Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதாவின் ரத்த, திசு மாதிரிகள் இல்லை: அப்போலோ பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம் இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் உடலுக்கு எங்களது வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடலைத் தோண்டியெடுத்து எங்கள் சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலு…

  2. கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் வகையில் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சர்ச்சைப் போஸ்டர்கள் அகற்றப்பட்டன. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என சிலர் சென்னையின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனால், அங்கு கன்னட மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் கர்நாடக காவல்துறை உயர் அதிகாரி எம்.என். ரெட்டி, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். விஷமிகள் சிலர் ஒட்டிய சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் அகற்றப்பட்டதாகவும் தனது ட்வி…

  3. சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை; மற்றொருவர் தற்கொலை முயற்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PETER DAZELEY / GETTY IMAGES சென்னையில் உள்ள ஐஐடியில் படித்துவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார். சென்னை ஐஐடியில் எலக்ட்ரிகல் பொறியியலில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். …

  4. சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதில் பட மூலாதாரம்,TNDIPR 25 மார்ச் 2023 மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். வழக்காடு மொழி குறித்த கோரிக்கைக்கு மேடையில் பதில் கூறிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் …

  5. கடலில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை October 5, 2018 காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒருவரின் படகில் கடந்த 26 ம் திகதி காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 6 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களுடன் குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26ம் திகதி கடலுக்குள் சென்ற அவர்கள், முதலாம் திகதி கரை திரும்பி இருக்க வேண்டும் என்ற போதிலும் ஆனால் இதுவரையிலும் திரும்பாதமையினைத் தொடர்ந்து அவர்கள் காணமல் போயுள்ளதாக முறைப்பாடு வழங்கியுள்ளனர். இதையடுத்து கடலோர காவல்படையினரும் ம…

  6. மகஇகவில் இருந்து மருதையன் விலகல்! மின்னம்பலம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் இருந்த மருதையன் இயக்கம் சம்பந்தப்பட்ட தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (பிப்ரவரி 24) அறிவித்திருக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற மருதையனுடன், மாநில செயற்குழு உறுப்பினரான நாதனும் தனது விலகலை அறிவித்துள்ளார். 24.2.2020 தேதியன்று கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் மருதையனும், நாதனும் தமது விலகலை முன் வைத்தார்கள். ஆனால்,மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிர…

  7. தமிழகத்தில் பரவிவரும் தீவிரத்தன்மை கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரையில் மொத்தமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 135 பேரும், திருவள்ளூரில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் ஏ 1, ஏ2, ஏ3, பி 1, பி2 உள்ளிட்ட வகைகள் இருப்பதாகவும், அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கிளேட் ஏ…

  8. அரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை – தமிழக அரசு by : Dhackshala அரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல நாட்கள் அரச அலுவலகங்கள் இயங்கவில்லை. மேலும் குறைந்த ஊழியர்களுடனே பல மாவட்டங்களில் அரச அலுவலங்கள் இயங்கி வந்தன. இதனால் அரச அலுவலங்களில் கோப்புகளுக்கான பணிகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் ஆறு நாட்களும் அரச அலுவலகங்களுக்கு வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்…

    • 0 replies
    • 401 views
  9. வீரப்பன் மனைவிக்கு 25 இலட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு 25 இலட்சம் ரூபாவை (இந்திய ரூபாய்) நஷ்ட ஈடாக வழங்குமாறு இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஷுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனயுத்தம் படத்தில் வீரப்பன் கதையைப் பயன்படுத்தியமை மற்றும் அதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை பாதிக்கும் வகையில் காட்சிகள் அமைத்தமை போன்றவற்றிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்று வழக்கை வாபஸ் பெற சம்மதம் தெரிவித்துள்ளார் முத்துலட்சுமி. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வனயுத்தம் என்ற பெயரில் தமிழிலும், அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்திலும் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்தக் கதையை ராம் கோபால் வர்மா மூலம் படமாக எடுப்பதாக முத்த…

  10. தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் தமிழ் மொழி உள்ளடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு! தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்திய வரலாறு மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில்…

  11. ஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்கள் எம்.டி, முத்துக்குமாரசாமி மாணவர் போராட்டங்களுக்கான இந்த வலைத்தளத்தைப் பார்க்க நேர்ந்தது http://studentsprotest.blogspot.in ஈழப்போரில் நடந்து முடிந்து விட்ட தமிழினப் படுகொலைக்காக நீதி கேட்டு தமிழகம் எங்கும் தன்னிச்சையாக பரவி வரும் மாணவர் அறப்போராட்டங்கள் தமிழ்நாட்டின், இந்தியாவின் அரசியலையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தவை. இது தாமதமான, காலங்கடந்து ஏற்பட்டிருக்கிற இளைய சமுதாய எழுச்சி என்றாலும் கூட பறவைக்கூட்டங்கள் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கையில் இளம் குஞ்சுகளே முன் பறந்து வழிகாட்டுவது போல பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் நலன்களையும் மதிக்கின்ற அரசியல் தமிழ்நாட்டிலும் அகில இந்தியாவிலும் உருவாக இந்த மாணவர் போராட…

  12. "வாஸ்து பார்க்கும் சசிகலா... வழியை மாற்றிய ஓ.பி.எஸ்...!" மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை அதிமுகவிலும் அரசு நிர்வாகத்திலும் நிரப்ப சசிகலாவும், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரம பிரயத்தனம் செய்து வருகிறார்கள். சசிகலா நினைத்தபடியே அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட்டார். அதே இப்போது தமிழக முதல்வராகவும் அவர் வரவேண்டும் என்றும் அதிமுகவினர் கூறிவருகிறார்கள். அதற்கென ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவருகிறது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை "ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது கட்சிக்கும் மக்களுக்கும் ஏற்புடையதல்ல என்பதால், அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சசி…

  13. "தீபா ஆதரவு அணி" : சென்னைக்கு முதல் இடம் ! தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவர் வகித்து வந்த முதல்வர் பதவி ஓ.பி.எஸ் கைக்குப் போனது நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி, பொதுச் செயலாளர் பதவியாகச் சுருங்கி சசிகலா கைக்குப் போனது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, அவரைப் பார்க்க பலமுறை முயன்று வாசலிலேயே தடுக்கப்பட்டவர் தீபா. உள்ளே போனவர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப் படவில்லை என்பது வேறு. ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயராமனின் மகளான தீபாவுக்கு அப்போலோவில் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலிலும் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. டிசம்பர் 29-ந்தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா அ.தி.…

  14. டெல்லியில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியாவிடம் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:- 2013-14 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 37 ஆயிரம் கோடி திட்ட இலக்கை கடந்து தமிழகம் சாதனை படைக்கும். பா.ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கூற முடியாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே எங…

    • 0 replies
    • 437 views
  15. சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு உளவு சொல்லும் எம்.எல்.ஏ.க்கள்! - அதிர்ச்சியில் மன்னார்குடி தரப்பு #OpsVsSasikala #VikatanExclusive சசிகலா முகாமில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவலை சொல்லும் உளவாளி எம்.எல்.ஏ.க்கள் குறித்த தகவல், மன்னார்குடி குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் காரணமாக சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்கி உள்ளனர். கடந்த மூன்று தினங்களாக அங்குள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார். கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு த…

  16. இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில் வரும் சாதி தொடர்பான காட்சிகளைக் கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து , தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டின் முன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.http://dinaithal.com/tamilnadu/16590-director-bharathi-raja-in-front-of-the-house-arpattam.html

    • 0 replies
    • 569 views
  17. நடுக்கடலில் விபத்து – 3 தமிழக மீனவர்கள் பலி -9 பேரைக் காணவில்லை April 15, 2021 கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே விசைப்படகு ஒன்றின் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 9 பேரைக் காணவில்லை எனத் தொிவிக்கப்பட்டள்ளது கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியிலிருந்து விசைப்படகில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 11ஆம் திகதி புறப்பட்டு மீன்பிடிக்கச் சென்றனர். அந்த விசைப்படகு fle;j செவ்வாய்க்கிழமை அதிகாலை கர்நாடக – கேரள எல்லையான மங்களூரில் இருந்து 55 கடல்மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஏபிஎல் லீ ஹா…

  18. முருகன் தாயாரை சந்திக்க கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனது தாயாரை சந்திக்க கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முருகனின் அறையில் இருந்து 2 கைத்தொலைபேசிகள் ,சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முருகனை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மே 29ம் திகதி முருகனின் தாயார் இலங்கை செல்ல வேண்டியுள்ளதால் அதற்குள் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்தவழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் பார்வையாளர்க…

  19. 'ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை': அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் அடுக்கும் குற்றச்சாட்டுகள் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் | படம் உதவி: ஃபேஸ்புக் பக்கம் ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்துள்ளதை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின், "கண்டெய்னர் லாரிகளில் கொள்ளைப் பணமும், கவர் கவராக வீடுகள் தோறும் வழங்கப்பட்ட லஞ்சப் பணமும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்குப் 'புலப்படாமல்' போனதால் கடந்த ஓராண்டு…

  20. பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்காவினை தற்காலிகமாக நீக்கவேண்டும் என்று கோரி தமிழகம் புதுக்கோட்டையில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகம் புதுக்கோட்டையிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டைதோப்புக்கொள்ளையில் அமைந்துள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளை ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் அங்கீகரித்து பெயர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டிலுள்ள அகதிகளை விருப்பத்திற்கு மாறாக சிறீலங்காவிற்கு அனு…

  21. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த நீங்கள் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்

    • 0 replies
    • 546 views
  22. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை எழுமாறாகத் தெரிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தீவிரமடைந்தபோது, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.…

  23. “என் ஓவியங்களைப் பற்றி பிரபாகரன் அழைத்து பேசினார்!” - ஓவியர் புகழேந்தி உலகின் ஒரு முக்கியமான பிரச்னைக்காக தனிநபர் ஒருவர் பல ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்துவது என்பது மிகவும் அரிதான விஷயம். ஆனால், உலகில் பலரின் கவனத்தைத் திசைதிருப்பிய தமிழ் ஈழப் பிரச்னைக்காக, 100 ஓவியங்களை வரைந்து ஆவணப்படுத்தி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி. தஞ்சாவூர் மாவட்டம் தும்பதிக்கோட்டை கிராமத்தில் 1967-ம் ஆண்டு பிறந்த புகழேந்தி இளம் வயதிலேயே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஓவியக்கல்லூரியில் படித்து பட்டம்பெற்றார். தமிழ் ஈழத்திற்காக 100 ஓவியங்கள் மற்றும் சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகளான மதக் கலவரம், சாதி ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான தாக்குதல் என அ…

  24. கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டகாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்…

  25. நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலை மாறியுள்ளதாகவும், நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் எனவும், இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும் எனவும் பேரறிவாளனின் தாயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையாகி சென்ற நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், அவர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’ராபர்ட் பயாஸுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் பார்க்க வந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.