தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
பன்னீருக்கு நெருக்கடி பதவி விலக பன்னீருக்கு மறைமுக நெருக்கடி ஜல்லிக்கட்டு போராட்டம் நீடிப்பதன் பகீர் பின்னணி ஜல்லிக்கட்டு போராட்டத்தை பயன்படுத்தி, முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக, அ.தி.மு.க., வில் ஒரு தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதன் மூலம், அவரை பதவி விலகச் செய்து, சசிகலாவை முதல்வராக்க காய் நகர்த்துவதாக வும், தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக, ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்த முடியவில்லை. 'இந்த ஆண்டு தடையை நீக்கி விடுவோம்' என, மாநில அரசு உறுதி அளித்தது; மத்திய அமைச்சர்களும் உத்தரவாதம் கொடுத்தனர். ஆனாலும், தடை நீக்கப்படவில்லை…
-
- 0 replies
- 371 views
-
-
பிரதமரை சந்திக்க முடியாத அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கடந்த வியாழனன்று, பிரதமரை சந்திக்க தீவிரமாக முயன்றும் முடியாமல், ஆறுதலுக் காக வெள்ளியன்று உள்துறை அமைச்சரை சந்தித்த, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கடைசியாக வெள்ளியன்று ஒரு திருப்திக்காக, ஜனாதிபதி யையும் சந்தித்து தமிழகம் திரும்பியுள்ளனர். வறட்சி நிவாரண நிதி கோரிக்கைக்காக ஏற்கனவே கேட்டிருந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் வரச் சொன்னதால், முதல்வர் பன்னீர்செல்வம் டில்லிக்கு வந்திருந்தார்.இந்த சந்திப்பை, தமிழகத்தில் பற்றி எரியும் ஜல்லிக்கட்டு பிரச்னைக்காகவும் முதல்வர் பயன்படுத்தப்போகிறார் என்பதை அறிந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் உத்தரவு…
-
- 0 replies
- 484 views
-
-
சென்னை:தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க, தன்னெழுச்சி யாக திரண்டுள்ள மாணவர் கூட்டத்தை, திசை திருப்பும் வேலைகளில், தேச விரோத சக்திகள் களம் இறங்கியுள்ளதாக, தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இசை அமைப்பாளருமான, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி கூறியுள்ளார். அதனால், 'சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்' என, மாணவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன், கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் உதடுகளும், ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை உச்சரிக்க கருவியாக இருந்தது, 'ஜல்லிக்கட்டு... ஜல்லிக்கட்டு..'என்ற ஆல்…
-
- 0 replies
- 309 views
-
-
புது கட்சி துவங்காவிட்டால்... தீபாவுக்கு ஆதரவாளர்கள் கெடு வேலுார்:'உடனடியாக தனிக் கட்சியை துவங்கா விட்டால், வேறு அணிக்கு சென்று விடுவோம்' என, தீபாவுக்கு, அவரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில், அதிகளவு ஆதரவு உள்ளது. ஆம்பூரில் துவங்கப்பட்டுள்ள தீபா பேரவையில், இதுவரை, இரண்டு லட்சம் பேர் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தீபா தனிக் கட்சி துவங்குவார் என, அவரது தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தனிக் கட்சி துவங்காத தால் ஏமாற்றம் அடைந்தனர். தீபா பேனர் வைத்தவிவகாரத்தி…
-
- 3 replies
- 627 views
-
-
தமிழர்களின் உயரிய கலாச்சாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும், மத்திய அரசு தமிழர்களின் கலாச்சார விருப்பங்களை காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். நரேந்திர மோதியின் ட்விட்டர் செய்தி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி குறிப்பிடுகையில், 'தமிழகத்தின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து நாம் பெருமையடைகிறோம். தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் செய்தியில், 'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. மேலும் பல முன்னேற்றங…
-
- 0 replies
- 611 views
-
-
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினா போராட்டம் தொடரும்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்; 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர் சங்கர் மற்றும் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினாவில் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று அப்போராட்டத்தில் பங் கேற்று வரும் இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், சென்னை மெரினாவில் நடத்தி வரும் …
-
- 0 replies
- 315 views
-
-
மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்: முதல்வர் ஓபிஎஸ் பேட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: பிடிஐ மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற பிரதமர் உறுதி அளித்தார். அவரின் உறுதியைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்…
-
- 0 replies
- 271 views
-
-
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் : G.V. பிரகாஷ் குமார்
-
- 4 replies
- 483 views
-
-
கூட்டம்! முதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...: பன்னீர் சொல்லுக்கு கட்டுப்படுமா ஆளுங்கட்சி? தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், சட்டசபை கூட்டம், நாளை துவங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கூடும் இந்த கூட்டத்திற்கு, அ.தி.மு.க., சசிகலாவின் அதிருப்தியாளர் என கருதப்படும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கப் போவதால், ஆளுங்கட்சி இவருக்கு கட்டுப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின், முதன்முறையாக, நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில், சட்டசபை குழுக்கள் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால்…
-
- 0 replies
- 319 views
-
-
முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி சசிகலா குடும்பத்தினர் உத்தரவு காரணமாக, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கவிருந்த, அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை முதல்வராக பணியாற்றியவர் என்பதால், அவர் முதல்வரானதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் …
-
- 0 replies
- 568 views
-
-
ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் இந்த சட்டமூலத்திற்கு மூன்று மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன எனவும் சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அமைச்சகங்களே இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளன எனவும் ஒப்புதல் அளித்த சட்டமூல வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு சட்டதிருத்த வரைவை அனுப்பும் எனவும்தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறி…
-
- 5 replies
- 648 views
-
-
மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்! எருதுப் புரட்சி! வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என்ற வாசகம் பொறித்த பனியனோடு அலுவலகம் வந்து சேர்ந்த கழுகாரிடம், ஜல்லிக்கட்டிலிருந்தே கேள்விகளை ஆரம்பித்தோம். ‘‘மத்திய அரசு நினைத்திருந்தால்... தமிழக எம்.பி-க்கள் போராடி இருந்தால்... ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டம் கொண்டுவந்திருக்கலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சாட்டையடி கொடுத்திருக்கிறாரே?’’ ‘‘உண்மைதான். அவர் இதற்கு தெளிவான முன்னுதாரணமும் கொடுத்திருந்தார். ‘இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என கடந்த 75-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதனால் அவர் பிரதமராகத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. …
-
- 0 replies
- 827 views
-
-
“தயார் நிலையில் துணை ராணுவம்” - தமிழக அரசுக்கு செக் வைக்க துடிக்கும் மோடி அரசு! தலைவர்களே இல்லாமல் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக இளைஞர்கள் போராட்டக்களத்தில் இறங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்தப் போராட்டத்தைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாமல் தவித்து வருகிறது. எந்தவித வன்முறையும் இல்லாமல், அறவழியில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஆரம்பித்தபோது, அதை சாதாரணமாக நினைத்தது தமிழக காவல்துறை. அதன்பிறகு நாட்கள் செல்லச்செல்ல... அதன் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசைந்து நிற்கிறது. இந்த நிலையில், துணை ராணுவம்மூலம் பூச்சாண்டி …
-
- 2 replies
- 569 views
-
-
பாய்சன்... பாயசம்... பன்னீர்! முதல்வரின் கதைக்குப் பின்னால் கண்ணீர் தமிழகத்தின் ‘கூஜா’ முதல்வர் என்று இதுநாள்வரை விமர்சிக்கப்பட்டு வந்த பன்னீர்செல்வம், தமிழக அரசின் ராஜாவாக முடிசூட்டிக்கொள்ளத் துணிந்துவிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலைகள், மூன்று முறை முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை முதல்வர் நாற்காலி கிடைத்தது. அப்போது, தன்னை முதல்வராக நினைத்து அந்த நாற்காலியில் அவர் அமரவில்லை. ‘தான் எதற்காக அமர்த்தப்பட்டு இருக்கிறோம், யாரால் அமர்த்தப்பட்டு இருக்கிறோம்’ என்பதை உணர்ந்து, அஞ்சி அஞ்சி அதில் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தன்னை ‘முதல்வர் பன்னீர்செல்வம்’ என்று அழைப்பதைக்கூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
முதல்வருக்கே தடை போட்ட துணை சபாநாயகர்: டில்லியில் 'தில்லாலங்கடி' ''என்னைச் சந்திக்க நேரம் தராத, பிரதமர், நரேந்திர மோடியை, நீங்களும் சந்திக்க வேண்டாம்,'' என, துணை சபாநாயகர் தம்பிதுரை தடை போட்டு, இம்முறையும் முதல்வர் பன்னீர்செல்வத்தை பாடாய் படுத்தியதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வறட்சி நிவாரண நிதி கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப் பட்டிருந்தது. இந்நிலையில், வியாழனன்று சந்திக்க வரும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டது.முதல்வர் டில்லி கிளம்புகிறார் என்ற தகவல் தெரிந்ததும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா தரப்பும் சுறுசுறுப்பாகி, ஜல்லிக்கட்டு விஷயத்திற்கு, இந்த சந்திப்பை பயன்படுத்த திட்டமிடப்பட்டது.…
-
- 0 replies
- 454 views
-
-
சசி - பன்னீர் இடையே பனிப்போர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அம்பலம் முதல்வர், பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவிற்கும் இடையே, பனிப்போர் நிகழ்ந்து வருவது, சசிகலா நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் அம்பலமாகி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக் கப்பட, பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தார். சசிகலாவே, முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை அறிக்கை வெளியிட்டார். அதற்கு, பன்னீர்செல்வம் எந்த பதிலும் தெரிவிக்க வில்லை. இந்நிலையில், தம்பிதுரை போன்றவர்களால், சசிகலாவுக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே, பனிப்போர் ஏற்பட்டு உள்ளது…
-
- 0 replies
- 552 views
-
-
ஜல்லிக்கட்டு தடைக்கு தீர்வு என்ன? #YoutubeLive ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர் மற்றும் சென்னை மெரினாவில் ஆரம்பித்த போராட்டம் சங்கிலித் தொடர்போல... கோவை, சேலம், கடலூர், திருச்சி, சேலம், டெல்லி என எங்கும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கான போரட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் என மூன்று மாவட்டங்களில் மட்டும் நடந்துவந்த ஜல்லிக்கட்டு, இளைஞர்களின் எழுச்சியால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றி இளைஞர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், யூடியூப் லைவ்வில் அவற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்…
-
- 0 replies
- 609 views
-
-
திமிறி எழுந்த தமிழகம் : போராட்டத்துக்கான வேர்களைத் தேடும் உளவுத்துறை! "இது அன்பால, தானா சேர்ந்த கூட்டம்" என்று படையப்பா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் வசனம் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி நடக்கும் போராட்டத்துக்கு பொருத்தமாகி விட்டது. "எங்கெல்லாம் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள் உலக புரட்சியாளர்கள். அப்படித்தான், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உலகெங்கிலும் இருந்து ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடங்கிய போராட்டம் தற்போது, பல்…
-
- 0 replies
- 557 views
-
-
பேச்சுவார்த்தை வேண்டாம்... தீர்வு மட்டுமே வேண்டும்... ”ஜல்லிக்கட்டை அனுமதிப்பதற்கான முடிவை 3 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் எங்கள் ரேசன் அட்டை, ஆதார் அட்டைகளை திருப்பியளிப்போம் அல்லது தீயிட்டு கொளுத்துவோம்” கோவையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை...
-
- 1 reply
- 432 views
-
-
எதனால இது எதனால தப்பு தப்பா தோணுது மனசுக்குள்ள அதுவும் மத்தியா அரசலா என்ன என்னமோ ஆகுது தல , கால் புரியாமல் ஆடுது ஒரு அரசு தமிழனா ஒதுக்க பார்க்குது முதல காவேரி தண்ணீரும் குடுக்க மறுக்குது விவசாயத்தை விவசாயிடம் இருந்து பிரிக்குது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்குது பொங்கல் விடுமுறையும் பறிக்குது தமிழ் நாட்டுக்கு முற்று புள்ளிவைக்க துடிக்குது ..... தமிழர் பண்பாட்டையும் மாட்டையும் அளிக்க நினைக்குது இப்போ ஜல்லிக்கட்டுக்கு ஆதரிப்போம் என நாடகம் நடத்துகிறது புது புது திட்டமா திட்டுகிறது தமிழ் நாட்டை சுற்றி வளைக்குது எதனால இது எதனால திசை திருப்பா பார்க்குது எதனால விவசாயின் உயிரை குடிக்கிறது இன்னும் ஏதற்கு துடிக்கிறது எதனால இது எதனால மு.க.ஷாப…
-
- 2 replies
- 893 views
-
-
ஜெ.,க்கு அளித்த சிகிச்சை விபரம்: வெளியிட தீபா வலியுறுத்தல் சென்னை:''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரத்தை முழுமையாக வெளியிட வேண்டும்,'' என, ஜெ., அண்ணன் மகள், தீபா தெரிவித்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டி: * ஜெ., மறைவில் சந்தேகம் இல்லை என, திடீரென தெரிவித்துள்ளீர்களே? *** முதலில் இருந்து ஒரே கருத்தையே தெரிவிக்கிறேன். அப்பல்லோ மருத்துவமனை உள்ளே, என்னை அனுமதிக்கவில்லை. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, என்ன நடந்தது என்பது எதுவுமே தெரியவில்லை. எதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பதும் தெரியவில்லை. சிகிச்சை குறித்த தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்; அதில் மாற்று கருத்து கிடையாது. நான் எதையும் மாற்றி சொல்லவில்லை. ஜெ.,க்கு அளிக்கப்பட்ட…
-
- 0 replies
- 401 views
-
-
“இரட்டை இலையை மீட்டவர் ம.நடராசன்!” - திவாகரன் ஸ்டேட்மென்ட் ஒவ்வோர் ஆண்டும் சசிகலாவின் கணவர் ம.நடராசனால் தஞ்சையில் நடத்தப்படும் தமிழர் கலை இலக்கியத் திருவிழா, வழக்கத்தைவிட மிக பிரமாண்டமாக இந்த ஆண்டு நடைபெற்றது. திவாகரன் தன் ஆதரவாளர்களுடன் பங்கேற்றது, மெகா சைஸ் சசிகலா படம், ஜல்லிக்கட்டு படம் என இந்த ஆண்டு இன்னும் வித்தியாசங்கள். எப்போதும் நடராசன்தான் இந்த விழாவில் பொங்கித் தீர்ப்பார். இந்த ஆண்டு திவாகரன் பொங்கித் தீர்த்தார். வழக்கமாக நடராசன் நிகழ்ச்சி என்றால், மூன்று நாட்களும் தமிழக உளவுப்பிரிவினர் களத்தில் இறக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அவர்கள் மிஸ்ஸிங். ‘பட்டமில்லா பேரரசன்’, ‘அரசியல் சதுரங்கத்தின் கிங் மேக்கர்’ என்று ம.நடராசனுக்கு ஃபிள…
-
- 0 replies
- 595 views
-
-
சாதிப்பாரா சசிகலா? ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான எதிர்வினையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார் சசிகலா காட்சி 1: ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்துக்கு சுமார் பதினைந்து பேருடன் வந்து நிற்கிறார் அந்தத் தொண்டர். உள்ளே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் சசிகலா. வந்த தொண்டருக்கு ஏனோ உள்ளே செல்ல மனமில்லை. தயங்கி நிற்கிறார். அருகில் இருப்பவர்களிடம் “ண்ணா.. தீபா மேடம் வூடு எங்காக்குது?” என்று கேட்கிறார். பதில் வந்ததும், அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். சற்று நேரத்தில் அந்தக் கூட்டம் அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள தீபா வீடு நோக்கிக் கிளம்புகிறது. காட…
-
- 0 replies
- 592 views
-
-
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த தினத்தில் சசிகலா Vs தீபா! தொண்டர்கள் யார் பக்கம்? அ.தி.மு.க என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் தலைமை குறித்த குழப்பம் நிலவுகிறது. சுமார் 26 ஆண்டுகள் அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்து டிசம்பரின் மறைந்த ஜெயலலிதாவின் மேனரிசத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளராகி இருக்கும் சசிகலாவும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் பின்பற்றத் தொடங்கி இருப்பது வேடிக்கையான விந்தையாக உள்ளது. சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலா…
-
- 0 replies
- 412 views
-
-
சசிகலாவுக்கு நான் பயப்பட மாட்டேன்: தீபா ''சசிகலாவை பார்த்து, நான் பயப்படவில்லை,'' என, தீபா தெரிவித்தார். சென்னையில், நேற்று தீபா அளித்த பேட்டி: * ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, என் சகோதரர் தீபக், 25 நாட்கள் உடன் இருந்துள்ளார். எனவே, சந்தேகமெல்லாம் இல்லை. * புதுக் கட்சி துவங்க உள்ளீர்களா? ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, என் அரசியல் பயணத்தை வெளியிட ஆசைப்படுகிறேன். * போலீஸ் பாதுகாப்பு கேட்டீர்களா? கேட்கவில்லை; அதற்கான அவசியம் ஏற்படவில்லை. எனக்கு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்; தொண்டர்கள் அரணாக உள்ளனர். * ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, சசிகலா காலி செய்ய வேண்…
-
- 0 replies
- 700 views
-