Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராஜபக்சே மோடி பதவியேற்பு விழாவிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தீக்குளிக்க முயற்சி &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ள ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்…

  2. மிஸ்டர் கழுகு: “இந்த நேரத்தில் போகணுமா?” ‘‘டெல்லிக்கு பிரதமர் திரும்பிச்சென்ற பிறகுதான் வருவேன்’’ என்று காலையிலேயே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். பிரதமரின் விமானம், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கழுகார் வந்து சேர்ந்தார். ‘‘சென்னை விமான நிலையப் பகுதியில் கொந்தளிப்பான நிலையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பிரதமர் மோடி வந்து இறங்கினார். அவரை வரவேற்க அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து காத்திருந்தனர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும். சிரித்த முகத்தோடு அவர்கள் இருவரும் மோடியை வரவேற்றனர். ஆனால், எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து வந்த ரிப்போர்ட், மோடியை மூட் அவுட் ஆக்கியிரு…

  3. புதுச்சேரியில் ரூ.1,000 கோடியை கடந்த மது விற்பனை - அரசுக்கு வருவாய், சர்ச்சையாகிறதா ‘போதை’ வியாபாரம்? கட்டுரை தகவல் எழுதியவர்,எஸ். நடராஜன், புதுச்சேரி பதவி,பிபிசி தமிழுக்காக 26 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ. 1000 கோடியை கடந்திருக்கிறது. அதே சமயம், மது விற்பனையால் அரசுக்கு வருவாய் கிடைத்தாலும் மறுபுறம் அதை அருந்தும் மக்களின் போதைப்பழக்கம் மற்றும் அதன் விற்பனையை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு சர்ச்சை ஆகியிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் மது விற்பனைக்குப் பெயர் பெற்ற பகுதி. தமிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்ச…

  4. கடையடைப்பு, வேலை நிறுத்த நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடவேண்டாம்: - முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை [Tuesday 2014-10-07 19:00] "தமிழ்நாடு அமைதியான சூழலில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இன்று தலை மைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சா ரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன்,வீட்டுவசதித் துறை அமை…

  5. ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம் June 20, 2018 1 Min Read தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் திகதி நடந்த பேரணியின் போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக முறைப்பாடுகள் வந்ததால் மாவட்ட உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தபோது ஸ்டெர்லைட் ஆலைய…

  6. தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை! தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. …

    • 0 replies
    • 278 views
  7. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்த ஒரு செய்திக்காக, , கைதுசெய்யப்பட்டு பிறகு நீதிமன்றம் கைது ஆணை வழங்காததால் விடுவிக்கப்பட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், அந்த கைது விவகாரம் குறித்தும் ஊடக சுதந்திரம் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து... கேள்வி: செவ்வாய்க்கிழமையன்று விமான நிலையத்தில் நீங்கள் கைதுசெய்யப்பட்டபோது என்ன நடந்தது? பதில்: அன்றைய தினம் காலையில் நானும் இன்னும் இ…

  8. முல்லை பெரியாறு அணையின் கீழ் புதிய அணை: பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் -துரைமுருகன் முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்ட கேரளா அரசு முதல் அனுமதி பெற்றிருப்பது தமிழகத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என, தி.மு.க.வின் பொருளாயர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். அண்மையில் கேரளாவில் மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சபரிமலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை விவகாரங்களையும் கடந்து கேரளா அரசு புதிய அணை கட்டும் விடயத்தை சாதித்துள்ளது. மற்றொரு அணை முல்லைப் பெரியாற்றின் கீழ் வருமாயின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை பொருட்படுத்தாமல் நடவட…

  9. படக்குறிப்பு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் தங்கள் பகுதிக்கே உரித்தான பாரம்பரிய சிறுதானிய விதைகளை மீட்டு பராமரித்து வருகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் வேளாண்மையில் பாரம்பரிய விதைகளை மீட்பதன் பங்கு முதன்மையானது. நெல் உட்பட பல்வேறு பயிர் வகைகளின் பாரம்பரிய விதைகளை மீட்கும் முயற்சிகள் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் பல ஆண்டுகளாக இதை ஓர் அமைப்பாகத் தொடங்கி வெற்றிகரமாக வழிநடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட…

  10. சென்னை தினம்: ஆளுநர் வாழ்த்தில் சர்ச்சை! JegadeeshAug 22, 2023 11:08AM ஷேர் செய்ய : சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படும் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ் தினம்’ எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் வாசல் என்று அழைக்கப்படும் சென்னையின் 384- வது தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை தினமான இன்று பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து வரும் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ்’ தின வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (ஆகஸ்ட் 2…

  11. நாகர்கோவில்:'தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது' என, டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் கூறி உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ரசாயன உரத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக, கேரள அரசு கூறி வருகிறது.இதனால், தமிழக காய்கறிகள் உற்பத்தியாகும் இடங்களில், கேரள தோட்டக்கலைத் துறையினர், கடந்த மாதம் ஆய்வு நடத்தினர்.பின், அக்கு-ழு அளித்த அறிக்கையின்படி, கேரள உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அனுபமா, தமிழக வேளாண் உற்பத்தித்துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானிக்கு கடி-தம் எழுதினார்.அதில், 'பூச்சிக்கொல்லி மருந்துக-ளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தாத பட்சத்தில், இருமாநில மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்' என கூறியிருந்தார். மேலும், க…

    • 0 replies
    • 319 views
  12. திருநங்கை நிவேதா: பெற்றோர் கைவிட்டும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நெகிழ்ச்சிக் கதை படக்குறிப்பு,திருநங்கை நிவேதா கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி 20 மே 2024 "என்னை திருநங்கையாக உணர்ந்த தருணத்தில் நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்கள். செய்வதறியாது சாலையில் சுற்றிக் கொண்டிருந்த நான் இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்," என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் திருநங்கை நிவேதா. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் பனி…

  13. தமிழகத்தில் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள்: தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை தமிழகத்தில் தலைமறைவாக உள்ள 5 ஐ.எஸ். தீவிரவாதிகளை பிடிப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முடிவெடுத்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகித்தமை தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் முதலில் கண்டுபிடித்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி சென்றபோது தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் சிக்கினார்…

  14. சென்னை பல்கலை. கருத்தரங்கில் மாணவர் மீது 'தாக்குதல்' சென்னைப் பல்கலைக்கழகம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த கருத்தரங்கு ஒன்றின்போது மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்கை ஆபத்து மற்றும் பேரிடர் ஆய்வு மையத்தின் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கோபால்ஜி மாளவியா, மாநில தேர்தல் ஆணையத்தின் செயலரான ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்தக் கருத்தரங்கு நடந்துகொண்டிருந்தபோது, அதே பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானப் பிரிவு-சர்வதேச விவகாரங்கள் துறையி…

  15. வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்காக விரைவில் 10,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று மாநில நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னையில் நடந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுத்துறை வங்கி சார்பில் தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கினார். இந்த விழாவில் மாநில நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அடையாறு கூவம் ஆற்றங்கரைய…

  16. ஒவ்வொரு தேர்தலிலும், ஒரே நாடகத்தை நாம் பார்க்கிறோம். பாஜக அதிமுகவுடன் கைகோர்க்க வலியுறுத்துகிறது. அதிமுக நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றார்கள். எந்தக் காலத்தில் நடக்காது என்றார் தவழ்பாடி. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய். வெற்றி பெறத் தவறிய பிறகும் கூட, தமிழ்நாட்டு மக்கள் அவர்களை தெளிவாக நிராகரித்த பிறகும் கூட கூட்டணி ஏன்? பாஜக ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டணிக்காக துடித்தது? காரணம் என்ன தெரியுமா? இது தமிழ் நாட்டு மக்களின் நலனுக்கான தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. இது ஒரு சதி வலை. பின்னுவது பிஜேபி. அடிமைக்கூட்டம் கைகட்டி மெய் வாய் மூடி தலையைக் கூட ஆட்டாமல் தமிழர்களைக் காவு கொடுக்க உதவி செய்கிறது. அதிமுகவை படிப்பட…

  17. சென்னை: நாங்கள் விதைத்த மாற்று அரசியல் விதை ஓர் ஆண்டில் விளையும் பயிர் அல்ல என்பதை தேர்தல் உணர்த்தியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், மக்கள் நலக் கூட்டணி முன் வைத்த மாற்று அரசியலுக்கு ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சியாகவே உள்ளது. நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும், இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும், இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம். அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் பணத்தை வாரி இறைத்ததையும் மீறி எனக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்…

    • 0 replies
    • 337 views
  18. அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து பரீட்சைகளும் இரத்து! அண்ணா பல்கலைக்கழகத்தின் தவணைப் பரீட்சைகள் உட்பட அனைத்து பரீட்சைகளும் தேர்வுகளும் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பதாகவும், பரீட்சை குறித்த அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அண்மையில் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த வகுப்புகள், தவணைப் பரீட்சைகள், திட்ட மதிப்புகள் மற்றும் அனைத்து வகுப்புப் பரீட்சைகளும் இரத…

  19. கதைய முடிச்சிட்டாங்கய்யா... கலங்கிய துரைமுருகன் மின்னம்பலம் திமுக பொருளாளராக இருந்து, பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு உயர்த்தப்படுவதாக இருந்த துரைமுருகன், மீண்டும் பொருளாளராகவே தொடருவார் என்று அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னே இது அரசல் புரசலாக துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் அது அறிவிப்பாக வெளிவந்ததில் குறிப்பாக ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டதில் துரைமுருகன் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்.. ஜூன் 2 ஆம் தேதி காலை மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணையில் பொதுச் செயலாளர் பதவி: துரைமுருகனுக்கு ஷாக் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்தவாறே இன்று (ஜூன் 3) துரைமுருக…

  20. இராமநாதபுரம் சேதுபதி கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் நாளாக காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அங்கும் அவர்களின் உண்ணாவிரதம் தொடற்கிறது என்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களில் ஒருவரான எமக்கு கோகுலகண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13302:iramanathapuram&catid=36:tamilnadu&Itemid=102 http://youtu.be/aNu0w6jJmIY

    • 0 replies
    • 589 views
  21. இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?: ஜெயலலிதா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் , இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், நடத்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வலிய…

    • 0 replies
    • 702 views
  22. பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்! இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா? தமிழ்ச் சமூகம் நவீன ஆட்சி நிர்வாகத்தின் விளைவாக இன்று அடைந்திருக்கும் நலன்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர்…

  23. இருவர் அணியால் மிரளும் அமைச்சர்கள்! - தினகரனுக்கு எதிராக சீறும் நிர்வாகிகள் #VikatanExculsive பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளை சசிகலா கண்காணித்துவந்தாலும், டி.டி.வி.தினகரனைச் சுற்றியுள்ள இருவர் அணியின் கெடுபிடிகளால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சீனியர் அமைச்சர்கள். 'அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில், இருவர் அணியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. கட்சியை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 'சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை' என்ற உத்தரவு வந்த நொடியே, கட்சியை வழிநடத்த டி.டி.வி. தினகரனைக் கொண்டுவந்தார், சசிகலா. அதற்கேற்ப, துணைப் பொதுச்செயலாளர்…

  24. சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழக அமைச்சராக 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை பதவி வகித்தவர் சி.அரங்கநாயகம். இவர் அமைச்சராக பதவி வகித்த காலக்கட்டத்தில் தன் பெயரிலும், தன் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடிக்கு சொத்துச் சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர…

  25. ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !! தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும். By புதிய ஜனநாயகம் - September 16, 2021 0 தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மற்ற கட்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.