அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
கொரோனா தடுப்பூசி : பாதகமான விளைவுகள் குறித்த, தரவுகளை வெளியிடும்படி... நீதிமன்றம் உத்தரவு! கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது அரசின் தடுப்பூசிக் கொள்கை நியாயமற்றது இல்லை எனவும், தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்கெனவே நீக்காவிட்டால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்…
-
- 0 replies
- 187 views
-
-
இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே பற்றி அதிகம் அறியாத சில தகவல்கள் 30 ஏப்ரல் 2022 பட மூலாதாரம்,INDIAN ARMY படக்குறிப்பு, இந்திய ராணுவ தலைமைத் தளபதிக்குரிய பேட்டனை, பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து பெறும் ஜெனரல் மனோஜ் பாண்டே (இடது) இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சம்பிரதாய நடைமுறைப்படி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து மனோஜ் பாண்டே ராணுவ ஜெனரலுக்கான பேட்டனை பெற்றுக் கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார். முன்னதாக, பதவியில் இருந்து ஓய்வு …
-
- 2 replies
- 478 views
- 1 follower
-
-
‘இந்தி எப்போதும் நமது தேசிய மொழிதான்’ – நடிகரின் ட்விட்டர் பதிவால் இணையத்தில் எழுந்த விவாதம் ச. ஆனந்தபிரியா பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தி தேசிய மொழி இல்லை எனில் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என நடிகர் சுதீப் கிச்சாவுக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கன்னட மொழி திரைப்படமான 'கே.ஜி.எஃப்2' சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக பட…
-
- 14 replies
- 667 views
- 1 follower
-
-
தன்னம்பிக்கை கதை: கண் முன்னே மரணம்; வாட்டி வதைக்கும் புற்றுநோய் – ஆனால் மகிழ்ச்சிக்கு குறைவில்லை ரவி பிரகாஷ் பிபிசி ஹிந்திக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAVI PRAKASH/BBC வாழ்வுக்கும் சாவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். வாழ்க்கையை வாழும்போது அந்த அனுபவத்தை நம்மால் விளக்க முடிகிறது. ஆனால், மரண ஏற்பட்டபின் அந்த அனுபவத்தின் கதையை சொல்ல முடிவதில்லை. மற்றவர்கள் நம் மரணத்தின் கதையைச் சொல்லலாம். ஆனால் இறந்த பிறகு என்ன நடக்கும், இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் நம் சமூகம் இதுபோன்ற சில கதைகளை விவரி…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
இந்தியாவிற்கு... உதவ தயாராக இருப்பதாக, அமெரிக்கா அறிவிப்பு! சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் மேற்படி தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் தடையற்ற வெளிப்படையான வர்த்தகத்திற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்கவும், இந்திய இராணுவத்தினர் ரஷ்யாவின் பூர்வீகமான ஆயுதக் கொள்முதலை சார்ந்து இருக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா உதவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவ…
-
- 0 replies
- 123 views
-
-
ரஷ்யாவிடம் இருந்து... இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது... அதிகரித்துள்ளது! ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள குறிப்பில், ”இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 4 கோடி பரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு தினமும் 50 இலட்சம் பரல் கச்சா எண்ணெய் தேவையில் அதில், 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது வரை ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்களை விட காட்டிலும் ரிலையன்ஸ் அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் ஜூன் காலாண்டு வரை தேவைக்காக 1.5 …
-
- 0 replies
- 134 views
-
-
பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முக்கிய முடிவு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ வரும் 28 ஆம் தேதி முதல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் மற்றும் அதன் மூலப்பொருளான பாமோலின் ஏற்றுமதியை தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் நாட்டில் பாமாயில் உற்பத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் 'மலிவாகவும் ஏராளமாகவும்' பாமாயில் கிடைப்பதை உறுதி செய்த பின்னரே ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் ப…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
இந்தியாவில் குடி நோய்க்கு ஆளாகும் பெண்களின் கதை: எப்படி சிகிச்சை பெறுகிறார்கள்? இம்ரான் குரேஷி பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேர்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடிப் பழக்கத்திற்கு, போதைப் பொருளுக்கும் அடிமையாக இருப்பதை கண்டுப்பிடித்தபோது, அவருக்கு வயது 16 கூட இல்லை. ஒரு கட்டத்தில், அவர் பள்ளியில் போதையில் இருந்ததால், பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். அவர் போதையில் இருந்தபோது பல முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் குறித்து கவலையடைந்த அவரது பெற்றோர், அவரை பல்வேறு மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்து சென்றனர். …
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
இராணுவ செலவீனங்கள் : உலகளவில்... மூன்றாவது இடத்தில், இந்தியா! இராணுவ செலவினங்களை மேற்கொள்வதில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உலக நாடுகளின் இராணுவத்திற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ”கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகின் இராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகளில் இராணுவத்திற்கு செலவினங்களை மேற்கொள்வதில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றா…
-
- 0 replies
- 156 views
-
-
ஹவுதி கிளர்ச்சியாளர்களால்... கடந்தப்பட்ட, இந்திய மாலுமிகள் விடுவிக்கப் பட்டனர்! ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடந்தப்பட்ட 7 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கொடி பொருத்திய சரக்கு கப்பலை கைப்பற்றினர். குறித்த கப்பலில் இருந்த 7 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனை ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் அல்புசைதி உறுதிப்படுத்தினார். தற்போது குறித்த ஏழு இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். https://athav…
-
- 0 replies
- 149 views
-
-
அமெரிக்க டொலருக்கு, நிகரான... இந்திய ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி! அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி இன்று (திங்கட்கிழமை) 23 பைசா வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் 76.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 785 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசயி பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,928.60 என்ற அளவில் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2022/1278469
-
- 0 replies
- 298 views
-
-
அமித்ஷாவின்... வருகைக்கு எதிராக, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவித்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரச நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2022/1278247
-
- 0 replies
- 129 views
-
-
இராணுவ தேவைகளுக்காக... இந்தியா, ரஷ்யாவை சேர்ந்திருக்கக்கூடாது – அமெரிக்கா இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா, ரஷ்யாவை சார்த்திருக்கக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராணுவ அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி மேலும் தெரிவிக்கையில், ”இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளாக இருந்தாலும், தங்கள் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவை சார்த்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை பிற நாடுகள் சார்ந்து இருப்பதை நாங்கள் என்றும் ஊக்கப்படுத்த மாட்டோம். அதே நேரத்தில் இந்தியா உடனான எங்கள் உறவுகளை மிகவும் மதிக்கிறோம். இந்த உறவுகளை மேம்படுத்த தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்” எனத் …
-
- 0 replies
- 115 views
-
-
இந்தியாவின், அண்டை நாடுகள் இரண்டுமே... இந்தியாவிற்கு எதிராக உள்ளது – நிர்மலா சீதாராமன் இந்தியாவின் அண்டை நாடுகள் இரண்டுமே இந்தியாவிற்கு எதிராக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் சென்றுள்ளார். இதன்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா அதன் பெரும்பாலான இராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடு இன்னொரு அண்டை அண்டை நாட்டுடன் கைகோர்க்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்த அவர், அவ்விரு நாடுகளுமே இந்தியாவிற்கு எதிராக இருப்…
-
- 0 replies
- 141 views
-
-
ஐரோப்பிய ஆணைய தலைவர்... இந்தியா, வந்தடைந்தார்! ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர்லெயன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கத்தின் இழப்பு, எரிசக்தி மற்றும் டிஜிக்டல் பரிமாற்றம், பாதுகாப்பு, பொருளாதாரம், இலவச வர்த்தக ஒப்பந்தம், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை …
-
- 0 replies
- 129 views
-
-
இந்தியா.... பாதுகாப்புத்துறையில், தற்சார்பு நிலையை அடைவதற்கு... பிரித்தானியா ஒத்துழைப்பு! இந்தியா பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கு பிரித்தானியா போதுமான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார். இந்தியாவிற்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியப்பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்டிருந்தனர். இதன்போது தொடர்ந்து தெரிவித்த பொரிஸ் ஜோன்சன், ”இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் நிலவி வரும் நல்லுறவானது தற்போதைய காலக்கட்டத்தில் சிறப்பு மிக்கதாக உள்ளது. உலக அளவில் சா்வாதிகாரப் போக்கு அதிகரித்து வரும் நிலைய…
-
- 0 replies
- 667 views
-
-
இந்தியா- சீனா விவகாரம் : எல்லைப் பகுதியில், படைகளை குறைப்பதுதான்... ஒரே வழி – ராஜ்நாத் சிங் எல்லைப் பகுதியில் படைகளை குறைப்பதுதான் சீனாவுடனான முறண்பாட்டை குறைப்பதற்கான வழி என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனாவுக்கு இடையில் எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இதுவரை பலசுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் தீர்வு எட்டப்படவில்லை. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராஜ்நாத்சிங் மேற்படி கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”லடாக் எல்லைப் பகுதியில் சுமார் 50 முதல் 60 ஆயிரம் வீரர்கள் வரை இந்தியாவும் …
-
- 0 replies
- 109 views
-
-
கடனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாநிலங்கள் 'மினி இலங்கை' ஆக மாறும் ஆபத்தா? ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AAP @TWITTER கடந்த சில காலமாக பஞ்சாப் மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடப்படுகிறது. இத்தகைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இது போன்ற மாநிலங்கள் இப்போது 'மினி இலங்கை' என்று கருதப்படுகின்றன. பஞ்சாபின் பொருளாதார நிலையை புள்ளிவிவரங்களின் மூலம் புரிந்து கொள்வோம். மாநிலத்தின் கடன், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 53% ஆகும். இது இந்…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: “லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பை தடை செய்யலாம்...” - உயர்நீதிமன்றம் கருத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய இந்திய நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உரிமை (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) பாலியல் குற்றங்கள் மற்றும் விபச்சாரங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் ஒருவரின் பாலியல் வன்க…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது... தேச நலனுக்கு, தீங்கு விளைவிக்கும் – பியூஷ் கோயல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மத்திய தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” நமது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதாலோ அல்லது பலவீனப்படுவதன் மூலமோ தேச நலனுக்கு தீங்குதான் ஏற்படும். ரூபாயின் வீழ்ச்சியானது ஏற்றுமதி செலவை அதிகரிக்கிறது. நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. இறக்குமதியைச் சார்ந்துள்ள இந்திய பொருட்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்துகிறது. எனவே ரூபாய…
-
- 0 replies
- 100 views
-
-
டெல்லியில்... முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை! இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. அந்தவகையில் டெல்லி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 33 பேர் உயிரிழந்துள்…
-
- 0 replies
- 238 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கு... சுற்றுப்பயணம், மேற்கொள்ளும் மோடி! இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின்போது டென்மார்கில் நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் மாசு ஏற்படுத்தாக தொழிநுட்பம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மோடி பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், உக்ரைன் விவகாரம் ஆகியவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 216 views
-
-
இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை... இராணுவ அதிகாரிகள், கசியவிட்டதாக தகவல்! இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் சிலர் அண்டை நாட்டுக்கு கசியவிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அண்டை நாட்டின் உளவு பார்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அதிகாரிகள் மீது உறுதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1277526
-
- 0 replies
- 106 views
-
-
இந்தியாவில்... மீண்டும் அதிகரிக்கும், கொரோனா தொற்று! இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. தொற்றுநோய் பரவுவதைக் தொடந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும், திறமையாகவும், நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தடுப்பூசி …
-
- 0 replies
- 170 views
-
-
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்... இந்தியா வருகை! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகைத்தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவரின் இந்திய வருகை முக்கியதுவம் மிக்க விடயமாக பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1277438
-
- 0 replies
- 168 views
-