தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2 ஆவது நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேரூரில் தினமும் 400 மில்லியன் லீட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லீட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வட சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை …
-
- 0 replies
- 667 views
-
-
அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் – கமல்ஹாசன் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் தான் என கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒடுக்கப…
-
- 0 replies
- 317 views
-
-
கீழடி பொருள்களை அருங்காட்சியகமாக அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வந்துள்ளேன். உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் விரைவில் கீழடியில் அமையும். அதற்கான இடம் பார்த்துக்கொண்டுள்ளோம். இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்புக்கு முன்னோட்டமாக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு சார்பாக ``சீன - இந்திய சந்திப்பு" என்கிற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில், தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், இருநாட்டுத் தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் க…
-
- 0 replies
- 708 views
-
-
பீப் பாடலில் புதிய வழக்கு பதிய கூடாதாம்... நீதிபதி கண்டிப்பு... பின் வாங்கிய சிம்பு பீப் பாடல் தொடர்பாக புதிய வழக்குகள் பதியக்கூடாது என டிஜிபி-க்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நடிகர் சிம்பு வாபஸ் பெற்றுள்ளார். வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்ததால் அவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றார். நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்ததாக தகவல் வெளியாகின. இதையடுத்து, சிம்புக்கு எதிராக பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் போராட்டங்கள் நடத்தினர். கோவை, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், சிம்பு, அனிருத் மீது …
-
- 0 replies
- 526 views
-
-
பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன. மாநிலத்தில் ஒரு ஆட்சி அமைவதற்குப் பல சாத்தியங்கள் உள்ளன. ஒரு அரசியல் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறலாம், ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். தமிழ்நாட்டில் இவை அனைத்துமே …
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
திருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து,…
-
- 0 replies
- 452 views
-
-
மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக சென்னை; மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ. நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல், ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 24 ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்களாக யார் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி…
-
- 0 replies
- 438 views
-
-
கொரோனாவை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவினர் மாநிலத்தில் தொற்றுப் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து, அவற்றை…
-
- 0 replies
- 360 views
-
-
கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் குமார். இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் குமார் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஆல்லைன் மூலம் 29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது. அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவரின் மனைவியின் கணக்கிற்கு இவ்வளவு பணம் ஒரே நேரத்தில் வந்ததால், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வங்கியின் அதிகாரிகள், அம்பிகா மற்றும் அவரது கணவர் கும…
-
- 0 replies
- 641 views
-
-
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து புதுவையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. 300 பேரைக் கொண்ட மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று …
-
- 0 replies
- 974 views
-
-
மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மகன்கள் அமீத், மனீஷ் ஆகியோர் மீது சி.பி.ஐ.க்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரமும் சி.பி.ஐ அவர்களிடம் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது. பவன்குமார் பன்சாலின் குடும்பம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.152 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரின் உறவினர் விஜய்சிங்லே என்பவர் பணி இடமாற்றத்துக்காக ரூ. 90 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேரை கைது செய்து உள்ளனர். இதில் ரெயில்வே மந்திரி பன்சாலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் பாரதீய ஜனதா, சமாஜ்வாதி, மற்றும் இடது சாரி கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் காங்கிரசுக்கு நெருக்…
-
- 0 replies
- 392 views
-
-
15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்- எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 5-வது பிரசார பயணத்தை தொடங்கினார். அப்போது அங்கிருந்த மகளிர் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து கிராமப்புறத்தில் இருக்கின்ற மகளிர் முதல் அனைத்து மகளிருக்கும் சொந்தமாக தொழில் துவங்க சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் 7404 குழுக்கள் உள்ளது. ரூ.288 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.கடன் பெற்ற அனைத்து மகளிர் சுயஉதவி குழு மிக சிறப்பாக செயல்பட்டு வாங்கிய கடனை சரியான முறையிலே உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துகின்றனர்.சுய உதவி குழ…
-
- 0 replies
- 415 views
-
-
சசிகலா எதிர்ப்பு: அம்மா சமாதி முதல் பெரியகுளம் வரை பேச்சு மாறாத பன்னீர்செல்வம்! சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியில் இணைவது குறித்து பேசியதும், தமிழக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் கட்சியில் இணையப் போவதாகவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அம்மா அதிமுக அணி சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் பரபரத்தன. சசிகலாவின் குடும்ப ஆட்சி முறையே எதிர்த்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம், தினகரன் தலைமையின் கீழ் எப்படி இணைவார் என்றும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த மர்மங்கள் அன…
-
- 0 replies
- 409 views
-
-
கூவத்தூர் குதிரை பேரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்...விடாப்பிடி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்,ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - காங்., உள்ளிட்ட, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து, கூவத்துாரில் நடந்த குதிரை பேரம் தொடர்பாக, 'சிடி' ஆதாரத்துடன் முறையிட்டனர். 'லஞ்சம் கொடுத்தே நம்பிக்கை ஓட்டெடுப்பில், பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது; எனவே, அ.தி.மு.க., ஆட்சியை உடனே கலைக்க வேண்டும்' என்றும், வலியுறுத்தினர். தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு, பிப்., 18ல், நம்பிக்கை ஓட்டு கோரியது. அதில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க் களை, கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் த…
-
- 0 replies
- 402 views
-
-
சிறைக்குள் இப்படித்தான் இருக்கிறார் சசிகலா: வைரல் வீடியோ! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி, அவருக்கு தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை போலீஸ் டிஐஜி ரூபா அதிரடி புகார் கூறியிந்தார். இது, கர்நாடகம் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் டிஐஜி ரூபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ரூபா மற…
-
- 0 replies
- 478 views
-
-
ஈழத்தில் சீனா- பின்னணிக் கணக்குகள்: எச்சரிக்கும் ராமதாஸ் மின்னம்பலம்2021-12-19 கடந்த டிசம்பர் 15, 16, 17 தேதிகளில் இலங்கைக்கான சீன தூதர் கி சென்ஹாங் அந்நாட்டின் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் அருகே இருக்கும் இலங்கைக்குச் சொந்தமான ராமர் பாலத் திட்டிலும் ஆய்வு செய்திருக்கிறார். இதுபற்றி மின்னம்பலம் இதழில் இன்று (டிசம்பர் 19) காலை பதிப்பில், இலங்கையின் தமிழர் பகுதிகளில் சீன தூதர்: இந்தியாவுக்கான எச்சரிக்கை! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 19) இதே விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓர் முக்கியமான அறிக்கையை வெளியிட…
-
- 0 replies
- 343 views
-
-
தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகரிப்பா? என்ன சொல்கிறது ஆளும் கட்சி? பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். இந்த ஆட்சியிலும் அது விதிவிலக்கல்ல' என அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது. `முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பதால்தான் ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட கைது செய்யப்படுகிறார்கள்' என்கிறது தி.மு.க. என்ன நடக்கிறது? சம்பவம் 1: சென்னை மடிப்பாக்கத்தில் தி…
-
- 0 replies
- 265 views
-
-
11, ஜனவரி 2014 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சனிக்கிழமை விழுப்புரத்தல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். நாங்கள் கேட்பது என்ன? என்று அவர்களுக்கு தெரியும். எங்களுக்கு என்ன கொடுக்கலாம் என்றும் அவர்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு தான் பேச்சுவார்த்தையில் இறங்குவோம். இப்போது மக்கள் பிரச்சினையை பார்த்து வருகிறோம். சட்டமன்ற தேர்தல் போலவே வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம். நாங்கள் மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளும் கூட்டணியில் இருக்கிறோம். எங்களது நோக்கம் மத்தியில் பா.ஜனதாவும், காங்கிரசு…
-
- 0 replies
- 426 views
-
-
18 ஆண்டுகால போலீஸ் பணியில் 41 முறை பணி மாறுதல்கள் - 'அசராத' ரூபா மொட்கில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெங்களூருவின் பிரபல வணிக சாலையான எம் ஜி சாலையில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா புர்கா அணிந்து கொண்டு உலாவியதாக தமக்கு தகவல் வந்தது என கர்நாடக சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி ரூபா மொட்கில் பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலைய…
-
- 0 replies
- 945 views
-
-
எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். தமிழக பாஜக நடிகர் ரஜினிக்கு வலைவீசிய நிலையில், நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இந்தநிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தனக்கு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை பற்றி வெளியாகும் வதந்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121431&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 3.8k views
-
-
உயர் நீதிமன்ற தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் – அற்புதம்மாள் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். தாய் என்ற முறையில் தமது புதல்வன் விடுவிக்கப்பட வேண்டும் என தாம் கோரவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்தநிலை சிறையடைக்கப்பட்டுள்ள எவருக்கும் நேரக்கூடாது எனவும் கோரியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்ப…
-
- 0 replies
- 295 views
-
-
பண மோசடி வழக்கில், அன்பழகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை…. March 14, 2019 திமுக முன்னாள் அமைச்சரான மறைந்த கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கு பண மோசடி வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பணமதிப்பழப்பு நடவடிக்கையின் பின்னர் 2017 ஆம் ஆண்டு சென்னையில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இலத்திரனியல்; பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் பெயர்களில் ஹொங்காங் போன்ற நாடுகளுக்கு 80 கோடி ரூபாய் அனுப்பப்பட்டு மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த லியாகத் அலி, இலியாஸ் பீர் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு லிய…
-
- 0 replies
- 407 views
-
-
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 35 ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான நிலை நீடித்துவருவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் கைது…
-
- 0 replies
- 488 views
-
-
வெல்லப் போவது யார்? – சி. சரவணன் 1967-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி அரசியல் உருவானது. 1977-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி உறுதி செய்யப்பட்டது. 1991-ல் திமுகவும், 1996-ல் அஇஅதிமுகவும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்தாலும், தங்களின் வாக்குவங்கியை இழக்கவில்லை. தமிழகத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை கொள்கைகள், கோட்பாடுகள், தேர்தல் அறிக்கைகள், அலைகள் எதுவும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. திமுக மற்றும் அஇஅதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சிகளின் வாக்குவங்கி, இரண்டு கட்சிகளுக்கும் சமநிலையை ஏற்பட…
-
- 0 replies
- 567 views
-
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை கைது செய்து காவல் துறை விசாரித்து வருகின்றனர். மேலும் ராம்குமாரின் தங்கை, அம்மா உள்ளிட்ட அவரது வீட்டினரையும் காவல் துறை விசாரணைக்காக கைது செய்தனர். இந்நிலையில் அவரின் தங்கை மதுபாலா தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி அதிர வைத்துள்ளது. அப்போது அவர் பேசியது, ராம்குமாரை கைது செய்ய காவல் துறையினர் இரவு 11 மணிக்கு வந்தனர். ஆனால் ராம்குமார் தான் குற்றவாளி என உறுதிபடுத்தும் முன்னரே பெண்கள் என்று கூட பார்க்காமல் எங்களை விரட்டி விரட்டி போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். எப்படி அவர்கள் எங்களை போட்டோ எடுக்கலாம், உடனடியாக அவர்கள் மீது ந…
-
- 0 replies
- 905 views
-