Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புதுடெல்லி: கணவனால் மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால் அது குற்றமாகக் கருத வேண்டுமா என்பது குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இதில் கவனிக்கத்தக்க வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 18 வயதுக்குக் குறையாத மனைவியுடன் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 375, விதிவிலக்கு 2 கூறுகிறது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணை…

  2. மனைவியை கைவிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கடவுச்சீட்டு ரத்து திருமணமாகி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் மனைவியரை கைவிட்டதாக சுமார் 45 இந்தியர்களின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை மந்திரி மேனகா காந்தி இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். வெளிநாட்டுவாழ் இந்தியர்களில் திருமணம் முடிந்து மனைவியரை கைவிட்டவர்கள் குறித்து மத்திய பெண்கள் நல அமைச்சகத்தின் அமைப்பின் உதவியோடு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது சுமார் 45 பேர் மனைவியரை கைவிட்டு வெளிநாடுகளில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமூலம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் வெளியுறவுத்…

    • 4 replies
    • 778 views
  3. இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர் மனைவியின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி பெண் போல பர்தா போட்டு பயணிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பயணத்தின் போது, அந்த நபர் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது வெளியே வந்தபோது பர்தா போட்டு வந்துள்ளார். பெண் உடையில் சென்ற நபர் எப்படி ஆண் உடையில் வெளிவருகிறார் என்று கவனித்த பணிப்பெண் ஒருவர் இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் விமானத்தை விட்டு கீழிறங்கும் போது அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த நபரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதை அடுத்து அ…

  4. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பியாக இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந்திகதியுடன் முடிவடைந்தது. மன்மோகன் சிங் ஐந்து முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டார். தற்போது அசாமில் காங்கிரஸ்க்கு போதுமான அளவு எம்எல்ஏ-க்கள் இல்லாததால் அசாமில் இருந்து 6-வது முறையாக தேர்வாகும் வாய்ப்பு இல்லாமல் போனது. மற்ற மாநிலம் ஏதாவது ஒன்றில் இருந்து மாநிலங்களவ…

    • 0 replies
    • 373 views
  5. மன்மோகன் சிங்... திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி! இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை மன்மோகன் சிங் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244770

  6. மம்தா பானர்ஜிக்கே பிரதமராவதற்கு தகுதியுள்ளது: பா.ஜ.க தலைவரின் கருத்தால் பரபரப்பு இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதென அம்மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் வெளியிட்ட கருத்து இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள பா.ஜனதாவை சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என நேற்று (சனிக்கிழமை) ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, திலிப் கோஷ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது, “மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவாரானால் அது முதலமைச்சர் மம்தா பானர்ஜியாகவே இருக்க முடியும். அவர் பிரதமராக தெர…

  7. மம்தா பானர்ஜியினால் மாத்திரமே நாட்டை வழிநடத்த முடியும்: குமாரசாமி நாட்டை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளதென கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குமாரசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “மம்தா பானர்ஜி மிக எளிமையாகவும், சிறந்த நிர்வாகியாகவும் காணப்படுகின்றார். அந்தவகையில் நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் அவரிடம் இருப்பதாக நம்புகிறேன். மேற்கு வங்காளத்தில் என்றுமில்லாதளவு சிறந்த ஆட்சியை நடத்தி, மம்தா பானர்ஜி அதனை நிரூபித்துள்ளார். இதேவேளை தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரிய…

  8. சோபன் சாட்டர்ஜி 2 முறை கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார். மம்தாவின் நம்பிக்கைக்குரியவரான அவர், சிறு வயது முதலே திரிணாமூல் காங்கிரசில் பணியாற்றி வந்தார். மம்தாவின் வலது கரமாக இருந்து வந்த கொல்கத்தா முன்னாள் மேயர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆட்சி இல்லாத மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பணியில் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர். இதன் விளைவாக 2014 மக்களவை தேர்தலின்போது 2 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்த பாஜக, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 18 தொகுதிகளில் வென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக…

    • 0 replies
    • 474 views
  9. மம்தாவை வீழ்த்துகிறதா மோடியின் வியூகம்?

    • 0 replies
    • 446 views
  10. மராட்டிய மேல்-சபைக்கு 5 இடங்களுக்கு நடந்த தேர்தல் ஆளும் கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி - பா.ஜனதாவுக்கு பின்னடைவு மும்பை, மராட்டிய மேல்-சபைக்கு புனே, நாக்பூர், அவுரங்காபாத் பட்டதாரி தொகுதிகள் மற்றும் அமராவதி, புனே ஆசிரியர் தொகுதிகளில் உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) பதவிக்காலம் முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக இந்த தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் காலியாக உள்ள இந்த 5 மேல்-சபை தொகுதிகளுக்கும் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்…

  11. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் நோய்த்தொற்று வேகமாக பரவினால் நிலைமையை நிர்வகிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பதிவு: ஏப்ரல் 04, 2020 16:48 PM மும்பை மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றில் முத…

  12. மராட்டியம்: எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியின்போது கிரேன் எந்திரம் விழுந்து 17 பேர் பலி மராட்டியத்தில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியின்போது கிரேன் விழுந்து 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தினத்தந்தி01-08-2023 04:14:35 மும்பை, மராட்டிய மாநிலத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும்பணிகள் இன்று அதிகாலை நடைபெற்று வந்தன. மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் இன்று அதிகாலை வேலை …

  13. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்! மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி தற்போது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இனி வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும். நீட் தேர்வின் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2 நீட் தேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்பில் சேரலாம். மாணவர்கள் சிறந்த முறையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டு…

  14. மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஆரம்பம்! மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெறுகின்றது. குறித்த நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகி 5 மணிக்கு நிறைவு பெறுகின்றது. இதனை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகின்றது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜாரத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம் மற்றும் உருது ஆகிய 11 மொழிகளில் நீட்தேர்வு நடைபெறுகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் இம்முறை 1.4 இலட்சம் பரீட்சார்த்திகள் தேர்வெழுதுகின்றனர். இதேவேளை ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்பகுதிகளில் நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளமையும…

  15. மருத்துவ பொருட்களுக்கு... அதிக விலையை, நிர்ணயிக்கக் கூடாது – இந்தியா வலியுறுத்து! கொரோனா சிகிச்சைக்காக கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனா அதிக விலையை நிர்ணயிக்க கூடாது என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹொங்கொங்கிற்கான இந்தியத் தூதர் பிரியங்கா சவுஹான் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தைச் சமாளிக இந்தியாவைச் சேர்ந்த தனியார் மருத்துவ நிறுவனங்கள், சீனாவில் இருந்துதான் அதிக அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த மருத்துவப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்ட…

  16. மருத்துவக் கட்டணம் செலுத்தாத நோயாளி அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் தில்நவாஸ் பாஷா பிபிசி இந்தி Getty Images மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாத நோயாளி ஒருவரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். "உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் நோயாளியின் தரப்பினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே சண்டை நடப்பது தெரிகிறது. உடல் நலம்…

  17. மருத்துவக் கருவிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது மத்திய அரசு! மருத்துவ பரிசோதனை மையங்களில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவரும் நிலையில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “பரிசோதனை மையங்களில் உபயோகப்படுத்தும் அனைத்து விதமான நோய் கண்டறியும் சோதனைக் கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களின் ஏற்றுமதிக்கு முற்றிலு…

  18. பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் மற்றும் ஷதாப் நஸ்மி பதவி, பிபிசி செய்தியாளர்கள் 26 மார்ச் 2024 இந்தியாவில் மருந்துகள், சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைக்கான செலவு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்தே. இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மலேரியா, கோவிட் அல்லது இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பல பிரபலமான மருந்துகள் மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்து வருவது தெரிந்தால் அது சாமானியர்களுக்கு கவலையளிக்கக் கூடும். அதே நேரத்தில் மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த நிறுவனங்கள், கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்பிற்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்…

  19. மற்றுமோர் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1-720x450.jpg விண்ணில் குறிப்பிட்ட துார இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் தரையில் இருந்து விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணை ஒடிசா மாநில கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானத்தை அடுத்ததாக ஏவப்ப…

  20. மலபார் கடற்படை கூட்டுப்பயிற்சி இன்று ஆரம்பமாகியது! இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் பயிற்சியின் முதல் கட்டம் விசாகப்பட்டினத்தில் ஆரம்பமாகி வங்கக்கடல் கடற்கரைப் பகுதியில் நடைபெறுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பது, வான் வழியில் நடத்தப்படும் தாக்குதல்களை கப்பலில் இருந்து எதிர்கொள்வது உள்ளிட்ட நவீன பயிற்சிகள் இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளன. சீனாவிற்கு எதிராக ஒற்றைக் கருத்துக்களை கொண்ட க்வாட் அமைப்பைச் சேர்ந்த நான்கு நாடுகளும் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:/…

  21. கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை பரிசோதித்து அறிவதற்காக மலிவு விலை சோதனை முறை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உள்ளதா, இல்லையா என்பதை முதற்கட்டமாக பரிசோதித்து அறிவதற்கு உலக நாடுகள் பலவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்று அழைக்கப்படுகிற துரித பரிசோதனை கருவியை பயன்படுத்துகின்றன. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை விரைவாக கண்டுபிடிக்கலாம். ஆனால் சீனாவில் தயாரிக்கப்படுகிற இந்த கருவி ரூ.750-க்கு அதிகம், தென்கொரியாவில் தயாரிக்கப்படுகிற கருவி ரூ.350-க்கு அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் அங்கமான ச…

    • 3 replies
    • 500 views
  22. மலிவு விலை செயற்கை சுவாசக் கருவி ‘ஜீவன்’: கரோனா நோயாளிகள் உயிரைக் காக்க ரயில்வேயின் புதிய முயற்சி: ஐசிஎம்ஆர் ஒப்புதலுக்காக காத்திருப்பு ரயில்வே தயாரித்த செயற்கை சுவாசக் கருவியின் மாதிரிப் படம். புதுடெல்லி கரோனா வைரஸுக்கு எதிராக நாடு போராடி வரும் நிலையில், பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்காக மலிவு விலையில் செயற்கை சுவாசக் கருவியை ரயில்வேயின் கபூர்தலா ரயில் தொழிற்சாலை தயாரித்துள்ளது. இந்த மலிவு விலை செயற்கை சுவாசக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்தால், ரயில்வே உற்பத்தியைத் தொடங்கிவிடும். நாள் ஒன்றுக்கு 100 கருவிகளைத் தயாரிக்க முடியும். கரோனா வைரஸ் பாதிப்பு தீவி…

  23. மலேசியா மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கோலாலம்பூர் : மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் …

    • 0 replies
    • 181 views
  24. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர். இந்நிலையில், மலாக்கா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி தனது கணவரை விடுவிக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, கோலாலம்பூரில் உள்ள மலேசிய காவல்துறை தலைமை அலுவலகமான புக்கிட் அமானுக்கு எதிரே சாலையோரம் அமர்ந்து தனது போராட்டத்தை…

  25. படத்தின் காப்புரிமை MANAN VATSYAYANA/getty images மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில், அவரது ராஜிநாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி அவர் மகாதீரைக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மாமன்னர் அடுத்து ஆட்சியமைக்குமாறு யாரை அழைக்கப் போகிறார்? எனும் கேள்வி எழுந்துள்ளது. மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க 112 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 102 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைக் கொண்ட தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) …

    • 0 replies
    • 370 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.