தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
கலக்கம்! பன்னீருடன் மோடி சந்திப்பு பழனிசாமி அணி கலக்கம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணி நிர்வாகிகளை, பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசியது, பழனிசாமி மற்றும் தினகரன் அணியினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., மூன்றாக பிளவுபட்டுள்ளது. பன்னீர் அணிக்கு, பா.ஜ., ஆதரவு உள்ளது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி அணியினர், பிரதமருடன் நெருக்கம் காட்டினர். கலந்துரையாடல்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வப்போது டில்லி சென்று, பிரதமரை சந்தித்தனர்; மத்திய…
-
- 0 replies
- 571 views
-
-
அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார். 'என் பக்கம் சேராவிட்டால், நான் சொல்வதை கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும், 'சர்ச்சை படங்களை வெளியிடுவேன்' என்றும், அமைச்சர்களை அச்சுறுத்த ஆரம்பித் துள்ளார். அமைச்சர்களிடையே, தனக்கு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி, முதல்வர் பழனிசாமியை பயமுறுத்தவும், தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல், சுதந்திர மாக செயல்பட, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார். அதற்கு, முழு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பக்கம் நிற்கின்றனர். ஒரு அமைச்சர்…
-
- 0 replies
- 262 views
-
-
“ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!” திவாகரன் தடாலடி ‘‘பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. ‘எங்களிடம் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். பாதாளம் வரை செல்லும்’ என ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மீடியாவை, மக்களை, தொண்டர்களை முட்டாளாக நினைத்து இப்படிச் செல்கிறார். அமைச்சர் சொல்லக்கூடிய வார்த்தையா அது? இது மைனாரிட்டி கவர்ன்மென்ட் ஆகிவிட்டது’’ எனச் சூடாக ஆரம்பிக்கிறார் திவாகரன். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என 19 எம்.எல்.ஏ-க்கள் தினகரன் பக்கம் வந்துவிட்டார்கள். இந்தச் சூழலில், ‘அடுத்து என்ன செய்யப்போகிறார…
-
- 0 replies
- 5.3k views
-
-
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியால் அமைச்சர்கள் ஆவேசம்: முதல்வர் பழனிசாமி - தினகரன் மோதல் உச்சகட்டம் - சிறைக்கு செல்வீர்கள் என ஒருவருக்கு ஒருவர் பகிரங்க மிரட்டல் டிடிவி தினகரன் சிறைக்குச் செல்வார் என முதல்வர் பழனிசாமியும், முதல்வரும் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள் என டிடிவி தினகரனும் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிமுகவில் 21 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கலைப்பேன் என்று தினகரன் பேசி வருகிறார். நீதிமன்றத்திலும் தினகரன் தரப்பில் வழக்குகள் உள்ளன. இது மட்டுமின்றி, ஆளுநர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெ…
-
- 0 replies
- 295 views
-
-
டெல்லியில், ராகுல் காந்தியை திருமாவளவன் திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருவரும் 45 நிமிடங்கள் தனியாக பேசியுள்ளனர். இதுகுறித்து திருமாவளவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பதில் அளித்து கூறியதாவது:– காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச கடிதம் கொடுத்து அவர் என்னை அழைத்த போது என்னால் அப்போது பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் அந்த வாய்ப்பு நேற்று எனக்கு கிடைத்தது. ராகுலும் நானும் தனியாக பேசியபோது தமிழக அரசியல் நிலவரங்கள், பாரா…
-
- 0 replies
- 1.1k views
-
-
தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பட்டியலோடு வந்தார் கழுகார்! ''தி.மு.க. வட்டாரம் தன்னுடைய தேர்தல் முஸ்தீபுகளைத் தொடங்கிவிட்டது. 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு முடிந்ததும், வேட்பாளர் நேர்காணல் தொடங்க ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். தி.மு.க-வை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட பலரும் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், அதற்கு இதுநாள் வரை கருணாநிதியும் ஸ்டாலினும் பிடிகொடுக்கவில்லை. தே.மு.தி.க-வுடனான பேச்சுவார்த்தைகளையும் தற்காலிகமாக தி.மு.க. நிறுத்தி வைத்துள்ளது. தி.மு.க. சார்பில் பேசப் போன தொழிலதிபர் ஒருவரிடம், 'என்னுடைய இலக்கு 2016-தான். இப்போது தி.மு.க-வை ஆதரித்துவிட்டால், அப்போது தி.மு.க-வை எதிர்த்து பிரசாரம் செய்ய முடியாது’ என்று வெளிப்படையாகவே வி…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒற்றை மொழி... ஒற்றுமைக்கு, உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கெடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமை தொடர்ந்து செய்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இவ்வாறான தவறுகளையே பா.ஜ.க. அரசாங்கம் தொடர்ந்தும் செய்கின்றது என குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், இவ்வாறான முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெறமாட்டார்கள் என்றும் கூறினார். https://athavannews.com/2022/1275967
-
- 0 replies
- 306 views
-
-
தமிழ்நாடு: 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு வீட்டை இடித்த அதிகாரிகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு அதிகாரிகள் வீட்டை இடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சீரங்ககவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவருடைய தந்தை 95 வயதான குப்பணகவுண்டர். இவர் குடும்பம் இதே கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஓலைக் குடிசை வீட்டில் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வீட்டை புனரமைத்து கட்டிட வீடு கட்டி இருக்கிறார்கள். …
-
- 0 replies
- 488 views
- 1 follower
-
-
விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளம் ஆரம் பம் – அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமா? உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய் தனது படங்களின் அரசியல் பேச்சுக்கள் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரது படங்களான தலைவர, மெர்சல் ஆகியவை பெரும் சர்ச்சைக்குள்ளனாது. இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத…
-
- 0 replies
- 663 views
-
-
‘அம்மா’வுக்கும் பெப்பே... அ.தி.மு.க-வுக்கும் பெப்பே! கடந்த ஆண்டு, புகைப்படத்தோடு எளிமையாக முடிந்தது ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். இந்த ஆண்டு அவருடைய உருவச்சிலை திறப்பு, அவர் பெயரில் புதிய நாளிதழ்... என எல்லாமே சர்ச்சையில் முடிந்துள்ளன. ‘‘ஜெயலலிதாவின் சிலையை யார் மாதிரியோ வைத்து ‘அம்மா’வுக்கு பெப்பே காட்டிவிட்டனர். கட்சிக்காக என்று சொல்லி வெளியிட்ட நாளிதழுக்கும் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதால், அ.தி.மு.க-வுக்கும் பெப்பே காட்டிவிட்டனர்’’ என வருந்துகிறார்கள் ஜெ. விசுவாசிகள். சிக்கலை உண்டாக்கிய சிலை! ஜெயலலிதாவின் சிலையை நிறுவிய சாதனையைத் தங்களுக்குச் சொந்தமாக்க நினைத்த எடப்பாடி - பன்னீர் கூட்டணி, அந்தச் சிலையால் இவ்வளவு விம…
-
- 0 replies
- 1.7k views
-
-
'மினி கோடம்பாக்கம்' என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்? பகிர்க குட்டி கோடம்பாக்கம் தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி என்ற பெயருக்கே பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததால், 'பொருள் ஆட்சி' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில், பொள்ளாச்சி என மருவி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பொள்ளாச்சி பாலக்காட்டுக் கணவாய்க்கு நேர் எதிரில் உள்ளதால் மேற்கு கடலிலிருந்து வீசும் காற்றுடன் மழையும் பெய்கிறது. மழை பொழிவு மிகுதியாக உள்ளதால் பசுமை படர்ந்து எப்போதும் சோலைகளாக விளங்குகிறது. இதன் காரணமாகவும் பொள்ளாச்சி என்ற பெயர் உருவா…
-
- 0 replies
- 579 views
-
-
படத்தின் காப்புரிமை ARUN SANKAR ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சனையை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட முயற்சிக்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து: கேள்வி: நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6,000 என வாக்குறுதிகளை தந்துள்ள திமுக-காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? ப…
-
- 0 replies
- 908 views
-
-
தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே – தமிழிசை தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சுமத்தினார். சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இவர், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். இதன்போது, மூப்பனாருக்கு பிரதமராவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தாதாக குறிப்பிட்ட அவர், இதனைத் தடுத்தது திராவிட முன்னேற்றக் கழகமே எனக் குறிப்பிட்டார். அதேபோல் டாக்டர் அப்துல் கலாமும் மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுத்ததும் தி.மு.க.வே என அவர் குற்றஞ்சாட்டினார். http://athavannews.com/தமிழர்கள்-பிரதமராவதை-தடு/
-
- 0 replies
- 937 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கென புதிய கல்விக் கொள்கையை வகுக்க உருவாக்கப்பட்ட குழு, தனது பரிந்துரையை மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் என்ன சொல்கின்றன? கல்வியாளர்கள் என்ன கருதுகிறார்கள்? கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையைத் தற்போது மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்ட பின்னணி, அதில் ஏற்பட்ட சர்ச்சைகள், தற்போத…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
விமானங்களில் விஷ ஜந்துக்கள்: "சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகள் துவங்க காலதமாதமாகும்" சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார். விமான நிலையத்தின் ஓடுத்தளங்களில் வெள்ளம் வடிந்துள்ளபோதும், அதன் முழுமையான பாதுக்காப்புத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே சேவைகள் தொடங்கப்படும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்களில், பாம்புகள் உள்ளிட்ட எண்ணற்ற விஷப்பூச்ச…
-
- 0 replies
- 313 views
-
-
கடல் குதிரை படத்தின் கதாநாயகியை காவல் துறை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். 1993-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்த சந்திரன் என்பவரது மகள் பிரசாந்தி என்ற 20 வயது இளம் பெண் அறி…
-
- 0 replies
- 779 views
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறை…
-
- 0 replies
- 1.4k views
-
-
8 லட்சம் மரங்கள், குறுங்காடுகள்... வனத்துக்குள் திருப்பூர்! சுற்றுச்சூழல்: ஒரு லட்சம் மரம் என்ற இலக்குடன் களமிறங்கி, 5 வருடங்களில் 8 லட்சம் மரங்களை வளர்த்து வருகிறது 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பு. தங்கள் கட்சித் தலைமையின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இத்தனை லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது என ஒவ்வொரு கட்சியும் அறிக்கைக் கொடுக்கும். அவர்கள் சொன்ன கணக்கில் உண்மையாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தால் இன்றைக்குத் தமிழகமே பசுமை வனமாகக் காட்சியளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் காகிதங்களில் அறிக்கை மற்றும் கணக்கில் மட்டும் மரம் வளர்ப்பவர்கள். மரக்கன்றுகளை நடவு செய்வது…
-
- 0 replies
- 792 views
-
-
'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்?' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்! நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாண…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழக மாணவர்களின் ஆதரவுக்கு நன்றி – தமிழீழ அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகம் அன்பின் தாய்த்தமிழக் கல்விச் சமூகத்தினர் மற்றும் இளையோரிற்கு, அடக்குமுறையின் இடையில் இருந்து ஈழத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் வரையும் அன்பு மடல். உங்களை கட்டித்தழுவி வாழ்த்தத் துடிக்கும் எமக்கு அவ்வாறே செய்ய இயலாது, சிங்கள பேரினவாதத்தின் இரும்புக் கரங்களுக்குள் எங்கள் நாட்கள் கழிகின்றன. நவீன அடிமை யுகம் ஒன்றை உருவாக்கும் சிங்கள பேரினவாதத்தின் சிந்தனைக்குள் இருந்து இதை கண்ணீரோடு வரைகின்றோம், ஒரு நாள் விடியும் அன்று உங்களை நேரில் வாழ்த்தி வணங்குவோம் என்னும் நம்பிக்கையுடன்! ஈழ விடுதலைக்கும் ஈழத்து மக்களாகிய எங்களின் உரிமைக்குமாய் தமிழகம் மற்றும் பாரதத்த…
-
- 0 replies
- 789 views
-
-
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில் : இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து…
-
- 0 replies
- 612 views
-
-
ஜெயலலிதா சமாதிக்கு அனுமதி பெறப்பட்டதா? சர்ச்சையைக் கிளப்பும் சூழலியலாளர்கள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான முன் அனுமதியின்றி மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலாவதாக, எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள பகுதியானது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.2 பகுதியில் வருகிறது. அதாவது, வளர்ச்சியடைந்த ப…
-
- 0 replies
- 402 views
-
-
நெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம் திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங் கரையோரத்தில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்துவரும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்குக் காணப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளநீர் பாய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செவ்வாய் இரவு) தாமிரபரணி…
-
- 0 replies
- 948 views
-
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் சிறையிலிருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு விழாக்களில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டாக்டர் ராமதாஸ் மீது மாமல்லபுரம் போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸை திருக்கழுக்கு…
-
- 0 replies
- 601 views
-
-
சசிகலா முகாம் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாடகை எவ்வளவு தெரியுமா...? #OPSVsSasikala தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியின் முன் கொடுத்த பேட்டியானது தமிழக மக்களை மட்டுமல்லாமல், இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுநாள் வரை தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்யமாக இருந்த அ.தி.மு.க இரண்டு பிரிவாக உடைந்து நிற்கிறது. ''மக்கள் விரும்பினால் முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்பேன்'' என்கிறார் பன்னீர்செல்வம். ஆனால், அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. இதற்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அப்படி இல்லையென்றால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மட்டும் சசிகலாவை விட்டு வெளியே வந்து, அதனால் அ.தி.மு.க ப…
-
- 0 replies
- 561 views
-