தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
7 பேர் விடுதலை - ஜனாதிபதிக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டது எப்போது? மின்னம்பலம்2022-04-21 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27ஆம் தேதி ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பேரறிவாளன் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே உள்ளார். இதனிடையே 7 பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்…
-
- 0 replies
- 328 views
-
-
‘அடித்துக் கொள்ள வேண்டிய நேரமா இது?!’ - வெளியாகிறதா சசிகலா அறிக்கை?! #VikatanExclusive ‘அணிகள் இணைப்பு' என்ற பெயரில், அ.தி.மு.கவில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். ' ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால், அ.தி.மு.க மூன்று துண்டுகளாக சிதறிப் போய்விட்டது. தற்போதுள்ள சூழலைக் கவனத்தில் கொண்டு, நாளை அறிக்கை வெளியிட இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றார் சசிகலா. பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் வாங்கிய கையோடு, கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் தேர்வு செய்…
-
- 0 replies
- 328 views
-
-
நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி கண்டுபிடிப்பு November 4, 2018 1 Min Read நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி ஒன்றை டெல்லியில் பிளஸ்-2 படிக்கும் தமிழக மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கணினி அறிவியல் படித்து வரும் விருதுநகரை சேர்ந்த இனியாள் என்னும் குறித்த மாணவிஈய இதனைக் கண்டுபிடித்துள்ளார். அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்தி நீட்’தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. அப்படிப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இந்த செயலி பேருதவியாக இருக்கும். இதை கூகுள் பிளே ஸ்டோரில் அனீற்றா …
-
- 0 replies
- 328 views
-
-
தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். `கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு சரியவில்லை' என அமைச்சர் தெரிவித்தார். வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, `அரசின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்' என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியது. அதேநேரம், கடந்த சில வாரங்களாக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்…
-
- 0 replies
- 328 views
-
-
சசிகலாவுக்கு சிறப்பு வசதி இல்லை கர்நாடக சிறை துறை தகவல் பெங்களூரு:'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை' என, சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சிறையில…
-
- 0 replies
- 328 views
-
-
பட மூலாதாரம், Getty Images 24 நவம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (நவ. 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறிய தகவல்கள்: அந்தமான் கடல் பகுதி நவ.23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, 24ம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்…
-
- 5 replies
- 328 views
- 1 follower
-
-
வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு அவர் கோரும் மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் தங்களது கருணை மனுவை காலதாமதமாக ஜனாதிபதி நிராகரித்ததால் தூக்கை ரத்து செய்யக் கோரி பேரறிவாளவன் உள்ளிட்ட மூவரும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு பேரறிவாளன் கடிதம் அனுப்பியிருந்தார். வீடியோ கா…
-
- 0 replies
- 328 views
-
-
குடித்து விட்டு கூத்தடித்த பெண்ணால் பரபரப்பு…. தஞ்சை அருகே இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுவன் ஒருவனுக்கு அவனது தாய் மாமனே மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற மேலும் ஒரு சிறுவன் மது குடிக்கும் காட்சியும் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் காதல் தோல்வியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதன் பரபரப்பு அடங்கு முன்பு தஞ்சையில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை விளார் பைபாஸ் சாலையில் 25 வயது மதிக்க…
-
- 0 replies
- 327 views
-
-
தம்பிதுரை அறிக்கை சீர்குலைக்கும் செயல்: ஸ்டாலின் சென்னை : 'முதல்வருக்கு உள்ள பலத்தை, சட்டசபையில் உடனடியாக நிரூபிக்க, கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். அவரது அறிக்கை: முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது. கொச்சைப்படுத்தி விட்டார் திடீரென, முதல்வர் பதவியை சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி, கவர்னர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, சசிகலா முதல்வராக வேண்டும் என, ஒரு அறிக…
-
- 0 replies
- 327 views
-
-
ஈரோடு அருகே வருமான வரித்துறை ரெய்டில் அதிமுக பிரமுகர் வீட்டில் 1 கோடி பறிமுதல் ஈரோடு: ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் சுமார் 1 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரெய்டு நடத்திய அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது. ஈரோடு அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சோர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மாலை அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடு்த்து ஆத்திரமடைந்த அதிமுகவினர். ரெய்டு நடத்திய அதிகாரிகள் வாகனத்தின் மீது தாக்குல் நடத்தியதாகவும் அதை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதி…
-
- 0 replies
- 327 views
-
-
சசிக்கு சலுகைகள் உண்மைதான்: புதிய சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல் பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறயைில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மைதான் என சிறைத்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒத்துக்கொண்டனர். சசிக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதற்கென ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறைதுறை டி.ஜி.பி., சத்தியநாராயணன், ரூபா ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ஆர். அசோக் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஆகிய…
-
- 0 replies
- 327 views
-
-
பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 ஏப்ரல் 2025, 10:07 GMT 'அமைச்சராக இல்லை என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா?' என, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜியின் கருத்தை அறிவதற்கு ஏப்ரல் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்த்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போலவே, மேலும் 6 அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. …
-
- 1 reply
- 327 views
- 1 follower
-
-
இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தப்பட்ட 4 கோடி ருபாய் தங்கம் பறிமுதல்… December 11, 2020 இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் மண்டபம் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் (இந்திய ரூபா) மதிப்பிலான தங்கத்தை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ராமேசுவரத்திற்கு தங்கம், போதைப் பொருட்கள் போன்றவை கடத்திச் செல்லப்படுகின்றன. இவ்வாறே ராமேஸ்வரத்தில் இருந்தும் இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள், மருந்து போன்றவையும் கடத்துவது அதிகரித்துள்ளன. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி நாள்தோறும் மண்டபம், தனுஷ்கோடி, ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள…
-
- 0 replies
- 327 views
-
-
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் சசிகுமார் 28.11.2013 அன்று முதுநகர் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சின்னவிளை கிராமத்தைச் சேர்ந்த பணியடிமை மகன் தார்த்தீஸ் 6.12.2013 அன்று கடலில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டுமரத்திலிருந்து தவறி கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் கிராமம், சாமந்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலு மகன் தவமணி 12.12.2013 அன்று கடல…
-
- 0 replies
- 327 views
-
-
பிரதமரைச் சந்தித்து அழைப்பு விடுத்த ஸ்டாலின் மின்னம்பலம்2022-03-31 நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) பிற்பகல் சந்தித்தார். ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு முதல்வர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மைய வளாகத்தில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். அவருடன் திமுக எம்.பி.க்கள் உடனிருந்தனர். தொடர்ந்து திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தபோது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். இ…
-
- 1 reply
- 327 views
-
-
எம்.எல்.ஏ.,க்கள் மீது மக்கள் கொந்தளிப்பு வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு சட்டசபையில், இடைப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓட்டளித்த, எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூவத்துார் விடுதியில் தங்கியிருந்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க கோரி, தொகுதி மக்கள், சமூக வலைதளங்கள், மொபைல் போன்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர். மக்கள் கருத்தை மதித்து, கோவை மாவட்டத் தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம், மேட்டுப் பாளையம் தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள் மனம் மாறினர்.தொகுதி மக்கள…
-
- 0 replies
- 327 views
-
-
சென்னை: திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியின்போது 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு ரூ.380 கோடி செலவு செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். பின்னர் சட்டசபையில் செம்மொழி மாநாடு சம்பந்தமாக விவாதம் நடந்த போதும் ரூ.380 கோடி செலவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்மொழி மாநாட்டிற்கான செலவு தொகை எவ்வளவு என்று தமிழக அர…
-
- 0 replies
- 327 views
-
-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தன்னிடம் விசாரிக்க வேண்டுமே தவிர தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை துன்புறுத்தக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். வியாழக்கிழமையன்று கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகி ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள சிபிஐ அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர் அனைவரையும் விடுவித்து விசாரணையையே முடிக்குமாறு உத்தரவிட்டிருந்ததையடுத்து கார்த்தி சிதம்பரம் ஆஜராக மறுத்து விட்டார். ஆனால் இது உண்மையல்ல விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரம் கூற்றை மறுத்தனர். “சிபிஐ என்னையே விசாரிக்க வேண்டுமே தவ…
-
- 0 replies
- 327 views
-
-
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் மோசடி - நடந்தது என்ன ? மோகன் பிபிசி தமிழுக்காக 12 ஜூலை 2022, 00:49 GMT புதுப்பிக்கப்பட்டது 12 ஜூலை 2022, 03:51 GMT பட மூலாதாரம்,SEAN GLADWELL / GETTY IMAGES "எங்களை விமான நிலையத்துக்கு ஏற்றிச்செல்ல வண்டி வரும் என்றார்கள். ஆனால், ஏமாற்றம்தான் வந்தது" என்கிறார்கள், சிங்கப்பூர் வேலைக்காக சென்னை வருவதற்குத் தயாராக காத்திருந்த தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து வந்த சொற்கள் இவை. நடந்தது என்ன? சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவ…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
பன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்! “மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் செய்யத் துணியாத செயலை, முதல்முறையாகப் பதவியேற்ற பழனிசாமி செய்துவிட்டார்” என்று சிலாகித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க-வின் முன்னணியினர். பெரியகுளம் தொகுதியின் வேட்பாளராக 2001-ம் ஆண்டு அறிமுகமாகி, தேர்தலில் வெற்றியும் பெற்று வருவாய்த் துறை அமைச்சராக ஜெயலலிதாவினால் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டார் பன்னீர்செல்வம். ஆனால், ஜெயலலிதா மீதான வழக்கைச் சுட்டிக்காட்டி அப்போது அவரின் முதல்வர் பதவி பறிக்கபட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத ஜெயலலிதா, அடுத்து என்ன செய்வது, யாரை பொறுப்புக்கு நியமிப்பது என்ற நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். சசிகலாவின் அக்கா மகனாகவும் அன்றை…
-
- 0 replies
- 326 views
-
-
தேனி அருகே கம்பம் நகரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க சதி செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. ஈழத்தமிழர்களுக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் எங்கள் கட்சி போராடி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை. எந்த அணியில் சேர்ந்து எம்.பி.யாக ஆனேனோ அந்த நன்றியை மறக்க மாட்டேன். தி.மு.க.வே எங்ளோடு கூட்டு வேண்டாம் என்று கூறினால் கூட அதைப்பற்றி நாங்கள் கவலை படமாட்டோம். என்றும் நாங்கள் த…
-
- 0 replies
- 326 views
-
-
‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது!’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களும் சசிகலா குடும்பத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. ‘ஜெயா டிவியைக் கைப்பற்றும் முயற்சி ஒருக்காலும் நடக்காது. என்னை மிரட்டிப் பணிய வைக்க ரெய்டு பயத்தைக் காட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் குடும்ப உறவுகளிடம் கொதித்திருக்கிறார் ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமன். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம…
-
- 0 replies
- 326 views
-
-
கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்க முடியும் என்ற அமர்த்தியா சென்னின் கருத்து குறித்து திமுக தலைவர் கருணாநிதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘நோபல்'' பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, வெளிவந்துள்ள நூலினை அண்மையில் நக்கீரன் காமராஜ் தனது பிறந்த நாளினையொட்டி என்னிடம் அளித்தார். இவர்கள் எழுதிய ‘‘நிலையில்லா புகழ்-இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும்'' என்ற தலைப்பு கொண்ட அந்நூலில், பக்கம் 72-ல், ‘‘தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் ப…
-
- 0 replies
- 326 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024, 08:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது? அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் ‘வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மார்ச் 4 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆள…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
’நான் அரசியல் தவிர்த்து பெர்சனல் பற்றிப் பேசினால்... அவ்வளவுதான்...!’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா கடந்த புதன்கிழமையன்று ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் சசிகலா புஷ்பா எம்.பி-யை திட்டி, ‘சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தனர். இதனைப் படித்த சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள், இதுதான் அ.தி.மு.க-வின் அரசியல் நாகரிகமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதுகுறித்து சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த பேட்டி... ‘‘மிக மோசமான வார்த்தைகளால் உங்களைத் திட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்களே?’’ ‘‘ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும் பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. என…
-
- 0 replies
- 326 views
-