அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
7.4 கிலோ எடை கொண்ட சிறுநீரகத்தினை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை! டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு 7.4 கிலோ எடையில் இருந்த சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் இடது சிறுநீரகம் வழக்கத்தை விட பெரிதாக இருந்தது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் 7.4 கிலோ எடை கொண்ட சிறுநீரகம் அகற்றப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாகவும் உலகிலேயே மூன்றாவது அதிக எடை கொண்ட சிறுநீரகம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/7-4-கிலோ-எடையில்-சிறுநீரகம்/
-
- 0 replies
- 315 views
-
-
கவுகாத்தி : கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் அரசு, மியான்மர் எல்லையை, காலவரையின்றி மூடியுள்ளது. அந்த வழியாக வெளிநாட்டவர் உள்ளே வருவதற்கு தடை விதித்துள்ளது. எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம் என மக்கள் கேட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிசோரம் மாநில அரசும் மியான்மர் மற்றும் வங்கதேச எல்லைகளை மூடியுள்ளதுடன், கொரோனா பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருணாச்சல பிரதேச அரசும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வழங்கப்படும் அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை, அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 309 views
-
-
இந்தியாவில் இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் அமைச்சின் கீழ் வந்தன! இணைய ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் முதற்கட்டமாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இணையத் தளங்களைக் கொண்டுவருவதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, நெற்பிளிக்ஸ், சமூக ஊடகத் தளங்களான பேஸ்புக், ருவிற்றர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவையும் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இதேவேளை, உள்ளூர் ஊடகங்கள் போல் இணைய ஊடகங்களின் ஒழுங்குமுறையை விவரிக்கும் சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் என இணைய சுதந்திர அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அபர் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்னணு ஊடகங்கள் 1995 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒழுங்குமுறை சட்டத…
-
- 0 replies
- 358 views
-
-
அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தங்கள் குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் வெற்றி காணலாம் என்று கனவு காண்போரின் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார். தேசத்தை முன்னிலைப்படுத்தாமல் குடும்ப அரச…
-
- 0 replies
- 462 views
-
-
கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள்... செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்! வட இந்தியாவில் ஏறக்குறைய 20 பேருக்கு இருவேறுப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் (கலப்பு தடுப்பூசிகள்) செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியாக கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக கொவாக்ஷின் (Covaxin) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் கலப்பு தடுப்பூசிகளுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்ற நிலையில், இந்த விடயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் குறித்த 20 பேரும் உடல்நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு …
-
- 0 replies
- 210 views
-
-
தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி சடங்கு இன்று! மறைந்த தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்படி இன்று காலை 9.15 மணியளிவில் பரிகேடியர் லக்வீந்தர் சிங் லிடரின் இறுதி சடங்கு கன்டோன்மென்டில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி கராஜ்மார்க்கில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் அவரது உடலும், மனைவி மதுலிகா ராவத்தின் உடலும் காலை 11 மணி முதல் 12.30 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றன. இதனையடுத்து மதியம் 12.30 மணி முதல் 1.30 மணிவரை இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதன் பின் அலங்கிரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் பிபின்ராவத்தின் உடல் டெல்லி கன்டோன்மென்டிற்கு கொண்டு செல்லப்பட்டு முழு இராணுவ மரிய…
-
- 0 replies
- 227 views
-
-
அமித்ஷா: வீட்டில் தாய்மொழியிலேயே பேசுமாறு அறிவுறுத்திய உள்துறை அமைச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(29/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) "மாணவர்களும் இளைஞர்களும் எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். ஆனால், உங்கள் தாய்மொழியை பாதுகாத்திடுங்கள். வீட்டில் தாய்மொழியிலேயே பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்," என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழ…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்கள் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அரக்கன் ஆர்மியின் தளபதியாக தவண் ம்ராட் நயிங் செயல்பட்டு வருகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஹெட் மற்றும் ஆலிவர் ஸ்லௌ பதவி, பாங்காக் மற்றும் லண்டனில் இருந்து 16 ஜனவரி 2024 மேற்கு மியான்மரில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்திடம் இருந்து முக்கிய நகரமான பலேத்வாவை (Paletwa) கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே செல்லும் முக்கியமான சாலை ஒன்றில் இருக்கும் இந்த நகரம் இந்திய எல்லைக்கு அர…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
காஷ்மீர் விவகாரத்தில் சீனா அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அமைப்பதற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச அரங்கில் இந்த விவகாரத்தை எழுப்பியது. இதேபோன்று சீனாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக லடாக் பிரதேசம் சீன எல்லையை ஒட்டி வருகிறது. இதனை யூனியன் பிரதேசமாக மாற்றுவதில் சீனாவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது. இதுபற்றி சீனா கருத்து தெரி…
-
- 0 replies
- 317 views
-
-
Published by J Anojan on 2019-09-02 16:26:22 ’பேட் பிடிக்க முடிந்த கையால் வாள் பிடிக்க முடியாதா?’ என்று ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக முன்னாள் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்திய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவைத் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும், லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் க…
-
- 0 replies
- 328 views
-
-
தேர்தலில் வெற்றிப்பெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் ; பா.ஜ.க உறுதி! பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார். குறித்த அறிக்கையில் கொரோனா தடுப்பூசி சோதனைகள் பல கட்டத்தில் இருப்பதாகவும், பெருமளவிலான உற்பத்தி நிலையை எட்டியவுடன் பீகார் மக்கள் இலவசமாக போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் …
-
- 0 replies
- 293 views
-
-
பலோச்சிஸ்தான் பிரிவினைவாதி கரீமா மெஹ்ராப் ரொறோண்டோவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் மீது சந்தேகம் பிரபல பலோச்சிதான் பிரிவினைவாதியும், செயற்பாட்டாளருமாகிய, கரீமா பலொக் என அழைக்கப்படும் கரீமா மெஹ்றாப் ரொறோண்டோவில் இறந்திருக்கக் காணப்பட்டார். இவரது மரணம் குறித்துச் சந்தேகங்கள் உள்ளதாகவும் புலன் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது. பலோச்சிஸ்தான் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரான மெஹ்றாப் ஒரு தினத்துக்கு முதல் காணாமற் போயிருந்ததாகவும் மறுநாள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தெரித்துள்ளது. மரண பரிசோதனைகள் நடைபெற்று முடிந்தபோதிலும் அதன் பெறுபேறுகள் இன்னும் அறிவிக்கப்படவில்…
-
- 0 replies
- 333 views
-
-
லட்ச தீவுகளை... அழிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது – ராகுல்காந்தி மத்தியில் ஆட்சி செய்பவர்கள் லட்ச தீவுகளை அழிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுலாவிற்கு பெயர்போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ லட்சத்தீவுகள் இந்தியக் கடலின் ஆபரணம். மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் அதனை அழிக்க முயற்சிக்கின்றனர். நாம் லட்சத்தீவுளின் மக்களுடன் உடன் நிற்கிறோம்’ எனக் குறிப…
-
- 0 replies
- 280 views
-
-
கேரளாவை தொடர்ந்து... மகாராஷ்டிராவிலும், ஜிகா வைரஸ் தொற்று! கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த ஐம்பது வயது பெண் ஒருவருக்கே ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த பெண் பூரணமாக குணமடைந்துள்ளமையால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதேவேளை ஏடிஸ் வகை நுளம்புகளால் பரவும் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1231924
-
- 0 replies
- 303 views
-
-
பாகிஸ்தானில்... இந்திய நீர்மூழ்கி கப்பல், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2016 மற்றும் 2019இல் இந்திய இராணுவத்தின் இது போன்ற ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான் கடற்படை முறியடித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245786
-
- 0 replies
- 321 views
-
-
மக்கள் தொகை கட்டுப்பாடு... சட்டம், விரைவில் : பிரகலாத் சிங் படேல் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அமுலுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார். சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர இருப்பதாகவும் இதற்காக பெரியளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் பிரகலாத் பட்டேல் கூறினார். இந்த சட்டமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த பெரிய திட்டம் என்றும் பிரகலாத் சிங் பட்டேல் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1284865
-
- 0 replies
- 245 views
-
-
இலங்கைக்கு உதவ... இந்தியா, உறுதி பூண்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய குடியரசுத் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பொருளாதார சிக்கலால் ஏற்படும் சவால்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார். https://atha…
-
- 0 replies
- 137 views
-
-
மகாராஷ்டிர குகையில் கிடைத்த தனித்துவமான கற்கால சிற்பங்கள், கருவிகள்: சிறப்பு என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PARTH CHAUHAN/BBC படக்குறிப்பு, அகழ்வாராய்ச்சியின் போது பல சிறிய பெரிய கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன மகாராஷ்டிராவில் இதுவரை அறியப்படாத நாகரீகத்தை சேர்ந்த பாறைச் சிற்பங்கள் சில ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு குகை இந்த வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகளை உருவாக்கியவர்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை குறித்தும் சில புரிதலைகளை நமக்கு அளிக்கிறது. இதுகுறித்து பிபிசி மராத்தியின் மயூரேஷ் கொன்னூர் செய்தி அளிக்கிறார். மேற்கு மகாராஷ்டிராவ…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
ரஃபேல் விவகாரம் - ’ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்தியா பரிந்துரைத்தது’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: ரஃபேல் விவகாரம் - இந்தியாவின் பரிந்துரை ரிலையன்ஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரஃபேல் ஜெட் ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்…
-
- 0 replies
- 349 views
-
-
டெல்லியில் நடைபெறுகிறது காவிரி ஒழுக்காற்று குழு கூட்டம்! காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூரில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் …
-
- 0 replies
- 281 views
-
-
மசோதாக்களை நிறைவேற்றியதில் கடந்த 15 வருடங்களில் இல்லாத வேகம் என்றே சொல்லலாம். அதற்குக் காரணமும் இருக்கின்றது இரண்டாவது முறை ஆட்சி... 303 உறுப்பினர்கள்.... எனப் பெரும்பான்மை பலத்தில் இருக்கும் பா.ஜ.க 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. எந்தமுறையும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்தமுறை பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தாலும் மாநிலங்களவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டியது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. மாநிலங்களவையிலும் தற்போது பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டுள்ளதால் கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாத மசோதாக்களை எல்ல…
-
- 0 replies
- 308 views
-
-
காந்தியின் உருவப்படத்தில் துரோகி என எழுதிய நபர்கள் அஸ்தியை திருடிச்சென்றனர்- மத்தியபிரதேசத்தில் சம்பவம் காந்தியின் 150 வது பிறந்தநாளை உலகம்கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவரது அஸ்தியை இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தின் ரேவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த பகுதியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் 1948 முதல் வைக்கப்பட்டிருந்த அஸ்தியை இனந்தெரியாதவர்கள் திருடிச்சென்றுள்ளனர். மகாத்மாகாந்தியின் உருவப்படத்தில் பச்சை நிறமையினால் துரோகியெனவும் அவர்கள் எழுதிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தேசத்தின் ஐக்கியத்திற்கு ஆபத்தானது அமைதியை குலைக்ககூடியது என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாப…
-
- 0 replies
- 560 views
-
-
மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு. மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை பெற்று தருவதாகக்கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சியும், பணய கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வேலை என கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்க…
-
- 0 replies
- 84 views
-
-
HEALTH இந்தியா:தெருக்களில் வாழும் மருத்துவர்கள் இந்தியாவில், கொறோனாவைரஸ் தொற்றலாம் என்ற அச்சத்தில் மருத்துவர்கள், தாதிகள் போன்ற சுகாதார சேவை முன்னணிப் பணியாளர்கள் தங்கியிருக்கும் வாடகை வீடுகளிலிருந்து சொந்தக்காரர்களால் வெளியேற்றப்பட்டுத் தெருக்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல மருத்துவர்கள் தாம் பணி புரியும் வைத்தியசலைகளில், தரைகளிலும், கழிப்பறைகளிலும் படுத்துறங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வீட்டுச் சொந்தக்காரர்கள் மட்டுமல்லாது, அயலவர்கள், டக்சி ஓட்டுனர்கள் ஆகியோரினாலும், சுகாதாரப் பணியாளர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள். சிலர் அவரவர்களின் சொந்த வீடுகளிலுமிருந்து தனிமைப்படுத்தப்படுவதும், வீடுகளிலிருந…
-
- 0 replies
- 326 views
-
-
பாகிஸ்தானின் அணுசக்தி தந்தை அப்துல் காதர் கான் காலமானார் பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் அப்துல் காதர் கான், தனது 85 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத சக்தியாக பாகிஸ்தானை மாற்றியமைத்ததற்காகவும், போட்டி மற்றும் சக அணு ஆயுத நாடான இந்தியாவுக்கு எதிரான தனது செல்வாக்கை வலுப்படுத்தியதற்காகவும் அப்துல் காதர் கான் ஒரு தேசிய ஹீரோ என்று பாராட்டப்பட்டார். ஆனால் பின்னர் ஈரான், வட கொரியா மற்றும் லிபியாவுக்கு தொழில்நுட்பத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். தனது வாழ்வின் கடைசி ஆண்டுகளை பலத்த பாதுகாப்புடன் கழித்த அணு விஞ்ஞானி, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நி…
-
- 0 replies
- 276 views
-