தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - அத்தியாயம் 1 ‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை... அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல. பெங்களூரு நோக்கி முதல் பயணம்: பெரிய வசதியெல்லாம் இல்லைத…
-
- 42 replies
- 13.8k views
-
-
முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் இன்று மீண்டும் சென்னை வருகை முதல்வர் ஜெயலலிதா | கோப்பு படம் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணத் தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக் டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் டாக்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்ட…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஜெயலலிதாவை காதலித்தேன் : முன்னாள் நீதிபதி.! தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் 3 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று பணிக்கு திரும்புவார் என தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஜெயலலிதாவை தான் ஒரு தலையாக காதலித்ததாக சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவரது பதிவில், ஜெயலலிதா சிங்கம் போன்ற ஒரு பெண். அவரி எதிர்ப்பவர்கள் குரங்குகள். அவர் விரைவில் குணம்பெற்று பணிக்கு திரும்புவார். நான் இ…
-
- 14 replies
- 1.2k views
-
-
முதல்வர் ஜெயலலிதாதான்... பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு! - முதல்வர் ஆலோசனைப்படி அறிவிப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.சற்றுமுன்பு ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இனி அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். மேலும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா முதலமைச்சராகவே ந…
-
- 8 replies
- 1.1k views
-
-
இவர் சசிகலா மட்டும் அல்ல... ஜெயலலிதாவின் நிழல் ! தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் துவங்கி... தமிழக ஆளுநர், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றவர்கள், மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் நலம் குறித்து கேட்டு திரும்பினர். 'பார்த்தவர்களை பார்த்தோம். அவர்கள் சொன்னதை சொல்கிறோம்' என்பதை மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க சென்றவர்கள் சொல்ல முடிந்தது. உண்மையில் மருத்துவர்களை தவிர்த்து ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்தித்திருப்பார்கள் என்றால், ஒருவர் பெயரைத்தவிர வேறு யார் பெயரையும் அறுதியிட்டு கூற …
-
- 0 replies
- 1.2k views
-
-
கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்! -ஆடுபுலி அரசியல்!? அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள் கடந்துவிட்டன. ' தலைமைச் செயலாளரை மட்டுமே நம்புகிறார் சசிகலா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க வரும் தலைவர்களால், கிரீம்ஸ் சாலை நிரம்பி வழிகிறது. அகில இந்திய தலைவர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்களின் தொடர் வருகையும் முதல்வர் உடல்நலன் குறித்தான பாசிட்டிவ் பேச்சுக்களும் தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்து வருகின்றன. அப்போலோ வெளியிடும் அறிக்கைகளை மட்டுமே நம்ப வேண்டிய சூழலில் அ.தி.மு.க தொண்டர்கள் …
-
- 0 replies
- 447 views
-
-
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக இரண்டு நபர்களை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ம் தேதியன்று முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் க…
-
- 4 replies
- 596 views
-
-
எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை: சர்ச்சைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் திருநாவுக்கரசர் | கோப்புப் படம் கூட்டணியில் இருப்பவர்கள் ஒரே கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆயுட்கால கூட்டணி என்று எதுவும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி திரும்பினார். தமிழகத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது, அது தேவையில்லை எ…
-
- 0 replies
- 346 views
-
-
' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!' -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர் அப்போலோவுக்கு இணையாக தினசரி தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கிறது கிண்டி ராஜ்பவன் மாளிகை. ' பொறுப்பு முதல்வரை நியமிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநரின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியொரு எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்பிறகு, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்…
-
- 0 replies
- 404 views
-
-
முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிரடியாக பேசி இருக்கிறார் சசிகலா புஷ்பா. ' முதல்வரின் உடல்நிலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என சர்ச்சை கிளப்பியிருக்கிறார். டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, " முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, நான் பேசிய பிறகே அப்போலோ மருத்துவனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது. குறிப்பாக, 'ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் போடுவேன்' என பேட்டி கொடுத்த பிறகுதான் அறிக்கை வெளிவருகிறது. என்னைப் போல, சசிகலா நடராஜனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். கட்சியின் சீனி…
-
- 0 replies
- 361 views
-
-
ஜெ. இலாகா இல்லாத முதல்வர்? எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு? சென்னை: மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் வரை ஜெயலலிதா இலாகா இல்லா முதல்வராக இருப்பார் என்றும் அவர் வசம் தற்போது உள்ள இலாகாக்கள் மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2 வாரங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது. இதையடுத்து இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் …
-
- 2 replies
- 678 views
-
-
ஜெயாவை பார்க்க வந்த மர்ம நபர் யார்.? : காரணம் வெளியாகியது.! தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு வாரங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில்; உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவரை இன்னமும் நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை. ஒரு மாநில முதல்வர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பரும் கூட. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட அப்பல்லோ வந்து முதல்வரின் நலம் விசாரித்தார். ஆனால் பிரதமர் மோடி இன்னமும் வராதது ஆச்சரியமாக பார்க்கப்படுக…
-
- 0 replies
- 609 views
-
-
'உள்துறை அமைச்சர் போதும்!'- அ.தி.மு.க: 'பொறுப்பு முதல்வர் வேண்டும்!' - கவர்னர் ராஜ் பவனில் நடந்த அரசியல் பஞ்சாயத்து முதல்வர் ஜெயலலிதா குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை தரப்பில் சொன்னதால், ஆளுங்கட்சியில் அடுத்தடுத்த விறுப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் காலகட்டம் மாதிரியான அசாதாரண அரசியல் சூழ்நிலையில் பி.ஜே.பி. அரசு மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமித்தது. தற்போது ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற சூழ்நிலையில், பி.ஜே.பி-யின் ஆதரவு அ.தி.மு.க&வில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் …
-
- 0 replies
- 498 views
-
-
முதல்வர் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்கள் அரசு இயந்திரம் இயங்கும் ? 15 நாட்களைக் கடந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 22ம் தேதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என தொடக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து சிறப்பு நுரையீரல் மற்றும் செப்ஸிஸ் மருத்துவ நிபுணர் வந்து சென்ற பிறகுதான் தொற்றுக்கான சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சைகளை பார்த்துச்சென்றுள்ளனர். இந்தநிலையில், முதல்வருக்கு இதுநாள் வரை …
-
- 0 replies
- 443 views
-
-
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்! முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் 17 நாட்கள் ஆகிறது. இதுவரை அவரை மருத்துவர்கள் தவிர யாரும் சந்திக்க வில்லை. ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட பல தலைவர்கள் மருத்துவமனை வந்தும், மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்களே தவிர, ஜெயலல…
-
- 0 replies
- 517 views
-
-
ராகுல் ஏன் வந்தார்? ஜெயலலிதா-அப்போலோ-அரசியல்! ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...’ இந்த மூன்று வார்த்தைகளுக்குள், எத்தனை... எத்தனை... திட்டங்கள், நம்பிக்கைகள், மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை இந்திய அரசியல் நன்றாக அறியும். கடந்த ஒரு நூற்றாண்டில், இந்திய அரசியலின், நிறம் மாறிய நிகழ்வுகள் அனைத்தும், இந்த மூன்று வார்த்தைகளில் இருந்து பிறந்தவைதான். ராகுல்காந்தியின் அப்போலோ வருகைக்குப் பின்னும், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...” என்ற வார்த்தைகளே வந்து விழுந்துள்ளன. இவையும், இனிவரும் தமிழகத்தில்... ஏன் இந்திய அளவில்கூட, அரசியல் அதிர்வுகளை உண்டாக்கலாம். மரியாதை நிமித்தமா? அரசியல் நிமித்தமா? டெல்லியில் இருந்து, தனி விமானத்…
-
- 2 replies
- 751 views
-
-
அப்போலோ வளர்ந்த கதையும், ஜெயலலிதா மருத்துவச் செலவும்...! "அரசாங்க ஹாஸ்பிடல் வேண்டாம், என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் டிரீட்மென்ட் வேணும்ன்னு வர்றவங்களுக்காக வெளிநாட்டுல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைக்கப் போறோம். டாக்டர்கள் கூட வெளிநாட்டுல இருந்து வரப் போறாங்க. இதன் மூலமா வெளிநாட்டுப் பயணக் கட்டணம்,நேர விரயம்,மொழிப் பிரச்னை ஏதும் இல்லாம சிகிச்சையைக் குறைந்த செலவுல எடுக்கலாம் " 33 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ ஆரம்பிக்கப்பட்ட போது பிரதாப் ரெட்டி சொன்ன வார்த்தைகள்தான் இவை. ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டி படித்தது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில். 1983-ம் ஆண்டு சிற…
-
- 0 replies
- 914 views
-
-
’பொறுப்பு முதல்வர்’... பரபரப்பின் பின்னணி! தமிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதல்வர் உடல்நிலை சீராக இன்னும் சில நாட்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், அதுவரை மருத்துவமனையிலே அவர் இருக்க வேண்டிவரும் என்று தெரிவிக்கபட்டது. முதல்வரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழவினர் இரண்டு தினங்களுக்கு முன் அப்போலோ வருகை தந்தனர். அவர்கள் ஜெயலிலதாவின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை ஆய்வு…
-
- 0 replies
- 537 views
-
-
ஜெ. உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்: அப்பல்லோவில் ராகுல் காந்தி பேட்டி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். உடன் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் சென்றிருந்தார். ராகுல் காந்தியை அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்களை சந்தித்து ஜெ. உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சுமார் அரை மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார் ராகுல். பின்னர் மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், …
-
- 3 replies
- 711 views
-
-
ஆளுநர் - தலைமைச் செயலாளர் திடீர் சந்திப்பு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து கிண்டி ராஜ்பவனுக்கு திடீரென வந்திருக்கிறார். தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தன்னை சந்திக்க வருமாறு அவசரமாக அழைத்திருக்கிறார். அதன்பேரில், சற்று முன்பு, தலைமைச் செயலகத்தில் இருந்து ராஜ்பவனுக்கு தலைமைச் செயலாளர் சென்றார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், ஆட்சி எப்படி நடக்கிறது? என்பது பற்றியும் சில விளக்கங்களை தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கேட்டறிய விரும்புகிறார் என்றே அதிகாரிகள் பேசிக்கொள்ளுகிறார்கள். முதல்வர் குணமாகி வருகிறவரைக்கும் பொறுப்பு முதல்வரை நியமிக்கும் யோசனையையும் தலைமைச் செயலாளர் ஆளுநரிடம் சொல்லி அ…
-
- 1 reply
- 759 views
-
-
மிஸ்டர் கழுகு : ஹெல்த் என்னதான் ஆச்சு? அப்போலோ காட்சிகள்... நம் முன் வந்தமர்ந்த கழுகார் மீது ஆஸ்பத்திரி வாசனை. ‘‘இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை என்றவருக்கு பகோடாவையும் லெமன் டீயையும் நீட்டினோம். ``இப்போது எப்படி இருக்கிறார்?’’ என்றோம். லெமன் டீயை உறிஞ்சியபடி பேச ஆரம்பித்தார், கழுகார். ‘‘கடந்த வாரத்தில் நடந்த பல சம்பவங்கள், அப்போலோ மருத்துவமனைக்குள் நடப்பது, அதையொட்டி மீண்டும் ஆதிக்கத்துக்கு வந்த மன்னார்குடி குடும்பம், அ.தி.மு.க-வில் முற்றிலுமாக ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள மூத்த அமைச்சர்கள், சசிகலாவின் கண் அசைவில் செயல்படும் அதிகாரிகள், நீதிமன்றத்தின் வாயை அடைப்பதற்காக எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்தது, இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
மருத்துவமனையில் ஜெயலலிதா.. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது தெரியுமா? டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்தார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. இந்நிலையில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தார். வருமானத்திற்கு அதிகமாக ஓரளவுக்குதான், ஜெயலலிதா …
-
- 0 replies
- 325 views
-
-
'முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி நடக்கும் மோசடிகள்...!' -படபடக்கும் சசிகலா புஷ்பா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ' முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டாலும், அதுதொடர்பான கடிதத்தை மாநிலங்களவை செயலரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் இன்னமும் அளிக்கவில்லை. தமிழக முதல்வரோடு முரண்பட்டு நின்றாலும், அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பியாகவே அவர் தொடர்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்ட்டி…
-
- 0 replies
- 462 views
-
-
துணை முதல்வர் பதவி?!' -அப்போலோவில் விவாதித்த அமைச்சர்கள் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டன. ' அரசின் முக்கிய அலுவல்களை கவனிப்பதற்காக துணை முதல்வர் நியமிக்கப்படலாம்' என கோட்டை வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். தற்போது எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒன்று, முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. முதல்வர் உடல்நலன் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிடும் தகவல்கள் மட்டுமே, தொண்டர்கள் மத்தியில் ஆறுதல் அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக அரசு அலுவல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க…
-
- 0 replies
- 391 views
-
-
ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று? யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெர…
-
- 18 replies
- 2.7k views
-