Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த்தோ, அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஜயகாந்த் ஜாமீனில் வெளியே வரமுடியாத படி பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதையடுத்து, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் கடந்த 3ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்…

  2. திருச்சி: மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, அனைத்து பெட்டிகளும் பலத்த சோதனைக்கு பின்னர் சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது. மதுரையில் இருந்து இன்று காலை சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக திருச்சி ரயில் நிலைய மேலாளருக்கு நாகராஜ் என்பவர் செல்போன் மூலம் தகவல் சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டது. திருச்சியில் இருந்து வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை முழுவதுமாக சோதனை செய்தனர். அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாததால் அது வெறும் …

  3. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக குமரன் பத்மநாபனிடம் விசாரித்தால் பல தகவல்கள் வெளியாகும் என சென்னையை சேர்ந்த ஜெபமனி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் எதுவும் வரவில்லை என்று ஜெபமனி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. http://dinaithal.com/tamilnadu/16706-kp-padmanabha-inquire-at-the-rajiv-gandhi-assassination-case-the-petition.html

  4. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனு விசாரணையை முடக்கும் நோக்கம் கொண்டது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தயாளு அம்மாளை சிபிஐ அரசு தரப்பு சாட்சியாக சேர்த்துள்ளது. இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைவு என்றும் அவரால் எதையும் உணரக் கூட முடியாது என்றெல்லாம் கூறி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை சிப…

  5. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்(என்எல்சி) 5 சதவீத பங்குகளை தமிழக அரசு வாங்குவதாக கூறியிருப்பதை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களில் குறைந்தது 10 சதவீத பங்குகள் மக்களுக்கு விற்கப்பட வேண்டும் என்றும், இதை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம்(செபி) உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையை பின்பற்ற என்எல்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் 5 சதவீத பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. என்எல்சியின் 5 சதவீத பங்குகள் விற்பதன் மூலம் மத்திய அரசுக்கு ணீ466 கோடி கிடைக்கும். இதற்கிடையே, என்எல்சி பங்…

    • 0 replies
    • 474 views
  6. காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால், கணவருடன் வாழ்வது பற்றி முடிவு செய்வேன் என்று ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் தர்மபுரி பெண் வாக்குமூலம் அளித்தார். சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள் திவ்யாவும் (வயது 20), மகன் மணிசேகரும் கல்லூரி படித்து வருகின்றனர். இந்த நிலையில் திவ்யா கடத்தப்பட்டு, இளவரசன் (வயது 19) என்பவருடன் சட்டவிரோதமாக திருமணம் செய்ததைத் தொடர்ந்து எனது கணவர் நாகராஜ் கடந்த நவம்பர் 7-ந் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் திவ்யா தொடர்பு கொண்டு, இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித…

    • 0 replies
    • 558 views
  7. விடுதலை புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் போது, வைகோவின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது.http://www.dinaithal.com/tamilnadu/16628-reply-to-the-petition-against-the-ban-on-the-ltte-discount.html

    • 5 replies
    • 601 views
  8. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டதால், இலங்கைப் பிரச்சினையை தி.மு.க. மறந்து விட்டதாக சிலர் சொல்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மைதான். இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலையொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியோடு திமுக உறவு கொண்டுவிட்டது. இலங்கைப் பிரச்னையைக் கைகழுவிட்டது என்றெல்லாம் வெறுப்பு அரசியல் செய்கின்றனர் என்று கூறுகின்றனர். இலங்க…

    • 1 reply
    • 438 views
  9. ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரித்திருந்தாலும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி. சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தாலும் அதனுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டதால், இலங்கைப் பிரச்சினையை திமுக மறந்துவிட்டதாக சிலர் சொல்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மை தான். இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல…

  10. தமிழக சட்டசபையில் தே.மு.தி.க.வின் பலம் 29 ஆக இருந்தது. இதில் மாபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தரராஜன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 7 பேரும் பிரிந்து சென்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். அப்போது தொகுதி மேம்பாடு குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார்கள். நடந்து முடிந்த டெல்லி மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதையடுத்து 7 பேரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் ‘தங்களை ஏன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க கூடாது என்பத…

    • 0 replies
    • 420 views
  11. மார்க்சிய- பெரியாரிய சிந்னையாளர், தமிழீழ விடுதலை ஆதரவாளர், தமிழ்த் தேசியப் பற்றாளர், என பல தளங்களில் இயங்கிய, இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை சார்பில் இன்று மாலை மாலை 6.00 மணியளவில் சென்னை, வடபழனி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது . இவ்விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை ஏற்க , உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார் . இயக்குநர் வெ. சேகர், ஓவியர் புகழேந்தி, இயக்குநர் வ. கெளதமன், இயக்குநர் ம. செந்தமிழன், எழுத்தாளர் ப.ஜெயபிரகாசம் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர் . Photos http://www.dinaithal.com/cinema/16600-toda…

    • 0 replies
    • 521 views
  12. இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில் வரும் சாதி தொடர்பான காட்சிகளைக் கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து , தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டின் முன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.http://dinaithal.com/tamilnadu/16590-director-bharathi-raja-in-front-of-the-house-arpattam.html

    • 0 replies
    • 570 views
  13. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நீதிபதி அல்டமாஸ் கபீர் இருந்து வருகிறார். வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதில் புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணிபுரிகிறார். நீதிபதி பி.சதாசிவம் சுப்ரீம் கோர்ட்டின் 40-வது தலைமை நீதிபதியாவார். வருகிற 19-ந் தேதி அவர் பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நீதிபதி பி.சதாசிவம் 1949-ம் ஆண்டு …

    • 0 replies
    • 411 views
  14. காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளால் தனித்து விடப்பட்ட தே.மு.தி.க வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்றி பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தே.மு.தி.க. முடிவு எடுத்தால் நாட்டின் நலன் கருதி அதை கருத்தில் கொள்வோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் காங்கிரசோடு கூட்டணி அமைத்தாலும் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். தி.மு.க. 2004 முதல் 2013 தொடக்கம் வரை மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து, ஆட்சியில் பங்கு பெற்று இருந்தது. அந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களின் பேரழிவுக்கு காரணமாக இருந்ததை யாராலும் மறைக்க …

    • 0 replies
    • 335 views
  15. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, கடந்த 21–ந்தேதி மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்து இருந்தது. 5 சதவீத பங்கு விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.466 கோடி வருவாய் திரட்ட முடியும். இந்த முடிவுக்கு நெய்வேலி நிறுவன தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெறாவிட்டால், வருகிற 3–ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று, தொழிலாளர்கள் அறிவித்து உள்ளனர். தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நெய்வேலி நிலக்கரி ந…

    • 0 replies
    • 444 views
  16. சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்படவேண்டும், ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற சுயநலம் காரணமாகவே ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற இருக்கும் ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு பெற்றிருக்கும் தி.மு.க.வின் புதிய நாடகம், அரசியல் உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் கேலிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகி இருக்கிறது. ராஜ்ய சபை உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி…

    • 8 replies
    • 910 views
  17. கோவை: மேக மூட்டம் காரணமாக கொடநாடு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்து, பின்னர் கோவை சென்றது. கொடநாட்டில் ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு புறப்பட்டு சென்றார். சென்னை போயஸ் கார்டனில் இருந்து இன்று காலை 10 மணிக்கு காரில் மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து கொடநாட்டுக்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்தார். ஆனால், கொடநாடு பகுதியில் மேகமூட்டம் அதிகம் இருந்ததாலும், வானிலை சரியில்லாததாலும், ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்தது. பின்னர் கோவைக்குச் சென்றது ஹெலிகாப்டர். அங்கிருந்து முதல்வர் கார் மூலம் கொடநாடு வருவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கொடநாட்டில் சில வாரங்கள் அங்கு ஓய்வு …

  18. சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆட்சியரிடம், விவசாயி ஒருவர் தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு, ‘உனது விருப்பப்படி செத்து போ’ என்று ஆட்சியர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியை சேர்ந்தவர் ராமேஷ்வர் பன்ஜாரி. விவசாயியான இவர், தனது நிலத்திற்கு அருகே சாய ஆலை இருப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும், அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் ஆட்சியர் அகர்வாலிடம் மனு அளித்துள்ளார். மேலும், தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் இறப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் ஆட்சியரிடம் கூறியிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென ஆட்சியர் அகர்வால், "நீங்கள…

  19. பாமக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி பாமகவில் இருந்து விலகி, சென்னை போயஸ்கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.http://www.dinaithal.com/tamilnadu/16529-pmk-joined-the-aiadmk-former-federal-minister-ponnusamy.html

    • 0 replies
    • 527 views
  20. திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி, சென்னை போயஸ் கார்டனில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்தாக தகவல் வெளியாகியுள்ளது.திமுக ஆட்சியின் போது செய்தி விளம்பரதுறை அமைச்சராக பரிதி இளம்வழுதி இருந்தார். www.dinaithal.com/tamilnadu/16526-he-joined-aiadmk-former-minister-arc-ilamvaluti.html

  21. உத்தமபாளையம் மலை சூழ்த்த ஓர் அழகிய ஊர், இங்கு மக்கள் தொகை 22,104. 10%, 600 வருடம் பழமை கொண்ட இங்கு முஸ்லிம், ஹிந்து மற்றும் கிறிஸ்துவரும் வாழ்ந்துவருகின்றனர். தென்னகத்திலேயே தஞ்சாவுருக்கு அடுத்தபடியாக இங்குதான் நெல் அதிகம் விளைகின்றது. இதற்கு காரணம் இங்கு ஓடும் பெரியார் ஆறு, பெரியார் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு வந்து அணைத்து ஊர்களையும் செளிபடைய வைக்கிறது என்றால் அது மிகையாகாது! இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வருகிறனர், இந்தபகுதியில் நெல் மற்றும் இன்றி முக்கனியும் மா,பாழ,வாழை, திராட்சை, கொய்யா போன்ற பழங்களும் விளைகின்றன. இதுவே இங்கு வாழலும் மக்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கு ஆதாரமாகவுள்ளது. இங்கு பள்ளி, கல்லுரி, தாலுகா அலுவலகம், மற்றும் …

    • 0 replies
    • 634 views
  22. தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பிக் களின் பதவிக்காலம் முடிந்தை தொடர்ந்து.6 எம்.பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. மாநிலங்களஅவை தேர்தலில் 231 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மாலையில் எண்ணப்பட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட டி.ராஜா மற்றும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றுள்ளனர். பதிவான ஓட்டுகளில் ஒரு ஓட்டு செல்லாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் : அர்ஜுனன் - 36 லட்சுமணன் - 35 இளங்கோவன் - 22 கனிமொழி - 31 மைத்ரேயன் - 36 ரத்தினவேல் - 36 டி.ராஜா - 34http://dinaithal.com/tamilnadu/16517-the-upp…

    • 3 replies
    • 634 views
  23. தேனி அருகே கம்பம் நகரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க சதி செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. ஈழத்தமிழர்களுக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் எங்கள் கட்சி போராடி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை. எந்த அணியில் சேர்ந்து எம்.பி.யாக ஆனேனோ அந்த நன்றியை மறக்க மாட்டேன். தி.மு.க.வே எங்ளோடு கூட்டு வேண்டாம் என்று கூறினால் கூட அதைப்பற்றி நாங்கள் கவலை படமாட்டோம். என்றும் நாங்கள் த…

    • 0 replies
    • 327 views
  24. தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் தலைவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:- நடைபெற இருக்கும் ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு பெற்றிருக்கும் தி.மு.க.வின் புதிய நாடகம், அரசியல் உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் கேலிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகி இருக்கிறது. ராஜ்ய சபை உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்படவேண்டும், அதன் மூலம் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற இரு கட்சிகளின் சுயநலத்தைத் தவிர இந்த நிகழ்வுக்கு வேறு என்ன காரணம் இருக்க …

    • 0 replies
    • 408 views
  25. டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லி மேல்-சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து சமீபகாலமாக போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வாகி வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு சென்னை தலைமை செயலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை குழுக்கள் கூடும் அறையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 234 எம்.எல்.ஏ.க்கள் என்ற அடிப்படையில் அத்துடன் 10 சதவீதம் கூடுதலாக வாக்குச்சீட்டுகள் அச்சிடப்…

    • 0 replies
    • 326 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.