தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை, வியாழக்கிழமை திடீரென சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கருணாநிதியிடம் ஆசாத் விவாதித்ததாகத் தெரிகிறது. சென்னை, சிஐடி காலனி இல்லத்தில் இரவு 8.25 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் சார்பில் தங்கபாலுவும், திமுக சார்பில் துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: வேலூர் சி.எம்.சி கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்தேன். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான க…
-
- 0 replies
- 329 views
-
-
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். டெல்லியில் காங்கிரஸ் அரசு மீது இருந்த வெறுப்பு காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தது. அந்த கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி வளர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தர்மத்தை சமக முறையாக கடைபிடிக்கிறது. அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற நாங்கள் நிச்சயம் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அதிமுக ஆதரவால் வெற்றி பெற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற…
-
- 0 replies
- 375 views
-
-
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வரும் 17–ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முடிந்ததும், காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு பணி தொடங்க உள்ளது. தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக உள்ளார். அதன்படி இந்த மாத இறுதியில் 150 முதல் 200 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு மாநிலத்துக்கும் பொறுப்பாளர்களை சோனியா நேற்று அறிவித்தார். மாநில காங்கிரஸ் தலைவர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து வேட்பாளர்களை ஆய்வு செய்து தேர்வு செய்யும் முக்கிய பணி அந்தந்த மேலிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 340 views
-
-
சென்னை குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காக, குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.117 கோடியே 15 லட்சம் செலவில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "குடிசைவாழ் ஏழை மக்களின் நலனுக்காக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை 1.31 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாறுபட்ட தட்பவெப்ப நிலை, குடியிருப்புகளை உபயோகிக்கும் தன்மை, சுற்றுப்புறச் சூழல், குடியிருப்பு தாரர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மாற்றம் மற்றும் ஆக்ரமணங்கள், மழை மற்றும் இயற்கைச் சீற்றம், …
-
- 0 replies
- 346 views
-
-
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். கிராமம் தோறும் காங்கிரஸ், இல்லந்தோறும் கை சின்னம் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எம்.டி.ஏ. காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கொடியேற்றினார். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம் உள்ளிóட்டோர் அதில் பங்கேற்றனர். அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: காங்கிரஸ் கட்சியை…
-
- 2 replies
- 361 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 250 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டு வழக்கம் போல முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7–1–2014 அன்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம், அதுபற்றிய தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதி, நாளேடுகளில் வெளியிடச் செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்து விட்டதெனக் கருதுகிறார். ஏற்கனவே, மீனவர் பிரச்சினைக்காக நாகை மீனவர்களும், பாம்பன் மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது நாகை மீனவர்கள் உண்ணாவிர…
-
- 0 replies
- 311 views
-
-
எம்.ஜி.ஆர். ஆதரித்த சேது சமுத்திரத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுப்பது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சேது சமுத்திரம் திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக் கூடாது என்று தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2004-ஆம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்ற மத்தியில் ஆட்சியில் இருந்து திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார். சேது திட்டம் எம்.ஜி.ஆர். ஆதரித்த திட்டம். இந்தத் திட்டத்தை எத…
-
- 2 replies
- 590 views
-
-
ஜனவரி 2014, உறுப்பினர்/தொண்டர் சேர்க்கை நடைபெறும் இடங்கள்: காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை சென்னை வடபழனி: 16/2, தெற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை - 600 026. (J R K பள்ளி அருகில்) சென்னை கீழ்பாக்கம்: 2வது மாடி, 68, டெய்லர்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை - 600 010. (க்ராகோடைல் விற்பனை அரங்கம் மேலே, டெய்லர்ஸ் சாலை சிக்னல் மற்றும் ஈகா அரங்கம் அருகில்) *தொப்பி மற்றும் ஸ்வராஜ் புத்தகம் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) விற்பனைக்கு உள்ளது. தொண்டராக பதிவு செய்ய, உங்கள் passport size புகைப்படமும், அடையாள அட்டையின் நகலும் தேவை. (facebook) ஆம் ஆத்மி கட்சி - தூத்துக்குடி இல் உறுப்பினர் சேர்க்கை துவங்கி விட்டது. மக்களுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக போராட நினைப்பவர்கள் கீழ்க்கண…
-
- 14 replies
- 715 views
-
-
சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கே சென்றும், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்காமல், தவிர்த்துவிட்டு, தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி திரும்பினார். சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு மு.க.அழகிரி புதன்கிழமை காலை 10.15 மணியளவில் வந்தார். அழகிரியுடன் மனைவி காந்தி, மகன் துரைதயாநிதி, அவரது மனைவி அனுஷா, மகள் கயல்விழி, அவரது கணவர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் வந்தனர். அப்போது வீட்டின் மேல் மாடியில் கருணாநிதி இருந்துள்ளார். அழகிரியின் குடும்பத்தினர் அனைவரும் மேல் மாடியில் இருந்த கருணாநிதியைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் அழகிரி மட்டும் மேல் மாடிக்குச் செல்லாமல் கருணாநிதியை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, கீழ் தளத்தில் இருந்த தயாளு அம்மாளிடமே தன் வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டுள்…
-
- 0 replies
- 390 views
-
-
தமிழகத்தில் திருத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. 30 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக மாநிலம் முழுவதும் …
-
- 0 replies
- 355 views
-
-
January 2, 2014 சென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டதால் தற்போது சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சேதுசமுத்திரத்தைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மதிமுகவின் நீண்டகால கோரிக்கை. மதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இந்த கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்தை கொண்டுவந்ததில் தமக்கே முக்கிய பங்கு என்று பலமுறை அறிக்கைகளில் கூறிவந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அறிவித்த கையோடு சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோர…
-
- 0 replies
- 519 views
-
-
காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. செயற்குழு விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. நகரமன்ற தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்.எல்.ஏ., வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்றனர். இக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியபோது, ‘’டெல்லி தேர்தல் நமக்கு காட்டும் விஷயம் அங்கு காங்கிரசும், பா.ஜனதாவும் பெரும்பான்மை பெற முடியவில்லை. மக்கள் மாற்றத்தினை விரும்புகின்றனர். திராவிட இயக்கத்தினை எம்.ஜி.ஆர். மக்கள் இயக்கமாக மாற்றினார். அகில இந்தியக் கட்சியாக அ.தி.மு.க. உயர்ந்தது. தற்போது மக்கள் போற்றும் ஆட்சியினை அளித்துக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர் விரைவில் பாரதப் பிரதமராக வேண்டும் என இந்திய மக்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் காத்…
-
- 5 replies
- 554 views
-
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’காஞ்சிபுரம் பட்டு தமிழகத்திற்கு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதாரத்தை ஈட்டும் வர்த்தக மையமாக விளங்கி வருகிறது. இதன் மூலம் காஞ்சிபுரம் பட்டு தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகியது. நிர்வாக முறைகேடு காரணமாக கடந்த 2013 நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு ஜரிகை நூற்பாலை உற்பத்தியை நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் தை திருநாள் பொங்கல் பண்டிகைக்கும், திருமண முகூர்த்தத்திற்கும் பட்டுப்புடவை, வேட்டி நெசவு செய்ய முடியாமல் வருவாய் இன்றி நெசவாளர்கள் வாடுகிறார்கள். நெசவுத் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக சுதேசிய சோசலிச சிந்தனையுடன் இயங்கும் கூட்டுறவு சங்கங்களையும் பட்டு ஜவுளி உற்பத்தி தொழிற் சங்கத்தினர்க…
-
- 0 replies
- 371 views
-
-
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள எச்சரிக்கை பொதுவானது. எனக்கானது அல்ல என்று தென் மண்டல திமுக அமைப்பாளர் மு.க.அழகிரி கூறியுள்ளார். பெரும் பரபரப்புக்கு மத்தியில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவர் சந்திப்பதற்கு முன்பு ஒரு பேட்டியின்போது இப்படிக் கூறியுள்ளார் அழகிரி. மதுரை திமுகவில் நடந்து வந்த சலசலப்புகளால் அதிருப்தியுள்ள திமுக தலைமை மதுரை மாவட்ட திமுக குழுவை கூண்டோடு நீக்கியது. புதிய குழுவை அறிவித்தது. மேலும் மு.க.அழகிரியாகவே இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாட்டை நீக்கினால் நீக்கத் தயங்க மாட்டேன் என்றும் திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்திருந்தார். இந்த நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் அழகிரி. இந்த சந்த…
-
- 1 reply
- 565 views
-
-
700 அரங்குகள், 2000 தலைப்புகள், 5 லட்சம் புத்தகங்கள் என வாசகர்களை அசத்த வருகிறது 37 வது சென்னை புத்தக காட்சி. 37 வது சென்னை புத்தக காட்சிக்கு வாசகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் கொல்கத்தா புத்தக கண்காட்சி மிக பிரபலமானது. சமீப காலமாக இதை விஞ்சும் அளவுக்கு சென்னை புத்தக காட்சி வாசகர்களின் அமோக வரவேற்பில் வளர்ச்சி கண்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவுக்கு வெகு அருகாமையில் நடத்தப்படும் புத்தக காட்சிக்கு, வாசகர்களின் வருகை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தங்கள் அபிமான எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் மற்றும் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் மற்ற துறைகளின் புத்தகங்களை வாங்க அலைய…
-
- 0 replies
- 289 views
-
-
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் சசிகுமார் 28.11.2013 அன்று முதுநகர் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சின்னவிளை கிராமத்தைச் சேர்ந்த பணியடிமை மகன் தார்த்தீஸ் 6.12.2013 அன்று கடலில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டுமரத்திலிருந்து தவறி கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் கிராமம், சாமந்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலு மகன் தவமணி 12.12.2013 அன்று கடல…
-
- 0 replies
- 323 views
-
-
டெல்லி: சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது உகந்ததல்ல என்ற பச்சோரி குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்பதாகவும், பச்சோரி குழுவின் அறிக்கையை, மத்திய அரசும் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கலாம். எதிர்காலத்தில் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். சேது சமுத்திர திட்டத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் எனக்கூறுவது உண்மையில்லை. இந்த திட்டம் வந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாத…
-
- 0 replies
- 395 views
-
-
கிருஷ்ணகிரி நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தற்போது அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப் பட்டு பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரோட்டின் நடுவில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் கூம்பு வடிவம் போல் காட்சியளிக்கும். சாலை அமைக்காத பகுதிகளில் இந்த தொட்டியில் மோதி இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குவதாக பரவலாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் தி.மு.க. பிரமுகர் நாராயணமூர்த்தி மகன் தமிழ் செல்வன் சென்ற மோட்டார் சைக்கிள் தொட்டி மீது மோதியதில் அவர் கீழே தவறி விழுந்தார். அப்போது பின்புறம் வந்த டவுன்பஸ் அவர் தலை மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ…
-
- 0 replies
- 357 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கனிமொழி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘‘2ஜி ஒதுக்கீடு முறைகேடுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் அவர், ‘‘கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு 20 சதவீத பங்கே உள்ளது. நான் அதன் இயக்குனர்களில் ஒருவராக 2007–ம் ஆண்டு ஜூன் மாதம் 6–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இரண்டு வாரமே இருந்தேன். அதன்பிறகு 1½ ஆண்டு கழித்தே 2009–ல் நிதி பரிமாற்றம் நடந்தது. நான் எந்த காசோலை…
-
- 0 replies
- 380 views
-
-
வருகின்ற ஞாயிறு 12-01-2014 காலை 10 மணிக்கு திவ்யோதயா அரங்கில் கோவையில், 12-01-2014 மாலை 5 மணிக்கு திருப்பூரில், பொதுக்கூட்டம். ”தமிழீழ படுகொலை ஒரு இனப்படுகொலையே, மற்றும் இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்தின் பங்கு” மேலும்” பொதுவாக்கெடுப்பு- பிப்ரவரி12 ஐ.நா அலுவலக முற்றுகை”யின் நோக்கம் பற்றிய பிரச்சாரக் கூட்டம். கோவையில் பங்கேற்போர் : தோழர். கு.ராமகிருட்டிணன், தோழர். நெல்லை முபாரக், தோழர்.பாமரன், தோழர். உமர்கயான், தோழர். திருமுருகன். திருப்பூர் : தோழர் ரபீக், தோழர். உமர்கயான், தோழர். திருமுருகன் (மற்றும் இதர தோழர்கள் பெயர்களை உறுதி செய்த பிறகு நாளை பதிகிறோம்..) தோழர்கள் மிகக் குறுகிய காலம் இருப்பதால் சக தோழர்களிடத்தில் செய்தியைப் பரப்பி உதவுங்கள். Thirumurugan Gandh…
-
- 0 replies
- 334 views
-
-
சென்னை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– ஆம் ஆத்மி கட்சியின், தமிழ் மாநில தலைமை அலுவலகமானது, கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளை, கட்சியின் தேசிய செயற்குழு தேர்வு செய்துள்ளது. மேலும் கட்சியின் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கிறிஸ்டினா சாமியும் மற்றும் லெனின், டாக்டர் ஆனந்த் கணேஷ், ராஜேஷ் சுரானா, சாமுவேல் நிர்மா, ரோஸ்லின் ஜீவா, நாகராஜன் மற்றும் ராஜ ராஜ சோழன் ஆகியோர் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் என…
-
- 0 replies
- 622 views
-
-
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். புறநகர் பகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான இடம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114361
-
- 1 reply
- 524 views
-
-
சென்னை: மத்திய அரசு நம்பிக்கை அளிக்கும் வகையில் போதுமான அளவுக்கு கண்டிக்காததே இலங்கையின் தொடர் அடாவடிக்கு காரணம் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 275 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் இன்று மீண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீண்டும், மீண்டும் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் சொல்…
-
- 0 replies
- 289 views
-
-
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி யோகேந்திரா யாதவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில்: ஆம் ஆத்மியின் டில்லி வெற்றிக்கு பின்னர் கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு வளர்ந்து வருகிறது. பலரும் சேர ஆர்வம் காட்டுகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான முழு விவர தேர்தல் அறிக்கை இன்னும் 2 மாதத்திற்குள் வெளியிடுவோம். பா.ஜ., மற்றும் காங்., போன்று பெரும் கட்டமைப்பு ஆம்ஆத்மிக்கு இல்லை. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் கட்சியின் நிலை என்ன ? அணு சக்தியை எதிர்க்கிறீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், இந்த ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்ப்பு குரலுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும். அப்பகுதி மக்களின் அச்சம் முக்கியமாக கவனத்தில கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். htt…
-
- 0 replies
- 419 views
-
-
திமுக தலைவர் கருணாநிதி தேமுதிகவோடு தேர்தல் உறவு வேண்டாம் எனக்கூறியதற்காக தனது மூத்த மகன் மு.க.அழகிரியைக் கடிந்துகொண்டிருக்கிறார், அது தனது கட்சியின் நிலைப்பாடல்ல எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பில் அழகிரி இருந்தாலும், கருணாநிதியின் இளையமகன் ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் ஏறத்தாழ கட்சி வந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், அழகிரி எவ்வித நடவடிக்கைகளிலும் பங்கு பெறாமலிருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு மதுரைப் பகுதி திமுக கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதன் பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அழகிரி கட்சியில் தாம் புறக்கணிக்கப்படுவதாகக் குறைகூறினார், அதே நேரம் கருணாநிதியைத் தவிர வேற…
-
- 2 replies
- 514 views
-