தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
பன்னீர்செல்வம் அணியின் 5 வேன்கள் பறிமுதல்! ஆர்.கே.நகரில் போலீஸ் அதிரடி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக ஐந்து வேன்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சொந்தமான வேன்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க இரண்டாக பிரிந்து போட்டியிடுகிறது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மேலும் தி.மு.க சார்பில் மருதுகணேஷும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களாக, ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வரு…
-
- 0 replies
- 419 views
-
-
பன்னீர்செல்வம் அணியில் இணைந்த ராஜகண்ணப்பன் திடீர் சபதம்! முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று இணைந்தார். அப்போது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெற்றவுடன், அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம்' என சபதம் எடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. சசிகலா அணி- பன்னீர்செல்வம் அணி என்று பிரிந்தது. இதில், சசிகலா அணியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இருந்துவந்தார். இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு, ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திடீரென வருகைதந்தார். பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய அவர், அ.தி.மு.க புரட்சித்தலைவி …
-
- 0 replies
- 360 views
-
-
பன்னீர்செல்வம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்! தேனியில் கலகலத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் புதிய அணியை உருவாக்கிவருகிறார். இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் உள்பட பதினொரு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அ.தி.மு.க கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால், இவர்க…
-
- 0 replies
- 433 views
-
-
பன்னீர்செல்வம் பற்றி டிடிவி: உள்கட்சி விரிசலை அதிகமாக்கும் முயற்சியா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இறக்கிவிட்டு தன்னை முதல்வராக அமர்த்துவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் 2017ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார். இந்த தகவலை ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவிப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ள அவர், பன்னீர்செல்வம் தன்னை மீண்டும் மீண்டும் சந்திக்க முயற்சிப்பதை தடுக்கவே இந்த தகவலை இப்போது வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 410 views
-
-
பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்ச…
-
- 1 reply
- 458 views
-
-
பன்னீர்செல்வம் வீட்டுக்கு நடிகர் மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு! தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும், பொறுப்பு முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் வி.கே.சசிகலா. ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரைச் சந்தித்து, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பெரும்பன்பான்மையை நிரூபிக்க அனும…
-
- 1 reply
- 470 views
-
-
பன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தார் தீபா..! சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைந்துள்ளதாகவும் இருவரும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணி அளவில் திடீரென வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 50 நிமிஷங்கள் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறகு செய்தியாளர்கள் சசிகலா…
-
- 0 replies
- 473 views
-
-
பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது – பிரதமர் மோடி http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/1614237202139098-720x430.jpg பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று புதுச்சேரிக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு புதுச்சேரிக்கு சென்ற அவர், முடிவுற்ற அரசு கட்டடங்களைத் திறந்து வைத்ததோடு, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார். அதன் பின்னர் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்த…
-
- 0 replies
- 346 views
-
-
பம்மலில் இருந்து பாஸ்டன் வரை! (Student of Pammal school to go to Boston) செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு யோசனையைக் கூறி அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் சென்னை மாணவர். எதிர்காலத்தில் மனிதன் பூமியில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டால் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறி, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனம் மாநில அளவில் நடத்திய ‘யங் சயின்டிஸ்ட் ஆஃப் தமிழ்நாடு’ போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார், சென்னை அருகே உள்ள பம்மல் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் ஆர். ரச்சன். செவ்வாய் கிரகமும் நமது பூமியைப் போன்றதுதான் என்றாலும் அங்கு போதிய சூரிய வெளிச்சம் இருக்காது. இதனால் அங்கு தாவரங்களோ, விலங்கினங்களோ இருக்காது. அதை நாம்தான் அங்கு உருவாக்க வே…
-
- 1 reply
- 1.1k views
-
-
24 SEP, 2024 | 02:17 PM சென்னை: பயங்கரவாத இயக்கத்துக்கு தடையை மீறி ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (செப்.24) சோதனை மேற்கொண்டனர். ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பேராசிரியர் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சென்னை சைபர் கிரைம் போலீஸார் முதலில் இந்த வழக்கில் துப்பு துலக்கினர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். இந்நிலையில், சென்னையில் 10 இடங்க…
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
சென்னை: இதோ ஜனவரி பிறந்து விட்டது; அடுத்த வாரம் பொங்கல்; பின்னர் பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில் நம் அண்ணனின் நினைவு நாள்; இப்படியே நாட்கள் ஓடி விடும். பயணம் புறப்படு; பத்திரமாக வந்திடு; உன் வரவுக்காக என் விழிகள் காத்திருக்கும் என்று திருச்சி மாநில மாநாட்டுக்கு திமுக தொண்டர்களை அழைத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. -thatstamil
-
- 0 replies
- 495 views
-
-
பயணிகள்- விமானிகள் வராததால் சென்னையில் இருந்து 25 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள், விமானிகள், விமான பணிப்பெண்கள் குறித்த நேரத்துக்கு வராததால் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஆலந்தூர்: சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், விமானிகள், விமான பணிப்பெண்கள் ஆகியோரால் குறித்த நேரத்துக்கு வந்து சேர முடியவில்லை. இதனால் ச…
-
- 0 replies
- 487 views
-
-
பயணியர் விமானமா..? மாட்டு வண்டியா..? தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் திக்.. திக்.. அனுபவம்..! பழுதான தனியார் விமானத்தை பயணிகளுடன் ஓட்ட முயன்று ரன்வேயில் குதி குதியென குதிக்க விட்டு மாட்டு வண்டி போல் ஓட்டி பயணிகளை அலறச் செய்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. கடந்த புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 70 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. அப்போது விமானத்தில் ஏதோ கோளாறு. கம்ப்யூட்டரில் சிறு கோளாறு தான் என்று கூறி விமானத்தை ரன்வேயில் ஓட்டியபோது மாட்டு வண்டி போல் குதித்து, குதித்து ஓடி பாதி ரன்வேயில் நின்று விட்டது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறியுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று விமானத்தை மீண்டும் …
-
- 1 reply
- 916 views
-
-
பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி?- மதுரை மாணவி விளக்கம் மதுரை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை ஆனையூரை சேர்ந்த உய்யஸ்ரீநிலா என்ற மாணவி 666 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர் நீட் தேர்வுக்காக எந்த ஒரு பயிற்சி மையத்துக்கும் செல்லாமல் இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி உய்யஸ்ரீநிலா கூறியதாவது:- எனது தந்தை பாண்டியராஜன், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தாய் மீனா. நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இந்த வருடம் பிளஸ்-2 முடித்தேன். தமிழ்நாடு, பாண்டிசேரி அளவிலான கேந்…
-
- 0 replies
- 499 views
-
-
பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா? சீமான் கேள்வி சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான நிலம் விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்பட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பரந்தூர் அருகேயுள்ள ஏகனாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்றார். போராட்ட களத்தில் இருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். ந…
-
- 7 replies
- 763 views
- 1 follower
-
-
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு: 'போராட்டத்தைக் கைவிடவில்லை; பேரணி மட்டுமே தற்காலிக வாபஸ்' 6 மணி நேரங்களுக்கு முன்னர் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று (அக்டோபர் 15) அமைச்சர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, சென்னையில் அக்டோபர் 17ம் ஒருங்கிணைத்திருந்த விமான நிலைய எதிர்ப்பு நடை பயணம் மற்றும் பேரணியை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் 80 நாட்களை கடந்து நடைபெற்றுவரும் மாலை நேரப் போராட்டம் தொடர்வதாகவும், அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான் அந்த போராட்டம் பற்றி கிர…
-
- 2 replies
- 246 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 21 மார்ச் 2024 சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது. திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டம் பெரிய ஊடக கவனம் இன்றி 600 நாட்களைக் கடந்திருக்கிறது. 600வது நாள் போராட்டத்தை கடந்த ச…
-
- 1 reply
- 427 views
- 1 follower
-
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை உரிமைக் குழு, வரும், 28ல் கூடும் என அறிவிக்கப்பட்டிருப்பது, தி.மு.க.,வுக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தடை செய்யப்பட்ட, 'குட்கா' போதைப் பொருளை, சட்டசபைக்குள் எடுத்து வந்த விவகாரத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், பழனிசாமி அரசை கவிழ்க்கும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை விழுந்துள்ளது. சட்டசபை கூட்டத்தொடர், ஜூன், 14ல் துவங்கி, ஜூலை, 19ல் நிறைவடைந்தது. கடைசி நாளில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் உரையாற்றி னார். அப்போது, ஸ்டாலின் உட்பட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், 'தடை செய்யப் பட்ட குட்கா போன்ற ப…
-
- 0 replies
- 294 views
-
-
பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க! வைகோ கோரிக்கை By RAJEEBAN 23 SEP, 2022 | 03:06 PM பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்கள அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆட்பட்டு வருகின்றார்கள். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழர்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம்: கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம் டிஐஜி ரூபா அளித்தார் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான வாயிலில் கையில் பைகளுடன் நுழையும் வீடியோ பதிவை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம், ஐபிஎஸ் அதிகாரி ரூபா அளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், …
-
- 5 replies
- 557 views
-
-
பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது…
-
- 1 reply
- 1.2k views
-
-
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார். இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத சிறைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் தினகரன். நேற்று முன்தினம் சென்னை வந்த தினகரனை அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ளது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சியில் இருந்து என்னை யாரும…
-
- 2 replies
- 394 views
-
-
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தயார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணா கூறியதாவது: சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்…
-
- 13 replies
- 1.5k views
-
-
பரப்பர அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் ரத்து - வேறு அறைக்கு மாற்றம் பரப்பர அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார். பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 மாதங்களாக அவர்கள் சிறையில் உள்ளனர். ஆரம்பத்தில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு சொகுசு அறைகள் ஒதுக…
-
- 0 replies
- 588 views
-
-
பரமக்குடியில் வயதான பெண் படு கொலை – இலங்கை பெண்ணும் மகனும் கைது! adminJune 16, 2025 இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 வயதான அன்னலட்சுமி, பரமக்குடியில் உள்ள 92 வயதான ஞானசவுந்தரியின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வயதான பெண்ணின் மரணம் குறித்து அன்னலட்சுமி உறவினர்களுக்குத் தகவல் அளித்திருந்தார். பரமக்குடி நகர காவற்துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வயதான பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 7.5 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெ…
-
- 0 replies
- 189 views
-