தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
வேலூர்: திமுகவினரே உண்மையான சங்கி என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமேடையில் காலணியை கழற்றி காண்பித்து எச்சரித்தார். திமுகவினரை காலணியால் அடிப்பேன் என்கிற வகையில் பேசியதால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் போலீசில் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், யூடியூபர் மாரிதாஸ் ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினரே உண்மையான சங்கிக…
-
- 0 replies
- 385 views
-
-
வரும் 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு தமிழர் பிரதிநிதியாக மக்களால் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை இரு பெரும் திராவிடக் கட்சிகள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் பிடிக்கின்றன. இதற்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று சிலர் எண்ணி தேசியக் கட்சியான பாஜக வுடன் மதிமுக பாமக போன்ற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளன. பாஜக காங்கிரஸ் ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் கொள்கை அளவிலும், ஊழல் அளவிலும், தமிழின விரோதப் போக்கின் அளவிலும் ஒரே நிலையில் இயங்கும் கட்சிகளாகும். இக்கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழர்களிடம் வாக்கு சேர்ப்பது தமிழினத்திற…
-
- 0 replies
- 271 views
-
-
700 அரங்குகள், 2000 தலைப்புகள், 5 லட்சம் புத்தகங்கள் என வாசகர்களை அசத்த வருகிறது 37 வது சென்னை புத்தக காட்சி. 37 வது சென்னை புத்தக காட்சிக்கு வாசகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் கொல்கத்தா புத்தக கண்காட்சி மிக பிரபலமானது. சமீப காலமாக இதை விஞ்சும் அளவுக்கு சென்னை புத்தக காட்சி வாசகர்களின் அமோக வரவேற்பில் வளர்ச்சி கண்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவுக்கு வெகு அருகாமையில் நடத்தப்படும் புத்தக காட்சிக்கு, வாசகர்களின் வருகை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தங்கள் அபிமான எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் மற்றும் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் மற்ற துறைகளின் புத்தகங்களை வாங்க அலைய…
-
- 0 replies
- 289 views
-
-
சூழலியலாளர் சாந்தலா தேவி: "என்னை போலவே உடைந்திருந்த தடாகம் பள்ளத்தாக்கை மீட்க விரும்பினேன்" மோகன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMED FAZIL படக்குறிப்பு, சாந்தலா தேவி கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக 18 வயதான சாந்தலா தேவி ஆய்வு செய்து தயாரித்திருக்கும் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது. கோவை மாவட்டம் தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தலா தேவி. இவரின் தந்தை மருத்துவர் ரமேஷ். கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த இரு சக்கர சாலை விபத்து ஒன்றில் ச…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி திருச்சி சிறப்பு முகாம் முற்றுகை. தமிழ்நாடு :- திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி, மே17 உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் வருகின்ற 29ஆம் திகதி திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மே 17 சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்; திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் ஈழத்தமிழர்களுக்கான தனி சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டுமென கடந்த 20-05-2022 முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் 24 அன்று உமாரமணன் என்ற ஈழத்தமிழர் தீக்குளித்துள்ளார். அவர்களது ஒரே கோரிக்கை, சித…
-
- 0 replies
- 252 views
-
-
மன்னார்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்ப அஸ்திரத்தை தனதாக்குவாரா தினகரன்?! #VikatanExclusive ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து தமிழக அரசியலில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளார் டி.டி.வி.தினகரன். வெற்றியின் மூலம் கட்சி தன் வசம்தான் இருக்கிறது என்பது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்த தினகரன், தற்போது குடும்பமும் தன் வசம்தான் உள்ளது என்பதை உரக்கச் சொல்ல மன்னார்குடியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பொதுவாக புத்தாண்டை ஆதரவாளர்களுடன் அடையாறில் இருக்கும் தனது வீட்டில் கொண்டாடும் வழக்குமுடையவர் தினகரன். அன்று ஆதரவாளர்களுக்கு விருந்து கொடுப்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என்று இருப்பார். ஆனால், ஆர்.கே.நகர் வெ…
-
- 0 replies
- 350 views
-
-
திருநெல்வேலி : நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் ஜீவாதாரத்தை உறிஞ்சி, குடிநீர் பாட்டில் தயாரிக்கும், 'பெப்சி' நிறுவன ஆலை துவங்கப்படுவதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி உள்ளது. இந்த ஆற்றை நம்பித் தான் ஆண்டுக்கு, இரண்டு போக நெல் சாகுபடி மற்ற உணவு உற்பத்தியும் நடக்கிறது. திறக்கப்படவில்லை: ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து பொய்த்து வரும் மழையினால், தாமிரபரணி ஆற்றின் நீர் நிலையும் குறைந்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் தேதி, கார் நெல் சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு, ஜூன் மாதம் முடிந்தும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்ப…
-
- 0 replies
- 473 views
-
-
இந்தியாவில் அகதிகளாக இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றனர் என இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10 ஆயிரத்து 340 பேர், மியான்மரைச் சேர்ந்த 4 ஆயிரத்து 621 பேர், இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றார், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட ஒரு இலட்சத்து ஆயிரத்து 148 பேரும் உள்ளனர். அகதிகள் எனக் கூறப்படும் வெளிநாட்டினரைக் கையாளுவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனிய…
-
- 0 replies
- 336 views
-
-
தன் மகளைவிட சிறப்பாக படித்த மாணவனை பெண் கொன்றதாக குற்றச்சாட்டு: பெற்றோர் போராட்டம் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காரைக்கால் பகுதியில், தன் மகளை விட நன்றாகப் படித்ததால் மகளுடன் படிக்கும் மாணவனுக்கு, மாணவியின் தாய் குளிர்பானத்தில் பெயர் கண்டறியப்படாத மாத்திரையைக் கலந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குறிப்பிட்ட மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலின் நகரப்பகுதியில் வீட்ட…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பா.ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய ரயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 787 views
-
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு என்ன அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மார்ச் 2023, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இது அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? நடந்து முடிந்திருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TREE FOUNDATION INDIA படக்குறிப்பு, கரைக்கு வெகு அருகில் இம்மீன்கள் தென்பட்டதாகச் சொல்கிறார் கடல் உயிர் ஆர்வலர் சுப்ரஜா தாரிணி 13 ஜூன் 2023, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) சென்னையின் பெரிய நீலாங்கரைக்கு அருகில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பாரம்பரிய மீனவர் புகழரசனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது படகுக்கு சற்றுத்தொலைவில் சுமார் 20 பெரும் திமிங்கலச் சுறாக்கள் நீந்திக்கொண்டிருந்தன. 20 வருடங்களுக்கு மேலாக இதே பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் புகழரசன், இதுவரை அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு திம…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது April 14, 2019 தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சா{ஹ அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பிலே…
-
- 0 replies
- 381 views
-
-
இலங்கை குண்டு வெடிப்பு – தமிழக கடற்கரை – ராமேசுவரம் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது April 22, 2019 இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றையதினம் 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து தீவிவாதிகள் பாக் ஜலச…
-
- 0 replies
- 748 views
-
-
பட மூலாதாரம்,MSSRF கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று, ஜூன் 8, உலகப் பெருங்கடல்கள் தினம். இதனை முன்னிட்டு, மீனவக் குடும்பத்திலிருந்து வந்து, தற்போது கடல்சார் ஆராய்ச்சியாளராக மீனவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் வேல்விழி தன் அனுபவங்களை இங்கே பகிர்கிறார்.) சிறுவயதில், மீன்பிடிக்க நள்ளிரவில் கடலுக்குச் செல்லும் தன் அப்பாவுக்காக, மாலை நேரத்தில் கடற்கரையில் தன் தாயுடன் காத்திருந்த பொழுதுகள் இன்னும் வேல்விழியின் நினைவில் உள்ளன. கூடவே, புயல், மழை காலங்களில் அப்பா எப்போது வீடு திரும்புவார் என குடும்பத்தில் எல்லோரும் அச்சத்தின் …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
சியோனிசமும் தமிழிசமும் உலகிலுள்ள புராதன இனங்களுள் தமிழனத்தைப் போன்றே யூத இனமுமொன்று. மத்திய கிழக்கில் உள்ள மிகச்சிறியவோர் பிரதேசம்தான் அந்த இனத்தின்பூர்வீகத் தாயகம். ஆனால் பழைய ஏற்பாட்டுக் காலத்திNலுயே சொலமன், டேவிட் போன்ற அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அந்த இனம் தன் தாயகத்தைப் பறிகொடுத்து அந்நியரின் ஆளுகைக்குள் வாழப் பழகிக்கொண்டுவிட்டது. இயேசுநாதர் வந்து யூதர்களின் ராஜா நான், என்னைப் பின்தொடருங்கள் என்று கூறியபோதும் அடிமை மனப்பான்மைக்குள் மூழ்கிப் போய்விட்ட யு+த இனம் அவரைக்காட்டிக் கொடுத்து, ஆக்கினைக்கு உட்படுத்தி, அவருக்கு முட்கிரீடம் சூட்டிச் சிலுவையிலறைந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிவரை (1896) தாங்கள் இழந்து போன இஸ்ரவேல் தேசத்தை மீண்டும் பெறவேண்டுமென்ற வ…
-
- 0 replies
- 755 views
-
-
’நம்பி நம்பி மோசம் போனேன்..!’ -கொதிகொதிப்பில் ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி மாற்றப்பட்டு, வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மாற்றத்தால் இதுவரை 27 பேர் முன்னாள் வேட்பாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் பல வேட்பாளர் மாற்றங்கள் வரலாம் என காதை கடிக்கின்றது கார்டன் வட்டாரம். காரணம் கடந்த 2 தினங்களுக்கு முன், கார்டனில் நடந்த சூரசம்ஹாரம். அன்றைய தினம் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்காற்றிய கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும், முன்னாள் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரையும் ஜெயலலிதா வறுத்தெடுத்தார் என்கிறார்கள். எந்த தேர்தலானாலும், வேட்பாளர் அற…
-
- 0 replies
- 732 views
-
-
சென்னையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் மது விநியோகம் செய்யவும், நடனமாடவும் சிறுமிகளை உட்படுத்துவது தெரியவந்துள்ளது.போதை தலைக்கேறிய ஆசாமிகள் சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது."கண்கவர் நடனம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்", மதுப்பிரியர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக சென்னையில் உள்ள மதுபான விடுதிகள் அறிமுகப்படுத்தியுள்ள யுக்தி இது.மதுபான விடுதிகளில் நடனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், பொலிசாரின் ஒத்துழைப்புடன் இதுபோன்ற தவறுகள் நடந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் எந்தெந்த இடங்களில் உள்ள மதுபான விடுதிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகின்றன என்பதையும் அவர…
-
- 0 replies
- 545 views
-
-
கனடாவில் பறந்த கிருஷ்ணகிரி மானம்! -அரசு மருத்துவமனைகளின் நேரடி அவலம் தமிழக அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து கனடா பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிபரம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ' பலதரப்பட்ட நோய்களுக்கும் ஒரே மாத்திரைகளைக் கொடுப்பதால், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை' என அதிர வைக்கின்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள். கனடா நாட்டில் குயல்ப் பல்கலைக்கழக(Guelph university) ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்கள், தமிழ்நாட்டில் மருத்துவ ஆய்வு நடத்த வந்துள்ளனர். முதன்மை ஆய்வாளர் மருத்துவர் வாரன் டோட் தலைமையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 26 கிராமங்களில் 1,693 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. ' இந்தியாவின் மற்ற மாநில…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாணவர்களின் பேரெழுச்சி: முன்னும் பின்னும் - யமுனா ராஜேந்திரன் அமெரிக்கத் தீர்மானத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? புகலிடத்தமிழர்கள் மேற்குநாடுகளில் வாழ்கிற அவர்தம் இயல்பினால் மேற்கத்திய அமெரிக்க அரசுகளின் வழியிலான அழுத்த அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்ள முடியும். அமெரிக்காவின் மேற்கின் எந்தவிதமான முன்னெடுப்புகள் ஆனாலும் அதனை நிராகரிக்கிற நிலைமையில் புகலிட அரசியல் என்பது இல்லை. இந்தத் தீர்மானங்கள் குறித்த தமது தயக்கங்களுடன் அவர்கள் இத்தீர்மானங்களை வரவேற்கவே செய்வர். அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தீர்மானம் குறித்து எதிர்வு கூறி இதனால் பயனேதும் இல்லை என நிராகரித்திருக்கிறார் ஈழத்தின் உள்ளிருந்து செயல்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜ…
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்டாலின் பதிலளிக்க மறுப்பு சசிகலா தரப்பு செம கடுப்பு சென்னை:'வளைந்து, குனிந்து, தவழ்ந்து, தரையில் உருண்டு, கால் நோக்கி கும்பிடு போடுபவர்களால், தமிழகம் பாழ்பட்டு கிடக்கி து. எனவே, காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள என்னை சந்திக்க வரும் கட்சியினர் சிலர், ஆர்வம் மிகுதியால் சற்றும் எதிர்பாராத நிலையில், காலில் விழுந்து வணங்க முயற்சிக்கின்றனர். இதை, நான் சிறிதும் விரும்புவதில்லை. யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை, எந்த மனிதருக்கும் எப்போதும் ஏற்படக் கூ…
-
- 0 replies
- 654 views
-
-
“யாரைக் கேட்டு பேட்டி கொடுத்தார்..?” எகிறிய ஸ்டாலின்... சைலண்ட் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போலீஸுக்கு இது போதாத காலம்போல... மெரினா ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பத்தில் காவல் துறை காட்டிய கரிசனத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள். ஆனால், கடந்த 23-ம் தேதி அதே காவலர்கள், காட்டிய கோரமுகத்தைக் கண்டு, ‘‘காட்டுமிராண்டிகளாக தமிழக போலீஸ் நடந்த்கொண்டது’’ என்று வசைபாடினார்கள். போலீஸார், வீடுகளுக்குள் புகுந்து தாக்கிக்கொண்டிருந்த போதுதான், சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கலவர பூமியாகச் சென்னை காட்சியளித்துக் கொண்டிருந்தபோது ‘‘அமைதிப் பூங்காவாகத் தமிழகம் உள்ளது’’ என்று சிலாகித்துக்கொண்டிருந்தார் கவர்னர். ஜல்லிக்கட்டு போர…
-
- 0 replies
- 483 views
-
-
பன்னீரை அவமானப்படுத்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்? அ.தி.மு.க., தலைவர்கள் அதிர்ச்சி சென்னை: பன்னீர்செல்வம் முதல்வர் ஆன பின், இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா. தன்னை முதல்வராக்கிக் கொள்வதற்காக, சசிகலா இந்த கூட்டத்தை கூட்டியிருப்பதாக, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இரண்டாவது முறையாக, முதல்வர் பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதோடு, பன்னீர்செல்வத்தைக் காட்டிலும், கட்சியின் பொதுச் செயலராக இருக்கும் தான் தான் உயர்ந்தவர் என்று காட்டுவதற்காகவே, இப்படியொரு கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்திருப்பதாக, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 435 views
-
-
சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் 3 பேர் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிது அவதூறு வழக்கு தாக்கல்: தி.மு.க. தலைவர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் 23.8.2012 அன்று கேள்வி- பதில் கட்டுரை வெளியிட்டார். அதில் அப்போதைய அமைச்சர் கோகுல இந்திரா, சிவபதி, பச்சைமால் ஆகியோர் பற்றி அவதூறாக குறிப்பிட்டதாக கூறி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் 3 பேர் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி தரப்பில் வக்கீல் குமரேசன் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்த 3 வழக்குகளின் விசா ரணைக்காக கருணாநிதி நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார…
-
- 0 replies
- 429 views
-
-
இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல தடை! மின்னம்பலம் இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 26) அதிகாலை 4 மணி வரை வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30 மணி நேரம் தொடர்ச்சியாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 20ஆம் தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது அவசர தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள…
-
- 0 replies
- 517 views
-