Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து" - காப்புக்காடு அருகே புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக எடமச்சி காப்புக்காட்டில் தடையை மீறி புதிய கல்குவாரிக்கான சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமையூலூர் என பல கிராமங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. உரிய அனுமதி இல்ல…

  2. ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை: வாயில் சிகரெட், கையில் எல்ஜிபிடி கொடியுடன் 'காளி' - சர்ச்சை குறித்து என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றன. சர்வதேச அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. …

  3. புதுச்சேரி: பரவும் காலராவை தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் பதில்கள் 4 ஜூலை 2022, 01:30 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலரா புதுச்சேரியில் காலராவால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இணை நோய்களுடன் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவிக்கிறது. நிலைமையின் தீவிரத்தன்மையைக் கணக்கில் கொண்டு, அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

  4. "நீ அதுக்குத்தான் லாயக்கு" - பேராசிரியருக்கு எதிராக மாணவி புகார் - என்ன நடந்தது? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக மாணவி ஒருவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக என் வகுப்புக்கான பொறுப்பு பேராசிரியரை பார்க்க, உரிய பாடவேளை பேராசிரியரின் அனும…

  5. தமிழக சிறப்பு தடுப்பு முகாம்களில் இருந்து, தேவையான போது விசாரணைக்கு ஆயராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் 16 பேர் விடுவிப்பு. இது தொடர்ப்பில் உண்ணாவிரத போராட்டமும், ஒரு உயிரிழப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின் அய்யாவுக்கு மிக்க நன்றி. https://www.dailymirror.lk/breaking_news/16-Sri-Lankans-let-out-of-Special-Camp-in-Tiruchi/108-240228

  6. சென்னையில் 2 நாட்களில் ஐவர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2022 பட மூலாதாரம்,SUDHARAK படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'சென்னையைப் போலவே கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன. வேலைவாய்ப்பின்மை காரணமாகத்தான் பலரும் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கின்றன தொழிலாளர் சங்கங்கள். …

  7. சசிகலாவின்... 15 கோடி ரூபாய் சொத்துகள், முடக்கம். பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது. அதற்கமைவாக இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்படத்தக்கது. https://athavannews.com/2022/1289189

  8. கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா: முழு விவரங்கள் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER திரைப்பட நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகாலம் செல்லுபடியாகும் இந்த கோல்டன் விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் தங்கவும், தொழில் செய்யவும் பணிபுரியவும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். 2021ஆம் ஆண்டு இயக்குநர் பார்த்திபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசாவை பெற்ற பொழுது இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆனார். அதன் பின்னர் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோருக்கும் கோல்டன் வ…

  9. ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி திருச்சி சிறப்பு முகாம் முற்றுகை. தமிழ்நாடு :- திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி, மே17 உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் வருகின்ற 29ஆம் திகதி திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மே 17 சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்; திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் ஈழத்தமிழர்களுக்கான தனி சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டுமென கடந்த 20-05-2022 முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் 24 அன்று உமாரமணன் என்ற ஈழத்தமிழர் தீக்குளித்துள்ளார். அவர்களது ஒரே கோரிக்கை, சித…

  10. "குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EYESWIDEOPEN தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலையின் முதலாம் ஆண்டில் பள்ளி செல்லும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் குறைந்தது 511 பேருக்குத் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது என்கிறது, சமக்ரா சிக்‌ஷா அபியானின் சமீபத்திய புள்ளிவிவரம். சமக்ரா சிக்‌ஷா அபியான் என்பது பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆகஸ்ட் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை எடு…

  11. நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலை மாறியுள்ளதாகவும், நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் எனவும், இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும் எனவும் பேரறிவாளனின் தாயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையாகி சென்ற நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், அவர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’ராபர்ட் பயாஸுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் பார்க்க வந்த…

  12. கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்நாடு முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடும்படி பெங்களூருவில் உள்ள தகவல் உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். வழக்கறிஞரும் ஆர்டிஐ செயல்பாட்டாளருமான டி.நரசிம்மமூர்த்தி, இந்த கடிதத்தை பெங்களூரு முதன்மை சிட்டி சிவி…

  13. LGBTQ+: "திருமணம், குழந்தை தத்தெடுப்பு உரிமைகள் எங்களுக்கும் வேண்டும்" - திரும்பிப் பார்க்க வைத்த 'சுயமரியாதை' பேரணி க. சுபகுணம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, 'வானவில்' சுயமரியாதை பேரணி தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்பாலின மற்றும் பால் புதுமையினர் தங்கள் பாலின உரிமைகளைக் கொண்டாடும் வகையில், ஜூன் மாதம் சுயமரியாதை (Pride) மாதத்தை முன்னிட்டு, சுயமரியாதை பேரணியை ஜூன் 26ஆம் தேதி நடத்தினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்பாலின மற்றும் பால் புதுமையினரின் சமூக அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் இயற்றப்பட்டுள்ள சட்டங்கள், கொள்கைகள், பிற செயல்களைக் கொ…

  14. ஜெயலலிதா மரணம்: ஓகஸ்ட் 3´இல், இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இறுதி அறிக்கையை ஓகஸ்ட் 3 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணைக்குழுவை அமைத்து தமிழக அரசு 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதுதொடா்பாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், மருத்துவா்கள் என பலதரப்பினரிடமும் பல்வேறு கட்டங்களாக விசாரணை இடம்பெற்றது. இதுவரை 12 முறை ஆறுமுகசாமி ஆணைக்குழுவிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை…

  15. குமரியில் ஜாமீன் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்ம மரணம்: காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தும் பெற்றோர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்ததாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மகன் அஜித் (22). அஜித் தொழில் கல்வி முடித்துவிட்டு சரக்கு வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். க…

  16. திருச்சி சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ற 30 தமிழர்கள் தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமில் இலங்கை, பங்களாதேஷ், சூடான், நைஜீரியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சிறப்பு முகாமி…

  17. விடுதலைகாக உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர் தீக்குளிப்பு திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத் தமிழர்களில் ஒருவரான உமா ரமணன் என்பவர் இன்று தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீ குறித்துள்ளார். இது குறித்து அறிந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரக்கூடிய 4 பேர் மரத்தில் தூக்கு கயிறு கட்டி தூக்கில் தொங்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. https://www.thaarakam.com/news/4bf1cd74-f7c8-4b18-8cd5-b6b8afa28722

  18. அதிமுக-வில் என்ன நடக்கிறது? இபிஎஸ் - ஓபிஎஸ் சர்ச்சையில் இன்று ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் கூட்டாக நிர்வகிக்கப்படும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று எடப்பாடி ஆதரவாளர்கள் குரல் கொடுத்த நிலையில், அந்த யோசனைக்கு எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், கட்சிக்குள் உரசல் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு அதிக எண்ணிக்கையிலான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவுவதா…

  19. தமிழ்நாடு: 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு வீட்டை இடித்த அதிகாரிகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு அதிகாரிகள் வீட்டை இடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சீரங்ககவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவருடைய தந்தை 95 வயதான குப்பணகவுண்டர். இவர் குடும்பம் இதே கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஓலைக் குடிசை வீட்டில் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வீட்டை புனரமைத்து கட்டிட வீடு கட்டி இருக்கிறார்கள். …

  20. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வியடைந்தது ஏன்? - அதிர்ச்சியளிக்கும் பின்னணி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில், "பத்தாம் வகுப்புத் தமிழ் மொழிப்பாடத்தில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை" என்ற விவரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை திங்கள்கிழமையன்று வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, …

  21. சிறுவாணி ஒப்பந்தம்: தமிழ்நாடு - கேரளா இடையே என்ன சிக்கல்? மோகன் பிபிசி தமிழுக்காக 20 ஜூன் 2022 தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவில் பங்கு கிடைப்பதில்லை என்பது தமிழ்நாடு - கேரள அரசுகளுக்கு இடையே விவாதப் பொருளாகியிருக்கிறது. கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியார் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வருக்கு சமீபத்தில் இரண்டு கடிதங்களை எழுதியுள…

  22. உலக அகதிகள் தினம்: திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டம் - பின்னணி என்ன? ஜோ. மகேஸ்வரன் பிபிசி தமிழ் 17 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 20 ஜூன் 2022 பட மூலாதாரம்,FERNANDO தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி போராட்டம் நடப்பது ஏன்? இது குறித்து அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திர…

  23. விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 20 ஜூன் 2022 பட மூலாதாரம்,REUTERS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ…

  24. தமிழகம் வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்குமாறு வலியுறுத்தல்! இலங்கையில் இருந்து தமிழகம் வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழா்கள் தமிழகம் வந்துள்ளனா். ஆனால், அவா்கள் இதுவரை அகதிகளாக அறிவிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக குடியேறியவா்களாக கருதி அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதி இரு மாதங்க…

    • 1 reply
    • 281 views
  25. பிளஸ் டூ தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்? மின்னம்பலம்2022-06-20 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவை இன்று காலை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வில், 8,06,277 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 4,21,622 மாணவிகள் 3,85,655 பேர் ஆவர். இதில் 93.76 சதவிகிதம் அதாவது 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,106 (96.32%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,49,893(90.96%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 5.36% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகள் வாரியாக அரசுப் பள்ளிகள் -89.06% அரசு உதவி பெறும் பள்ளிகள்- 94.87…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.