தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
போதும் மழையே.. பொறுத்தருள்வாய்! - மன்றாடும் படங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் முற்றிலும் மூழ்கிப்போன குடியிருப்புகள். | படங்கள்: காஞ்சி கோ.கார்த்திக் செங்கல்பட்டு நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மகாலட்சுமி நகர் பகுதியில் முதல்மாடியை நெருங்கி வரும் வெள்ளநீர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர்-தேவாதூர் கிராமத்தில் விவசாய நிலங்களை மூழ்கடித்த வெள்ளம். கொளவாய் ஏரியின் வெ…
-
- 1 reply
- 458 views
-
-
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை லட்சுமி படகு மூலம் மீட்பு சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்த சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை தற்போது மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று வேறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பார்க்கும் இடம் எல்லாம் வெள்ளமாக உள்ளதே இதில் மேலும் மழை பெய்தால் நாம் எல்லாம் என்ன செய்வது என்று சென்னை மக்கள் கவலையில் உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்…
-
- 2 replies
- 617 views
-
-
தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1.64 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில், வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, கன மழை பெய்யும் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். …
-
- 0 replies
- 196 views
-
-
சென்னையில் நிர்வாகமே இல்லை.. மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல் காரசார கேள்வி சென்னை: வெள்ள நிவாரணத்திற்காக மக்களிடமிருந்தே பணம் கேட்கிறது அரசு, இதுவரை வரியாய் செலுத்திய மக்கள் பணம் எங்கேபோனது என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார். இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கமல் கூறியுள்ளதாவது: இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை. சென்னைக்கே இந்த நிலை சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின்…
-
- 0 replies
- 419 views
-
-
அரக்கோணத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்! சென்னை: மழை வெள்ளம் காரணமாக கடந்த இரு தினங்களாக நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து நாளை (4-ம் தேதி) அரக்கோணத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக நேற்று (2-ம் தேதி) சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இன்று ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடற்கரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையும் நாளை (4-ம் தேதி) முதல்…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழகத்திற்கு மேலும் ரூ. 1000 கோடி நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு! சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மேலும் 1000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வ…
-
- 0 replies
- 364 views
-
-
தங்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்காமல் சென்னையை ஒட்டிய ஏரிகளின் மதகுகளைத்திறந்துவிட்டதாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் சென்னைவாசிகள் புகார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் சென்றடையவில்லை என்றும் விமர்சனம் https://www.facebook.com/bbctamil/videos/10153130219990163/?pnref=story
-
- 0 replies
- 399 views
-
-
சென்னை வெள்ளம் : பெருமளவிலான மீட்பு நடவடிக்கைகள் துவங்கின சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான மிகப்பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தினரால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகுகள் மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டுச்செல்லும் பணியில் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கான ரயில் சேவைகளும் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவி…
-
- 0 replies
- 723 views
-
-
48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் l டெல்லி: அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் ராத்தோர் கூறுகையில், "அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர தமிழக பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் உள்ளிட்ட தெற்கு பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு மழை தாக்கம் குறையும். இருப்பினும், மழை முற்றாக நிற்காது. 6 நாட்களாவது மழையின் தாக்கம் தொடரும்". இவ்வாறு அவர் தெரிவித்தார். அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. Read more…
-
- 0 replies
- 484 views
-
-
வெள்ளம் பாதித்த கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கை துரிதம்: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பத்திரமாக மீட்பு சென்னையின் மீட்புப் பணிகள். | படம்: ஏ.எஃப்.பி வடசென்னையில் சுணக்கம்: ஆயிரக்கணக்கானோர் தவிப்பு * வெள்ளம் சூழந்த சென்னையில் இதுவரை ஏறத்தாழ 2,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று பிற்பகல் வரை மழை பெய்யாததால் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்றன. கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ள…
-
- 0 replies
- 230 views
-
-
வெள்ளம் பாதித்த மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிடுகிறார்! சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் நாளை (3-ம் தேதி) காலை தமிழக முதலமைச்சர் பார்வையிடுகிறார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் சாலை, ரயில், விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில…
-
- 2 replies
- 602 views
-
-
தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் [Thursday 2015-12-03 08:00] தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்."நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை சேத நிலவரம்' தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை பிற்பகலில் விதி எண் 193-இன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். இதில் பங்கேற்று அதிமுக உறுப்பினர்கள் பேசினர். அதன் விவரம் வருமாறு: டி.ஜி.எஸ். வெங்கடேஷ் பாபு (வடசென்னை): மழை - வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிய ந…
-
- 0 replies
- 178 views
-
-
முதல் மாத சம்பளத்தை வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு நிவாரணமாக அறிவித்தார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி பாட்னா: பீகார் மாநில துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். …
-
- 0 replies
- 221 views
-
-
தனித் தீவானது சென்னை: சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தம்! சென்னை: கனமழை காரணமாக சென்னையில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை தனித்தீவாக காட்சியளிக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை நின்றதன் காரணமாக, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் மீண்டும் தமிழகத்தன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இதனால், அதிகமான உபரிநீர் திறந்து விடப்பட்டு வ…
-
- 0 replies
- 569 views
-
-
தன்னலமற்ற சென்னை:ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! தொடரும் அடை மழை, வீட்டை மூழ்கடித்திருக்கும் வெள்ளம், ’இன்னும் மழை பொழியும்’ என்ற கலவர நிலவரம் என சென்னை ஊழிக்காலத்தை எதிர்கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசர கவனிப்பு தேவை என்பதால், எவருக்கு முதலில் உதவுவது, எவருக்குப் பின்னர் உதவுவது என்ற குழப்பமும் பதட்டமும் நிவாரணக் குழுவினரையே சோர்வடையச் செய்கிறது. வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பதட்டம், தண்ணீரில் வரும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்ள் அளிக்கும் பயம். சாப்பாடு-தண்ணீர் இல்லை... இயற்கை உபாதைகள் கழிக்க முடியாத அவஸ்தை, ’ஏரி உடைந்துவிட்டது’ என்று வரும் மிரட்டல் வதந்திகள், பைக், கார் உள்ளிட்ட வாகனங…
-
- 0 replies
- 983 views
-
-
https://www.facebook.com/bbctamil/videos/10153129089145163/?pnref=story
-
- 0 replies
- 574 views
-
-
சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது சென்னையில் பெய்த கடும் மழையை அடுத்து, வெள்ள நீர் ஓடுபாதையில் புகுந்ததால், சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடல் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை) சுமார் 8 மணி வரை , மழை இருந்தாலும் விமான சேவைகள் கடினமான சூழலில் இயக்கப்பட்டன, ஆனால் இடைவிடாத மழை விமான நிலையப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டதாகக் கூறியது. ஆனால் அதற்குப்பின்னர் ஓடுபாதைகளில் தண்ணீர் சுமார் இரண்டடிக்கு உயர்ந்ததால், விமான ஓடுதளம் சுமார் மூன்று மணி நேரம…
-
- 0 replies
- 384 views
-
-
நடிகர் சித்தார்த்... மழை தந்த நிஜ 'சூப்பர் ஸ்டார்'! கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. பல தரப்பில் இருந்தும் சென்னைக்கு உதவிகள் குவிந்து கொண்டிருக்கிறது. சினிமா நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் தன்னால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். சித்தார்த்துடன் இணைந்து நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான பாலாஜியும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த் நேற்றிரவு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார், அதில் அவரது வீட்டு …
-
- 0 replies
- 517 views
-
-
தொடர் மின்தடையால் இருளில் மூழ்கியது சென்னை: ஏடிஎம் சேவை முடங்கியதால் மக்கள் தவிப்பு இடம்: சென்னை தேனாம்பேட்டை - அண்ணா சாலை | படம்: ம.பிரபு போட்டோ கேலரி மழை தழுவிய அண்ணா சாலை சென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகலில் இருந்தே பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டன. துணை மின்நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் துண்டிப்பும் ஏற்பட்டன. …
-
- 0 replies
- 440 views
-
-
செயற்கைக்கோள் படம்: உதவி: இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், "வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும். கடலூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி சென்னையில் மொத்தம் 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் தாம்பரத்தில் அதிகபட்சமாக 49 செ.ம…
-
- 0 replies
- 679 views
-
-
விடிய விடிய பெய்து வரும், வரலாறு காணாத மழையால், சென்னை நகரமே மிதக்கிறது. நகரின் எல்லா பக்கங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மற்ற பகுதிகளில் இருந்து, சென்னை துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், விடாமல் மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாகவும், நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், சென்னை சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஒட்டுமொத்த நகரமும், தண்ணீரில் தத்தளிப்பதால், தலைநகர மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தெருக்களும், பிரதான சாலைகளும், வெள்ளத்தில் சிக்கியதால், மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அலுவலகங்களுக்கு செல்ல, வாகனங்களில் வந்தவர்க…
-
- 0 replies
- 811 views
-
-
கடும் மழையால், 137 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிவராத இந்து பத்திரிகை! இந்து பத்திரிகையின் 137 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இன்று வெளிவரவில்லை. கடும் மழை காரணமாக பிரிண்டிங் பிரஸ் இயங்கிய வந்த பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத நிலை இருந்ததால், பத்திரிகை அச்சிட முடியவில்லை என்று இந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான ஆங்கிலப் பத்திரிகை இந்து. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 1878ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை தற்போது சென்னையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று வெளிவரவில்லை. மறைமலை நகரில் உள்ள பிரிண்டிங் பிரஸ் இயங்கி வந்த பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளத…
-
- 1 reply
- 437 views
-
-
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைக்கும் பள்ளிவாசல்கள், தியேட்டர்கள்! சென்னையில் நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை நகரமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னை மாநரின் 80 லட்ச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு அல்லாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் வெள்ள நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏராளமான பேர் தன்னார்வத் தொண்டர்களாக களமிறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்து வரு…
-
- 0 replies
- 288 views
-
-
நீச்சல் வீரர்கள், நிவாரண பொருட்களோடு, மீட்பு பணிக்காக சென்னை வருகிறது கடற்படை கப்பல்! சென்னை: மழையால் தத்தளிக்கும் சென்னை மக்களை காப்பாற்ற, நிவாரண பொருட்களோடு, இந்திய கடற்படை கப்பல் விரைந்து கொண்டுள்ளது. இன்று மாலை அது சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், மக்கள் தத்தளித்துள்ளனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் போக முடியவில்லை. இந்நிலையில் மக்களை மீட்டு காப்பாற்ற இந்திய கடற்படையின் ஐஎன்எஸ்i எரவத் கப்பல் இன்று மாலை சென்னை வருகிறது. விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் இருந்து அந்த கப்பல் புறப்பட்டு தற்போது சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளது. இன்று மாலை அக்கப்பல் சென்னை வந்தடையும். இந்த கப்பல…
-
- 0 replies
- 329 views
-
-
சென்னை விமான நிலையம் மூடப்பட்டது Last Modified: புதன், 2 டிசம்பர் 2015 (02:28 IST) சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார். சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார். விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் த…
-
- 0 replies
- 319 views
-