறுக்கும் முதல்வர் - அமைச்சரை நீக்கக் கோரும் விவகாரத்தின் முழு பின்னணி முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI கேரளாவில் மாநில நிதியமைச்சர் பேசிய பேச்சு ஒன்றுக்காக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கேரளாவின் நிதியமைச்சர் கே.என். பாலகோபால் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து பிராந்தியவாதத்தைத் தூண்டுவதாகவும் இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாகவும் கேரள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.