Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க …

  2. அயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம் உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கோயில் கட்டும் பணி, விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து, கோயில் கட்டப்படவுள்ள இடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதன்போது, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில், “ரா…

  3. தற்கொலைத் தாக்குதல் திட்டம்: கைதான ஐ.எஸ். பயங்கரவாதி வீட்டில் கிடைத்த வெடிபொருட்களால் அதிர்ச்சி ! டெல்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் வீட்டிலிருந்து தற்கொலைப்படை அங்கிகள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, இரண்டு தற்கொலைப் படை அங்கிகள், ஒரு பெல்ட், 9 கிலோ வெடிபொருட்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். கொடி உட்பட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் நோக்கில் தற்கொலைப் படை அங்கிகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பயங்கரவாதி ச…

  4. கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 200 ரூபாய் – சீரம் இன்ஸ்டிடியூட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் 200 ரூபாய் என சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தொடங்க தீர்மானித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை க…

  5. மின்சார கார்களின் விலை... பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் – நிதின் கட்கரி மின்சார கார்களின் விலை பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘மின்சார கார் உற்பத்திக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குவதுடன், முக்கிய நெடுஞ்சாலைகளில் மின்கார்களுக்கான சார்ஜிங் மையங்களை திறக்க உள்ளதால் இது சாத்தியமாகும் எனத் தெரிவித்துள்ளார். மின்சார கார்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும், அவற்றுக்கான லித்தியம் பேட்டரிகளின் விலை குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கொள்கை முடிவை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ச…

  6. என்டிஆரின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான மறைந்த என்டிஆரின் 12 பிள்ளைகளில் இளையவர்தான் உமா மகேஸ்வரி. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் தங்கை ஆவார். அவரது இறப்பு செய்து குறித்து அவரது சகோதரரும், நடிகருமான பாலகிர…

  7. உத்தரகாண்டில்... இந்தியா, அமெரிக்கா கூட்டுப் போர்ப் பயிற்சி. இரு நாடுகளினதும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் வழக்கமான ‘யுதாபியஸ்’ தொடர் போர்ப் பயிற்சிகளை உத்தரகாண்டில் உள்ள சீனா எல்லைக்கு அருகில் உள்ள அவுலி பகுதியில் நடத்தவுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த பயிற்சியானது, இரு நாட்டுப் படைகளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முறியடிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதல் துருப்புக்கள் மற்றும் தளவாடங்கள் குவிக்கப்பட்ட பகுதியாக இந்த மலைப்பகுதி காணப்படுவதோடு அங்கு ஒக்டோபர் 18முதல் 31வரை பயிற்சி நடைபெறும் என்று அதிகா…

  8. அதானி மின்சார ஒப்பந்தத்தை வங்கதேசம் மறுபரிசீலனை செய்ய முயல்வது ஏன்? முன்னி அக்தர் பிபிசி வங்கமொழி சேவை 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார மேம்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்துவருவதாக நம்பப்படுகிறது. அதானி குழும பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதிக்குள் வங்கதேசம் வந்து இந்தப் பிரச்னை குறித்து விவாதி…

  9. இராமாயண கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த கேரளா.. உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலரத்தில் இருக்கும் பிரம்மாண்ட பறவை சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம் இதுவே. சிற்பியும் பிரபல திரைப்பட இயக்குனருமான ராஜீவ் அன்சலின் மனதில் உதித்த யோசனையே ஜடாயு சிலை. ஜடாயு இயற்கை பூங்கா என்று அறியப்படும் ஜடாயு எர்த் சென்டர் பெரும் வரவேட்பை பெற்று வருகிறது வருகிறது இந்தச் சிற்பத்தையும் அதனோடு சேர்ந்த வளாகத்தையும் மலை உச்சியில் அமைக்க ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகியுள்ளது. ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஜடாயுவின் கதை அங்குள்ள பாறையில் ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும…

  10. 07 NOV, 2023 | 11:14 AM காஷ்மீரில்பிணையில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 14 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் சுமார் 5000 விசாரணைக் கைதிகள் உள்ளனர். இதில் 740 பேர் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். வழக்கு விசாரணையின்போது சில தீவிரவாதிகள் பிணையில் விடுதலையாகின்றனர். அப்போது அவர்கள் தலைமறைவாகி மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க பிணையில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை காஷ்மீர் போலீஸார் தொடங்கி உள்ளனர். காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்ப…

  11. தினகரன் - நரேந்திர மோதி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் - அமித்ஷா திட்டவட்டம் பிரதமர் மோதியும் அமித்ஷாவும் ஆணவப்போக்குடன் செயல்படுவதாகவும் அவர்களின் செயல்பாடுகள் காரணமாகாவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்ததாகவும் நேற்று முன்தினம் மகாராஷ்டிர மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிஷோர் திவாரி கூறியிருந்தார். அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெறவேண்டுமானால் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்…

  12. படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES பதினாறாவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று, வியாழக்கிழமை, மாலை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோதிக்கு முன் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விவசாயிகளுக்காக இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை எதையும் செய்யவில்லை என்றும், அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்தார். தமது அரசு ஏழைகள் …

  13. அதிகாலையில் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்! நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், இமயமலைப் பகுதி முழுவதும் அதிர்வு உணரப்பட்டது. பாட்னா, முசாபர்பூர் மற்றும் பீகாரின் அருகிலுள்ள பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தின் பைரப் குண்டாவைச் சுற்றி அதிகாலை 2.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை அளந்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் 5.5 என அதன் அளவை மதிப்பிட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது, குறிப்பிடத்தக்க ச…

  14. சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாஸ்போட்டுக்கு அவர் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். வார இறுதியில் வெளியுறவு துறை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில், நித்யானந்தா பற்றி ரவீஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நித்யானந்தா பல வழக்குகளில் தேடப்படுவதால், வெளிநாடுகளிடமும், தூதரகங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம் என்று ரவீஷ் குமார் கூறினார். "எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை முதலாக கொண்டே நாங்கள் செயல்பட முடியும். இதுவரை நித்யானந்தா எங்கிருக்கிறார் என…

    • 0 replies
    • 283 views
  15. சீனாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்கள் டெல்லியை வந்தடைந்தன! சீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஒக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லியை வந்தடைந்துள்ளன. ஒக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகின்றது. அந்தவகையில் இதுவரை இல்லாத வகையில் சீனாவில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி சுமார் 100 டன் எடைக் கொண்ட செறிவூட்டிகள், சீனாவின் ஹொங்கொங் விமானநிலையத்தில் இருந்து போயிங் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் பல மருத்துவ பொருட்கள் சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப…

  16. 'இந்தியாவின் ரஸ்புடின்' தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய சாமியார் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DHIRENDRA MEMORIAL FOUNDATION சக்தி வாய்ந்த பிரதமரின் யோகா குரு என்பதால், தீரேந்திர பிரம்மச்சாரி மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை வரிசையில் காத்திருப்பார்கள். நீல நிற டொயோட்டா காரை அவர் தானே …

  17. மகாத்மா காந்தி எமோஜியை டுவிட்டரில் ஆரம்பித்து வைத்தார் மோடி மகாத்மா காந்தி எமோஜியை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த மகாத்மா காந்தி எமோஜி எதிர்வரும் 8ஆம் திகதி அனைவரது பயன்பாட்டுக்கு கிடைக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ‘டுவிட்டர் இந்தியா’ வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, காந்தி ஜெயந்தி, எம்.கே.காந்தி, பாபு அட்150, மகாத்மா காந்தி, மகாத்மா அட்150 உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் மகாத்மா காந்தியின் ஓவியத்தை கொண்டிருக்கும் இப்புதிய எமோஜியை எதிர்வரும் 8ஆம் திகதி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் டுவிட்டர், டுவிட்டர் லைட் ஆகியவற…

  18. 19 AUG, 2023 | 10:50 AM மும்பை: அரபிக் கடல் பகுதியில் ஆய்வுக் கப்பலில் பயணம் செய்த சீன விஞ்ஞானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதற்கு சீன தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆய்வுக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஆய்வு கப்பல் கடந்த 16-ம்தேதி நள்ளிரவு மும்பையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இருந்தது. அப்போது கப்பலில் இருந்த சீன விஞ்ஞானியின் வெய்க்யாங் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக மும்பையில் உள்ள கடல்சார் மீட்…

  19. தெலுங்கானா, ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல் December 7, 2018 தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகின்ற நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றதுஇ காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்திவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நில…

  20. பெங்களூர் விபத்தில் இரு விமானிகள் பலி… February 1, 2019 பெங்களூரில் இன்று (01.02.19) பிற்பகல் இந்திய விடானப்படையின் மிராஜ் 2000 (Mirage 2000 aircraft of the Indian Air Force) விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமான பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக விமானத் துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஏச்.ஏ.எல், (HAL) நிறுவனத்தின் மிராஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் பெங்களூரிலுள்ள (HAL).ஏ.எல்.விமான நிலையத்தில் (HAL Airport) தரையிறங்கியபோது, தரையில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது. விமானம் தரையில் வீழ்ந்து வெடித்ததுடன், பாரியளவில் தீப்பற்றிக்கொள்ள, தீயணைக்கும் படையினர் பெரும் சிரமத்தின் பின்ன…

  21. சோனியாவின் மருமகனிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை! நில முறைகேடு வழக்கு தொடர்பில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ரொபர்ட் வதேராவிடம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ரொபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹொஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் ராஜஸ்தான் பிகானூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நேற்று ஒன்பது மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணை இடம்பெறுகிறது. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சோனியாவின்-மருமகனிடம்-இர/

  22. கர்நாடகாவை போன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு, நேற்று மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காரணம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர்தான். இவர்கள் பதவி விலகியதின் பின்னணியில் பாஜ கட்சி இருப்பதால், அம்மாநில அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா 4-வது முறைய…

    • 0 replies
    • 244 views
  23. சந்திரயான் 2 பின்னடைவுக்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ``2008 - 09-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (காங்கிரஸ்) சந்திரயான் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே ஆண்டில்தான் சந்திரயானுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் கடந்த 10 -12 வருடங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வந்தனர். அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் சந்திரயான் 2 திட்டத்துக்கு பின்னால் நான்தான் உள்ளேன்’ என்பதை இந்திய மக்களுக்குக் காட்டி ஒரு விளம்பரத்துக்காக மட்டுமே கடந்த செப்டம்பர்…

    • 0 replies
    • 303 views
  24. மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான ஜாய் பிரகாஷ் மஜூம்தார், நாடியா மாவட்டத்தில் காரில் சென்றார். காரை திரிணமூல் காங்கிரஸார் வழிமறித்ததால், கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவரை, செடி கொடிகளுக்குள் பிடித்து தள்ளிய திரிணமூல் காங்கிரஸார், காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதைக் கண்டு, பாதுகாப்புப் படையினர் திரிணமூல் காங்கிரஸாரை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அ…

    • 0 replies
    • 285 views
  25. சிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்! சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவ‌டிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்தே மத்திய அரசு மேற்படி வலியுறுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.