தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இக்காலக்கட்டங்களில் கடலில் மீன்பிடிக்க தமிழகம் முழுவதும் தடைவிதிக்கப்படும். இந்நிலையில் 45 நாட்கள் தடை காலம் முடிந்து இன்று அதிகாலை முதல் ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 800 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக நேற்று மீனவர் சங்க கூட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் அமிதாபா நந்தி பேசியதாவது:- மீனவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும். சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. மீன்பிடிக்க செல…
-
- 2 replies
- 541 views
-
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தி, வலைகளை அறுத்து எறிகின்றனர். இந்நிகழ்வுகளை, நான் பலமுறை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து இருக்கின்றேன். இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கை…
-
- 0 replies
- 452 views
-
-
தமிழகம்- கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட தாமதித்து வந்தது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு இதிலும் காலம் தாழ்த்தியதால் தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. கர்நாடகத்தில் தேர்தல் நடந்ததால் கண்காணிப்பு குழு அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்தி…
-
- 0 replies
- 311 views
-
-
கனிமொழி எம்.பி.க்கு முஸ்லீம் அமைப்பு ஒன்றின் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பபட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் பரபரப்பான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. உங்களிடம்தான் நிறைய பணம் உள்ளதே எங்கள் அமைப்பை வலுப்படுத்துவதற்கு அதில் குறிப்பிட்ட தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களது உயிருக்கு ஆபத்து என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எங்களது அமைப்பை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வலுப்படுத்த உள்ளோம். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறதை செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்…
-
- 3 replies
- 563 views
-
-
தே.மு.தி.க விஷயத்தில் ஜெயலலிதா செய்வது சரியா? ஒரு மாநிலத்தின் முதல்வரை எதிர்கட்சியினர் தன் தொகுதி நலனுக்காகவும், தனக்கு வாக்களித்த மக்களின் மேம்பாட்டிற்காகவும் சந்திப்பது சகஜம்தான். ஆனால், அது இப்போதல்ல..... முன்பு, அதாவது அரசியல் ஓரளவு நாகரீகமாக நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில். ஆனால் இப்போது அப்படி சந்திப்பது என்பது தீண்டத்தகாத காரியம் போல் ஆகிவிட்டது தமிழகத்தில். ஆளுங்கட்சியினரை இப்போது ஒரு எதிர்கட்சி எம்.எல்.ஏ.,சந்தித்தாலே ஆச்சர்யமாக பார்க்கப்படும் கால கட்டத்தில், இதுவரை எதிர்கட்சியான தே.மு.தி.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி வளர்ச்சி(?) பற்றி பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்ச…
-
- 1 reply
- 615 views
-
-
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலையாக இருக்கின்ற சூழ்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு எனவும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும் உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சுமத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, மார்ச் 16 முதல் பெட்ரோல் விலையை குறைத்துக் கொண்டே வந்துள்ளதோடு மட்டுமல்லாமல், மாதா மாதம் உயர்த்தி வந்த டீசல் விலையையும் மார்ச் இறுதியிலிருந்து கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைத்த மத்திய அரசு, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் டீசல் விலையை இரண்டு முறையும், பெட்ர…
-
- 0 replies
- 415 views
-
-
ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்த மலருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே நிறுவனத்தில் வேலை செய்த சேலத்தை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆஷா தன் வலையில் மலரை சிக்க வைத்தார். பின்னர் அவளை சேலத்துக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் ஆஷாவுடன் தொடர்புடைய திருப்பூர் அங்கேரி பாளையம் கோகுலம் தெருவை சேர்ந்த பிரபு (31), சேலம் வலையப்பட்டி பெருமாள் பாளையம் சக்திவேல் (34), மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த முகமது சபீதுல் (30) ஆகியோரிடம் மலரை ஒப்படைத்துள்ளார். அவர்கள் திருச்சிக்கு மலரை அழைத்து வந்து கற்பழித்து வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து …
-
- 0 replies
- 487 views
-
-
30th May 2013 இரு மாநில விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழகமும் கர்நாடகமும் காவிரி நீரை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். காவிரி நீர் பிரச்னையால் இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பண பலம் காரணமாகவே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டினார். புதிய அரசின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆறு மாதங்…
-
- 2 replies
- 558 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இந்த சந்தேகநபர்கள் 10 பேரும் 2002ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்…
-
- 0 replies
- 474 views
-
-
நெல்லை மாவட்டம், கண்ணன்குளத்தை சேர்ந்தவர் சந்திரபால். நாகர் கோவிலில் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது கியூ பிரிவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் இருந்து வந்த அவர் இன்று பணி ஓய்வு பெற இருந்தார். அவரை சஸ்பெண்ட் செய்ய உள்துறை செயலாளர் பரிந்துரையின் அடிப்படையில் காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை சென்றிருந்த அவரிடம் இது தொடர்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகின்ற சந்திரபால் மீது நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முகம்மது மசூது கொலைவழக்கு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்த…
-
- 0 replies
- 533 views
-
-
30th May 2013 புதுகோட்டை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறையில் இருந்து மீண்டு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் பலர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தோட்ட வேலைக்காக புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர். ஆலங்குடி அருகே பணியாற்றிய அவர்கள், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், 43 பழங்குடியின மக்களை மீட்டனர். அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. …
-
- 0 replies
- 508 views
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த கொண்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் மோகன்ராஜ் (42). இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்களுக்கு18 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். மோகன்ராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கூடாநட்பு இருந்துள்ளது, இதனால் கணவன் மீது வெறுப்படைந்த மஞ்சுளா கடந்த ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து சென்று தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். சமீபத்தில், மோகன்ராஜ் தனது மனைவி மஞ்சுளாவிடம் சென்று தான் திருந்தி விட்டதாகவும், இனி நான் உன்னோடுதான் இருப்பேன் என்றுகூறி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் மேலும், சொந்தமாக லாரி வாங்க கொஞ்சம் பணம் வேண்டும் என கூறி மஞ்சுளாவின் கழுத்திலிருந்…
-
- 6 replies
- 1.4k views
-
-
சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார பேரணியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு கூறியது. தாக்குதலில் அப்பாவிகள் இறந்ததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அடுத்த தாக்குதலுக்கு தயாராகி வரும் மாவோயிஸ்டுகள், காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்துள்ளதாகவும், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல் எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகள் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்…
-
- 7 replies
- 496 views
-
-
கர்நாடகத்தில் வறட்சி நிலவினாலும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணிரை கர்நாடக திறந்து விடாததால், தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் நாசமடைந்துள்ளதாகவும், இதற்கு நஷ்டஈடு கேட்டு அம்மாநில முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். காவிரியில் தண்ணீர் இல்லாத போதும், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடி வரும் வேளையிலும், உச்சநீதிமன்றத்தின் உத்திரவின் பேரில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில…
-
- 0 replies
- 391 views
-
-
சேலம்: சேலத்தில் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், திருமணம் நடந்த மறுநாளே மணப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், மல்லூரை அடுத்த வாணியம்பாடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் 20 வயது பிரியங்கா. வாணியம்பாடியை அடுத்த குலாளர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (30). பிரியங்கா சேலம் சக்தி கைலாஷ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். மூர்த்தி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கஞ்சமலை சித்தர் கோவிலில் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் …
-
- 0 replies
- 3.1k views
-
-
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயல் சின்னம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கொல்கத்தாவுக்கு தென் கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை, எண்ணூர், புதுச்சேரி, பாம்பன், கடலூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டது. இந்த புயல் சின்னம் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேச கடற்கரையில் விரைவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, நாகலாந்து ம…
-
- 0 replies
- 466 views
-
-
சென்னை: தாலி கட்டித்தான் திருமணம் செய்ய வேண்டும். சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் எனது காதலையும், காதலியையும் உதறி விட்டு பின்னர் தயாளு அம்மாளைக் கைப்பிடித்தேன் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், ராசேந்திரன், மைதிலி ராசேந்திரன் ஆகியோருடைய மகள் தென்றலுக்கும், திருச்சி மாவட்டம் காளிதாஸ், வேணி காளிதாஸ் ஆகியோரின் மகன் கருணாகரனுக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தின்போது கருணாநிதி சுயமரியாதைத் திருமணம் குறித்து விரிவாகப் பேசினார். கருணாநிதியின் பேச்சு... கோபாலபுரத்தில் உள்ள இந்த என்னுடைய இல்ல வாசலில் மாத்திரம் என் தலைமையில் சுமார் இரண்டாயிரம் திருமணங்…
-
- 1 reply
- 829 views
-
-
ஒரு இந்தி மொழி வெறியனுக்கு முன்னாள் தமிழக கிரிக்கெட் ஆட்டக்காரர் கொடுக்கும் பதில் செருப்படி. இப்படித்தான் ஒவ்வொரு தமிழனும் இந்தி மொழி வெறியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். தலைப்பாகை அணிந்த சிங்கு வெக்கமில்லாமல் பொய் சொல்கிறான் , இந்தியில் பேசினால் 99 விழுக்காடு மக்களுக்கு புரியுமாம் ! இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் இந்தியாவில் வெறும் 40 விழுக்காடு மட்டுமே . அதுவும் இந்தி ஒத்த பல மொழி பேசும் மக்களிடம் இந்தி தாய் மொழியாக திணிக்கப்பட்டது. சிங்கு சொல்கிறான் ஆங்கிலம் அந்நிய மொழியாம். பாவம் அவனுக்கு தெரியவில்லை இந்தியும் அந்நிய மொழி தான் என்று. அவனுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழக ஆட்டக்காரருக்கு நம் பாராட்டுகள்! Srikkanth gave a heavy dose to Sidhu....Naan Tamil Pesuna …
-
- 3 replies
- 874 views
-
-
இஸ்லாமியர்களை குற்றப் பரம்பரையினர் போல எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான விசாரணையைத் தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பிறகு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் சமீப நாட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த மல்லேஸ்வரம் குண…
-
- 1 reply
- 588 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் பேசியபோது, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்திற்கு அ இஅதிமுகவே மூல காரணம் என வாதிட்டார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 1986 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது 120 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1994 ஆம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் ச…
-
- 0 replies
- 372 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த வக்கீல் சாந்தகுமரேசன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள் அதிகம் உள்ளன. எனவே மீண்டும் விசாரித்தால் முழு விவரம் தெரியவரும். இல்லையெனில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வழக்கை போல ராஜீவ் கொலையும் "மர்ம"மாக இருக்கும். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. இயக்குநர்கள் க…
-
- 0 replies
- 563 views
-
-
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா தென் சென்னை மாவட்ட திமுக சென்னையில் பொதுக் கூட்டத்துடன் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 90வது வயது ஜூன் 3ம் தேதி பிறக்கிறது. இதையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் பாராட்டுரை வழங்குகிறார். கருணாநிதி கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி பேசுகிறார். இதில் திமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். மேலும், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம் மற்றும் சிறுகதைப் பூங்கா நூல்கள் வெளியீட்டு விழா வருகிற 2-ந்தே…
-
- 7 replies
- 809 views
-
-
இலங்கை தமிழர் பிரச்னை ஓர் உணர்வுப்பூர்வ பிரச்னை. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ் மண்ணில் எந்த ராணுவப் பயிற்சியையும் இந்திய ராணுவம் அளிக்காது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்தார். தஞ்சையில், புதுக் கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளம் ரூ.150 கோடியில் நவீனமயமாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் தஞ்சை விமானப்படைத் தளத்திற்கு வந்தார். அவரை இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே.ப்ரவுனி, தென்னக வான்படை தலைமை கட்டளை அலுவலர் ஏர்மார்ஷல் ஆர்.கே .ஜோலி, எஸ்பி தர்மராஜ், டிஆர்ஓ சுரேஷ்குமார் ஆகியோர…
-
- 1 reply
- 490 views
-
-
மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த விடயங்களுக்கு பொறுப்பாக ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி நியமிக்கப்பட்டமைக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நஜீப் ரசாக்கின் நேரடிப் பார்வையில், பிரதமர் அலுவலகத்தில் இந்தத் துறைக்கான துணை அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதை எந்த வகையிலும் தம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று மஇக-வின் தலைவரும் சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேலு பிபிசி தமிழோசையிடம் கூறினார். இது குறித்து தாங்கள் பிரதமர் நஜீப் ரசாக்குடன் விவாதித்திருந்தாலும், அவர் எவ்விதமான முடிவையும் வெளியிடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஹிண்ட்ராஃப் வேதமூர்த்தி ( பிரதமர் நஜீபுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னதா…
-
- 0 replies
- 536 views
-
-
திருச்சியில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:- திருச்சி தீரர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது. அண்ணாதுரை முதல் பல தலைவர்களும் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை திருச்சியில் தான் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ம.தி.மு.க. வும் முக்கிய முடிவுகளை திருச்சியில் இருந்து அறிவித்துள்ளது. மது அருந்துவோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலை நீடித்தால் வளமான தமிழகம் என்பது கேள்விக்குறியாகி விடும். இதுபோன்ற தொலை நோக்கு சிந்தனையில்தான் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்கள், நடை பயணம் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதை சிலர் கேலி செய்து வருகின்றனர். இலங்கையில் பொத…
-
- 0 replies
- 511 views
-