தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10249 topics in this forum
-
பிரிவு: அரசியல் கோவையில் திரும்புகிறது 1998’. கடந்த வாரத்தில் உளவுத் துறை அளித்த ஒற்றை வரி அலெர்ட் இது. கோவை மாநகரில் 1998-ல் நிகழ்ந்த மதக்கலவரத்தையும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. அந்த வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், உளவுத் துறையின் இந்த எச்சரிக்கை மக்களை அதிரவைத்துள்ளது. எச்சரிக்கை செய்யும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது? கோவை போத்தனூரில் ஒரு திருமண நிகழ்ச்சி. அதற்கு முந்தைய நாள் இரவு மண்டபத்தில் சிலர் சீட்டு விளையாடியபோது பிரச்னை வெடித்தது. முஸ்லிம்கள் சிலரும் அதில் இருந்ததுதான் விவகாரமானது. மறுநாள் 7-ம் தேதி காலை திருமண மண்டபத்துக்குள் நுழைந்த சிலர், அங்கு இருந்தவர்களை சரமாரியாகத் தாக்கி, மண்டபத்தில் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கர்நாடக சட்டப்பேரைவத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. கோலார் தங்கவயலில் பாஜக எம்.எல்.ஏ ஒய்.சம்பங்கியின் தாயார் ஒய்.ராமக்காவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதோல் தொகுதில் கன்னட மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள் போட்டியிடுகிறார். மளவள்ளி தொகுதியில் குமாரசாமி, கிருஷ்ணராஜ்பேட்டையில் வரதராஜே கெüடா, ஹங்கலில் பசவராஜ் வீரப்பஹிரேமணி, கல்கட்கியில் வீரேஷ், யம்கன்மார்டியில் மாருதி மல்லப்பாஅஷ்டகி, நாக்தானில் நாகேந்திரமாயாவம்ஷி, கம்பளியில் சிவக்குமார், தேவனஹள்ளியில் சந்திரம்மா, மாலூரில் வெங்கடேஷ் கெüடா, ஹெப்ப…
-
- 0 replies
- 316 views
-
-
சென்னையில் நடக்கும் ஐபிஎல் தொடரில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வழக்கறிஞர் புகழ்ழேந்தி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட எதிர்ப்பு தெரிவித்தவர்களின், தொலைபேசிகளை தனியார் துப்பரியும் நிறுவனம் ஒன்று நவீன உபகரணங்களை கொண்டு ஒட்டு கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர்கள் சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறையினரின் தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக புகழேந்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடையாள…
-
- 1 reply
- 902 views
-
-
பெங்களூரில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே குண்டு வெடித்ததால் 16 பேர் காயமடைந்தனர். இன்று காலை பெங்களூர், மல்லேஸ்வரம் அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி வேன் வெடித்ததில் 16 பேர் காயம் அடைந்தனர். முதலில் மாருதி வேனில் இருந்த எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்ட நிலையில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததாலேயே, கார்களும் சேர்ந்து வெடித்ததாக கூறப்படுகிறது. இந்ந்லையில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் நகர காவல் ஆணையர் ராகவேந்திரா ஔரத்கர், இது குண்டு வெடிப்பாகவே தோன்றுகிறது என்றார். இருப்பினும் சக்தி குறைந்த வெடிப்பு…
-
- 8 replies
- 991 views
-
-
தர்மபுரி வன்முறை: மாறும் அரசியல் முகங்கள் ஸ்டாலின் ராஜாங்கம் நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள்மீது வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் சாதி முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசை வலியுறுத்துவதைவிட நடைபெற்ற வன்முறையை முன்வைத்து சமூக அரங்கில் உருவாகிவரும் புதிய அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. தர்மபுரி வன்முறைக்குப் பாமகவின் சாதி அரசியலும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் கலப்புமணத்திற்கு எதிரான கருத்துகளும்தாம் காரணம் என்பதை முதன்…
-
- 0 replies
- 778 views
-
-
ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் பாஸ்டனில் நடத்தியதுபோல் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புனே, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், மும்மை நகரில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14069:ipl-match&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 479 views
-
-
பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தாசில்தார் மீது அவரது மருமகள் மதுரை கலெக்டரிடம் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் முத்திரைத்தாள் தாசில்தாராக இருப்பவர் ஞானகுணாளன். இவரது மகனுக்கும், போடியைச் சேர்ந்த குருசாமி மகள் லட்சுமிபிரியாவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக லட்சுமிபிரியா போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தாசில்தார் ஞானகுணாளன், அவரது மகன் ராம் ஜவகர் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், லட்சுமிபிரியா இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவில் "எனக்கும், ராம் ஜவகருக்கும் கடந…
-
- 0 replies
- 684 views
-
-
சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் …
-
- 0 replies
- 440 views
-
-
நாம் விரும்பாவிட்டாலும் தனிமனித வாழ்க்கையில் சில விசயங்கள் எப்படியோ நடந்துவிடுகின்றன. அரசியல், பொது விவகாரங்களிலும்கூட பல நேரங்களில் இது போல நேர்வது உண்டு. இந்திய தமிழ் மீனவர்களை கடல்நடுவில் வைத்து தாக்குவது, சுட்டுக்கொல்வது என இலங்கை அரச கடற்படையினர் நடத்தும் வன்செயல்கள் அண்மைக்காலமாக மீண்டும் அளவுகடந்து வருகிறது. குறிப்பாக, ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, தமிழகத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும் கைதுகளும் அரங்கேறிவருகின்றன. கடந்த மார்ச் 3ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர்.…
-
- 0 replies
- 395 views
-
-
டில்லி, நிஜாமுதீன் பகுதியில், பழமையான நினைவு சின்னங்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உயரமான கட்டடங்கள் கட்டவோ, ஏற்கனவே உள்ள வீடுகளில், மாடிகளை எழுப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில்தான், ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணிய சாமி, அவரது மனைவி ரெக்சேனாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து, 28 மீட்டர் தொலைவில், ஒரு வரலாற்று நினைவு சின்னம் உள்ளது. தொல்லியில் துறையின் தடையை மீறி, சாமியும் அவரது மனைவியும், தங்கள் வீட்டில் இரண்டாவது மாடியை எழுப்பவதற்கான பணிகளை துவக்கினர்.சட்ட விரோதமாக கட்டப்படும், இரண்டாவது மாடியை இடிக்கும்படி, தொல்லியல் துறை, கடந்த, 2ம் தேதி, சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து, சுப்ரமணிய…
-
- 0 replies
- 579 views
-
-
மைனர் பெண்ணை, "லாக்-அப்'பில் அடைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கருத்துத் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் பகுதியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, கடந்த, 7ம் தேதி, தன் வீட்டிற்கு அருகேயுள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, ஒரு நபர் அந்தச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். பாதிக்கப்பட்ட சிறுமியும், அவளின் பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முற்பட்டபோது, சிறுமி பல மணி நேரம், போலீசாரால், "லாக்-அப்'பில் அடைத்து வைக்கப்பட்டாள்.இதுபற்றிய விபரம், மீடியாக்களில் வெளியானதும், அந்த நேரத்தில், பணியில் இருந்த, பெண் போலீசார் இருவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அத்துடன், போலீஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர…
-
- 0 replies
- 356 views
-
-
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், நடத்தியவர்கள் கையை உடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார். புதுடெல்லியில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் அம்மாநில நிதி மந்திரி அமித் மித்ரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14035:mamtha-banarsi&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 481 views
-
-
தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் மருமகள் குரலில் பேசி கார் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர், மாவட்ட தி.மு.க. பொருளாளர் மிசா.பாண்டியன் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார். மு.க.அழகிரிக்கு இருக்கிற பிரச்னைகள் போதாது என்று, துரை தயாநிதியின் மனைவி அனுஷா பெயரைச் சொல்லி இன்னொரு பிரச்னை வந்துள்ளது. அழகிரியின் மருமகள் அனுஷா போல குரல் மாற்றிப் பேசி, தி.மு.க. முக்கியப்புள்ளிகள், தொழில் அதிபர்கள் சிலரிடம் அவசர உதவி என்ற பெயரில் பெரியளவில் மோசடி செய்ய முயன்றுள்ளது ஒரு கும்பல். இந்த விவகாரம் அங்கே சுற்றி இங்கே சுற்றி அனுஷாவின் காதுகளை எட்ட, அவர் பதறிப்போனார். அழகிரியின் ஆலோசனையின் பேரில், இதுதொடர்பாக அவசர அறிக்கை ஒன்று வெளியிட்ட அன…
-
- 0 replies
- 642 views
-
-
சென்னை: நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: தமிழகத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து, முதலமைச்சராகவே மறைந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு வைக்க வேண்டும் என்றும், இது குறித்த அறிவிப்பினை விமான நிலைய துவக்க விழாவிற்கு முன்பே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி; மாண்புமிகு மத்திய விமானப் போக்க…
-
- 0 replies
- 545 views
-
-
ராமேஸ்வரம்: மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாள் மீன்பிடிப்பதற்கான தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின், நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டுதோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடக்கும். இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குறைய தொடங்கியது. இதன் விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் குறைந்து போனது. ‘இதேநிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா…
-
- 0 replies
- 517 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனு நிராகரிக்கப்பட்டு உள்ள நிலையில் அது தொடர்பான மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தங்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் மனு இன்று மத்திய தகவல் அறியும் ஆணையம் விசாரிக்க உள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்கம் கேட்டு ஆணையத்துக்கு பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பேரறிவாளன் கருணை மனுவை 2012 ல் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். பேரறிவாளன் வேலூர் சிறையில் உள்ளார…
-
- 0 replies
- 620 views
-
-
மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஈழத்தில் வதைபடும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை தனித் தமிழீழ ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கோரிக்கைகளாக உருப்பெற்றுள்ளன. இதன் தாக்கத்தையும் வீரியத்தையும் அலசும் முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்த்துவிடுவோம். இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முகாந்திரத்தில் தமிழர்களைக் கொன்று எஞ்சியவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய ராஜபட்சே அரசு, 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்தது. அதன் பிறகு போர் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போன்ற மா…
-
- 2 replies
- 864 views
-
-
தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது, திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்திய திருத்தங்களை செய்யாத இந்திய அரசுக்கு கண்டனம் ஆகியவற்றை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் …
-
- 0 replies
- 691 views
-
-
இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக உறுதி செய்ததை எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். தமிழக மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளில் உவகை நிறைந்த உள்ளத்தோடு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷு புத்தாண்டு: மலையாளப் புத்தாண்டான விஷு கொண்…
-
- 0 replies
- 364 views
-
-
தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டுமானால், வலுவான மாநில கட்சிகள் அவசியம். தேசிய அளவிலும் மாநிலக்கட்சிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்தால்மட்டுமே மாநில நலன்களை பாதுகாக்க முடியும். மாநிலக்கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய வரலாற்று தேவை மலர்ந்து வருகிறது. தேசிய அளவில் 3-ஆவது அணி ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப், உத்திரபிரதேசம் உ…
-
- 3 replies
- 995 views
-
-
தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும் அழகி போட்டியல்ல,'' என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.மத்திய, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஜெய்ராம் ரமேஷ், குஜராத் மாநிலம், ஆனந்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலில், காங்., சார்பில், ராகுலும், பா.ஜ., சார்பில், நரேந்திர மோடியும், பிரதமர் வேட்பாளர்களாக, முன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என, கேட்கப்படுகிறது. தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும், அழகி போட்டி அல்ல.அமெரிக்காவில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், இரு நபர்களுக்கு இடையேயானது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல், இதைப் போன்றதல்ல. அரசியல் க…
-
- 1 reply
- 373 views
-
-
''மதுரை தி.மு.க-வுக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்ம நாவல் படிப்பதைப் போல விறுவிறுப்பாக இருக்கிறது. கடந்த 6-ம் தேதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கோ.சந்திரசேகரன், பொதுக் குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி சந்தானம், ஆடுதுரை, எஸ்.சுரேந்தர், வரிச்சியூரைச் சேர்ந்த எஸ்.முருகன் ஆகியோர் மீதான நடவடிக்கை, கடந்த 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 'இவர்கள் அனைவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவர் கலைஞர் அவர்களிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டு இன்று முதல் தொடர்ந்து கழகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று, அன்பழகன் அ…
-
- 0 replies
- 875 views
-
-
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி. உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக அழகிரி ஆதரவாளர்கள் நோட்டீஸ் வாங்கிப் பரிதவித்து நின்ற வேளையில்... ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை ஒரே நாளில் வாபஸான விவகாரம் தி.மு.க-வில் பலத்த அதிருப்தியை விதைத்திருக்கிறது. மதுரையில் மையம்கொண்டு நடக்கும் அரசியல் மாநிலத்தையே சலசலப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது'' என்றும் சொன்ன கழுகார், முதலில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கைப் பற்றி ஆரம்பித்தார். ''கடந்த புதன்கிழமை அன்று அட்டாக் பாண்டி ஆட்கள் சந்தோஷத்தில் திளைத்தனர். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைக்கிறது என்றால் சும்மாவா? பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய 18 பேரில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழம் ஒரு இனத்தின் வரலாறு தொடர் - மக்கள் தொலைக்காட்சியின் ஒரு சிறந்த முயற்சி. தமிழினத்தலைவர் என்று சொல்லிக்கொண்டாலும் கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகளில் கடுகளவு கூட ஈழம் பற்றிய செய்திகள் வந்துவிடாமல் மறைத்த கட்டங்களிலு கூட 2009 காலத்தில் மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் பற்றிய செய்திகள் வெளியாகின. தற்போது தினமும் ஈழம் ஒரு இனத்தின் வரலாறு என்ற காட்சித்தொடர் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30க்கு வெளியாக உள்ளது. மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள். (முகநூல்)
-
- 0 replies
- 575 views
-
-
கருணை மனுவை தாமதமாக நிராகரித்த காரணத்துக்காக ஒருவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது என்று புல்லர் என்பவரின் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) முக்கியமான ஒரு தீர்ப்பை அளித்துள்ளது இந்த தீர்ப்பு ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீடு செய்திருக்கும்; முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 தமிழர் நிலை என்ன என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அவர்களும் இதே காரணத்தின் அடிப்படையிலேயே தமது மேல்முறையீட்டை செய்துள்ளனர். இந்திய பயங்கரவாத எதிர்ப்பு படையின் தளபதி ; மனீந்தர் சிங் பீட்டாவை கொலை செய்யும் நோக்கில், 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மர…
-
- 0 replies
- 1k views
-