தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம் 31 Aug 2025, 2:27 PM மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், பொறுப்பேற்றார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆதீனத்தை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய ஆதீனம் தன்னிச்சையாகச்…
-
- 0 replies
- 154 views
-
-
சென்னை: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் விரிவடைந்து வருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது. மதுரை மதுரா கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக…
-
- 0 replies
- 280 views
-
-
தமிழீழ இனப்படுகொலைகளுக்கு நீதிகேட்டு தமிழகம் கொந்தளித்துக் கொண்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆதாரித்து வழிநடத்திய சிங்கள புத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு 'சுற்றுலா' என்ற பெயரில் தொடர்ந்து உலா வருகின்றனர். தமிழ்நாட்டு சட்டமன்றம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, இலங்கையுடனான சுற்றுலா உறவை முறித்துக் கொள்வதற்கும் முன்னிற்கின்ற போதுகூட, சிங்களர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது குறைந்தபாடில்லை. இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடு…
-
- 0 replies
- 732 views
-
-
உளவுத்துறையிடம் அறிக்கை கேட்ட சசிகலா! -டிசம்பர் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு? அ.தி.மு.க பொதுக்குழுவை வருகிற 29-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளனர் கார்டன் வட்டாரத்தில். ' மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பது பற்றிய உளவுத்துறை அறிக்கையும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அ.தி.மு.க சீனியர்கள். தம்பிதுரை, செங்கோட்டையன், மதுசூதனன் உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே குரலில் சசிகலா தலைமையை முன்னிறுத்தியுள்ளனர். நேற்று அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, செல்லூர் ராஜூ, …
-
- 0 replies
- 410 views
-
-
செங்கோட்டையனை ஓரங்கட்டிய சிஷ்யன் :ஏறிய ஏணியை எட்டி உதைத்த 'எடப்பாடி' செங்கோட்டையனிடம் அரசியல் கற்று, அவர் மூலம், கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, செங்கோட்டையனை ஓரங்கட்டி, முதல்வர் பதவியை கைப்பற்ற உள்ளார். அ.தி.மு.க.,வில் சீனியர், எட்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், கொங்கு மண்டல கவுண்டர் சமுதாயம் மற்றும் இதர சமூக மக்களிடமும் செல்வாக்குள்ளவர், கோபி தொகுதியை சேர்ந்த செங்கோட்டையன். கடந்த, 1991 - 96ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2011ல் மீண்டும் அமைச்சராக்கப்பட்டாலும், ஓரே ஆண்டில், ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையனுக்கு, ஜெ., மறைவுக்கு பின் தான், முக்க…
-
- 0 replies
- 286 views
-
-
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்குதான் வாக்களிப்போம் என்று தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்திருப்பது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 27ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜூனன், ரத்னவேல், லட்சுமணனும், அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜாவும் போட்டியிடுகின்றனர். தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் 6வது எம்.பி.யாக தேர்வாவது கனிமொழியா?, இளங்கோவனா? என்ற எதிர்பார்ப்பு …
-
- 0 replies
- 456 views
-
-
ஆர்.கே. நகரில் அள்ளி வீச ரூ.50 கோடி பணம்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் தயாராக இருப்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது. சென்னை: இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான். பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலா…
-
- 0 replies
- 548 views
-
-
எழுவர் விடுதலை – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை 5 Views எழுவர் விடுதலை குறித்து 2018 செப்.09 அன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை அறிவித்தும் அவரை விடுதலை செய்யும் விஷயத்தில…
-
- 0 replies
- 575 views
-
-
வேலூர் சிறையில் கைத்தொலைபேசி வைத்திருந்ததாக ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மீது வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை ரத்துச் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டில் வேலூர் மகளிர் சிறையில் தன்வசம் கைத்தொலைபேசி வைத்திருந்தார் என்று நளினி மீது குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கணவருடன் நளினி ஆனால், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கைத்தொலைபேசி வைத்திருந்த குற்றத்துக்கான தண்டனையாக நளினி ஏற்கனவே சிறையின் 'ஏ' பிரிவில் இருந்து 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ஆகவே தண்…
-
- 0 replies
- 372 views
-
-
முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். 63 வயதாகும் திருமதி விஜயலட்சுமி உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் காலமானார். ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி வைத்தியசாலைக…
-
- 0 replies
- 371 views
-
-
வாகனங்களின் வெளிப்புரத்தில்... ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். வாகனத்தை பொலிஸ் சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் புகைப்படம் ஒட்டுகிறார்கள். மேலும் அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் மாத்திரம் கட்சி கொடிகளையும் தலைவர்களின் புகைப்படங்களையும்…
-
- 0 replies
- 354 views
-
-
சீமானை கைது செய்: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்! மின்னம்பலம்2021-10-12 காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை , கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் இன்று (அக்டோபர் 12) சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவரான செல்வப் பெருந்தகை, “தொடர்ந்து சீமான் அவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது தொடர்கிறது. அவர் வாங்குகிற கூலிக்கு சரியாக வேலை பார்க்கிறார் என்று தோன்றுகிறது. உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்கிறார…
-
- 0 replies
- 326 views
-
-
‘முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா?!’ - கொதி கொதித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் #VikatanExclusive மீண்டும் ஓர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ‘முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்' என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அளித்த கடிதத்துக்கு இன்னமும் ஆளுநர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. ‘என்னை தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். முதல்வரை தேர்வு செய்வது என் வேலையா?' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். சென்னை, வானகரம் பொதுக் குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, கட்சி எம்.எல்.ஏக்களால் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏக்க…
-
- 0 replies
- 2.5k views
-
-
மிஸ்டர் கழுகு: நவம்பரில் கமல் கட்சி... டிசம்பரில் ரஜினி கட்சி! ‘‘கோட்டையைச் சுற்றிவந்த அரசியல் புயல், கோடம்பாக்கத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது” என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘கமலையும் ரஜினியையும் சொல்கிறீர்களா?’’ என்று தகவல்களைக் கேட்கத் தயாரானோம். ‘‘ரஜினி குறித்து ‘முரசொலி’ பவளவிழாவில் கமல் பேசியது ரஜினி மனதில் காயத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. அதன்பிறகு ரஜினியைச் சந்தித்திருக்கிறார் கமல். ‘நான் உங்களைப்பத்தி பேசுனது வேறு. எல்லோரும் தப்பா புரிஞ்சுக்கிட்டு கைதட்டிட்டாங்க’ என்று கமல் சொன்னாலும், ரஜினி மனம் சமாதானமாகவில்லை என்பது சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவில் அப்பட்டமாக வெளிப்பட்டது. கமலின் ‘முரசொலி’ விழா பேச்சுக்குப் பதில் சொல்வதுபோல இரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
மிஸ்டர் கழுகு: மதுசூதன மல்லுக்கட்டு! - தர்மயுத்தம் சீஸன்-3 ‘‘அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல் தொடங்கிவிட்டது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘நீர் தீர்க்கதரிசி. ‘இரட்டை இலையை வாங்கியபிறகு இவர்களுக்குள் மோதல் நடக்கும்’ என்று முதலிலேயே சொல்லியிருந்தீரே’’ என்றோம். ‘‘ஆமாம்’’ என்றபடி கழுகார் ஆரம்பித்தார். ‘‘எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இருவரும் ஒட்டவில்லை. இதைத்தான், ‘அணிகள் இணைந்தன, மனங்கள் இணையவில்லை’ என்று பன்னீரின் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி போட்டு உடைத்தார். பன்னீர் சொல்லித்தான் மைத்ரேயன் இப்படி எழுதினார் என்று எடப்பாடி சந்தேகப்பட்டார். மதுரை விழாவில் பன்னீர் புறக்கணி…
-
- 0 replies
- 1.1k views
-
-
மு.க. ஸ்டாலின் நரேந்திர மோதிக்கு அளித்த 'அந்த' பெட்டியில் இருந்தது என்ன? 20 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ் மரபு விதைகள் அடங்கிய பேழையை பரிசாக அளிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது, அவருக்கு தமிழ்நாட்டின் மரபான தானியங்கள் அடங்கிய பெட்டியை பரிசளித்திருக்கிறார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன தானியங்கள் இருந்தன? அவற்றின் முக்கியத்துவம் என்ன? டெல்லிதக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி மு…
-
- 0 replies
- 563 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதய முயன்றதாக நால்வருக்கு சிறைத்தண்டனை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகுமார், சுபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகளும், இராஜேந்திரன், சசிகுமார் ஆகிய இருவருக்கும் தலா மூன்றரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும், 2014ஆம் ஆண்டு இராமேஸ்வரன் அருகே கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகை சயனைட், மற்றும் புவிநிலைகாட்டி கருவிகள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக…
-
- 0 replies
- 459 views
-
-
பேருந்தைக் கட்டுப்படுத்தி 80 உயிர்களைக் காத்த பெண் இன்னும் மிரட்சியில் இருந்து மீளவில்லை அவர்கள். அவர்கள் ….? கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிஎன்ற ஊரிலிருந்து தமிழக பகுதியான கூடலுருக்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள். 80 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அப்பேருந்து பெரும் விபத்திலிருந்து மீண்டாலும், அதில் பயணித்தவர்கள் இன்னமும் தங்களைத்தாங்களே கிள்ளி்ப்பார்த்துக்கொள்ளாத குறையாய் அதிசயித்துக்கிடக்கிறார்கள். மொத்த பயணிகளின் கரங்களும் ஒரு பயணியை நோக்கி கும்பிடுகிறது. அவர் பிரேமா. இன்று அத்தனை உயிர்களும் நிம்மதியில் கிடக்க அவரும் ஒரு முக்கிய காரணம். தமிழகத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக வ…
-
- 0 replies
- 558 views
-
-
ஜெ.,வுக்கு ஏன் ஜாமின் தரப்பட்டது? மறுபரிசீலனை செய்ய கோரிக்கை சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமினை, மறுபரிசீலனை செய்திடக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், சிறை தண்டனை வழங்கப்பட்டது. தங்களை, ஜாமினில் விடக்கோரி, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகா ஐகோர்ட் நிராகரித்து விட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில், நான்கு பேருக்கும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர், கட…
-
- 0 replies
- 612 views
-
-
பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு - ’லீக்’கானது 2011 எஃப்.ஐ.ஆர்! 23rd Sep, 2023 at 9:20 PM விஜயலட்சுமி, சீமான் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரின் அடிப்படியில் 2011ல் பதிவான முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) விபரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் 6 முறை தனக்குக் கட்டாயக் கருகலைப்பு செய்யப்பட்டதாகவும் ஆர்9 வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த சில ஆண்டுகள் இந்த வி…
-
- 0 replies
- 485 views
-
-
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அரச தலைவர்கள் அஞ்சலி! எம்.ஜி.ஆரின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று (திங்கட்கிழமை) அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழகத்தின் மறைந்த முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தைமுன்னிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், என பலரும் இன் நிகழவில்கலந்து கொண்டு, அவரது நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இவர்கள் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தியதையடுத்து, நினைவிட வாயிலில் உறுதிமொழிகளையு…
-
- 0 replies
- 579 views
-
-
தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் 13-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் முன்னிலையில் 400-க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் அவர் ஓரிரு வார்த்தைகளே பேசியது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர் நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் இதுபற்றி கூறியதாவது: தேர்தலில் சீட் வாங்குவதெல்லாம் அப்புறம். கட்சித் தலைவர் விஜயகாந்தை நேரில் பார்த்து பேசலாம் என்றுதான் நேர்காணலுக்கே வந்தேன். ஆனால், நேர்காணலின்போது, அவரால் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச இயல வில்லை. இது எங்களை கண்கலங்க வைத்தது. சிலரிடம் மிகுந்த ஆர்வத்தோடு பேச முயற்சித்துள்ளார். மற்ற வர்களால் இதை எளிதில் புரிந்துகொள்ள முடிய வில…
-
- 0 replies
- 362 views
-
-
கருணைக் கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி கடிதம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை எழுதி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தை நேற்று (வியாழக்கிழமை) முதல் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளிடம் மனு கையளித்துள்ளார். இதற்கிடையே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகள் விடுதலைக்காக ப…
-
- 0 replies
- 515 views
-
-
அதிமுகவில் இருந்து பழ.கருப்பையா எம்எல்ஏ நீக்கம்! சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் …
-
- 0 replies
- 684 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் பல காரணங்களால் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரத் தாமதமாகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 1 மே 2025, 06:49 GMT அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள், விரைவில் தங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனக் கோருகிறார்கள். ஆனால், பணிநியமனம் செய்யாததற்கு நீதிமன்ற வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது. திருப்பத்தூரைச் சேர்ந்த மு. கோகுல்நாத் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். பர்வதமலை அடிவாரத்தில் இருந்த ஆதி சிவலிங்காச்சாரியார் குரு சுவாமி பீடத்தில் மந்திரங்களைக் கற்றுக் கொண்டிருந்தார்.…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-