Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 30 AUG, 2024 | 02:00 PM திருச்சி: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை கண்டித்தும் விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் திருச்சி என்ஐடி வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவிலிருந்து மாணவ - மாணவியர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு நேரில் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்கள் சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) அமைந்துள்ளது. மத்திய மனிதவள மேம…

  2. பட மூலாதாரம்,X/S. JAGATHRAKSHAKAN படக்குறிப்பு, அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 16 நிமிடங்களுக்கு முன்னர் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு திங்கள்கிழமைன்று (ஆகஸ்ட் 26) 908 கோடி ரூபாய் அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது. வெளிநாடு முதலீடு தொடர்பாக, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அனைத்து தவறுகளுக்கும் சேர்த்து இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தனது வீட்டில் 2020 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொ…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு மாணவர் பிளஸ் 2 முடித்த பின்னர், எந்தக் கல்லூரியில் சேர்ந்தார் என்பதை எவ்வாறு கண்டறிவது?" என்று கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், "யுமிஸ்" (UMIS) எனப் பதில் வரும். அதென்ன யுமிஸ்? பள்ளிக்கல்வியில் சேரும்போது ஒவ்வொரு மாணவருக்கும் எமிஸ் (EMIS - Educational Management Information System) என்ற எண் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவர் உயர்கல்வியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், அரசின் யுமிஸ் (University Managment Information System) செயலிய…

  4. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம். பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுமார் 1 இலட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பழனியில், உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழனியே விழாக்கோலம் பூண்டு…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விக்டோரியா பப்ளிக் ஹால், சென்னை கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 28 ஆகஸ்ட் 2024, 06:20 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் ஒரு காலகட்டத்தில் சென்னையின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. சென்னையின் வரலாற்றோடு பிணைக்கப்பட்ட இந்த கட்டடத்தின் வரலாறு என்ன? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் யாரும், அந்த ரயில் நிலையத்திற்கும் மாநகராட்சிக் கட்டடமான 'ரிப்பன் பில்டிங்கி'ற்கும் இடையில், இந்தோ - சராசெனிக் ப…

  6. படக்குறிப்பு, நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததுள்ளது. எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து எண்ணூர் பகுதி மக்கள்…

  7. பட மூலாதாரம்,X/@ARIVALAYAM படக்குறிப்பு, திமுகவில் "ஏகப்பட்ட பழைய மாணவர்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசியிருந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 26 ஆகஸ்ட் 2024, 13:57 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மூத்த தலைவர்கள் குறித்து பேசிய கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் “ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள்” என்று ரஜினி பேசினார். முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதய…

  8. திராவிடக் கட்சிகளை அகற்றுவதே குறிக்கோள் – அண்ணாமலை! திராவிட அரசியலை அடியோடு ஒழிப்பதற்கு 2026 தேர்தல்தான் சரியான தருணம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தொிவித்துள்ளாா். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபேதாதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். அத்துடன், பிரதமர் மோடியைப்போலவே நடந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆசைப்படுவதாகவும், இரண்டு திராவிடக் கட்சிகளை அகற்றவே தன்னை மாநிலத் தலைவராக நியமித்து உள்ளனர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், 2024 தேர்தலில், ஒரு மாற்றுச் சக்தியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா நிரூபித்துள்ளது எனவும், கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை ப…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாகை மலர் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தனிக்கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அதன் கொடியை அறிமுகம் செய்த பிறகு வாகை மலர் அதிக அளவில் பேசுபடு பொருளாக மாறியுள்ளது. அந்த கொடியின் மையத்தில் வாகை மலர் இருப்பதே அதற்குக் காரணம். சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வாகை மலர் குறித்த பல்வேறு தகவல்களும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாகை மலருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு? தமிழர் வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம்,TVK HQ …

  10. கப்டன் பிறந்தநாள் – 71 நிமிடங்களில் 71 டாட்டூ. விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது. 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர். டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    • 4 replies
    • 770 views
  11. பட மூலாதாரம், ASHISH VAISHNAV/SOPA IMAGES/LIGHTROCKET VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத் பதவி, பிபிசி மராத்தி 24 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மகாராஷ்டிராவின் பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயினர். இந்த சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதிகளில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வ…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிருஷ்ணகிரியில் என்.சி.சி., முகாம் என்ற பெயரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான போலி என்.சி.சி ஆசிரியர் சிவராமனும் அவரது தந்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இந்த வழக்கில் யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். …

  13. 385வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகரம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் அழகு நகரமாக விழங்கும் சென்னைக்கு இன்று 385வது பிறந்தநாள் . அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது. சென்னை நகருக்கு அப்பெயரைப் பெரும் முன்பே நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்துள்ளது. 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதி தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியைச் ச…

  14. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகினறது. இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 20 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசியலில் சமீபத்திய இரு நிகழ்வுகள் கட்சிகள் அணி மாற்றத்திற்கான தயாராகி வருகின்றனவா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மூத்த அமைச்சர்களும் பங்கேற்றதும், கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதுமே இதற்குக் காரணம். எதிர்க்கட்சியான அதிமுக இதுகுறித்த சந்தேகங்களை எழுப்ப திமுக மட்டுமின்றி, பாஜகவும் கூட வி…

  16. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேட்டூர் அணை நிரம்புவது தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியாகக் கவனிக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய இந்த அணை எதற்காகக் கட்டப்பட்டது, இதன் வரலாறு என்ன? மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறை மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டும்போதும் முழு உயரமான 120 அடியை எட்டும்போதும் அந்தச் செய்தி மாநிலம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெறுகிறது. ஒரு அணை இந்த அளவு கவனத்தைப் பெறுவதற்குக் காரணம் இருக்கிறது. மேட்டூர் அணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை மட்டுமல்ல; இந்தியாவின…

  17. படக்குறிப்பு,செவிலியர் சபீனாவின் பணியைப் பாராட்டி கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 15 ஆகஸ்ட் 2024 ரெயின்கோட் மட்டுமே அணிந்திருக்கிறார். கையில் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய ஒரு பையை இறுகப் பற்றியுள்ளார். கீழே ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றை ஜிப்லைன் வாயிலாகக் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது சூரல்மலையில் இருந்து இப்படி ஜிப்லைன் மூலமாக ஒரு செவிலியர் முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார். அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் …

  18. பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு! நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக் கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் குஷ்பு, தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொக…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை மாநகரம் தொடர்ச்சியாக நகர்ப்புற வெப்பத் தீவுகள், வெப்ப அலை, கடல் அரிப்பு, புயல், வெள்ளம் எனப் பல அபாயங்களை எதிர்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 16 ஆகஸ்ட் 2024 “இப்போ கடல் ரொம்ப வயலா இருக்கு (ஒரு சில அலைகள் மட்டுமே இருக்கும், பெரிய அலைகள் இல்லாத நிலை). இந்த மாதிரி இருக்கும்போது ராத்திரில கடலுக்குப் போனாதான் வரிப்பாறை, கருவாழை போன்ற மீன்கள் கிடைக்கும். கடல் இப்படி இருக்கும்போது தண்ணி ரொம்ப தெளிவா இருக்கும். காலையில போனா மீன் கண்ணுக்கு வலை நல்லா தெரிஞ்சு, சிக்காம தப்பிச்சுக்கும்.” “இதையெல்லாம், அனுதினமும் கடலைப் பார்…

  20. ஒரு தலித் எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும் என்றும் ஆனா…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பத்து வகையான உப்புகளும் 5 வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக இக்கட்டுரை கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் 'மனித வாழ்வில் பிரிக்க முடியாதது எதுவோ?' என திருவிளையாடல் திரைப்படத்தின் தருமி பாணியில் கேட்டால், 'உப்பும் சர்க்கரையும்' என ஒரே வரியில் பதில் அளித்துவிடலாம். சராசரி இந்தியர் நாளொன்றுக்கு 10.98 கிராம் உப்பை உட்கொள்வதாக ‘டாக்ஸிக் லிங்க்’ ஆய்வறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அளவைவிட இது இரு மடங்கு அதிகம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அளவுகோல்களின்படி,…

  22. 15 AUG, 2024 | 05:13 PM இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் நாடு திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின் ரெய்மெண்ட் ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை ஜூலை 23ம் தேதி அன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். 3 படகுகளிலிருந்த காளீஸ்வரன் 22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 6-ம் தேதியன்று ஊர்க…

  23. ”முதல்வர் மருந்தகம்” திட்டம் இன்று முதல் ஆரம்பம் – 1000 மருந்தகங்கள் – 3 இலட்சம் மானியம். சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வருகை தந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வரவேற்றார். பின்னர் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். குறித்த உரையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிமுகப்படுத்தினார். பொதுப்பெயர் வகை மருந்துகள் (Gene…

  24. பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி காமகோடி கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 ஆகஸ்ட் 2024 இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தை ஐஐடி மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு(NIRF) பட்டியலை சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தபிரிவில் , 2019 முதல் ஆறாவது முறையாக இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்களன்று 2024 NIRF தரவரிசை விவரங்களை வெளியிட்டார். ஐஐடி மெட…

  25. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி..? உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்திலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். மேலும் அங்கு கூகுள் நிறுவன அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.