தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10247 topics in this forum
-
' ஆவணங்களைக் கொடுங்கள்' -சசிகலாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம் ' தமிழக முதல்வர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர்ந்து கொண்டிருக்கிறார்' என வட இந்திய ஊடகங்கள் வரையில், விவாதங்களைத் தொடங்கியுள்ள சூழலில், ' அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சசிகலாவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடவே, ' இரட்டை இலை சின்னத்துக்கு யாராவது உரிமை கொண்டாடினால், ஏற்கக் கூடாது' எனவும் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் சசிகலா எதிர்ப்பு அணியினர். சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் நிர்வாகிகளால் முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. தற்காலிக பொதுச் செயலாளராக பதவியேற்றவர், ' பொதுக்குழு…
-
- 1 reply
- 644 views
-
-
' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?' -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி? எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரேநேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். " இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கிறது. இதில், பிரதமரின் கோபத்தைத் தணிக்கும் வகையில் தூதுவர் மூலமாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டு வருகின்றனர் சசிகலா குடும்பத்தினர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'வறட்சி நிவாரணம் உள்பட தமிழக மக்களின் நலன்கள் தொடர்பாக விவாதித்தேன்…
-
- 0 replies
- 415 views
-
-
இந்தப் படத்தில் உள்ளதே இரண்டே இரண்டு சொற்கள்தான்..இரண்டு சொற்களுமே கொலை செய்யப்பட்டுள்ளன..இந்தாள் செந்தமிழ் மாநாடு நடத்துவது தமிழை வளர்ப்பதற்கா அல்லது அதைச் சாட்டித் தான் கொள்ளையடிப்பதற்கா??..இவரெல்லாம் செந்தமிழ் மாநாடு நடத்தவில்லை என்று யார் அழுதது??..'' சூரியணே'' என்பதைப் பார்த்து சூரியனுக்குக் கோபம் வந்தால் இவர் கதி என்ன?? எழுதியவருக்கே இவரை ''ஓய்வறியா சூரியனே'' என்று எழுத மனம் இடம் கொடுக்காமல் '' ஓய்வரியா சூரியணே '' என எழுதிவிட்டார் போல.. https://www.facebook.com/pongowrie
-
- 2 replies
- 737 views
-
-
' கடைசி நிமிடத்தில் கண்டெய்னர் கடத்தல் ஏன்?' -எகிறும் 8 ரகசியங்கள் திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட மூன்று கண்டெய்னர்கள் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. 'பிடிபட்ட அன்றே எஸ்.பி.ஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் வெளியூருக்கு தப்பிச் சென்றது ஏன்?' என அதிர வைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள் சிலர். கோவை, ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை, திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தார். அதிகாரிகள் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்? என்று தெரிந்ததும் மூன்று லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன. அந்த வாகனத்தை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ' ரிசர்வ் வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
' கருணாநிதியை ஏன் வாழ்த்தினார் திரௌபதி மர்மு?' - பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் தேர்தல் சீக்ரெட் #VikatanExclusive இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ' பா.ஜ.க வேட்பாளர் யார்? எதிர்க்கட்சிகள் யாரை முன்னிறுத்தப் போகின்றன?' என்ற கேள்விகளும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன. ' குடியரசுத் தலைவர் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய சூழலுக்கு மாநிலக் கட்சிகள் தள்ளப்படலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தே…
-
- 0 replies
- 582 views
-
-
' காலம் உங்களை கவனித்துக் கொள்ளும் பொன்னார்!' -தி.மு.க மா.செவின் ஃபேஸ்புக் பதிவு தி.மு.க நிர்வாகிகளில் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் சற்று வித்தியாசமானவர். நடப்பு அரசியலை நையாண்டி செய்து கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் வல்லவர். மெரினா போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை விமர்சித்து, அவர் எழுதிய பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய மெரினா புரட்சியின் விளைவால், அவசரச் சட்டம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் டெல்லி சென்ற காட்சிகளை, 'மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்' என்ற தலைப்பில் நையாண்டி செய்திருந்தார். இறுதியாக, 'இடைவேளைக்குப் பிறகான ரஜினி படம் …
-
- 0 replies
- 520 views
-
-
' சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்!' -உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்ட தி.மு.க. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துவிட்டது.' இணையத்தளங்களிலோ பொதுவெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்' என தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, வானகரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. 'என்ன நடக்கப் போகிறது' என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் போட்டியிட விண்ணப்பம் கேட்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடந்தது. இன்று காலை பொதுக்குழு நடக்கும் இடத்தில் தகராறு நடந்துவிடாத அளவுக்குக் கட்ச…
-
- 0 replies
- 498 views
-
-
' சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை ஏன்?' - பேரறிவாளனுக்கு வந்த திகைப்பான பதில்! இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் எழுப்பியுள்ள கேள்விகளால் அதிர்ந்து போயிருக்கிறது மும்பை, எரவாடா சிறை நிர்வாகம்.'உங்கள் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்' என அதிர வைக்கிறது எரவாடா சிறை நிர்வாகம். மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பா…
-
- 0 replies
- 485 views
-
-
' சிறையிலிருந்து பிணமாகத்தான் வருவேன்!' -விவேக்கிடம் கதறிய இளவரசி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு 100 நாள்களை நிறைவு செய்துவிட்டார் சசிகலா. ' சசிகலா அளவுக்கு இளவரசி தைரியமாக இல்லை. தன்னைப் பார்க்க வருகின்றவர்களிடம் எல்லாம் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவருடைய குடும்பத்தினர் தவிக்கின்றனர்' என்கின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவை, தொடக்க காலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர். குற்ற வழக்கில் சிறைபட்டுள்ள ஒருவரை அமைச்சர்கள் சென்று சந்திப்பது அரசிய…
-
- 0 replies
- 502 views
-
-
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ரகசிய வாக்குமூலம் அளிக்க இருக்கிறார் பிலால். இவர், நுங்கம்பாக்கத்தில் படுகொலையான சுவாதியின் நண்பர். ' கொலையாளியைப் பற்றி அவருக்கு முன்பே தெரியும். பிலாலுடன் சுவாதியின் தோழியும் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளிக்க இருக்கிறார்' என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞரை நெல்லையில் கைது செய்தது தனிப்படை. கழுத்தில் காயத்தோடு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்குமாரிடம், மாஜிஸ்திரேட் ராமதாஸ் ரகசிய வாக்குமூலம் வாங்கினார். ' சுயநினைவு இல்லாமல் மயக்கத்தில் இருப்பவரிடம் எப்…
-
- 0 replies
- 737 views
-
-
சட்டமன்றத்தில் இருந்து ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் தி.மு.க உறுப்பினர்கள் . ' அ.தி.மு.க உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் சபையை நடத்திக் கொள்ளட்டும்' எனக் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி. சட்டசபை தேர்தலுக்கு முன்னர், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணம் குறித்து, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சித்ததால் சட்டப்பேரவையில் கொதித்தனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியே கொண்டு வந்தனர் அவைக் காவலர்கள். 'ஒருவாரம் தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். அதேநேரத்தில், சபையில் இருந்து காங்கிரஸ் …
-
- 0 replies
- 246 views
-
-
' தீபா வருகையால் என்ன நடக்கும்?' -உளவுத்துறை அறிக்கையைக் கேட்ட ஓ.பி.எஸ். எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரசியல் பிரவேசத்தை அறிவிக்க இருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ' உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தீபாவின் செயல்பாடுகள் பற்றியும் அவரது வருகையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதைப் பற்றியும் அறிக்கை கேட்டு வாங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பிறகு, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியானது. ஆனால், கடந்த சில நாட்களாக தீபாவை முன்னிலைப்படுத்துகின்றன ஊடகங்கள். அ.தி.மு.கவில் உள்ள நிர்வாகிகள் சசிகலா பின்னால் அணிவகுத்தாலும், தொண்டர்களின் மனநிலை வேறு …
-
- 0 replies
- 500 views
-
-
' நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்!' - ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி ஆடி மாதம் முடிந்த பிறகு கட்சி தொடர்பான விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுக்க இருக்கிறார் ரஜினி. அப்போது, அமைப்புரீதியாக சைதை துரைசாமி, அழகிரி போன்றவர்களின் பங்களிப்பு தனக்கு வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலனை விசாரிக்கச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அழகிரியுடன் விவாதித்தது தி.மு.க வட்டாரத்தை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. 'அழகிரியுடன் சில விஷயங்களை மனம்விட்டுப் பேசினார் ரஜினி. அரசியல் பிரவேசம் தொடர்பாகவும் சில நிமிடங்கள் விவாதித்தனர்' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். சென்னை, காவேரி மர…
-
- 3 replies
- 984 views
- 1 follower
-
-
' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!' -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர் அப்போலோவுக்கு இணையாக தினசரி தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கிறது கிண்டி ராஜ்பவன் மாளிகை. ' பொறுப்பு முதல்வரை நியமிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநரின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியொரு எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்பிறகு, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்…
-
- 0 replies
- 399 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், காவல்துறையால் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு, 25 ஆண்டு கால சிறைத்தண்டனையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கும் வாகனப் பேரணி, வேலூரில் இருந்து சென்னைக் கோட்டையை நோக்கி கிளம்ப இருக்கிறது. நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி, கலையரசன், இயக்குநர்கள் ரஞ்சித், நவீன் உள்ளிட்டவர்கள், பேரறிவாளன் விடுதலைக்கான வாகனப் பேரணிக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர். இந்நிலையில், இதுபற்றி விரிவாகப் பேசிய இயக்குநர் ராம், " நீங்களும் நானும் வாழும் இந்த ஊர் நல்லா இருக்கணும்கிறதுதான் நம்முடைய ஆசை. 'அநீதி தோற்கணும் நீதி ஜெயிக்கணும்' னு நினைக்கின்ற வெகுளியானக் குழந்தைகள்தான் நாம். தினம்தோறும் செய்திக…
-
- 0 replies
- 428 views
-
-
' நினைவை மீட்டுக் கொடுத்த திருமாவுக்கு நன்றி!' - கிட்டாரால் கலங்கிய பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வந்திருக்கிறார் பேரறிவாளன். அரசியல் கட்சித் தலைவர்களுடன் தினம்தோறும் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கொடுத்த கிடார் இசைக் கருவி பேரறிவாளனை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ' முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவை மீட்டுக் கொடுத்திருக்கிறார் திருமா' என நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார் பேரறிவாளன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், நீண்ட இழுபறிக்குப் பிறகு பரோலில் வெளிவந்திருக்கிறார். ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் தங்கியிருந்து, …
-
- 0 replies
- 606 views
-
-
' நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோப்பா....!' - தினகரனிடம் உருகிய சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் இருந்தே உறைந்து போய் கிடக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ' கட்சி நிர்வாகம் தொடர்பாக தினகரன் எடுக்கும் முடிவுகளுக்கு அவர் முழுமையான ஒப்புதல் அளித்துவிட்டார். சிறைக் கட்டுப்பாடுகளால், மனதளவில் உடைந்து போய் இருக்கிறார்" என்கின்றனர் சிறைத்துறை வட்டாரத்தில். அண்ணா தி.மு.கவின் பொதுக்குழுவை வரும் செப்டம்பர் 12-ம் தேதி கூட்ட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்துக்கு நீதிமன்றம் வழியாக தடை பெறுவது குறித்து தினகரன் தரப்பில் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். 'பொதுக்கு…
-
- 0 replies
- 1.9k views
-
-
' பணமே வேண்டாம்...போட்டி போட வாங்க...!' -விஜயகாந்தின் வேட்டை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். தமிழக அரசியல் கட்சிகள் சுதாரித்து எழுவதற்குள், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது அ.தி.மு.க. இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது தி.மு.க. அதேபோல், மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடும் வெளியிடப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் தே.மு.தி.க என்ற கட்சியே இ…
-
- 8 replies
- 1.6k views
-
-
' முதல்வர் ரேஸில் இருந்து விலகுகிறாரா சசிகலா?!' -எதிர்ப்பை சமாளிக்க 'திடீர்' வியூகம் ' முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்பட்டது கிடையாது. நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சராகியிருக்க முடியும்' -இன்று போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில்தான் சசிகலா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ' மத்திய அரசின் அழுத்தத்தை அடுத்து, முதல்வர் பதவிக்கு கட்சியின் சீனியர்களை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. அடுத்த இரண்டே நாளில், 'என்னை மிரட்டி ராஜினாமா …
-
- 1 reply
- 405 views
-
-
' ராஜீவ் கொலை சதியோடு இந்தியா வரவில்லை என்பதை சொல்வீர்களா?' -சி.பி.ஐ அதிகாரிக்கு சாந்தனின் கண்ணீர் கோரிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சாந்தன். ' வெளிநாட்டு வேலைக்காத்தான் இந்தியா வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஒருமுறையேனும் பகிரங்கமாக வெளியில் சொல்வீர்களா' என தன்னைக் கைது செய்த காவல்துறை உயர் அதிகாரிக்கு வேண்டுகோள் வைக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளன…
-
- 0 replies
- 587 views
-
-
' ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!' -சந்திராசாமி புதிரும் ரங்கநாத்தின் மரணமும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான பெங்களூரு ரங்கநாத், இன்று காலை இறந்துவிட்டார். ' ராஜீவ் படுகொலையின் மர்மங்களை முழுமையாக அறிந்தவர். மிகுந்த வறுமைச் சூழலில்தான் இறந்து போனார்' என வேதனைப்படுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பெங்களூரு ரங்கநாத்தை நன்றாகவே தெரியும். ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜீவ்காந்தியை படுகொலை செய்துவிட்டு, தப்பியோடிய சிவராசன், சுபா உள்ளிட்டவர்கள் ரங்கநாத்தின் வீட்டில்தான் அடைக்கலம் ஆனார்கள். நண்பர் ஒருவரின் …
-
- 3 replies
- 2.1k views
-
-
' விஜயகாந்த் தலைவர் என்றால், பிரபாகரன்?' -வைகோ கூடாரத்தின் அடுத்த விக்கெட் ம.தி.மு.கவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டார். விரைவில், ' அவர் தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார்' என்ற தகவலால் ம.தி.மு.க வட்டாரமே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. ' சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு, வைகோ இணைந்ததை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி வெல்லும் என்று எந்த நம்பிக்கையில் வைகோ சென்றார்? பிரபாகரனை தலைவர் என்று சொல்லிக் கொண்டவர், விஜயகாந்தை தலைவராக ஏற்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்பிறகும் ம.தி.மு.கவில் நீடிப்பதை விரும்பவில்லை' என்கின்றனர் மணிமாறனின் ஆதரவாளர்கள். ஆனால…
-
- 0 replies
- 1.1k views
-
-
' வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!' -350 பக்கங்களில் விளக்கும் விஜய்குமார் ஐ.பி.எஸ். சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டபோதிலும், மேட்டூரில் உள்ள வீரப்பனின் சமாதிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்நிலையில்தான் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான முக்கிய விஷயங்களை எழுதி புத்தகமாக கொண்டு வர உள்ளார் வீரப்பன் ஆப்ரேஷனை நடத்திய முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் ஐ.பி.எஸ். தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை. வீரப்பன் கதையை …
-
- 1 reply
- 1k views
-
-
''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?'' பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி குறித்து முன்னுக்குப்பின் முரணாக வரும் அறிவிப்புகளால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யிலும் இதே குழப்பம் நிலவுகிறது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரோடு நட்பு பாராட்டினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா. பிறந்த நாள்களின் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி வந்தார்கள். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, சென்னை வந்து அந்த விழாவில் பங்கேற்றதுடன் ஜெயலலிதாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. அதன்பிறகு 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பிரதமர…
-
- 0 replies
- 595 views
-
-
''அ.தி.மு.க-வில் இப்போது நடப்பதெல்லாம் நாடகம்தான்!'' - போட்டுடைக்கிறார் ஈ.ஆர். ஈஸ்வரன் ப்ரேக்கிங் நியூஸ்களால் மறுபடியும் ஊடகத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க அணிகள். 'கட்சிக்கும் ஆட்சிக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தலைமை' என்று அமைச்சர்கள் அறிவித்த அடுத்த நொடியே, அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை அறிவிக்கிறார் டி.டி.வி தினகரன். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்போ, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிறார். 'ஓவியாவுக்கு என்னதான் ஆச்சு?' என்று விடைதெரியாமல் அவஸ்தைப்பட்டு வரும் தமிழக மக்கள் மத்தியில், 'இப்போது அ.தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது?' என்ற குழப்பக் கேள்வியும் சேர்ந்துள்ளது. இந்த நிலையில், ''அ.தி.மு.க-…
-
- 0 replies
- 482 views
-