தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து கோவில்பட்டி மாணவர் சாதனை! கோவில்பட்டியில் சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ள மாணவர் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெறவுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சிவசூர்யா என்ற மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். விவசாயத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் விவசாயிகளுக்கு உதவும் புதுமையான படைப்பை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக நீண்ட நாட்கள் போராடி சூரிய ஒளியால் இயங்கக்கூடிய டிராக்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த டிராக்டர் சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் வகைய…
-
- 0 replies
- 511 views
-
-
சமூக ஆர்வலர் பியூஸ் சித்திரவதையின் பின் விடுதலை!!!
-
- 3 replies
- 612 views
-
-
இயற்கை வேளாண் பொருள் விற்பனையில் கால்பதிக்க இருக்கிறார் சீமான். 'காய்கறிகளோடு நமது பாரம்பர்ய பொருட்களை விற்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்’ என கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக, சிறப்பு மாநாடு, உணவுக் கண்காட்சி என பரபரப்பாக இயங்குகிறார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சீமான். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் இறங்குவது ஒருபுறம் இருந்தாலும், 'நம்மாழ்வார் அய்யாவின் விருப்பப்படி, இயற்கை வேளாண் விற்பனையிலும் நாம் கால்பதிக்க வேண்டும் ' எனப் பேசி வருகிறார் சீமான். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி ஒர…
-
- 0 replies
- 692 views
-
-
‘ ஜெயலலிதாவை பின்பற்றுவதில் என்ன தவறு?!’ -கருணாநிதியிடம் ஆதங்கப்பட்ட கனிமொழி #Vikatan Exclusive உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. ' அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தனித்துக் களமிறங்க வேண்டும். கூட்டணிகளை நம்புவதால் பலவீனப்பட்டே வந்திருக்கிறோம்' என கருணாநிதியிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உள்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொண்டு வருகிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர்களை ஒதுக்கி வைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. அதேநேரம், அக்டோபரில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, கட்சியின் சீனியர…
-
- 0 replies
- 577 views
-
-
உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். ' தமிழர் அல்லாதவர்கள் குறித்துப் பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள். பெரியார் குறித்தும் மாற்று மொழி பேசுபவர்கள் குறித்தும் அனுமதியில்லாமல் யாரும் பேச வேண்டாம்' என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1 சதவீத வாக்குகளை வாங்கியது நாம் தமிழர் கட்சி. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கடலூரில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். இதன்பிறகு, கடந்த அறுபது நாட்களாக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னையையொட்டி நாளை மறுநாள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறா…
-
- 3 replies
- 704 views
-
-
சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.46 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்தும் முயற்சித்தும் விமானத்தில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. நடுவானில் திடீரென 29 பேருடன் விமானம் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விம…
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அந்தப் படகில் பல ஆயிரம் லீட்டர் டீசல் இருப்பது தெரியவந்ததால், பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அந்தப் படகு நிறுத…
-
- 0 replies
- 513 views
-
-
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, 2016-2017ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது, ''டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் 500 மதுபானக் கடைகளை மூடியதால் வருவாய் ரூ.6,636.08 கோடி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மத்திய வரிகளில் மாநில அரசின் பங்குத் தொகை 23,018.12 கோடி ரூபாயாக குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான மானியங்கள…
-
- 0 replies
- 507 views
-
-
கணினி, டிவி முன் முழுநேரத்தையும் செலவிடுவதை விடுத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த சிஷ்யா பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறினார். சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் நேற்று புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர். தலைமைச் செயலக கட்டிடத்தின் தெற்கு பகுதியில், முதல்வர் வருகை தரும் வாசல் பகுதியில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். முதல்வரை பார்த்து சிஷ்யா பள்ளி மாணவர்கள் கையசைத்தனர். இதை கவனித்த முதல்வர், தன் அலுவலகத்துக்கு சென்றதும், பள்ளி மாணவர்கள் யார் என்பதை விசாரித்ததுடன், அவ…
-
- 0 replies
- 454 views
-
-
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார். "தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "என…
-
- 0 replies
- 451 views
-
-
'வைகோவை இப்போதுதான் புரிந்து கொண்டேன்!' - வீரலட்சுமியின் ஆதங்கம் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி. ' வைகோவிடம் கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால் விலகுகிறோம். அவரைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டோம்' என்கிறார் வீரலட்சுமி. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முயற்சியால், தமிழர் முன்னேற்றப்படையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் அங்கம் வகித்தது. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கினார் வைகோ. பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, 20 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில், ' மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' எ…
-
- 1 reply
- 919 views
-
-
போலி ஆவணம், 24 மணி நேர மௌனம், அதிகாரி மாற்றம்! - ரூ.570 கோடி கன்ட்டெய்னர் மர்மம் திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கன்ட்டெய்னர் பணம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டது சி.பி.ஐ.' சட்டரீதியிலான பணம் என்றால், இவ்வளவு மர்மங்களோடு ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமா?' என கேள்வி எழுப்புகின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். 2016 சட்டமன்றத் தேர்தல் சமயம், மே 13-ம் தேதி அன்று திருப்பூர் அருகில் மூன்று கன்ட்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை.அந்த கன்ட்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருந்ததாகத் தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த லாரிகள் பறிமுதல் சம்பவத்தின் பின்னணியில்,உள்ள உண்மைகளை வ…
-
- 0 replies
- 569 views
-
-
நளினி விடயத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலூர் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுத…
-
- 6 replies
- 647 views
-
-
தி.மு.கவில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அ.இ.அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா இன்று தி.மு.கவில் இணைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் அவர் தி.மு.க.வில் சேர்ந்தார். 2011-2016ல் நடந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை துறைமுகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கடந்த ஜனவரி மாதம் துக்ளக் வார விழாவில் பேசும்போது அரசின் மீது சில விமர்சனங்களை முன்வைத்ததையடுத்து, அவரைக் கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பழ. கருப்பையா, அரசின் செயல்பாடுகள் மீது பல புகார்களையும் குற்றச்சாட்டுகளையும்…
-
- 0 replies
- 1k views
-
-
சென்ற ஆண்டின் பிற்பகுதி, வடதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட ஆட்சியர், டெங்கு காய்ச்சலுக்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக, பள்ளிகொண்டா பகுதியில் இருந்த அகரம் கிராமத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிறிய மருத்துவமனையைப் பார்த்தவருக்கு சந்தேகம் உண்டாகிறது. உடன் வந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறார். அதிகாரிகள், தன் மருத்துமனைக்கு வருவதைக் கண்ட மருத்துவர், அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தபோதுதான் தெரிகிறது, அந்தச் சிறிய மருத்துவமனையைப் பல ஆண்டுகளாக இயக்கியது ஒரு போலி மருத்துவர் என்று. அது போல், தருமபுரியில் பிக்கிலி மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷிற்க…
-
- 0 replies
- 300 views
-
-
தமிழக மருத்துவ மாணவன் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் சேர்ந்தவர் சரவணன். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த அவர் கடந்த 10ம் தேதி சந்தேகத்திற்கு உரிய வகையில் மரணமடைந்தார். இதுகுறித்து கடும் சர்ச்சை எழுந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடலில் நச்சுப்பொருள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அது சில மாதங்களுக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் அவர…
-
- 1 reply
- 370 views
-
-
சுவாதி கொலை வழக்கில் பிலால் மாலிக்கை விசாரிக்க வேண்டிய தேவை என்ன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனப் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்தனர்.சுவாதி கொலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிலால் மாலிக் சொன்ன வாக்குமூலங்களை ஏன் வெளியிடவில்ல…
-
- 0 replies
- 610 views
-
-
காசி, ராமேஸ்வரம் புனித யாத்திரை என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு வாழ்நாள் கனவு. கங்கை நதியிலும், ராமேஸ்வரம் தீர்த்தத்திலும் புனித நீராடி பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.கங்கை நீராடல் பலருக்கு கனவாகவே முடிந்து போவதால் எல்லோருக்கும் கங்கை நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ள கங்கைநீர் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டருகிலேயே கங்கை நீர் கிடைப்பது ‘வரப்பிரசாதம்‘ என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் கங்கைநீர் அசுத்தமானது. அதை தபால் நிலையங்களில் விற்…
-
- 0 replies
- 332 views
-
-
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.அதன்படி, நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் முருகன், சாந்தன், பேர…
-
- 0 replies
- 307 views
-
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்து காட்டிய ராம்குமார்! சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் கடந்த 13-ம் தேதி மாலை முதல் 15-ம் தேதி மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. ராம்குமாரிடம் போலீஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் , "எங்கள் விசாரணையில் ராம்குமார் இருந்தபோது 13-ம் தேதி நள்ளிரவில் ரயில் போக்குவரத்து இல்லாத சமயத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றோம். பயணிகள், பொதுமக்கள் இல்லாத நேரத்தில் எந்த மீடியாக்களுக்கும் தகவல் கசியாத வகையில் ராம்கு…
-
- 0 replies
- 536 views
-
-
டெல்லியில் முதல்- அமைச்சர்கள் மாநாடு இன்று நடந்தது. மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:–வலிமையான மாநிலங்களால்தான் வலிமையான மத்திய அரசு அமையும். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் பழைய போக்குகளை மாற்றியாக வேண்டும்.அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்து மாறி வரும் காலம் இது. மாநிலக் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கோஆப்ரேடிவ் கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. அந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. நாட்டின் வளர்ச்சிக்கு மாநில அரசுகள் சரிசமமாக பங்குதாரர்கள் என்ற கருத்தை நான் எப்போதும் வர…
-
- 0 replies
- 277 views
-
-
ராணுவப் புரட்சி நடந்துள்ள துருக்கியில், 20 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அங்கிருந்து 'எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும்' என்று துருக்கியிலிருந்து தமிழக வீராங்கனைகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். உலக பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 200 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அஜித்குமார், தமிழ்ச்செல்வி, பிரியதர்ஷினி உள்பட 20 பேரும் அடக்கம். இந்த நிலையில், துருக்கில் நேற்று ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்காரா பகுதியில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் டிராப்சோன் நகரில் இந்திய வீரர், வீரா…
-
- 0 replies
- 479 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் வாதத்தை முன்வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரும் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது தொடர்பாக அனுமதி கேட்டு, அண்மையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்நிலையில், ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பண்ட், ஏ.எ…
-
- 0 replies
- 334 views
-
-
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் தினமும் ஒவ்வொரு தகவலாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பிராமண பெண்ணான சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முஸ்லீம் ஒருவர் தான் இந்த கொலையை செய்திருப்பார் என ஒரு சில கூறி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. பின்னர் ராம்குமார் கைது செய்யப்பட்டதும் முஸ்லீம் குறித்த தகவல்கள் மங்கிப்போனது. ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தலித் அமைப்புகள் ர…
-
- 5 replies
- 1.5k views
-
-
600 சிம்கார்டுகள், 25 மேன்சன்கள், தென்காசி அரிவாள்..!' -ஆந்திரா வரை நீளும் சுவாதி கொலை வழக்கு சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ' ராம்குமார்தான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமாரை, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்தது போலீஸ். நெல்லை மருத்துவமனையில் சி…
-
- 1 reply
- 646 views
-