தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
சொத்துக்குவிப்பு வழக்கு: தனி நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வாய்ப்பு! சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், தனி நீதிபதியை நியமித்து விசாரணைக்கு உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 18 வருடங்களாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. சொத்துக்குவிப்பு வழக்கு: தனி நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வாய்ப்பு! இவர்கள் 4 பேரும் தங்களை ஜாமீனில் விடக்கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட…
-
- 0 replies
- 242 views
-
-
ஜெ.,வுக்கு ஏன் ஜாமின் தரப்பட்டது? மறுபரிசீலனை செய்ய கோரிக்கை சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமினை, மறுபரிசீலனை செய்திடக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், சிறை தண்டனை வழங்கப்பட்டது. தங்களை, ஜாமினில் விடக்கோரி, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகா ஐகோர்ட் நிராகரித்து விட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில், நான்கு பேருக்கும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர், கட…
-
- 0 replies
- 618 views
-
-
இலங்கை அரசுடன் தொடர்ந்து நட்புறவு பாராட்டி வரும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ., தலைமையிலான தே. ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க,. விலகுவதாக கட்சியின் பொது செயலர் வைகோ சென்னையில் இன்று மதியம் தெரிவித்தார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமீப காலமாக வைகோ பா.ஜ., அரசை கடுமையா விமர்சித்து வந்தார். இலங்கை தமிழர்கள் தூக்கு, இலங்கை மீனவர்கள் கைது ஆகிய விவகாரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மோடி அரசு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் மோடியை வைகோ விமர்சிப்பது, கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு செயல்படுவது சரியல்ல. நாவடக்கம் தேவை என எச்சரிக்கப்பட்டது. பா.ஜ., முன்னணி தலைவர்களில் ஒருவ…
-
- 8 replies
- 1.1k views
-
-
மஹிந்த ராஜபக்ச இன்று மாலை இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ளதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியினர் சென்னை திருப்தி ஆலய அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்ச, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைத…
-
- 4 replies
- 627 views
-
-
சென்னை: மதிமுகவைத் தொடர்ந்து பா.ம.க வும் பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி உள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார். இதையடுத்து பா.ம.க வும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். தலித் மக்களின் விரோதி. எனவே அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். http://news.vikatan.com/article.php?module=news&aid=359…
-
- 1 reply
- 480 views
-
-
ராஜபக்சே திருப்பதி வருகையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்பாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அங்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதேபோல் ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டட ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/35938/57/12/d,article_full.aspx
-
- 2 replies
- 1.2k views
-
-
திருப்பூர்: ரஜினி படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தாமல் புதிய கட்சியைத் தொடங்குகின்றனர் அவரது ரசிகர்கள். திருப்பூர் மற்றும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கட்சிக்கு கொடி மற்றும் பெயரையும் தேர்வு செய்துள்ளனர். திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்எஸ் முருகேஷ் என்பவர்தான் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் 25 ஆண்டு கால கோரிக்கை. சில முறை ரசிகர்களே ரஜினிக்காக கட்சி ஆரம்பித்ததும், அவர்களை ரஜினி விலக்கி வைத்ததும் நடந்திருக்கிறது. இந்த முறை ரஜினி அரசியலுக்கு வந்தே…
-
- 0 replies
- 463 views
-
-
சென்னையின் வளர்ச்சி வேகத்திற்கு இணையாக, மதுரையிலும் சாலை மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளில் முன்னேற்றம் ஏற்படுமென மக்கள் நினைத்தாலும், மதுரை மாநகராட்சி மந்தை 'மாக்கள்' நினைக்கிறார்களில்லையே? So sad ! source: Thinakaran.
-
- 0 replies
- 579 views
-
-
போகாத கூட்டணி இல்லை... மதிமுக அங்கம் வகித்த கூட்டணிகள் – அன்று முதல் இன்று வரை! சென்னை: மதிமுக கட்சியானது தான் அங்கம் வகித்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்று விலகியுள்ள நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோவால் துவங்கப்பட்டது முதல் இன்றுவரை பல்வேறு கூட்டணிகளில் அங்கம் வகித்து வந்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகிய வைகோ 1994 ஆம் ஆண்டில், மதிமுகவை ஆரம்பித்தார். போகாத கூட்டணி இல்லை... மதிமுக அங்கம் வகித்த கூட்டணிகள் – அன்று முதல் இன்று வரை! அந்தச் சூட்டோடு சூடாக, 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற 11ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டது. ஆனால், கிட்டதட்ட…
-
- 2 replies
- 705 views
-
-
ஆட்டோ அண்ணா https://www.facebook.com/video/video.php?v=697545773655799 சென்னையில் ஆட்டோ தேவைப்பட்டால், இவருடைய ஆட்டோவில் பயணியுங்கள், ஒரு நல்ல விஷயத்தில் நம்மளும் பங்கெடுத்துக்கொள்ளலாம்!!
-
- 1 reply
- 771 views
-
-
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீட்டு வழக்கின் ஆவணங்கள் பெங்களூரு ஹைகோர்ட்டில் தாக்கல் சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு வழக்கின் ஆவணங்கள் இன்று பெங்களூரு ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு கர்நாடக ஹைகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டு ஆவணங்களை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஜெயலலிதா தரப்பு வக்கீல்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஜ…
-
- 0 replies
- 439 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே.. காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்குத்தான் எதிரியே தவிர ஈழத் தமிழருக்கு அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு திடீரென டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- ஈழத் தமிழருக்கு ஆதரவானது காங்: நடிகை குஷ்பு பின்னர் நேற்று சென்னை திரும்பிய குஷ்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அவருக்கு காங்கிரசார் குஷ்புவை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: இந்தியாவை கா…
-
- 44 replies
- 4.9k views
-
-
வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பூச்சிக்கொல்லி மாத்திரை பெற்றோரையும் கொல்லும். தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதையொட்டிய விருதுநகர் மாவட்டங்களில் நடப்பதாக கருதப்படும் முதியோர் கொலைகள் சமீபகாலமாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன. அப்படியான முதியோர் சந்தேக மரணங்கள் மற்றும் கொலைகளை தடுப்பதற்கான களப்பணி செய்துவரும் தொண்டு நிறுவன ஊழியர் முத்துப்பிள்ளை. இந்த இரு மாவட்டங்களில் முதியோர் கொலைகள் பரவலாக நடப்பதை தன்னுடைய களப்பணியில் கண்டறிந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் முத்துப்பிள்ளை. தனக்குத்தெரிய வந்த முதியோர் சந்தேக மரணம் மற்றும் கொலைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் அவர். தென்னை மரத்தைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்வதற்கான பூச்ச…
-
- 2 replies
- 4.8k views
-
-
கடலுக்கு அடியில் உள்ள சுரங்க காட்சியகத்தை விளக்கும் மாதிரி படம். நாட்டிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேசத் தரத் தில் கடல்சார் காட்சியகம் அமைப்ப தற்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, மாமல்லபுரத்தில் சர்வதேசத் தரத்தில் கடல்சார் காட்சியகம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளை சுற்றுலா துறை ஒத்துழைப்புடன் மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. தனியார் மற்றும் அரசு பங்களிப்பில் ரூ.253 கோடி செலவில் கடல்சார் காட்சியகம் அமைப்…
-
- 3 replies
- 902 views
-
-
சென்னை: போஸ்டர்கள்தான் இன்றைக்கு தமிழக மக்களுக்கு பொழுது போக்காக மாறிவிட்டது. ஜெயலலிதா குவித்த சொத்துக்களைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி தொடராக எழுதினார். அதை புத்தகமாக வெளியிட்டனர் திமுகவினர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினரும், தேமுதிகவினரும் போகும் இடமெங்கும் பேசினர். பதவியிழந்த பின்னரும் ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று கூறுவது ஏன் என்பது எதிர்கட்சியினரின் கேள்வி. இதனை போஸ்டராகவும் அடித்து ஒட்டிவருகின்றனர் எதிர்கட்சியினர். இதற்கு பதிலடி தரும் விதமாக சென்னையில் அதிமுகவினர் பாமக, தேமுதிக, திமுகவிற்கு எதிராக ஒரே போஸ்டராக ஒட்டி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ராமதாஸ் - அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சிக்கு…
-
- 1 reply
- 615 views
-
-
தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சே டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ஆம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடி அவர்களின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான். மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1200 பேர…
-
- 0 replies
- 361 views
-
-
புதுடில்லி : கலைஞர் டி.வி.,க்கு முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக எம்.பி., கனிமொழிக்கு முக்கிய பங்கு இருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் டி.வி.,க்கு ரூ.200 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அவர் அளித்த சாட்சியத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2ஜி ஊழல் மற்றும் அது தொடர்பான முறைகேடான பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தற்போது, சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள, ராசாவின் கூடு…
-
- 0 replies
- 547 views
-
-
சென்னை: தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கூடி தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு சென்றுவிட்டார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்று விட்டார். "சட்டப்பேரவையில் தனக்கு இருக்கை ஒதுக்கவில்லை. இதனால் தனது சட்டமன்ற கடமையை ஆற்ற முடியவில்லை" என்று கூறிவிட்டு சென்று விட்டார். இந்நிலையில், தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார். அவரும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துட்டுவிட்டு உடனடியாக காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்…
-
- 4 replies
- 591 views
-
-
எனது வயதை கருத்தில் கொண்டு கூட, தனி இருக்கை போடவில்லையே...: கருணாநிதி வருத்தம்! சென்னை: ஏற்கனவே கேட்டிருந்தும் கூட தமிழக சட்டசபையில் தனக்கென தனி இருக்கை அமைத்து தரப்படவில்லை என திமுக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது வயதைக் கருத்தில் கொண்டாவது தனி இருக்கை அமைத்து தந்திருக்கலாம் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் நடைபெற உள்ள தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சட்டசபைத் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 6 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சட்டசபையில் தனக்கு தனி இருக்கை வசதி செய்து கொடுத்தால் பங்கேற்பேன் எனத் தெரிவித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அதன்படி, இன்று சட்டசபைக்கு வந்த கருணாநி…
-
- 7 replies
- 812 views
-
-
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த அத்யாயம்... வருகிறது டிசம்பர் 17 சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று அக்டோபர் 17ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 17ம் தேதியை நோக்கித்தான் முழுக் காவனமும். ஏனெனில் அன்றைய தினத்துக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. எனவே அது தொடர்பான செயல்பாடுகளில் கவனம் இருந்தாலும், கட்சியிலும் ஆட்சியிலும் சில அதிரடி உத்தரவுகளையும் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபைக்கு வருகிறார் என்றாலே அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வரிசைகட்டி நிற்பார்கள் வரவேற்…
-
- 0 replies
- 442 views
-
-
ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை திடீர் முடிவு ஏன்? பின்னணியில் பாஜக? சென்னை: 18 ஆண்டுகளாக நடைபெற்ற வருமான வரி ஏய்ப்பு வழக்கில், திடீரென ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை முன் வந்ததற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் ஜெயல…
-
- 3 replies
- 824 views
-
-
வேலைப் பளுவினிடையே இந்த செய்தியை தற்பொழுது பார்த்தேன்.. தமிழர் பிரச்சனையாயிற்றே என்ற வகையில் இங்கே பதிவிடுகிறேன்.. ஈழத்தில் நடந்த துயரங்களுக்கு தமிழகத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லையென "குய்யோ..முறையோ" என குரலெழுப்புபவர்கள், தமிழகத்தில் அண்டை, மத்திய அரசுகளால் வஞ்சிக்கபட்டுவரும் செய்திகளை யாரேனும் அறிவீர்களா? குரலெழுப்பியுள்ளீர்களா? முல்லைப் பெரியாறு அணை: கேரளாவின் மனு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி! முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உ…
-
- 38 replies
- 1.9k views
-
-
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்த விசாரணையை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், இன்று துவக்குகிறார். தமிழகம் முழுவதும் நடந்த, கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. முதற்கட்டமாக, மதுரை கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க, அவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.அதை தொடர்ந்து, குறிப்பிட்ட சில அதிகாரிகளை, விசாரணைக் குழுவில் இடம்பெற அனுமதிக்கும்படி, சகாயம் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.எனினும், அதுகுறித்து கவலைப்படாமல், சகாயம் விசாரணையை துவக்க முடிவு செய்துள்ளார். நேற்று சென்னையில், சம்பந்தப்பட…
-
- 0 replies
- 957 views
-
-
Exclusive: ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையை அதிகரிக்க ஹைகோர்ட்டில் வாதம்- பவானி சிங் தடாலடி பெங்களூரு: நெருக்கடி தந்ததால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்புக்காக வாதாடுவதில் இருந்து விலகி கொண்டதாக மூத்த வக்கீல் பி.வி.ஆச்சாரியா கூறியிருக்க கூடாது என்று ஜெயலலிதா வழக்கின் தற்போதைய அரசு வக்கீல் பவானிசிங் தெரிவித்தார். மேலும், ஹைகோர்ட்டில் நடைபெற உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையிட்டின்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க கோரி வாதிட திட்டமிட்டுள்ளதாகவும் பவானிசிங் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது அரசு வக்கீலாக நியமிக்க…
-
- 0 replies
- 442 views
-
-
சென்னை: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒருமையில் பேசியதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடுமையான வார்த்தை பிரகடனம் செய்வது நல்லதல்ல என்பதை இனியாவது புரிந்து கொண்டு, பிரதமரின் செயலுக்கு தமிழகத்திலே எப்படிப்பட்ட எதிர்ப்பு இந்த ஒரு விஷயத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடமே தெரிவித்து, மேலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் அந்தக் கட்சிக்கே நலன் பயக்குமே தவிர, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சியின் தலைமையிலே நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் நன்மை பயக்காது. கடந்த வாரம் நேபாள நாட்டில் சார்க் மாநாடு ந…
-
- 3 replies
- 717 views
-