Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தாக்கப்பட்டது மார் 15, 2013 திருச்சி உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தமிழ் உணர்வாளர்களினால் சற்றுமுன்னர் தாக்கப்பட்டுள்ளது. தொடரும் தமிழகத்தின் மாணவர் போராட்டங்கள் இன்று நான்காவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.sankathi24.com/news/28002/64//d,fullart.aspx

  2. ஜட்டி பனியனுடன் வாருங்கள் அனுமதி தருகிறேன்:-கல்லூரி முதல்வர். [வீடியோ ] விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மேலும் பல மாணவர்கள் கல்லூரியின் முதல்வரிடத்தில் அனுமதி கோரி சென்று உள்ளனர் , அதற்கு அக்கல்லூரியின் முதல்வர் அனுமதி மறுத்தது மட்டுமின்றி அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் என்று ஏகத்தாளமாக பதில் கூறியிருக்கிறார் , மேலும் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பேன் , மடிக்கணினி தரமாட்டேன் , டீசீ யை கிழித்து விடுவேன் என்றும் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்தி வருகிறார்…

    • 0 replies
    • 1.8k views
  3. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தினார். இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக தலைவர்டி.ராஜேந்தர் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி, உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்ச நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா, உன்ன தண்டிக்காம விடாது ஐநா! இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான், அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே, ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் …

  4. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை. இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களின் கொந்தளிப்பு தணியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திங்கட்கிழமை வகுப்புகளை புறக்கணிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர் http://www.dinaithal.com/index.php?option=com_content&view=artic…

    • 4 replies
    • 804 views
  5. கருணாநிதியின் கபட நாடகம்! -பழ. நெடுமாறன்- தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்த…

  6. கோரிக்கையோடு,பொது வாக்கெடுப்பு கேட்டு போராடி வரும் மாணவர்களின் போராட்டம் வலுப்பெறுகிறது . நேற்று மாலை திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 4 நாட்களாக திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களே வீதி மறியல், தபால் நிலைய முற்றுகை, தொடர் வண்டி முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தினார்கள். மாலை 3 மணியளவில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முற்பட்டபோது விமானநிலைய காவல் துறையினர் பிரதான சாலையை அடைத்து வைத்திருந்தனர். மாணவர்கள் அதனை மீறி செ…

    • 0 replies
    • 568 views
  7. மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களை துரத்தி வந்து இலங்கை கடற்படை கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கியது. மீனவர்கள் 53 பேரை சிறை பிடித்துச் சென்றதோடு 9 படகுகளையும் பிடித்துச் சென்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்தபோது, நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகள் மற்றும் 19 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றனர். இவர்கள் தலைமன்னார் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மீன் பிடித்து முடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவை தாண்டி கரையை நோக்கி வந்து கொண்டிருந…

    • 1 reply
    • 782 views
  8. இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த கலைஞர் கருணாநிதி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி புதுக்கோட்டையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அரசு மன்னார் கல்லூரி மாணவர்களை புதன்கிழமை சந்தித்து வாழ்த்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியது ; இந்த அறவழிப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. டெசோ அறிவித்த வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதா என்பது குறித்து பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அது படுதோல்வி அடைந்ததை வழக்கம் போல உண்மையைத் திரித்துப் பேசும் கருணாநிதி…

    • 0 replies
    • 666 views
  9. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=94208

  10. சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் மனுவில் கையெழுத்துப் பெறும் இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர். இலங்கைத் தமிழர்கள் தொடர்பான எட்டுக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய உண்ணாவிரதத்தை கடந்த 11ம் தேதியுடன் முடித்துக் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்கள், தற்போது அடுத்த கட்டப் போராட்டத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தைப் போல், தற்போது தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கமும் மாநிலம் முழுவதும் பரவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நான்கு மாண…

  11. இலங்கைக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்ற…

  12. பல இன்னல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும் எம் தமிழக உறவுகளான மாணவர்கள் தமிழீழத்தில் வாழும் தம் தொப்புள்கொடி உறவுகளுக்காக தமிழகமெங்கும் பரவலாக முன்னெடுத்து வரும் உண்ணாநிலைப் போராட்டங்கள் புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களாகிய எம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வால் ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளோம் என்ற உணர்வை மீண்டுமொரு முறை ஊட்டியுள்ளது. பல்லாண்டு கால எமது விடுதலைக்கான போராட்டத்தில் மிக முக்கியமானதொரு படிக்கல்லாகவே உங்களது இப்போராட்டத்தினை புலம்பெயர்ந்து வாழும் மாணவர் சமூகத்தினராகிய நாம் கருதுகின்றோம். வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு ஈழத் தீவின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த தமிழினம், படிப்படியாக சிங்கள இனத்தால் ஒதுக்கப்…

  13. இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்இ இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்ற சிம்புஇ அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடுஇ மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் என ஆறுதலும் கூறியுள்ளார்…

  14. உலக வரலாற்றில் இதுவரை சர்வதேச சமூகம் கண்டிராத இனப்படுகொலையை கடந்த 2009ம் ஆண்டில் சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் இழைத்து உள்ளது. பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரை பாதுகாக்க ஓடிவந்த எம்மக்களை சிங்கள அரசு கொன்றொழித்தது. திட்டமிட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக மெளனமாக இருந்து அங்கீகரித்து வருகிறது என்பது தான் சோதனையான உண்மை. சென்ற நவம்பர் 2012 ஆம் மாதம் ஐ.நா. பெருமன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் இந்தியா இறுதி நேரத்தில் வலியுறுத்தி செய்த திருத்தங்களால் அத்தீர்மானமே வலுவற்று போனது. தற்போதும் அமெரிக்கா தாக்கல் செய்து இருக்கின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் உண்மையில் …

  15. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நடிகர் சிலம்பரசன்.

  16. இலங்கைத் தமிழர்களுக்குஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே சில நாள்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் தமிழக காவல் துறையினர் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் முக்க…

  17. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று தங்க பத்தகம் வாங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பேரறிவாளன். அவர் சிறையில் இருந்து கொண்டே மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆதரவுடன் சிறை துறை நடத்தி வரும் டிடிபி டிப்ளமோ படிப்பு படித்து வந்தார். அவர் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்று சிறை துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு எழுதிய 185 கைதிகளில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவி…

    • 7 replies
    • 753 views
  18. காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இலங்கைக்கு சொந்தமான சரக்கு கப்பல் காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ளது. அந்த கப்பலை காரைக்கால் மார்க் துறைமுகத்திற்குள் அனுமதித்த இந்திய அரசையும், துறைமுக நிர்வாகத்தையும் கண்டித்து துறைமுக வாயிலில் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் எம்.நைனாமுஹம்மது தலைமை யேற்க, மாவட்ட தலைவர் ஐ.அப்துல்ரஹீம், மாவட்ட த.மு.மு.க செயலாளர் எம்.முஹம்மது நஜிமுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்ப…

  19. தி.மு.க.வுக்கு ரூ.50 லட்சம் தேர்தல் நிதி கொடுத்த காங்கிரஸ் எம்.பி! தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு. தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூண், தி.மு.க.வுக்கு தேர்தல் நிதியாக ஐம்பது லட்சத்தை வாரி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மாநிலம் முழுவதும் முழு வீச்சில் தேர்தல் நிதி திரட்டி வருகிறது தி.மு.க. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூணை சந்தித்த தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா, அவரிடம் ஐம்பது லட்சம் தேர்தல் நிதியாக கேட்டாராம். கட்டாயம் அதை தருவதாக சொல்லி அவரை வழியனுப்பிய ஆரூண், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட நகர, ஒன்றிய தி.மு.க. செயலாளர்களை அழைத்து ஆளுக்கு மூன்று லட்சம் வீதம் தேர்தல் நிதி வழங்கி ரசீதை போட்டு வாங்கி இருக்கி…

  20. பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாநிலை [படங்கள்] திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக திருச்சி-புதுகை சாலையில் உண்ணாநிலை அறப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். மாணவிகளே பெரும்பான்மையாக பங்கேற்று உள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13346:barathithasan&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 350 views
  21. இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், 'காதற்ற ஊசியாக' காங்கிரஸ் மாறி வெகுநாள் ஆகிறது. சென்னை கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதக் களத்துக்கு அசட்டுத் துணிவோடு சென்ற காங்கிரஸார், அவமானப்பட்டது சமீபத்திய காட்சி! தி.மு.க-வின் நடவடிக்கைகளோ - 'வேலிக்கு ஓணான் சாட்சி'! இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது 'அரை நாள் உண்ணாவிரதம்' இருந்துவிட்டு, 'போர் முடிந்தது' என்று வீடு திரும்பிய அதே தலைவர், இப்போது 'டெசோ’ சார்பில் டெல்லியில் கருத்தரங்கம், தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் என்று புதிய பூச்சாண்டி காட்டுகிறார். எரிவதைப் பிடுங்கினாலே, கொதிப்பது தன்னால் அடங்கும் என்று நன்றாகத் தெரிந்தும்கூட, கொழுந்துவிடும் நெருப்புக்குக் காவலாக நின்றபடி... 'கொதிக்கிறதே... கவ…

    • 3 replies
    • 981 views
  22. தனித்தமிழீழ வாக்கெடுப்பு நடத்தகோரியும்,சிறீலங்கா அரசினை கண்டித்தும் கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி 40 மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் ஜான்பீட்டர் இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். கண் பார்வையற்ற நிலையிலும் தமது இன உணர்வு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/27965/64/40/d,fullart.aspx

  23. ஈழத் தமிழருக்காய்,இங்குள்ளத் தமிழருக்காய், தமிழினத்தின் விடியலுக்காய் களம் காணும் மாணவர்க்கு ஆதரவு அளித்திட அன்புக்கரம் நீட்டிட.இடிந்தகரை கூடங்குளம் பகுதி வாழ் பெண்கள் பிஞ்சுக் குழந்தைகள் நடத்தும் சிறப்பு உண்ணாநிலைப் போராட்டம் இடிந்தகரைப் போராட்டப் பந்தலில் பங்குனி முதல் நாள் (மார்ச் 14 2013) வியாழனன்று காலை 10 மணி முதல் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. http://www.sankathi24.com/news/27963/64//d,fullart.aspx

  24. மதுரையை குலுக்கியது மாணவர்கள் பேரணி [படங்கள்] ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று காலை பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார்கள் இதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட பேரணி மதுரையை குலுக்கியது, சமிபகாலங்களில் மதுரையில் நடந்த மிக பெரிய தன் எழுச்சி பேரணி இது மட்டுமே. கோரிக்கைகள் : 1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே 2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை. 3. சர்வதேசவிசாரண…

    • 0 replies
    • 346 views
  25. கச்சதீவில் வைத்து இந்திய மீனவர்கள் 60 பேர் இன்று (14) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பன் மீனவர் சங்க தலைவர் யூ. அருளாயனந்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மீனவர்கள் 20 பேர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் யூ. அருளானந்தம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நேற்று (13) இரவு 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கை கடற்படையினரால் 79 மீனவர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.