தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
கோவை: அணியாகப் போட்டியிட்டு திமுக, அதிமுகவை வீழ்த்தி பேரூராட்சியை கைப்பற்றிய சுயேச்சைகள் மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக, அதிமுக என்கிற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி கோவை மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சியும் ஏழு நகராட்சிகளையும் 31 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியு…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணித்தேன்: எம்எல்ஏ அருண்குமார் கோவை எம்.எல்.ஏ. அருண்குமார். அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் தான் வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) காலை கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுகவை உருவாக்கி வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என யாரும் கட்சியில் குடும்பத்தை புகுத்தவில்லை. ஆனால், தற்போது அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் மிகுந்துள்ளது. அதனால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கிறேன்…
-
- 0 replies
- 225 views
-
-
தென்காசி தீண்டாமை வீடியோ: நாட்டாமை உட்பட இருவர் கைது - நடந்தது என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தென்காசி தீண்டாமை வைரல் வீடியோ தென்காசியில் ஊர்க்கட்டுப்பாடு விதித்து தீண்டாமை பின்பற்றுப்படுவதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஊர் நாட்டாமை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மாட்டோம் என வன்கொடுமையை தூண்டும் விதத்தில் வீடியோ பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிர…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடகாவில் நீர் இல்லாததால் தமிழகத்துக்கு நீர் தர முடியவில்லை எனக் கூறி தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடகா. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி செய்தியாளர் 15 ஆகஸ்ட் 2023, 02:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவையும் மீறி, தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடகா. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் விடை தேட உச்சநீதிமன்றம் சென்றுள்ளது தமிழக அரசு. தமிழகத்துக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை கிடைத்திருக்க வேண்டிய க…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் - மாஃபா பாண்டியராஜன் சூசகம் மாஃபா பாண்டியராஜன் | படம் உதவி: மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் பக்கம். ‘ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. விரைவில் சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும்’ என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘அம்மா கல்வியகம்’ என்ற இணையதளத்தை தனது வீட்டில் நேற்று தொடங்கி வைத் தார். அதன்பின் நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியதாவது: நாட்டிலேயே முதல்முறை யாக, இலவசக் கல்வி இணைய தளத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங…
-
- 0 replies
- 225 views
-
-
பதவி இருந்தவரை ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்? - ஸ்டாலின் கேள்வி “பதவி இருந்தவரை ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்?” என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி ரூபாயைக் கட்டியாக வேண்டும் என்பதுதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தியாவின…
-
- 0 replies
- 225 views
-
-
சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் யோசனை?! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொஹத்கி யோசனை வழங்கியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை தீர்மானிக்க சிறப்பு கூட்டத்தொடரே வழிவகுக்கும் என முகுல் ரொஹத்கி கூறியுள்ளாராம். ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டதின் பேரில் தலைமை வழக்கறிஞர் இந்த யோசனையை வழங்கியிருப்பதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்பது நல்லதுதான். ஆனால், நீண்ட நாட்களுக்கு காத்திருப்பது ஏற்புடையதல்ல என முகுல் ரோஹத்கி கூறியுள்ளதாக தகவல். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக…
-
- 0 replies
- 224 views
-
-
முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். சென்னை: தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு செய்தது. இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாள…
-
- 0 replies
- 224 views
-
-
சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கும், சிகிச்சை மற்றும் மாத்திரை பெற வருபவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்…
-
- 0 replies
- 224 views
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில், நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகிலேயே, ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். அதே பகுதியில், வெல்டிங் கடை, ஹோட்டல், வாட்டர் கம்பெனி மற்றும் குடியிருப்புகள் இருந்துள்ளன. ரவி, வழக்கம் போல் பட்டாசு குடோனில் பட்டாசுகளை பேக்கிங் செய்துள்ளார். அப்போது அவரது மனைவி ஜெயஸ்ரீ, குழந்தைகள் ருத்திகா,ருத்தீஸ் ஆகியோர் இருந்துள்ளனர். நடந்தது என்ன? இன்று காலை,9:30 மணி அளவில் திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து ச…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் பாஸ்கரனிடம் ஒப்படைப்பு ! சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்துவிட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக இலஞ்ச ஒழிப்பு துறைக்கு பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்ற ஆர்வலர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், காலணிகள், கடிகாரங்கள் உள்ளிட்ட 28 வகை பொருட்களை ஏலம் விடுவதற்கு ஏதுவாக கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை, …
-
- 0 replies
- 223 views
-
-
வேப்பங்கொட்டையால் விபரீதம் : மின்னல் தாக்கி சகோதரிகள் பலி..! 24 AUG, 2025 | 09:19 AM தமிழகத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9), அஸ்பியா 9ம் வகுப்பும், சபிக்கா 5ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று சனிக்கிழமை (23) பாடசாலை விடுமுறை என்பதால், ஊருக்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் தாயாருடன் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்றுள்ளனர். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மதியம் திடீரென மழை மேக…
-
-
- 2 replies
- 223 views
- 2 followers
-
-
ஆளுநரிடம் என்ன பேசினார் சசிகலா...? கோட்டை வாசலில் அவிழ்த்து விடப்போகும் 'அரசு' என்னும் காளையை யார் பிடிப்பது என்கிற 'மல்லுக்கட்டு' போட்டியால் ஒட்டுமொத்த தமிழகமும் தறிகெட்டுக் கிடக்கிறது. ஓர் இரவில் இதுவரை இல்லாத புது மனிதராக மாறி நிற்கிறார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். 128 சட்டமன்ற உறுப்பினர்களும் என் பக்கம்தான்' என்கிறார் சசிகலா. இருவரையும் அழைத்துப் பேசி ஒரு முடிவுக்கு வர முடியாமல் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ். இனி தமிழகத்தில் என்ன நடக்கும்? மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? இதுவே தமிழகம் முழுவதும உள்ள மக்கள் அனைவரிடமும் உள்ள கேள்வி. சசிகலா - ஆளுநர் சந்திப்பு! மும்பை…
-
- 0 replies
- 223 views
-
-
வட மாநில தொழிலாளர்கள் சர்ச்சை: பொருளாதார ஏற்றத்தாழ்வு வடக்கு, தெற்கு மாநிலங்கள் இடையே அதிகரிப்பது தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துமா? சிவகுமார் ராஜகுலம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் பக்க விளைவாக புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்கள் பணிபுரியும் மாநிலங்களில் தாக்குதலுக்கு இலக்காவதாக எழும் கு…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்! இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மா…
-
- 1 reply
- 222 views
-
-
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டத்தை ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு து.ரவிக்குமார் வேண்டுகோள் 109 Views கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நலத்திட்டத்தை இந்தியாவிலிருக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் து.ரவிகரன் அவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான மிகச் சிறந்த திட்டமொன்றைத் தங்களுடைய தலைமையிலான அரசு அறிவித்திருப்பது பாரா…
-
- 0 replies
- 222 views
-
-
இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. தொண்டர்கள் அணி மனு அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணியினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர். புதுடெல்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணியினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தன. இரு அணிகளும் இரட்டை இ…
-
- 0 replies
- 222 views
-
-
திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டம் - பின்னணி என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FERNANDO தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி போராட்டம் நடப்பது ஏன்? இது குறித்து அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். இதன்படி, இலங்கைத் தமிழர்கள் 104 …
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
நிர்மலா சீதாராமன்: ரேஷன் கடையில் நரேந்திர மோதி படம்; கலெக்டருடன் அமைச்சர் வாக்குவாதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER @NSITHARAMANOFFC பிரதமரின் படத்துடன் கூடிய ஒரு பேனரை எங்கள் ஆட்கள் வைப்பார்கள். ஒரு மாவட்ட ஆட்சியராக அதற்கு சேதமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இல்லாவிட்டால் நானே, இங்கு பேனர் வைப்பேன் என்று பேசியுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏன் இப்படி பேசினார்? என்ன நடந்தது? இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, ஆட்சியரிடம் தொடர்…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில் நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அமித் ஷா முருகனை குறிவைத்து சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் பலன் இருக்குமா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையி…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார். இதன் மூலம் 13,988 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க இது உதவும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 'தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழ…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
நோய்வாய்பட்ட தந்தையை மூன்று கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற மகன்: காரணம் என்ன? 42 நிமிடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடிகளான காணி இன மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி செய்யப்படாததால் மலை வாழ் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சாலை வசதி இல்லாததால் நோய்வாய்பட்ட தந்தையை காப்பாற்ற அவரது மகன் மூன்று கிலோமீட்டர் தூரம் தோளில் மருத்துவமனைக்கு சுமந்து சென்ற நிலையில் உரிய நேரத்திற்கு சென்று சேராததால் தந்தை உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடிய…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஆளும் தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சற்று முன்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் அருள் என்பவரைத் தவிர மற்ற 6 பேரின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கிராம…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
டெல்லியில் ஒரே நேரத்தில் அதிமுக அணிகள் முகாம் - கட்சி எங்களிடம்தான் இருக்கிறது: ஓபிஎஸ் கோப்புப் படம் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மனுத்தாக்கலில், அதிமுக இரு அணிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதே நேரம், ‘‘அதிமுகவில் பிளவு இல்லை. ஒன்றாக அதுவும் எங்களிடம்தான் இருக்கிறது’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டுக் கொண்டார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, …
-
- 0 replies
- 220 views
-
-
கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில்... 3-ஆவது நாளாக, கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ ! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. குறித்த காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள் தீயில் கருகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த்யு காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் முயற்சிக்கு செய்துவரும் அதேவேளை காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டுத்தீ காரணமாக தோகைவரை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறன. https://athavannews.com/2022/1271622
-
- 0 replies
- 220 views
-