Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ரெஷ்டாரென்ட்டில் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பா.ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எங்களது சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள், வலைத்தளங்களில் குரல் எழுப்பினார்கள். இந்தச் செயலை கண்டித்துக் கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனையடுத்து இதே போன்ற போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவிய…

  2. உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதியிலிருந்து 25-ம் வரை கொண்டப்படுகிறது. நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் குறித்த அக்கறையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நீண்ட பாரம்பரியமும் பண்பாட்டுப் பின்புலமும் கொண்ட நாடு இந்தியா. தமிழகமும் அத்தகைய சிறப்புகள் கொண்டது. தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம் கோயில், தாராசுரம் போன்றவை தமிழ்நாட்டில் யுனெஸ்கோ தேர்ந்தெடுத்த உலகப் பாரம்பரியச் சின்னங்கள். ஆனால் பண்டைய காலம் தொட்டு காலனி ஆதிக்கக் கால கட்டம் வரை நம் பண்பாட்டைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவற்றுள் பிரதானமானவை கட்டிடங்கள்தான். இந்தியாவைப் பொறுத்தவரை பாரம்பரியக் கட்டிடங்கள் கொல்கத்தாவில்தான் அதிகம். கொல்கத…

  3. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த தீர்ப்பு ஆய விசாரணை, ஒக்டோபர் 26ம் ,27ம் திகதிகளில் குன்னூர் நகராட்சி அரங்கத்தில், தீர்ப்பு ஆய நீதிபதியான டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. மிட்டல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இரண்டு நாள்களிலும் விசாரணையில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 26ம் திகதி சாட்சியம் அளித்த இரண்டு காவல்துறை அதிகாரிகளையும், 27ம் திகதி சாட்சி அளித்த காவல்துறை அதிகாரியையும் குறுக்கு விசாரணை செய்தார். அடுத்து தமது வாதங்களை பின்வருமாறு முன்வைத்தார். வைகோவின் வாதம்.. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி, 1992 ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், இந்த ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு…

  4. விமான நிலைய விதிமுறைகளை மதிக்காமல் பாதுகாப்பு பகுதிகளை மீறிச் சென்றதாக வைகோ உட்பட மதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வைகோ, "மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நவம்பர் 12 ஆம் தேதி, நான் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விமான நிலைய வளாகத்தில் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழையவும் இல்லை. விமான நிலையத்தை விட்டு நான் வெளியே வந்தவுடன், வாசலில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு நடந்து வந்துபோது, திரண்டிருந்த தொண்ட…

  5. அழுக்கேறிய காங்கிரஸ் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் இச்சூழலில்,அக்கால காங்கிரஸை எதித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது என்ன? எப்படி? என்பதை இங்கே கேளுங்கள். காங்கிரஸ் என்பது இன்றுமட்டுமல்ல,என்றைக்கும் அழுக்கேறியதுதான் என்பதை அண்ணா கூறுகிறார்.

  6. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், 'லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 2…

  7. கபில ஆற்றில் மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளை நொறுக்கும் இயந்திரம். | படம்: அனுராக் பசவராஜ். காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் மணலைச் சுமந்துகொண்டு பெங்களூரு நகருக்குள் தினசரி சுமார் 3,000 லாரிகள் வந்தவண்ணம் உள்ளன. பெங்களூரு, மைசூர் நகரங்களில் கட்டுமானத் தொழில் நிறுவனங்களின் தீராத பசிக்கு காவிரி ஆற்று மணல் கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தும் கட்டுமான நிறுவனங்கள் அடங்கிவிடவில்லை. இது குறித்து இந்திய விஞ்ஞானக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் டி.வி.ராமச்சந்திரா கூறும்போது, "நீர்வாழ் உயிரினங்கள் அழிவது மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் அளவும் கடுமையாக குறைந்து போகும் அபாயம் உள்ளது" என்றார். பெரிய …

  8. "நாங்கள் பேசும் பேச்சுக்களும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கக்கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக்கூடாது. அதாவது, உணர்ச்சிப்பூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி, எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் எமது மத்திய அரசாங்கம் தயங்காது. ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாமிட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்து இயம்பும்போது மிக்க கவனம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள். சூழக்கு ஏற்பச் சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்" என்று உணர்ச்சி மிகுந்…

  9. ஆண்களைப் போல “சுகவாசி”யான ஒரு உயிரினம் உலகில் எங்குமே இருக்க முடியாது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் நேராக பஸ் ஸ்டாண்ட் சுவரை நோக்கி ஓடுவார்கள். சுகமாக இயற்கை உபாதையை கழிப்பார்கள். இந்த “சுதந்திரம்” மனிதர்களில் வேறு எந்தப் பிரிவினருக்கும் இல்லை. அதேபோல வழியில் எங்காவது உச்சா நெருக்கினால், உடனே இடம் பொருள் ஏவல் பார்க்காமல் கிடைக்கும் சுவர், விளக்குக் கம்பம் என ஜாலியாக நின்று விடுவார்கள். இந்த “சுதந்திரமும்” வேறு யாருக்கும் இல்லை. ரோடு, புதர், சுவர் என எல்லா இடத்தையும் ஈரமாக்கும் ஒரு உயிரினம் நாய்களுக்குப் பிறகு ஆண் இனம்தான் என்பதில் எந்த ஆணுக்குமே சந்தேகம் வரக் கூடாது. ஆனால் பெண்களின் நிலை.. சாலையில் போகும்போது இயற்கை அழைத்தால் அவர்கள் படும் பாடு இருக்கிறதே, மிகவும் துயரமானது…

  10. பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ள மதிமுக தொண்டர்கள், அந்தக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த முதல் கட்சி மதிமுகதான். அதன்பிறகே தேமுதிக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்தன. மோடி அலையால் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த தே.ஜ. கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றமே கிட்டியது. 2 இடங்களில் மட்டுமே ( பாஜக-1, பாமக-1)வெற்றி பெற்றது. தேமுதிக, மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்ததிலேயே மதிமுகவுக்கும் பாஜகவுக்குமான உரசல் ஆர…

  11. ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து விடுபட வேண்டி பள்ளி குழந்தைகள் மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், பிரசாந், வில்சன், லாங்லெட் ஆகியோர் மீது இலங்கை அரசு போதை பொருள் கடத்தியதாக தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும், தண்டனையில் இருந்து 5 மீனவர்களை மீட்கவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடத்திலும் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இந்நில…

  12. போதையில் கரையும் தமிழ் சினிமா... !தள்ளாடும் தமிழகம் சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான். தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும். அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை…

    • 0 replies
    • 3.3k views
  13. நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர். சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள, எம்.ஜே.அக்பர், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நேற்று முன்தினம் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவுரையை நிகழ்த்தினார். அந்த உரையிலே அவர் மேலும் தெரிவித்ததாவது, “எமது பிராந்தியத்தில் சமாதானமும் நட்பும் அவசியமாகும்.அயல் நாடுகளுடனான உறவு மிக முக்கியமானதாகும். இந்திய பிரதமர் ஜப்பானுக்கும் சென்றார். சீனாவுக்கும் சென்றார். பிராந்திய நலன் முக்கியமாகும். இதேவேளை பயங்கரவாதத்தை தவிர ஏனைய அனைத்து…

  14. ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி முற்றுகைப்போராட்டம் தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதைக் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம நாம் தமிழர் கட்சி சார்பில், இராமநாதபுரம் மாவட்ட அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ராஜபக்சேவின் உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. திருச்சி நாம் தமிழர் கட்சி தொடர்வண்டி மறியல் போராட்டம் அப்பாவி மீனவர்கள் மீதான மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். (Facebook)

  15. அதிகப்படியான நீரை கேரளா வெளியேற்ற காரணம் என்ன? கருணாநிதி கேள்வி! சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான நீரை கேரள அரசு வெளியேற்ற காரணம் என்ன? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்கக்கோரி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தீர்மானித்திருப்பதாக, கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நல்ல வா…

  16. விவேகானந்தரும் தர்மபாலாவும் ஒன்றா? பழ.நெடுமாறன் சிங்கள தேசிய இனவெறிக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலா என்ற புத்த பிட்சுவின் அஞ்சல் தலையை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டு அவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இது தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சி இருக்கிறது. தர்மபாலா புத்தத் துறவி வேடம் பூண்ட சிங்கள பேரினவாதி. அவரது துறவுக்கோலத்துக்கும் அவருடைய செயற்பாட்டுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என்பதை அவரது வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள். ''எழில்மிக்க இந்த இலங்கைத் தீவானது ஆரிய சிங்களர்களால் சொர்க்க பூமியாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நிய காட்டுமிராண்டிகள் படையெடுத்துக் கைப்பற்றி அதை அலங்கோலமாக்கிவிட்டனர். சிங்கள மக்களுக்கு மத விரோதம் என்றால் என…

  17. இப்படியும் ஒரு தமிழரா ? ———————————— முப்பது வருடங்கள் போனதே தெரியவில்லை. பூனா திரைப்படக் கல்லூரியின் பேராசிரியர்.சதீஷ் பகதூர் ‘திரைப்பட ரசனை’ பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார், அடையார் திரைப்படக் கல்லூரியில். வகுப்பு முடியும் தருணம் திடீரென்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அமெரிக்க நூலகத்தில் Dances of Siva என்றொரு செய்திப்படம் திரையிடப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் சென்று காணலாம் என்பதாக. அந்தப்படம் ஆனந்த குமாரசாமி பற்றியது. பார்த்து பிரமித்துப் போனோம். இப்படி ஒரு ஆய்வாளரா? என்பதற்கு மேல், நமக்கு இப்படிப்பட்ட கலாச்சார பொக்கிஷங்கள் இருக்கின்றானவா? ஆச்சரியம் கவிந்து எல்லாமும் மூடிப்போய் விட்டது. அப்போதிருந்த அரசியல் வெறியில் மீண்டும் அவர் பற்றி எதுவும் தேடவில்…

  18. ஓய்வு கிடைக்காமல் உழைப்பவர்கள் நிறைய பேர். விபத்து, இழப்பு மாதிரியான அசம்பாவிதம் நடந்தால் கட்டாய ஓய்வு கிட்டும். ஓடி ஓடி உழைக்கிறோமே தேவைதானா, நாம் போகும் பாதை சரிதானா என்று நிதானமாக திரும்பிப் பார்த்து யோசிக்க கடவுள் வழங்கும் சந்தர்ப்பம் அது. மறுப்பாளிகள் இயற்கை எனலாம். ஜெயலலிதாவுக்கு கிடைத்திருப்பது அம்மாதிரியான சந்தர்ப்பம்.அரசு நிர்வாகத்தில் அன்றாட தலையீடுக்கு இடமில்லை. திரும்பி பார்ப்பது தவிரவும் நிறைய நேரம் கிடைக்கும். எங்கெங்கோ கண்காணாத இடங்களில் வசிக்கும் கட்சிக்காரர்களின் கடிதங்களை உதவியாளர்கள் வடிகட்ட விடாமல் தானே எடுத்து படிக்கலாம். நிதர்சனத்துக்கும் தனக்கும் இடையே எழுப்பப்பட்ட சுவரை அளவெடுக்கலாம். பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பிக்கலா…

  19. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, தமிழக மீனவர்கள் 600 பேரை சுட்டுப் படுகொலை செய்த, 2000க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய, அப்பாவி தமிழக மீனவர்கள் 5 பேரின் மீது பொய் வழக்கு போட்டு தூக்கு தண்டனை விதித்து மரணக்கொட்டடையில் அடைத்து வைத்துள்ள சிங்கள பேரினவாத அரசின் கொலைகாரன் இராஜபக்சேவுடைய இலங்கை பிரதமர் ஜெயரத்னா திருப்பதி வருகையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருத்தணி நகரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கருப்புக்கொடியுடன் திருப்பதி நோக்கி புறப்பட்ட 250க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச்செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வடசென்னை…

  20. விளம்பரத்தில் கோக் குடிக்கச் சொன்னதும், திரைப்படத்தில் கோக்கைச் சாடியதும் நடிப்பு என்று விஜய்க்கு நன்றாகத் தெரியும். திரைப்படத்தில் ஒரு காதலுக்காகவோ, மனைவிக்காகவோ உருகுவதும், வாழ்வதும் நடிப்பு என்றும், நிஜத்தில் ஒன்று போனால் இன்னொன்று என்று தன் சொந்த வாழ்க்கையை வெளிப்படையாக வாழும் தெளிவும் கமலுக்கு உண்டு. படத்தில் நூறு பேர் வந்தாலும், ஒற்றை 'பாட்சா'வின் பெயரில் நடு நடுங்க வைத்து, நிஜத்தில் தன் திரைப்படம் வரும் நேரம் தன் அரசியல் கொள்கைகளை மாறி மாறி அமைத்துக்கொள்ளும் தெளிவும் ரஜினிக்குப் புரியும். நடிகர்களோ, நடிகைகளோ அவர்கள் தொழிலில் கவனமாக இருக்கிறார்கள், ரசிகர்கள் நடிப்பை ரசித்து விமர்சித்துப் போகும்வரை எந்தக் குழப்பமும் இல்லை. நடிகர்கள் நடிகைகள் தங்கள் ரசிகர்களைக் கு…

  21. மூன்று மாணவர்கள் உட்பட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் ஒன்பது பேருக்கும் நிபந்தனை பிணை அளிப்பதாக எழும்பூர் செசன்சு நீதிமன்றம் அறிவித்து உள்ளது. சத்தியம் திரை அரங்கம் தாக்குதல் தொடர்பாக மாணவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் மவுன்ட் ரோடு காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீ.பிரபாகரன், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் செம்பியன், மாற்றம் மாணவர்கள் இளையோர் அமைப்பின் பிரதீப் ஆகியோரை அக்டோபர் மாதம் 23 ம் திகதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இவர்களுடன் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த த.பெ.தி.க தோழர்கள் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு பிணை கோரி த.பெ.த…

  22. மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி| கோப்புப் படம். தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்தே அரசியல் பேசும் சூழல் நிலவுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை, அடுத்துள்ள ஜல்லிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற் காக வந்த உ.வாசுகி செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது: பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக்கூடப் போராட்டம் மூலமாகத்தான் பெற வேண்டி யுள்ளது. அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகி…

  23. நடிகர் கார்த்திக் | கோப்புப் படம் நாடாளும் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதன் தலைவர் நடிகர் கார்த்திக் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக், "நான் எனது சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன்" என்றார். அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்திக் தேச பக்தி மிகுந்த இளைஞர் என பாராட்டிப் பேசினார். முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக கார்த்திக் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE…

  24. பேருந்தைக் கட்டுப்படுத்தி 80 உயிர்களைக் காத்த பெண் இன்னும் மிரட்சியில் இருந்து மீளவில்லை அவர்கள். அவர்கள் ….? கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிஎன்ற ஊரிலிருந்து தமிழக பகுதியான கூடலுருக்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள். 80 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அப்பேருந்து பெரும் விபத்திலிருந்து மீண்டாலும், அதில் பயணித்தவர்கள் இன்னமும் தங்களைத்தாங்களே கிள்ளி்ப்பார்த்துக்கொள்ளாத குறையாய் அதிசயித்துக்கிடக்கிறார்கள். மொத்த பயணிகளின் கரங்களும் ஒரு பயணியை நோக்கி கும்பிடுகிறது. அவர் பிரேமா. இன்று அத்தனை உயிர்களும் நிம்மதியில் கிடக்க அவரும் ஒரு முக்கிய காரணம். தமிழகத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக வ…

  25. நீதி உரிமை பேரணி.. சீக்கிய இனப்படுகொலை 30 ஆவது வருட நினைவேந்தலன்று இந்திய தலைநகரில் "தமிழர், சீக்கியர், காஷ்மீரி, நாகர்" ஆகிய "தேசிய இனங்களின் ஒன்றுகூடல்" இனப்படுகொலை துயர் பகிர.. தமிழர் தேசிய இனப்பங்காளனாக.. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.... இடம் - ஜந்தர் மந்தர், புதுடெல்லி . நாள் - 03- நவம்பர்-2014 "தேசிய இனங்களை ஒன்றுபடுத்துவோம்.. இனப்படுகொலைகளை அம்பலப்படுத்துவோம்.." நாம் தமிழர் கட்சி - புதுடெல்லி தொடர்புக்கு - 813039216,9818412784,971797572 https://m.facebook.com/NTKatchi/photos/a.1482303878673067.1073741828.1481878972048891/1535096693393785/?type=1&ref=bookmar…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.