தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த புகைப்படம் மூலம் போலீசார் துப்பு துலக்கி, நேற்று இரவு கொலையாளியை கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையை முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் காலை சுமார் 6.40 மணியளவில் சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சுவாதி மின்சார ரெயிலுக்கு காத்திருந்த போது அடையாளம் தெரியாத நபரால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எழும்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் பதிவ…
-
- 0 replies
- 699 views
-
-
தலைநகர் சென்னையை ஏன் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர வைத்த செய்தி சுவாதி கொலை சம்பவம். காலை நேரத்தில் பயணிகள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் அனைவரும் பார்க்கும்படி ஓர் இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞன் யார் என்ற செய்திதான் அனைத்து ஊடகங்களிலும் கடந்த 24-ம் தேதி முதல் செய்தியாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. கொலையாளி நெல்லை மாவட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) எனத் தெரியவந்துள்ளது. சுவாதி வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், படுகொலை ஏற்படுத்திய பேரதிர்ச்சி முதல் இதுவரை நடந்த சம்பவங்களின் சிறு தொகுப்பு: 1. ஜூன் 24 காலை 6.35 மணி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடை மேடையில் நின்றிருந…
-
- 0 replies
- 566 views
-
-
சுவாதி கொலையாளி ராம்குமார் மிகவும் ஒழுக்கமானவன் என அவனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்துல்லா என்ற நபர் கூறியதாவது, பொறியியல் படித்துள்ள அவனுக்கு சில பாடங்களில் அரியர் உள்ளதால், சென்னையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தான். இதுவரை எந்த பிரச்சனையிலும் அவன் ஈடுபட்டதில்லை என கூறியுள்ளார். மற்றொரு நபரான கருத்தபாண்டி கூறுகையில், யாருடனும் முகம் பார்த்து கூட பேசமாட்டான், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்தால் ஆடு மேய்க்கும் வேலையை செய்வான், இவ்வாறு ஒழுக்கமாக இருந்த ராம்குமார், ஒரு கொலையை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார். http://news.lankasri.com/india/03/105131
-
- 0 replies
- 618 views
-
-
'சுவாதி வழக்கில் கைதானவரைப் பற்றி என்ன சொல்வது?' -கமிஷனர் பதில் மென்பொறியாளர் சுவாதியை, ராம்குமார் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அவரிடம் பழக முடியாததால் கொலை செய்துள்ளார் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, அவர் கூறுகையில், "கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தனர். அங்கிருந்து எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுவாதி…
-
- 1 reply
- 889 views
-
-
காளான் வளர்ப்பில் கல்லா கட்டும் இன்ஜினியர் பெரம்பலூர்: காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத்தாவர உயிரினம். பலநாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பலதரப்பட்ட சூழல்களி லும் வளரக்கூடியது. எப்போதாவது இடியிடித்து மழைபெய்தால் அபூர்வமாக முளைக் கும் காளான்களை சமைத்து உண்பதில் ஆர்வம்காட்டும் இந்தியர்களினவ் முக்கிய உணவுப் பொருளாக காளான்கள் அசைவ உணவுக்கு மாற்றாக மாறி வருகிறது. இதில் சிப்பிக்காளான், பால் காளான், பட்டன் காளான் என ஆயிரக்கணக்கான வகைகள் காளான்களில் இருந்தாலும், சிப்பிக் காளான்களுக்கும், பால் களான்களுக்கும் மட்டுமே மவுசு அதிகரித்துள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே ஆடம்பர உணவாகக் காணப்பட்ட காளான்கள் இப்போது நடுத்த…
-
- 0 replies
- 661 views
-
-
வீரப்பனின் வாழ்கை வரலாற்று படம் என்று எடுக்கப்பட்டுள்ள வில்லாதி வில்லன் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அப்படத்தின் இயக்குனார் ராம் கோபால் வர்மா, வீரப்பனின் உண்மையான வாழ்கை வரலாற்றை இந்தி மொழியில் படமாக எடுக்க தன்னிடம் உரிமைகேட்டு கையெழுத்து வங்கியதாகவும். ஆனால், அதில் தமிழ் மொழிக்கான உரிமமும் அவருக்கு அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது எனக்கு தெரியாது. அவர் என்னை ஏமாற்றி உரிமத்தை பெற்றுக் கொண்டார். மேலும், இந்தியில் கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் படம் வெளியானது, நான் படத்தை…
-
- 1 reply
- 612 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், சாந்தனை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி. இவர்களின் விடுதலைக்காக முதல்வரை சந்திக்க மனு கொடுக்க இருக்கிறேன் என்கிறார் திருச்சி வேலுச்சாமி. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர். பொதுவாக, வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் மட்டுமே, இவர்களைச் சந்தித்துப் பேசி வருவது வழக்கம். இவர்களின் விடுதலைக்காக மாபெரும் பேரணி ஒன்றும் கடந்த 11-ம் தேதியன்று நடந்தது. இந்நிலையில், இன்று காலை வேலூர் சிறையில் முருகனையும் சாந்தனையும் சந்தித்துப் பேசியிரு…
-
- 1 reply
- 401 views
-
-
சுவாதியின் கொலையில் எந்தவித சாட்சியங்களும் முன்வராத நிலையில் தற்போது சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் முக்கிய விடயங்களை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், சுவாதியை கொன்ற கொலையாளிதான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சுவாதியின் கன்னத்தில் அறைந்தவன் என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் தமிழ்செல்வன். தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் தமிழ்செல்வன், சுவாதியை கொன்றவனை நேரில் பார்த்ததாகவும் சுவாதியை இதற்கு முன் ரயில் நிலையத்தில் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கமாக நான் தினமும் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வந்துவிடுவேன். அங்கிர…
-
- 0 replies
- 869 views
-
-
64வது முறையாக உடைந்தது சென்னை விமான நிலைய கண்ணாடி சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி கதவு 64வது முறையாக உடைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை இடிந்து விழுவது வழக்கமாகிவிட்டது. இதுவரை 21 முறை தடுப்பு கண்ணாடி மற்றும் மேற்கூரை தலா 21 முறையும், கதவுகள் 20 முறையும், 5 முறை சுவரின் பகுதிகள் இடிந்தும் விழுந்துள்ளன. இதுவரை இந்த சம்பவத்தால் மட்டும் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த முறை நுழைவு பகுதியில் உள்ள பணப்பரிமாற்றம் செய்யும் இடத்தில் உள்ள 8 அடி கதவு உடைந்து விழுந்துள்ளது. 64வது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலைய ஊழியர்கள் மூலம் கண்ணாட…
-
- 0 replies
- 556 views
-
-
என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ திருச்சி: எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல் தடுத்தது என்று திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசினார். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை, அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தின…
-
- 2 replies
- 538 views
-
-
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது: மாவட்ட செயலாளர்களிடம் மனம் திறந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் 11-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த், தொழிற்சங்க பேரவை கொடியை ஏற்றிவைத்தார். மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர். ‘திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’ என்று தேமுதிக மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார். தேமுதிக தொழிற்சங்கத்தின் 11-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. இந்த விழாவின் போது தேமுதிகவினருடன் விஜயகாந்த் மனம் திறந்து பேசினார். இது தொடர்பாக நிர்வா…
-
- 0 replies
- 343 views
-
-
ஃபேஸ்புக் சாட் நண்பர்தான் சுவாதி கொலையாளியா?- இறுகும் விசாரணை சுவாதியுடன் ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்த இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் காவல்துறையினர் தொிவித்துள்ளனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து மர்மநபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரயில்வே போலீசாருடன் இணைந்து சென்னை மாநகர போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொலையாளியை கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 712 views
-
-
அதிமுக வெற்றிக்காக 700 கோடி வாங்கினாரா விஜயகாந்த்? புயலை கிளப்பும் புகார் எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார் என்று மக்கள் தேமுதிக கட்சி நிர்வாகி சந்திரகுமார் புதிய புகாரை கிளப்பியுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து விலகி 'மக்கள் தேமுதிக' என்ற புதிய கட்சியை தொடங்கியதோடு, திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்த நிலையில், செ…
-
- 1 reply
- 671 views
-
-
சஞ்சய் தத் விடுதலை விவரம்: பேரறிவாளன் கோரிய ஆர்டிஐ தகவலுக்கு பதில் அளிக்க மறுப்பு பேரறிவாளன் | கோப்புப் படம் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஆர்டிஐ மனு ஒன்றில் நடிகர் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் முன்பாகவே விடுதலை செய்யப்பட்டதன் காரணம் குறித்து கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 3-வது நபர் ஒருவரின் விடுதலை விவரங்களை கோர முடியாது என்ற அடிப்படையில் மனுவை தகவல் அலுவலர் / சிறை அதிகாரி நிராகரித்தார். ஏற்கெனவே இதே தகவலைக் கோரியிருந்த போது, எரவாடா சிறை அதிகாரிகள், மனுவுடன் அனுப்பப்பட்டிருந்த ரூ.10-ற்கான போஸ்டல் ஆர்டரில் 2011-ம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிர…
-
- 1 reply
- 550 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவராக ஆயுதம் ஏந்தவில்லை. மாறாக எந்த ஆயுதத்தினை கொண்டு தமிழ் இனத்தினை அழிக்க சிங்கள இராணுவம் துடித்ததோ, அந்த ஆயுதத்தினை கொண்டு தமிழ் இனத்தினை பாதுகாக்கேவே ஆயுதம் ஏந்தினார். ஈழம் தனி நாடாக உருவாக வேண்டும் என்ற கருத்தில் உருவான கூட்டாளி படத்தின் திரையிடல் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈழம் என்பது மூன்றெழுத்து வார்த்தையல்ல. அது ஒரு தேசிய இனத்தின் கனவு, உயிர், மூச்சு மற்றும் விடுதலை. தமிழீழ விடுதலைப்புலிகளில் தலைவர் வே.பிரபாகரனை தலைவனாக்கியது தமிழன் அல்ல. அவரை தலைவனாக்கியது சிங்களவர்களே. தேசிய தலைவரின் உயிருக்கு 10 லட்சம் ரூபா அறிவித்த போத…
-
- 0 replies
- 655 views
-
-
மக்கள் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்குகிறார் அக்கட்சியின் தலைவர் வி.சி.சந்திரகுமார். உடன் முக்கிய நிர்வாகிகள் | படம்: ம.பிரபு மக்கள் தேமுதிகவை திமுகவில் இணைக்க உள்ளதாக அக்கட்சி யின் தலைவர் வி.சி.சந்திரகுமார் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் கட்சியின் முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.…
-
- 0 replies
- 509 views
-
-
கச்சத்தீவு: யாருக்கு சொந்தம் கச்சத்தீவு விவகாரம் பற்றி சமீபத்தில் சட்டமன்றத்தில் கத்தி வீச முயன்று அது திமுக அதிமுக இரண்டு தரப்பினருக்கும் ரத்தக்களரியாய் முடிந்து போனது. கச்சத்தீவு இலங்கைக்கு அளிகப்பட்டதன் வரலாற்றுக்கு ரெண்டு பக்கங்கள் உண்டு 1. கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தின் உடைமையாக இருந்தது வரலாறு. அதன் பின் காலனிய ஆட்சியின் கீழ் அது வருகிறது. அப்போது அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொதுவாக இருக்கிறது. வெள்ளையரகள் நமக்கு விடுதலை அளித்து வெளியேறுமுன் தம் காலனிய நாடுகளின் எல்லைக்கோடுகளை வகுக்கிறார்கள். அப்போது கச்சத்தீவு இலங்கைக்கு போய் விடுகிறது. ஆனால் இந்தியா தொடர்ந்து அதற்கு வரலாற்று காரணம் காட்டி உரிமை கோருகிறது. இறுதியில் 1974இல் இந்…
-
- 0 replies
- 619 views
-
-
ஸ்டார்ட்...கேமிரா...ஆக்சன்...சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்! நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளில், விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி பெரிய எதிர்பார்ப்போடு களம் இறங்கியது.ஆனால்,தேர்தல் முடிவுகள் அந்தக் கூட்டணியின் எதிர்பார்ப்பைத் தூள் தூளாக்கியது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 232 தொகுதிகளில் 134 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது அதிமுக. 98 இடங்களில் வென்று தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியாக திமுக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…
-
- 3 replies
- 598 views
-
-
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்! -விஜயகாந்துக்கு மா.செ.கள் உருக்க கடிதம் சென்னை: உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் என்று 14 தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டனர் என அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.,…
-
- 3 replies
- 519 views
-
-
பணம் இருந்தால் பக்கத்தில் வந்து நில்லு... பெரியார் வழியில் வைகோ! 'கட்சிக்கு நிதியளிப்பவர்கள் மட்டுமே இனி தன்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருப்பது, கட்சியினரிடையே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. தென்சென்னை, கிழக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் செயல்வீரர்கள் கூட்டம், சென்னை, தரமணியையொட்டியுள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஹேமா மஹாலில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் கே. கழககுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர். கூட்டத்திற்குப்பின் கட்சி நிர்வாகிகள் பலர், வைகோவுடன் புகைப்படம் எடுத்து…
-
- 1 reply
- 668 views
-
-
2 மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள்... சென்னை கருணையற்ற நகராமா? சுவாதி கொலையை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்த பயணிகளை விமர்சித்து... ‘நான் சுவாதி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் பரவி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டபோது, ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். கொலையாளி ஒரே ஆள்தான். கல்லை கொண்டு தாக்கத் தொடங்கியிருந்தால்கூட, கொலையாளி மிரளத் தொடங்கியிருப்பான். சுவாதி உதவிக்கு யாரும் வராத நிலையில் தனி ஆளாக போராடி பலியாகியுள்ளார். கொலையாளி தப்பி ஓடும்போதும், யாரும் பிடிக்க முன்வரவில்லை. கொலையாளி அங்கிருந்து சென்ற பின்னரும்கூட உயிருக்கு போராடிய சுவா…
-
- 2 replies
- 1.7k views
-
-
கருணாநிதி போட்ட தடை : திமுகவினர் கடும் அதிர்ச்சி திமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சரை தனது கோபாலபுரம் இல்லத்திற்கு எக்காரணம் கொண்டு வரக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார். அவர், மு.க.ஸ்டாலினுக்கு துாபம் போட்டு அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுவதாக வந்த தகவலை அடுத்தே, இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், திமுக முக்கிய நிர்வாகிகளே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். http://www.virakesari.lk/article/8128
-
- 0 replies
- 463 views
-
-
இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார். உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரிய…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா! சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 15 ம் தேதியன்றே, ராகுல் காந்தியிடம் அளித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் ம…
-
- 0 replies
- 408 views
-
-
நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 20 வருடங்கள் சிறைய…
-
- 2 replies
- 482 views
-