Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!- அமித்ஷா புகழாரம். கடந்த 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை.பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது” என்று தெரிவித்தார். மேலும் ”மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந…

  2. திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்! திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்…

  3. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி 2014-ல் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர், தெலங்கானா 19 செப்டெம்பர் 2025 ஷம்பாலா தேவி தனது பழைய புகைப்படங்களில் ஒன்றைக் காட்டுகிறார். அதில் அவர் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். அவரது கையில் AK-47 ரக துப்பாக்கி உள்ளது, மணிக்கட்டில் கடிகாரம் மற்றும் இடுப்பில் வாக்கி-டாக்கி உள்ளது. அவரிடம் இதுபோன்ற இரண்டு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியாவின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் முதல் பெண் 'ராணுவ' கமாண்டராக மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 25 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அவர் ஆயுதங…

  4. ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்த…

  5. நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு September 13, 2025 நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன…

  6. நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு நடவடிக்கையாக, ‘ஜென் Z’ போராட்டம் எனப்படும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் குதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாகு சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்றினர். முதல் கட்டமாக சுமார் 2,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மற்றொரு பகுதியில் இருந்த 1,500 கைதிகளும் சிறையிலிருந்து வெளியேறினர். பொல…

  7. இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் ! 09 Sep, 2025 | 10:53 PM இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தோல்வியடைந்தார். இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகின. இதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகள் 752. சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 452. சுதர்சன் ரெட்டி பெற்ற வாக்குகள் 300. 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். துணை …

    • 2 replies
    • 238 views
  8. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2025, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். அவர் ராஜினாமா செய்திருப்பதை அவரது செயலகம் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அந்த அறிக்கை கூறுகிறது. தலைநகர் காத்மாண்டுவிலும், நேபாளம் முழுவதும் அதிகாலை முதல் போராட்டங்கள் நடந்தன. ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் வீடுகள் உட்பட பல மூத்த அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. நேபாளத்தில் …

  9. போட்டியிடும் கடல் நீரில் கோபால்ட்டைப் பெறுவதற்கான இந்தியப் போட்டியைத் தூண்டிவிடும் என்று சீனா அஞ்சுகிறது. நீருக்கடியில் கோபால்ட் நிறைந்த மலையை ஆராய இந்தியா உரிமைகளை நாடியுள்ளது. ஆனால் இலங்கையும் இந்தப் பிராந்தியத்தின் மீது கண் வைத்துள்ளது. சீன ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில், வியாழன், அக்டோபர் 26, 2023 [எரங்க ஜெயவர்தன/ஏபி] ரெஜிமோன் குட்டப்பன் எழுதியது 19 ஜூன் 2024 அன்று வெளியிடப்பட்டது.19 ஜூன், 2024 சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்யவும் இந்தியப் பெருங்கடலின் நடுவில் உள்ள கோபால்ட் நிறைந்த நீருக்கடியில் உள்ள மலையை ஆராய்வதற்கான உரிமைகளைப் பெற இந்தியா போராடி வருகிறது. ஆனால், இலங்கையும் விலைமதிப்பற்ற கனிமங்களுக்காக இந்தப் பிராந்தியத்தில்…

  10. பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த சூழலிலும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. உயிர…

  11. படக்குறிப்பு, "கிராமத்தின் நிலைமை அச்சமாக இருப்பதாக" கூறுகிறார் சீதம்மா கட்டுரை தகவல் கரிகிபட்டி உமாகாந்த் பிபிசிக்காக 8 செப்டெம்பர் 2025, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திர பிரதேசத்தின் குண்டூருக்கு அருகேயுள்ள துரகபளம் எனும் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழும் திடீர் மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த மரணங்களால் அங்குள்ள தலித் சமூகத்தினர் கலங்கிப் போயுள்ளனர். குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி கூறுகையில், அந்த கிராமத்தில் எஸ்சி காலனியைச் சேர்ந்த 29 பேர், கடந்த ஐந்து மாதங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராமத்தினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, அரசு மருத்துவ முகாம் அமைத்து…

  12. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்தும் முப்படை தலைமை தளபதி பேசியுள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுடனான எல்லைப் பிரச்னைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது எனவும் அது தொடரும் எனவும் இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார். பல காயங்களை கொடுத்து இந்தியாவை பலவீனமாக்க நினைக்கும் பாகிஸ்தானின் மறைமுகப்போர் 2வது சவால் என்று அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்ததாகவும், இந்த ஆபரேஷனில் முடிவெடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார…

  13. ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு! ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நியுயோர்க்கில் ஆரம்பமாகிற நிலையில் கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் 23ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடக்க உள்ளது. முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேச்சை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் உறையாற்றவுள்ளார். இதேவேளை, இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதி…

  14. அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம். மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகு…

  15. Published By: Digital Desk 1 03 Sep, 2025 | 09:18 AM பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் மேலும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் …

  16. பிரிட்டிஷ் காலனித்துவம் 40 ஆண்டுகளில் 100 மில்லியன் இந்தியர்களைக் கொன்றது எப்படி? 1880 முதல் 1920 வரை, இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கைகள் சோவியத் யூனியன், மாவோயிஸ்ட் சீனா மற்றும் வட கொரியாவில் ஏற்பட்ட அனைத்து பஞ்சங்களையும் விட அதிகமான உயிர்களைக் கொன்றன. டிலான் சல்லிவன் மற்றும் ஜேசன் ஹிக்கல் ஆகியோரால் மெக்குவாரி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியில் துணை உறுப்பினர். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA-UAB) பேராசிரியர் மற்றும் ராயல் கலை சங்கத்தின் உறுப்பினர். 2 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது2 டிச., 2022 பின்னர் படிக்க கட்டுரைகளைச் சேமித்து, உங்கள் சொந்த வாசிப்புப் பட்டியலை உருவாக்கவும். சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்ய…

    • 0 replies
    • 167 views
  17. Published By: Vishnu 01 Sep, 2025 | 06:21 PM (நா.தனுஜா) பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட திங்கட்கிழமை (1) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அண்மைக்காலத்தில் நடாத்திவரும் சந்திப்புக்களின் ஓரங்கமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனான சந்திப்பு திங்கட்கிழமை (1) புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது சமகாலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்திவரும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றின் விளைவாக எதிர்வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விசேடமாகக் கலந்துரைய…

  18. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையைப் பயன்படுத்தி பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான செய்தியை வழங்கினார். அதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு “சில நாடுகள்” வழங்கும் வெளிப்படையான ஆதரவை இனியும் பொறுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் 25 ஆவது SCO உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இதன்போது தனது உரையினை உறுதியாக வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “ப…

  19. இந்திய பிரதமர் மோடி - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை 31 Aug, 2025 | 11:14 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய பிரதமர் மோடி ஜப்பான், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 29ம் திகதி ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதையடுத்து, இந்தியா , ஜப்பான் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2 நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு சீனா சென்றார். அவர் சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், …

  20. சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி 31 Aug, 2025 | 11:29 AM ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. தியான்ஜின் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் இந்திய ப…

  21. அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா செல்லும் மோடி : ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கிறார் ! 30 Aug, 2025 | 10:48 AM அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (30) சீனாவுக்கு விஜயம் செய்கின்றார். அமெரிக்க அரசாங்கம் அண்மையில் இந்தியப் பொருட்களுக்கு 50 வீத வரி விதிப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதே இந்த உயர் வரி விதிப்பிற்கான காரணம் என அமெரிக்க ஜனாதிபதி …

  22. பட மூலாதாரம், Reuters 58 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார். கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன. ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக டிரம்பின் 'வரிவிதிப்பு போருக்கு'ப் பிறகு, இந்த புதிய இராஜதந்திர செயல்ப…

  23. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான 50 வீத வரி இன்று முதல் அமுல் ! 27 Aug, 2025 | 09:57 AM அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக nடானால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், ஏனைய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்ததுடன் அந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் மசகு எண்ணெய், இராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூட…

  24. ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை. ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பயன்படுத்தி தேர்வில் பங்கேற்ற 524 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 109 பேருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்டவர்களில் 514 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்…

  25. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்கும் முன்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் தரப்பை ஆக்ரோஷமாக முன்வைத்து வந்தார். கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் அலாஸ்காவில் அதிபர் புதினுக்கும் டிரம்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என்று ஆகஸ்ட் 13 அன்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார். உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் பிரான்சின் அர்னாட் பெர்ட்ராண்ட், இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் மறுபதிவு செய்து , "இது இந்தியாவின் பல-சீரமைப்பு ராஜ்ஜீய உத்தியின் தோல்வி என்பது தெளிவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.