Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி! KaviDec 24, 2024 20:36PM ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகே பெண் பக்தர்கள் உடை மாற்றும் தனியார் இடத்தில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி ஒருவர், குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு தோஷங்களை கழிக்கக்கூடிய அக்னி தீர்த்த பகுதியில் கடலில் நீராடிவிட்டு, கோயில் அருகில் உள்ள தனியார் நபர்கள் நடத்தி வரும் தண்ணீர் தொட்டி (குளிக்கும் இடம்) மற்றும் ஆடை மாற்றும் இடத்திற்கு சென்று உடை மாற்றியிருக்கிறார். அப்போது அங்கு பொருத்தியிருந்த ரகசிய கேமராவை கண்டறிந்து அதிர்ச்சியான மாணவி, பதற்றத்துடன் சென்று கோயில் காவல்நிலையத்…

  2. பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் பகுதி திமுக சார்பில் பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா, தண்டையார்பேட்டையில் வியாழக்கிழமை நடந்தது. இதில், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஸ்டாலின் பேசிய தாவது: வடசென்னை பகுதியில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆளுங் கட்சியாக இல்லாவிட்டாலும், மக்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்குவதில் ஆளுங் கட்சியாகவே செயல்படுகிறது. பெண்களுக்கு நாட்டு நடப்புகள் தெரிய வேண்டும். பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும். வீட்டை ப…

  3. பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் அபத்தமான பதில்! சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புறக்கணித்துள்ளார். கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது பொறியியல் மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவம், தமிழகத்தில் பரவலான சீற்றத்தைத் தூண்டி, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று நாடு திரும்பிய ரஜினிகாந்திடம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி…

    • 3 replies
    • 480 views
  4. காரைக்காலில் நிகழ்ந்த பெண்ணின் மீதான வக்கிரம் நிறைந்த பாலியல் வன்முறை, சிறுமி புனிதா மீதான ஈவுஇரக்கமற்ற பாலியல் வன்முறை- கொலையும் மேலும் திருச்சியில் சிறுமி சுல்தானா மீதான கொடூரமான பாலியல்வன்முறை மற்றும் கொலை என தொடரும் நிகழ்வுகளுக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.... பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து நமது குரல் ஒலிக்கப்பட வேண்டும்.. பெண்களை பாதுகாப்பதற்கான சட்டவிதிகளும், அதற்கு முக்கியத்துவம் அளிக்காத அரசினையும் கேள்விக்குள்ளாக்குவதும் அவசியம். இதற்கான சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். தொடர் விவாதங்களும், போராட்டங்களும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவைப்பதற்கான வழியாக அமையும். இதற்கான பணியை நாம் அனைவரும் தொடர்ந்து எட…

  5. பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு தனியார் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கண்டறிந்துள்ளனர். பெண்கள் விடுதி சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). வேலைக்குச் செல்லும் பெண்கள் அந்த விடுதியில் தங்கி இருந்தனர். …

  6. பெண்ணிற் பெருந்தக்க யாவுள.. மஞ்சு காலை 7 மணிக்கே தன் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி விடுவாள். அப்போதுதான் 12 ஆம் வகுப்புப் படிக்கும் அவள் பள்ளியில் 8.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வந்து சேர முடியும். 7 மணிக்கே கிளம்புவதனால் அவள் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை; மதிய உணவும் கூடத்தான். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஊரிலிருந்து பள்ளிக்குப் பேருந்து வசதி கிடையாது. சரியான பாதை இல்லாததால் பேருந்து இன்னும் அவளுடைய ஊருக்குள் நுழையவில்லை. அவளும் அவளையொத்த பிற மாணவிகளும் நடந்தேதான் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்குச் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு அவள் சென்று சேர இரவு 7 மணியாகி விடும…

    • 0 replies
    • 656 views
  7. பெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை? Newscast இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் பெப்ஸி, கோக் விற்பனைக்கு தடை? தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து பெப்ஸி மற்றும் கோக் ஆகிய பானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று வர்த்தக அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது போன்ற அறிவிப்பு வெளியாவது இது முதல்முறை அல்ல. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சில வியாபாரிகள் கோக் மற்றும் பெப்ஸி பானங்களை விற்பனை செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தனர். DIBYANGSHU SARKAR கோப்புப்படம் இந்த முடிவுக்கு இரண்…

  8. பெயர் பலகை "தமிழில்" தான் இருக்க வேண்டும்..? "இங்கிலிஷ்" கீழே தூக்கி போடுங்க..! தமிழக அரசு அதிரடி! பெயர் பலகை "தமிழில்" தான் இருக்க வேண்டும்..? "இங்கிலிஷ்" கீழே தூக்கி போடுங்க..! தமிழக அரசு அதிரடி! கடைகள் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடைகள் மற்றும் நிறுவனங்கள் வைக்கும் பெயர் பலகையில் முதல் எழுத்துக்கள் தமிழில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு அடுத்த படியாக ஆங்கிலமும் அதற்கு அடுத்தபடியாக மற்ற மொழிகளையும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாவிட்டால் அந்த நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலார் ஆணையம் தெரிவித்து உள்ள…

  9. பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை கடுமையாகத் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்: கட்சியிலிருந்து இடைநீக்கம் பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை தாக்கி எட்டி உதைத்து கொடுமைப்படுத்திய திமுக முன்னாள் கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். பொதுவாக பெண்களை தாக்கும் அரசியல்வாதிகள் வடமாநிலங்களில் அதிகம் காணலாம். வீக்கர் செக்ஸ் என்று பெண்களை அழைப்பார்கள். பெண்களை தாக்குவது தரக்குறைவாக பேசுவதை சட்டம் கடுமையாக பார்க்கிறது. சாதாரண ஆண்கள் அவ்வாறு நடப்பதையே கடுமையாக விமர்சிக்கப்படும் காலகட்டத்தில் பொதுவாழ்வில் இருப்பவர்கள் பெண்களை கடுமையாக தாக்குவதும், எட்டி உதைப்பதும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. திமுக போன்ற…

  10. திருச்சி அருகே தா.பேட்டையில் ஒன்றிய, நகர திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காட்ட வேண்டும், தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளது, பாராளுமன்ற தேர்தலில் கலைஞர் தலைமை யில் பலமான கூட்டணி அமையும். பெரம்பலூர், திருச்சி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=114598

  11. மிஸ்டர் கழுகு: பெரியகுளத்தில் விழுந்த குருவும் சிஷ்யனும்! நமக்கு முன்பாகவே ஆபீஸுக்கு வந்து காத்திருந்த கழுகார், தன் லேப்டாப்பில் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். எழுத்தாளர் மாதவ ராஜ், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்ததைக் காட்டினார். ‘அந்த சதுரங்க ஆட்டத்தின் ஒரு பக்கம் ஒன்றிரண்டு காய்களே இருந்தன. ராஜாவே இல்லை. மறுபக்கம் ஒன்றிரண்டு காய்கள் மட்டும்தான் இல்லை. ராஜா, ராணி, குதிரைகள், யானைகள் என படை பட்டாளங்களோடு இருந்தன. முடிந்த விளையாட்டை வைத்து ஒரே ஆள் யோசித்துக் கொண்டு இருந்தான். இரண்டு பக்கமும் அவனே காய்களை நகர்த்தினான். சிரித்துக்கொண்டான். வெட்டினான். கைதட்டிக்கொண்டான். எல்லாக் காய்களும் கருப்பு நிறத்திலேயே இருந்தன. இதையும் …

  12. 08 NOV, 2023 | 11:17 AM இந்தியாவின் நிலவு மனிதர் என்று புகழப்படும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் ‘பெரியாரும் அறிவியலும்’ எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா 2023, கடந்த 5ம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ‘பெரியாரும் அறிவியலும்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தன்னுடைய வளர்ச்சிக்கு பெரியாரின் கருத்துக்கள்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இவரது வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. …

  13. பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈ.வெ.ரா எம்எல்ஏ திடீர் மரணம் படக்குறிப்பு, திருமகன் ஈ.வெ.ரா 4 மணி நேரங்களுக்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானார். பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46). இவர் ஈரோடு கிழக்கு…

  14. பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை! KalaiDec 24, 2022 11:27AM பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். ஈரோட்டில் வெங்கடநாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1879 ஆம் ஆண்டு பிறந்த ஈ.வெ.ராமசாமி, சாதிக்கொடுமை, பெண்ணடிமைக்கு எதிராக போராடியவர். 90 வயது வரை சமூக நீதிக் கொள்கைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, நாடாளுமன்…

  15. பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்! மின்னம்பலம் மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து முதுமை காரணமாக தனது 96 வயதில் இன்று (ஏப்ரல் 6) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், “ ‘என் வாழ்வை திசைமாற்றியவர் மறைந்தார்’ நான் பயணிக்க வேண்டிய திசை என்ன என்று புரியாமல் இருந்த 1992-ஆம் ஆண்டு நிறப்பிரிகை பத்திரிகை சார்ந்த நடவடிக்கைகளில் நண்பர்களாக ஆன கிராமியன், துப்பாக்கி தொழிற்சாலை அழகேசன் ஆகியோரை ஒரு நாள் மாலை திருச்சி கோட்டை ஸ்டேஷனில் சந்தித்தேன். ஏதெனும் ஒரு வாசிப்புக் குழு (reading group) உருவாக்க திட்டம். …

  16. பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பிப்ரவரி 3 மூன்றாம் தேதி இன்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரோடு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ''சீமான் என்பவர் 2008 எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்ததாகவும் அப்போது அவர் உபதேசம் வழங்கியதாகவும் அதற்குப் பின்னர் தான் திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும் அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார். 2008இல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரியார், எம் ஜி ஆர் கட்டவு…

  17. மான உணர்வோடும் இன உணர்வோடும் மனிதன் வாழ வேண்டும் என்று இந்த இனத்திற்கு சூடு சுரணை ஊட்டி சுயமரியாதையுடன் எங்களுக்கு வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். - சீமான் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநரும்

  18. பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை! Jan 24, 2025 பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். பெரியார் குறித்து தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய ஆதரவு அமைப்புகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டின் முன் முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்படி இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில் பழ.நெடுமாறன் இன்று (ஜனவரி 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரி…

  19. பெரியார் அவமதிப்பு : நாம் தமிழர் நிர்வாகி சிறையில் அடைப்பு! Feb 4, 2025 பெரியார் சிலை மீது காலணி வீசியதை அடுத்து கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினம் நேற்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மேடையேறிய சென்னை நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பிரிவு செயலாளரான அஜய் (வயது 32), பெரியார் சிலை மீது காலணி வீசினார். இதனைக்கண்டு கொந்தளித்த திமுக மற்றும் பெரியார் அமைப்பினர் அஜயை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சீமானுக்…

  20. பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர் Jan 09, 2025 11:36AM IST ஷேர் செய்ய : தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (ஜனவரி 9) முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இராமகிருஷ்ணன் கண்டனம்! இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர்…

  21. பெரியார், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக யூ-ட்யூபரை காவல் துறையினர் கைதுசெய்தனர் சென்னை: ராயப்பேட்டையில் சைவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர் குமரன். இவர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் சென்னை மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தலைவர்கள் பற்றி அவதூறு அதில், "கடந்த 11ஆம் தேதி யூ-ட்யூபில் 'ழகரம்' வாய்ஸ் என்ற சேனலைப் பார்த்தபோது, அதில் பெரியாரையும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவுப்படுத்தி, கீழ்த்தரமாகப் பேசிய காணொலியைப் பார்த்து அதி…

  22. பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN படக்குறிப்பு, பெரியார் திருச்சியில் பெரியாருக்கு 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு சிலை வைப்பது ஏன் என சில அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்களில் சிலரும் விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைக்கின்றனர். உண்மையில், பெரியாருக்கு சிலை வைப்பது யார்? கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், "பெரியார் சுயமரியாதை பிரச்சா…

  23. பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல் - என்ன நடந்தது? தமிழகத்தில் கோவை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது என்ற புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என பெரியாரிய அமைப்பினர் கோரிக்க…

  24. பெரியார் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை! SelvamDec 24, 2023 11:51AM தந்தை பெரியாரின் 50-ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரியார் என்பவர் ஓர் தனி மனிதர் அல்ல, அவர் ஓர் தத்துவம். பெரியாரை பார்க்காதவர்கள் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதனை பேராயுதமாக பயன்படுத்துகிறார்கள். இந்த நேரத்திலும் பெரியார் பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். பெரியார் எனும் தத்துவம் சாதி பிணி நீக்கும் மருத்துவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.