Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: சங்கர் ஜிவால் மின்னம்பலம்2021-09-05 சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று அரசின் அறிவிப்பை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். வருகிற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. ஆனால், தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி உண்டு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்…

  2. முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். 63 வயதாகும் திருமதி விஜயலட்சுமி உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் காலமானார். ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி வைத்தியசாலைக…

  3. தமிழகத்தில்... பாடசாலைகளை திறக்க அனுமதி : புதிய வழிக்காட்டல் நெறிமுறை வெளியீடு! தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில், மீண்டும் பாடசாலைகளை திறக்க தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இதன்படி புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளனின்படி, மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கும் வகையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தடை எத…

  4. பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல் தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் கே.டி. ராகவன். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திக்கப்போதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள இடுகைகளில்,, "தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில…

  5. இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 27) சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்: இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொறியியல் படிப்பு படிக்கத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும், மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மா…

  6. கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 'முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது... 'சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் இந்த அரசின் முதல் அறிவிப்பினை உங்கள் அனுமதியுடன் இந்த அவைக்கு அறிவிக்க விரும்புகிறேன். விதி எண் 110 கீழ் அறிவிக்கும் முதல் அறிவிப்பே 'தமிழினத் தலைவர்', 'முத்தமிழறிஞர்', 'எண்பது ஆண்டுகாலம் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைத்த போராளி' கலைஞர் அவர…

  7. இந்திய கடற்பரப்பில் ஏன் மீன் வளங்கள் குறைந்தது, இந்த காணொலிகள் சொல்கிறது இதனால்தான் என்று . இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து இதே மீன்பிடி முறையில்கடல்வளங்களை நாசமாக்கி இலங்கை மீனவர்கள் பிழைப்பிலும் மண் அள்ளி போட்டபின், இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறது, இலங்கை மீனவர்கள்கூட தமிழக மீனவரை தாக்குகின்றனர், நாம் அவர்களுக்கு எவ்வளவு உதவி செய்தோம் நன்றிகெட்டவர்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். ஒருவருக்கு உதவி செய்தால் அவர்களின் இரு கண்களையும் பிடுங்கிவிட எமக்கு உரிமை இருக்கிறது என்கிறார்களா?இதற்கு தீர்ப்பு சொல்ல எந்த நீதிதேவன் இருக்கிறார்? முதல் காணொலியில் 3.00 நிமிடம் அடுத்த காணொலியில் 11:35 நிமிடம்

    • 8 replies
    • 1.2k views
  8. திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்து தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி ! திருச்சி மத்திய சிறை, சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேருக்கு மேல் தற்கொலை முயற்சிகளில் ஈடுபாட்டனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. தம்மை விடுதலை செய்யும்படி முன்வைத்த கோரிக்கைகள் பலனளிக்காமையால் இன்று அவர்களில் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனரெனத் தெரிகிறது. சிலர் அளவுக்கதிகமான துக்க மாத்திரைகளை விழுங்கியும், சிலர் தமது வயிறுகளைக் கிழித்துக்கொண்டும் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. இவர்களில் பலர் நீண்டகாலமாக இம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், பலர் தம்மீது போய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனக் கூறுவதா…

  9. கோயில்கள் தனியார் மயம்: சீமான் கண்டனம்! மின்னம்பலம்2021-08-27 நாட்டில் நிலவும் அதிகப்படியான பொருளாதார முடக்கத்தினால் விளைந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline ) எனும் பெயரில் நாட்டின் உட்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வன்மையாக எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ளார். இன்று (ஆகஸ்டு 27) சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், இரத…

  10. தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்- 58 பேருக்கு ஆணை வழங்கினார் முதல்வர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட 58 பேரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இவர்களில் 24 பேர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. கடந்த…

  11. கொடநாடு கொலை விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்த சசி நடப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவினர் இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலையில் கூடியதும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசத் தொடங்கினார். ஆனால், இதற்கு சபாநாயகர் அப்பாவு ஒப்புதல் தரவில்லை. இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பதாகைகளை ஏந்தி அ.தி.மு.கவினர் கோஷங்களை எழுப்பி வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பாக அமர்ந்து கோஷங்களையும் எழுப்பி…

  12. `துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை சு.கவிதா துர்காவதி இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் அதிகம் பேசப்படாத ஒரு பெண், துர்காவதி தேவி. குறிப்பாக இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவரது அதிரடித் தாக்குதல்களால் ஆட்டம்கண்ட ஆங…

  13. ஆளுனரின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவளிகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் 7 பேரையும் ஆளுனரின் அனுமதிக்குக் காத்திராமல் உடனேயே விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இக் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நளினி சிறிகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இக் கட்டளையை விடுத்துள்ளனர். ஆளுனரின் அனுமதியில்லாது, இவ்வேழுபேரையும் விடுதலைசெய்யும் ஆணையை, மாநில அரசு பிறப்பிக்கவேண்டும் என்பதே நளினியின் விண்ணப்பமாகும். தலைமை நீதிபதி சஞ்சி…

    • 2 replies
    • 867 views
  14. கைதும்... அதன் பின்னணியும், சிறையில் நடந்த... மறக்க முடியாத சம்பவங்கள்.

    • 10 replies
    • 974 views
  15. எஸ்.பி.வேலுமணி மீது, சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் அவரது பங்குதாரர்கள் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அரசின் ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாயை பெற்று, மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் அண்மையில் சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அத்துடன் அவர், அரச கட்டுமானப் பணிகளிலும் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டுக்கு அமைய, முன்னாள் அமைச…

  16. “பொணம் மட்டும்தான் எங்களைத் தொந்தரவு செய்யறதில்லை!” ‘எங்களை எங்கயுமே தங்கவிட மாட்டேங்கிறாங்க. ஊருக்குப் பக்கத்துல இருந்தா அருவருப்பா பார்க்கிறாங்க. கோயில், குளம் பக்கம் போக முடியலை... எங்களை இந்தச் சுடுகாட்டுல இருக்குற பொணம் மட்டும்தான் தொந்தரவு செய்யறது இல்லை...’’ என்று செல்லுமிடமெல்லாம் துரத்தப்படும் துயரத்தை விரக்தியாகக் கொட்டுகிறார்கள் சுடுகாட்டில் வசிக்கும் நாடோடி இன மக்கள்! நாம் ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பாதையில் மெலிந்துபோன உடல், ஒட்டிக்கிடக்கும் வயிறு என வறுமை வரித்துக்கொண்ட ஜீவன்கள் ஏராளம். குறைந்தபட்சம், பரிதாபத்துடன் ‘உச்’ கொட்டுவதே இந்தச் சமூகம் அவர்களுக்கு அளிக்கும் பரிசாக இருக்கிறது. அதிகபட்சம் அவர்கள் பெறுவது என்னவோ, புறக்கண…

  17. தமிழகத்தில்... புதிய அரசின், வரவு செலவு திட்டம் தாக்கல் ! தமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், 2021 -2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை நிதி அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார். அரசின் வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி இன்று தாக்கல் செய்யப்படும் புதிய வரவு செலவு திட்டத்தில் பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் தமிழக சட்டசபையில் காகிதம் இல்லாத வரவு செலவு திட்டம் முதன்முறையாக தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக…

  18. பல நூறு வௌவால்களோடு வாழும் புதுச்சேரி குடும்பம் - சொல்லும் காரணம் என்ன? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, ஆயிரத்துக்கும் மேலான வெளவால்களுக்கு 21 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வரும் குடும்பம் நாய், பூனை, கிளி போன்ற செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்த்து பார்த்திருப்போம். ஆனால் புதுச்சேரியில் ஒரு மனிதர் ஆயிரக் கணக்கான வெளவால்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பிரபு பொன்முடி, விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அதீத பற்று கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாக கடந்த 21 ஆண்டுகளாக இவரது வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்ப…

  19. யானைகள் தினம்: தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தை ஆட்டிப் படைத்து 26 பேரை கொன்றபின் கும்கியான மூர்த்தியின் கதை மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக 12 ஆகஸ்ட் 2021, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு, மூர்த்திக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டபோது சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு 25க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கிக்கொன்றதோடு, தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில மக்களை அச்சுறுத்தி வந்த ஆக்ரோஷமான காட்டு யானை, இன்று முதுமலையின் அடர்ந்த வனப்பரப்பை ரசித்து பார்த்தபடி அமைதியான கும்கி ய…

  20. தமிழகத்தில்... 27 மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கியுள்ளன- மத்திய கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கல்வி செயற்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்தியா முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் மதுரை, நாகை, சேலம், அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதேபோன்று மத்தியப் பிரதேசத்தில் 39 மாவட்டங்களும் உத்தரப் பிரதேசத்தில் 41 மாவட்டங்…

  21. தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை – ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பகுதி 1 மின்னிதழ் உள்ளடக்கம் பகுதி 1 தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும் பற்றி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை கேள்வி? தமிழக சட்டசபையின் வளர்ச்சிக் கட்டங்களையும், அவற்றின் முக்கியத் துவங்களையும் பற்றிக் கூறுங்கள்? பதில்! கேள்வி? தமிழக சட்டசபை தோற்றுவித்த ஆளுமைகள் குறித்து சுருக்கமாகக் கூறவும்? …

  22. தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். `கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு சரியவில்லை' என அமைச்சர் தெரிவித்தார். வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, `அரசின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்' என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியது. அதேநேரம், கடந்த சில வாரங்களாக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்…

  23. கலைஞர் கருணாநிதியின், 3ஆம் வருட நினைவேந்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை- மெரீனாவிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதன்போது அங்கு வருகைதந்திருந்த அமைச்சர்கள், தி.மு.க.நிர்வாகிகள், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். https://athavannews.com/2021/1232985

  24. ஏழுவர் விடுதலை: அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-விசிக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டுமெனத் தமிழ்நாடு அமைச்சரவைகூடி கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் காலதாமதம் செய்துவந்த நிலையில் அதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு தாங்களே உத்தரவு பிறப்பிப்போம் எனவும் கூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.