Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. படத்தின் காப்புரிமை SOLANKI FAMILY அஹமதாபாத் கிராமத்துக்கு அருகே உள்ள மண்டல் கிராமத்தில் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த தலித் ஒருவர், காவல்துறை அதிகாரிகளுக்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டுள்ளார். 25 வயதான ஹரேஷ் சோலங்கி, இரண்டு மாத கர்ப்பமான தனது மனைவி ஊர்மிளா ஜாலாவை, அவரது தாய் வீட்டில் இருந்து அழைத்து வர சென்றார். அவர் செல்லும்போது மாநில பெண்கள் உதவி ஆலோசகர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது காரில் ஆயுதங்கள் ஏந்திய எட்டு நபர்கள் வந்து தாக்கியதில் ஹரேஷ் உயிரிழந்தார். …

  2. இந்தியாவிற்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல்.! காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசிற்கும், ராணுவத்திற்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. “Mujahideen in Kashmir” என்று தலைப்பிலான இந்த வீடியோவில் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்-ஸவாகிரி தோன்றி பேசியுள்ளார். காஷ்மீர் அரசு மற்றும் இந்திய ராணுவத்தினர் மீது இடைவிடாத தாக்குதல்களை அரங்கேற்றுமாறு தீவிரவாதிகளுக்கு அதில் அவர் கட்டளையிட்டுள்ளார். வீடியோவில் அல்-ஸவாகிரி பேசுகையில், “காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முதலில் ஒரே எண்ணத்துடன் இந்திய ராணுவம் மீதும் அரசின் மீதும் தொடர் தாக்குதல்களை அரங்கேற்ற வேண்டும், அப்போது தான் இந்திய பொருளாத…

  3. அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதலான வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் அண்மையில் நீக்கினார். இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்,வர்த்தக பி…

    • 0 replies
    • 251 views
  4. இந்திய பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய அரசு, புலி, மயில் வரிசையில் இந்தியாவின் தேசிய மலராக தாமரைப்பூ அங்கீகரிக்கப்படவில்லை என தெரிவித்தது. இந்தியாவின் தேசிய விலங்காக புலி, தேசிய பறவையாக மயில் மற்றும் தேசிய மலராக தாமரைப்பூ ஆகியவை விளங்கி வருவதாக எம்மில் பலர் அறிந்திருக்கிறோம். இந்நிலையில், இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் இன்று மாநிலங்களைவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பதில் அளித்தார். 'மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய விலங்காக புலி, தேசிய பறவையாக மயில் ஆகிய…

    • 0 replies
    • 246 views
  5. புல்வாமா தாக்குதலுக்கு பின் காஷ்மீரில் 93 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பாலக்கோட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு பின், ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டிய ஊடுருவல் குறைந்துள்ளதா என மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நிதியானந்த் ராயிடம் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய ராய், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், எல்லை தாண்டிய ஊடுருவல் கடந்த 6 மாதத்தில் மட்டும் 43 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். இதே கருத்தை பதிவு செய்த உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியும், 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் தீவிரவாதம் சார்ந்த சம்பவங்கள் 28% குறைந்துள்ளதா தெரிவ…

    • 1 reply
    • 301 views
  6. 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா எம். காசிநாதன் / 2019 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:57 Comments - 0 இந்திய நிதியமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் பின்னணி பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் நிதி நிலை அறிக்கையை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பெண் நிதியமைச்சர் இவர். தேர்தலுக்கு முந்தைய நிதி நிலை அறிக்கையின் தொடர்ச்சி என்றாலும், இந்த நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கும், சிறு தொழில் புரிவோருக்கும், மூத்த குடிமகன்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு- “கோர்ப்பரேட்” நிதி நிலை அறிக்கை என்ற…

  7. குவைத் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ₹20.5 லட்சம் மதிப்புள்ள 582 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குவைத்தில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நஷீத் அகமது ஷேக் (24) சுற்றுலா பயணியாக ரியாத்துக்கு சென்று விட்டு குவைத் வழியாக சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் தனி அறைக்கு அழைத்துச்சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். எதுவும் இல்லாததால் அவ…

    • 0 replies
    • 558 views
  8. தங்கள் விமானங்களில் பயணிக்கும் ஹஜ் யாத்திரிகர்கள் புனித நீரான ஜம் ஜம் நீரை எடுத்து வரக்கூடாது என ஏர் இந்தியா அறிவித்திருந்தது விமர்சனத்துக்கு ஆளான நிலையில், ஜம் ஜம் நீரை எடுத்துவரலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ம் தேதி ஏர் இந்தியா அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஜெட்டாவில் இருந்து ஐதராபாத், மும்பை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு இயங்கும் தங்கள் நிறுவன விமானங்களில் ஹஜ் யாத்திரையின் புனித நீரான ஜம் ஜம் நீரை கொண்டு செல்ல அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 ம் தேதிவரைக்கும் இந்த தடை நீடிக்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தேர்க்கு இந்தியாவை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம…

    • 0 replies
    • 240 views
  9. உத்தர பிரதேச பஸ் விபத்தில் 29 பேர் பலி ; பலர் படுகாயம் இந்தியாவின் உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி சென்ற பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து புதுடெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த இரண்டடுக்கு கொண்ட அரசு பஸ் ஒன்றில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். குறித்த பஸ் இன்று காலை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஆக்ரா அருகே பாலத்தில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குபேர்பூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந…

  10. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை. இந்தியாவின் நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிபிசியின் ஃபேஸ்புக் நேரலையில் இந்த அறிக்கை குறித்த தனது கருத்துக்களை செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பகிர்ந்துகொண்டார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் க. ஜோதி சிவஞானம். அந்த உரையாடலில் இருந்து: வியாழக்கிழமை வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது இது ஓர் ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கைதான். வருடாவருடம் பொரு…

  11. ‘ஐ.என்.எஸ் விராட்’ கப்பலை உடைப்பதற்கு எதிர்ப்பு! இந்திய கடற்படையின் ‘ஐ.என்.எஸ் விராட்’ என்ற கப்பலை உடைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெச்.எம்.எஸ் ஹெர்ம்ஸ் என்ற கப்பல், கடந்த 1959ஆம் ஆண்டு பிரித்தானிய ரோயல் நேவியில் பணியில் சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1982ஆம் ஆண்டு பாக்லாந்து தீவுகளுக்காக ஆர்ஜெண்டினாவுடன் பிரித்தானியா போரிட்டபோது, இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது. பிரித்தானிய இளவரசர் சார்லஸ் இந்த கப்பலில் ஹெலிகாப்டர் விமானியாக பணியற்றியுள்ளார். பிரித்தானியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலாக இருந்த இந்தக் கப்பல், கடந்த 1985ஆம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றது. அதன் பின்னர், 1987ஆம் ஆண்டு பழுதுகள் நீக்கப்பட்டு இந்தியாவிற்கு விற்பனை செய்ய…

  12. பல்வேறு துறைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையானது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2018-19 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் முக்கிய தகவல்கள்: 2019 - 20 ஆம் ஆண்டு நிதியாண்டின் பேரியல் பொருளாதாரம் அதிக வளர்ச்சியைக் காணும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7% ஆக இருக்கும். கடந்த நிதியாண்டில் 6.4% ஆக இருந்த நிதி பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 5.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2020 நிதியாண்டில் கடன் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும். இந்த நிதியாண்டில் கச்சா எண்ண…

    • 1 reply
    • 379 views
  13. 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயில் பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வாழும் இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினைத் தொடர்ந்தே ஷவாலா தீஜா சிங் எனும் இந்துக் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் திறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் கோயிலை மறுசீரமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இந்து கடவுள் சிலைகள் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்த…

  14. நாகாலாந்து மாநிலத்துக்கு தனி பாஸ்போர்ட் மற்றும் தனி கொடி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்- மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. 1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம் 2…

  15. இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை. 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது என்பதால் அப்போதும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தர முடியாது என்று நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்த…

  16. மும்பையில் தொடரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு…. July 3, 2019 மும்பையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 5-ஆவது நாளாக நேற்றும் மழை நீடித்ததனால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் கடலோர படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கிழக்கு மலாட்டி…

  17. இந்திய – பசிபிக் கடல் மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணிக்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டணத்தில் கிழக்குக் கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி போதோ இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்டை நாடான சீனா எப்போதும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதனால் கடல்சார் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக தெரிவித்த அவர் தமது கடற்படை மேலும் வலுவடையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலையும், கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெ…

  18. ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அரச அலுவலகம் ஒன்றின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேகரிக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மரோப் மாவட்டத்தில் அரச அலுவலகத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்றிரவு கார்குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த அலுவலகத்துக்குள் இருந…

  19. வளை­குடா பிராந்­தி­யத்தில் ஸ்திரத் தன்­மையை நிலை­நாட்டும் நோக்கில், ஈரான் விவ­கா­ரத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பும் ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். ஜி 20 நாடு­களின் இரண்டு நாள் உச்­சி­மா­நாடு, ஜப்­பானின் ஒசாகா நகரில் வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது. இதில், பிர­தமர் நரேந்­திர மோடி, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், ஜப்பான் பிர­தமர் ஷின்ஸோ அபே உள்­ளிட்ட பல தலை­வர்கள் பங்­கேற்­றுள்­ளனர். இந்த உச்­சி­மா­நாட்­டி­னி­டையே, அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்புடன் பிர­தமர் மோடி வெள்­ளிக்­கி­ழமை இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்தப் பேச்­சு­வார்த்த…

    • 0 replies
    • 277 views
  20. பெண் தலாய் லாமா இன்னொரு ஆச்சரியமான கருத்தாக, "புத்தசாலித்தனம் முக்கியமாக இருப்பதைபோல, பெண் தலாய் லாமாவுக்கு நல்ல அழகும் தேவை" என்று கூறி, தற்போதைய தலாய் லாமா கருத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார். சிரித்தவாறே பதிலளித்த தலாய் லாமா, "பெண் தலாய் லாமா வருவதாக வந்தால், அதிக அழகோடு இருக்க வேண்டும்" என்ற கூறினார். இந்த கருத்து, சகிப்புத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையை போதிக்கும் தலாய் லாமாவின் கருத்துகளுக்கு முரணானதாக தோன்றுகிறது. ஆனால், பௌத்த இலக்கியத்தில் உள் மற்றும் வெளி அழகு மிகவும் முக்கியமானது என்று தலாய் லாமா தெளிவாக்கியுள்ளார். சமத்துவம் முக்கியமானது என்று தெரிவித்த தலாய் லாமா, பெண்களின் உரிமைகளை வழங்குவதையும், பணியிடங்களில் பாகுபாடற்ற ஊதியம் வழங்குவதை…

  21. படத்தின் காப்புரிமை ANI பிகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வைஷாலியின் பகவான்பூர் என்னும் இடத்தில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டை அடித்து ஊரை வலம் வரச் செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை மாலை பகவான்பூர் கிராமத்தில் இந்த தாய் மற்றும் மகளிடம் தவறாக நடக்க சிலர் முயற்சி செய்தனர். அதனை அவர்கள் இருவரும் எதிர்த்தபோது, அப்பகுதியை சேர்ந்த வார்ட் கவுன்சிலர, 2 பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் கிராமத் தலைவர் உள்ளிட்ட சிலர் முடிசீர்த்திருத்துபவரை அழைத்து தாய் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து அவர்க…

  22. அணுக்கழிவுகளை சேமிப்பதால் பாதிப்பில்லை – மத்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக இந்த பதிலை தெரிவித்துள்ளார். மேலும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த கழிவுகள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு பின்னர் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறித்த பகுதியில் கதிர்வீச்சி எந்தளவிற்கு காணப்படுகின்றது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ள…

  23. பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை – ராகுல்காந்தி June 27, 2019 தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை எனவும் அந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ராகுல் காந்தி பதவிவிலகும் முடிவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் பேரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்த தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை தொடர வேண்டும் என வலியுறுத்தினர். இதரன் போது உரையாற்றிய ராகுல் காந்தி, தான் தற்போது தலைவர் பொறுப்பில் இல்லை எனவும் தன்னுடைய பதவிவிலகும்…

  24. படத்தின் காப்புரிமைFACEBOOK பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல்தான். மத்திய அமைச்சராக ஜூன் 7ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்புவரை, இவர் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக ஆறாண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசுக்கு பெயர்போன சிவகாசியில் பிறந்து, தமிழ்வழியில் பள்ளிக் க…

    • 1 reply
    • 519 views
  25. அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள வரி அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த வரி அதிகரிப்பை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட தான் எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக இந்திய கடந்த சில ஆண்டுகளாக அதிக வரியை விதித்துவந்துள்ள நிலையில், அண்மையில் அதனை அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜப்பானில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பக்க அமர்வு…

    • 0 replies
    • 699 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.