தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
இலங்கை விவகாரம் : இந்திய ஜனாதிபதியின் உரை தமிழர் உணர்வை பிரதிபலிக்கவில்லை :திமுக தலைவர் கருணாநிதி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்கள் தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிப்பதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.உலக நாடுகள் “ராஜபக்ஷ ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி” என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், “இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது” என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை என்று கேட்டுள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கை அதிபர் ராஜபக்ஷ அவர்கள் …
-
- 0 replies
- 462 views
-
-
பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி?- மதுரை மாணவி விளக்கம் மதுரை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை ஆனையூரை சேர்ந்த உய்யஸ்ரீநிலா என்ற மாணவி 666 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர் நீட் தேர்வுக்காக எந்த ஒரு பயிற்சி மையத்துக்கும் செல்லாமல் இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி உய்யஸ்ரீநிலா கூறியதாவது:- எனது தந்தை பாண்டியராஜன், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தாய் மீனா. நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இந்த வருடம் பிளஸ்-2 முடித்தேன். தமிழ்நாடு, பாண்டிசேரி அளவிலான கேந்…
-
- 0 replies
- 497 views
-
-
"தமிழக அமைச்சர்கள் மீதும் வருமான வரி நடவடிக்கைக்கு வாய்ப்பு" - என். ராம் பேட்டி "தமிழக அரசின் தலைமைச் செயலர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு, தமிழக அமைச்சர்கள் மீதும் அத்தகைய நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது", என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். "மாபெரும் ஊழல் என்று சொல்லக்கூடிய அளவில், தமிழகத்தில் தொழில் ரீதியாக ஊழல் நடைபெற்றுள்ளது. அதனால், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. தேவை இருக்கிறது. ஆனால், எடுப்பார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், …
-
- 0 replies
- 413 views
-
-
சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தர விட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வராகி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி சித்திரை திருவிழா என்ற பெயரில் பா.ம.க. சார்பில் கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கலவரம் வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் காரணமாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பா.ம.க.வினரால் சேதப்படுத்தப்பட்டன. சில பேருந்…
-
- 0 replies
- 311 views
-
-
117 ஆண் வேட்பாளர்கள்- 117 பெண் வேட்பாளர்கள்:: சமத்துவ சீமான் மின்னம்பலம் கூட்டணிகள் முடிவாகாமல், வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்கு திராவிட கட்சிகள் திணறிக் கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை மார்ச் 7 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறார். இதுகுறித்து சீமான் இன்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாம் தமிழர் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களமிறங்கும் என்றும் 117 தொகுதிகளில் ஆண்களும், 117 பெண்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார், “ எங்களது முன்னோர்களும் இந்நிலத்தில் எங்களுக்கு முன்பாக மாற்று அரசியல் முழக்கத்தை முன் வைத்தவர்களும் சமரசங்களுக்கு ஆட்பட்டு திராவிடக் கட்சிகளில் …
-
- 0 replies
- 587 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்! கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 ஆம் அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், இந்த இரு அணு உலைகளில் எதிர்வரும் 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் தலா 100 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கனவே 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225692
-
- 0 replies
- 642 views
-
-
‘ஆட்சியைக் கலைக்கவும் தயங்க மாட்டேன்!’ - எம்.எல்.ஏக்களிடம் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலை மனதில் வைத்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். 'எங்கள் ஆதரவை பா.ஜ.க நேரில் வந்து கேட்கட்டும்' என வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர் அவர் ஆதரவு எம்.எல்.ஏக்கள். இந்த ஆட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை. 'என்னுடைய தயவில்தான் ஆட்சி நீடிக்கிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள்' என எம்.எல்.ஏக்களை அவர் எச்சரித்திருக்கிறார். அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரனை இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். நா…
-
- 0 replies
- 380 views
-
-
என்ன செய்யப் போகிறது திமுக? ஸ்டாலின் - கோப்புப் படம் முதல்வர் பழனிசாமி அரசுக்கான ஆதரவை 19 எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக இரு அணிகள் இணைப்பை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவிடம் நேற்று முன்தினம் நேரில் கடிதம் அளித்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு…
-
- 0 replies
- 472 views
-
-
சென்னை குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காக, குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.117 கோடியே 15 லட்சம் செலவில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "குடிசைவாழ் ஏழை மக்களின் நலனுக்காக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை 1.31 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாறுபட்ட தட்பவெப்ப நிலை, குடியிருப்புகளை உபயோகிக்கும் தன்மை, சுற்றுப்புறச் சூழல், குடியிருப்பு தாரர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மாற்றம் மற்றும் ஆக்ரமணங்கள், மழை மற்றும் இயற்கைச் சீற்றம், …
-
- 0 replies
- 346 views
-
-
’நடக்கட்டும் பொதுவாக்கெடுப்பு; மலர்க தமிழ் ஈழம்’ ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் முழங்கிய வைகோ! ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ. ஜெனிவா க…
-
- 0 replies
- 393 views
-
-
டிஜிட்டல் பிட்காயின் மோசடி: தருமபுரி, கிருஷ்ணகிரியில் 40 பேர் புகார் - இருவர் கைது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பிட்காயின் அலுவலகத்தில் ஸ்ரீநிவாசன், அருண்குமார், பிரகாஷ் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரியில் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இரண்டு பேரை கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது இந்த மாவட்டங்களில்? தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள வசந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள பொருள…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
சித்தராமையா உத்தரவுப்படி சிறையில் சசிகலாவுக்கு வசதிகள்: உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறைத்துறை டிஜிபி முறையீடு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின்படியே சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தேன் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா, சிறையில் சசிகலாவுக்கு டிவி, கட்டில், மெத்தை, மின்விசிறி, உதவியாளர்கள் உள்ளிட்…
-
- 0 replies
- 415 views
-
-
மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு! ‘‘திடீரென குஷ்பு டாபிக்கல் ஆகிறாரே?” என்று கழுகாரைப் பார்த்ததும் கேட்டோம்! ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் வந்ததிலிருந்தே குஷ்புவுக்கும் அவருக்கும் ஆகவில்லை. இருவரும் மறைமுகமாக மோதிவந்தனர். இப்போது வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் திருநாவுக்கரசரின் செயல்பாடு பற்றி குஷ்பு விமர்சித்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகரில் நடந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ‘என்னைப் பதவியிலிருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். என்னை நீக்க அவர் யார்? குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈரோடு: திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என அக்கட்சியுடன்,ஆயுட்கால கால ஒப்பந்தம் போடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில், அக்கட்சியின் சார்பில் சேலம் மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திருமாவளவன்," கொள்முதல் உயர்வைக் காரணம் காட்டி பால் விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. நிபந்தனையின்றி தமிழக அரசு பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். கொள்கைகளில் முரண்பாடு இருந்தாலும் வடஇந்தியாவில் குறிப்பாக டெல்லியில் மாற்றுக் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது வழக்கமான நடைமுறை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு…
-
- 0 replies
- 344 views
-
-
ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, ஆயுர்வேதச் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ளார். புத்துணர்வு சிகிச்சைக்காகச் சென்றுள்ள அவருக்கு மூலிகை குளியல், ஆயில் மசாஜ், மூலிகை ஒத்தடம் எனப் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வெளி மாநிலங்களிலிருந்து மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ ஒவ்வொரு வருடமும் கேரளாவுக்குச் சென்று மூலிக…
-
- 0 replies
- 610 views
-
-
தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சே டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ஆம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடி அவர்களின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான். மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1200 பேர…
-
- 0 replies
- 354 views
-
-
"ஸ்டெர்லைட் ஆலை" விரைவில் திறக்கப்படும்.. அகர்வால் பரபரப்புத் தகவல். ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் ஆணையின்படி கடந்த மே மாதம் 28-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்ட…
-
- 0 replies
- 476 views
-
-
‘‘நான் ஒரு பெரியார்வாதி. தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் சுதந்திரம்’’ என்று பெரியார் பிறந்தநாள் விழாவில், குஷ்பு பேசினார். மகளிர் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடலில், பெரியார் பிறந்தநாளையொட்டி, ‘யுனெஸ்கோ’ பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் ‘மகளிர் கருத்தரங்கம்’ திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கை அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- நான் 29 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 13-ந்தேதி சென்னை வந்தேன். 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும் போது பேர், பணம், புகழ் வரும் போகும் என்று தெரிந்தது. சாதித்தது என்ன? என்று திரும்பி பார்க்கும…
-
- 0 replies
- 298 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன் , நளினி , முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அமைச்சரவையின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ள ஆளுனர் ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தெரிவித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என அதிகாரபூர்வமற்ற வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதேவேளை தன்னுடைய முடிவு குறித்து அரசுக்கு ஆளுனர் எழுத்துபூர்வமாக எதையும் இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #பேரறிவாளன் #ந…
-
- 0 replies
- 440 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது ஏற்புடையதல்ல- காங்கிரஸ் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/11/rajivu.jpg முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை அரசியல் காரணங்களுக்காக விடுதலை செய்ய கோருவது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஏழு பேரை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுவற்கு வாய்ப்பு உள்ள…
-
- 0 replies
- 739 views
-
-
கருத்து வேறுபாடு மு.க.அழகிரிக்கு அதிமுக மறைமுக ஆதரவு. கருணாநிதி அதிர்ச்சி. திமுக தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திமுகவிற்கு எதிராக செயல்பட தயாராக இருக்கும் அழகிரிக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்க அதிமுக உதவுகிறது என திடுக்கிடும் செய்தி வந்துள்ளது. இதனால் கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசில் இருந்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக விலகிய பின்னரும் திடீரென மு.க. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பை தொடருவதற்கு அதிமுக அரசு முடிவு எடுத்ததன் பின்னணியில் ஒரு தேர்தல் கணக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிற திமுகவின் முடிவால் கடும் அதிருப்தி அடை…
-
- 0 replies
- 490 views
-
-
எங்கள் தலைவர் இவர்களில் எவருமே இல்லை! - இளைஞர்கள் ஆதரவு யாருக்கு? அதிரடி சர்வே முடிவுகள்விகடன் டீம்படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.ரமேஷ் கந்தசாமி, தே.சிலம்பரசன், அ.குரூஸ்தனம் `யாரோ... ஏதோ ஆட்சி செய்கிறார்கள், என்னமோ பண்ணட்டும்!' என விலகி நின்று அரசியலை வேடிக்கை பார்த்த காலம் இல்லை இது. `எங்களுக்கும் அரசியல் தெரியும். நாங்கள் போராடத் தயார். எதிர்த்து நிற்போம்' என நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார்கள் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுப் புரட்சி முதல் இப்போதைய நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் வரை அனைத்தையும் முன்னெடுத்து, அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுசெல்பவர்களும் இளைஞர்களே! அதேசமயம், `எல்லாவற்றுக்கும் நாங்களேதான் போராட வேண்டும் எனில், எங்களால் தே…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்நாட்டின் `தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்` தி.மு.க. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆண்டு 1967. இப்போது - 2017 - அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலத்தையும் சேர்த்து, திராவிட இயக்கத்தின் ஐம்பதாண்டு கால ஆட்சி என குறிப்பிடப்படுகிறது. படத்தின் காப்புரிமைARUNSUBASUNDARAM Image captionஇந்தி எதிர்ப்புப் போராட்டம் உண்மையில் திராவிட இயக்கத்தின் சாதனைகளைச் சொல்ல வேண்டுமென்றால் நீதிக்கட்சிக் காலத்தில் இருந்துதானே சொல்ல வேண்டும். திராவிட இயக்க ஆட்சிகளின் சாதனையைச் சொல்லும்போது இரு பிரிவுகளாக பிரித்துக்கொள்ளலாம்: முதல் பகுப்பில் நீதிக்கட்சி 17 ஆண்டுகளும் தி.மு.க. 21 ஆண்டுகளும் ஆட்சி செய்திருக்கும். …
-
- 0 replies
- 550 views
-
-
தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவுள்ள ஓலா மின்சார இருசக்கர வாகனம்: என்ன முக்கியத்துவம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,OLA இந்தியாவின் முன்னணி வாடகை வாகன சேவை நிறுவனமான ஓலா, தனது மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பதற்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்து வரும் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலையில் இதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதாக ஓலா தெரிவித்துள்ளது. ரூ.499-க்கு மின்சார இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வாகனத்தின் விலை தற்போது சந்தையில் விற்பனையாகும் மின்சார இருசக…
-
- 0 replies
- 665 views
- 1 follower
-
-
காவிரி நதிநீர் வழக்கு விசாரணையின்போது, 'நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன்' என, தமிழக அரசைக் கண்டித்துள்ள உச்ச நீதி மன்றம், அடுக்கடுக்காக, சரவெடி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'நதிநீர் பங்கீடு தொடர்பான விபரங்கள் குறித்து விளக்குவதற்கு, வல்லுனர் குழுவை அழைத்து வர வேண்டும்' என, தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீரைப் பங்கிடுவது தொடர்பாக, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அமர்வு விசாரித்து வருகிறது. முதல்வர் சித்தர…
-
- 0 replies
- 675 views
-