அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
பட மூலாதாரம்,WILLIAM PINCH படக்குறிப்பு, ஏழ்மையான விதவை தாயால் ஒரு போர் வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட அனுப்கிரி கோசைன் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 25 ஜூன் 2023, 15:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்துக் கடவுளான சிவனிடம் பக்தி கொண்ட துறவியாகவோ, இந்தியாவில் புனித மனிதர்களாக மதிக்கப்படும் நாக சாதுக்களில் ஒருவராகவோ திகழ்ந்த அனுப்கிரி கோசன், போர்ப் படை தளபதியாகவும் விளங்கிய வரலாறு உள்ளது. துறவி என்பதை விட பயமுறுத்தும் போர்ப் படை தளபதியாகவே அவர் சித்தரிக்கப்படுகிறார். நிர்வாண போர் வீரர்களை…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்’ என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு ‘அடல் சேது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்…
-
- 0 replies
- 222 views
-
-
தெலுங்கானாவின் பிரசார தலைவராக விஜயசாந்தி நியமனம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு! தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத் தலைவராக நடிகை விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் பிரசார குழுத் தலைவராக இருந்த மாலு பாக்தி விக்ர மர்கா சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தனது பிரசாரத் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்தே குறித்த பதவிக்கு நடிகை விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா சட்டசபை தேர்தலின் போது விஜயசாந்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இதனால் முதல்வர் சந்திரசேகரராவ் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து தனது பிரசாரங்களை…
-
- 0 replies
- 430 views
-
-
கடுமையான சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் இந்திய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். என்றோ பதியப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தற்போது அவரது கழுத்தை சுற்றும் பாம்பாக மாறி விட்டது. இந்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் 21ம் திகதி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தது முதல், இதுவரை அவர் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளின் பிடியில்தான் சிக்கி உள்ளார். சிதம்பரம் தரப்பில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்த நிலையில், சி.பி.ஐ கேட்டபடி அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.சி.பி.ஐ பிடியில்,15 நாட்கள் விசாரணைக்குப் பிறகு கண்டிப்பாக சிதம்பரம் வெளியே வருவார் என்று எதி…
-
- 0 replies
- 253 views
-
-
ஐந்தாண்டுகள் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் கடந்த மாதம் 24-ம் தேதி அன்றும் மகிழ்வுடன் இருந்தார். இரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமரப்போகிறோம் என்கிற பெருமிதம் அவரிடம் இருந்தது. ஆனால், அடுத்த நாளே அவரது ஆசையை, நிராசையாக்கியது கூட்டணிக் கட்சியான சிவசேனா. ஆம்! நாடு முழுவதும் கோலோச்சிய பி.ஜே.பி-க்கு மகாராஷ்டிராவில் ஆட்டம் காட்டிவருகிறது சிவசேனா. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்றொரு புறம் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன. பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் அதிகமாக சிவசேனா, பி.ஜே.பி கூட்டணி வெற்றிபெற்றுள்…
-
- 0 replies
- 748 views
-
-
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். …
-
- 0 replies
- 291 views
-
-
முக்கிய சாராம்சம் 1977 இல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். 1985-1988 க்கு இடையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார். 1990-1993 க்கு இடையில், அவர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக நியமிக்கப்பட்டார். 1993-1995ல் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநராக (கிழக்கு ஆசியா) ஆனார். 1995-1998 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலர் (அமெரிக்கா) 2000-2004ல் சிங்கப்பூரில் இந்திய ஹை கமிஷனர். 2007-2009 இல் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக ஆனார் மற்றும் அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பை வழிநடத்தினார். …
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
தான்சானியா நாட்டில், 1000 சிங்கங்களை கொன்ற "வைரஸ்" மீண்டும் பரவுகிறதா? கிர் காடுகளில் பலி தொடருகிறது. குஜராத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 18 நாட்களில் 21 சிங்கங்கள் பலியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் 523 சிங்கங்கள் இருப்பதாக 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.ஆனால் சமீப காலமாக அந்த வனப்பகுதியில் சிங்கங்கள் பலியாகும் எண்ணிக்கை என்பது திடீரென அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை திடீரென பதினோரு சிங்கங்கள் பலியாகின. இந்த செய்தி வெளியான நிலையிலும், சிங்கங்களின் பலி எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை மேலும் 10 சி…
-
- 0 replies
- 449 views
-
-
மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா? KaviNov 17, 2023 12:02PM ஐந்து மாநில தேர்தல் அனல் பறக்கும் நேரம் இது. இந்த ஐந்து மாநிலங்களில் பரப்பளவில் பெரிய மாநிலம், மத்திய பிரதேசம்தான். தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் அதிக தொகுதிகளை (230) கொண்ட மாநிலமும் இதுதான். இன்று (நவம்பர் 17) மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான். இவர் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, இன்று வரை முதல்வராக நீடிக்கிறார். அதாவது 18 ஆண்டு காலமாக முதல்வர் (இடையில் ஒரு 15 மாத இடைவெளி மட்டும்) பாரதிய ஜனதாவின் வரலாற்றில் மிக நீண்ட கால முதல்வர் சிவராஜ்சிங் சௌகான்தான். முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், இந்தமுறையு…
-
- 0 replies
- 297 views
-
-
நாடு தழுவிய மத்திய தொழிற்சங்கங்களின் 48 மணிநேர வேலை நிறுத்தம் ஆரம்பம் January 8, 2019 நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வன்முறைகளும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்படுகின்றது. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊ…
-
- 0 replies
- 524 views
-
-
இந்தியா,பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் விடுக்கும் அறிவுரை காஷ்மீர் புல்வாமா மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்தியா,பாகிஸ்தான் இருத்தரப்பினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் ஆராயவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் மிகவும் கோரமான சம்பவம் என்றும், விரைவில் முறைப்படியான அறிக்கை வெளியிடுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில், இந்திய துணை இராணுவப் படையினர் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்…
-
- 0 replies
- 444 views
-
-
பிரதமர் மோடி தாய் ஹீராபென்னுடன் இருக்கும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம்பிரதமர் நரேந்திர மோடி தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசி பெறும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஏலத்தில் விற்பனை செய்து கிடைக்கும் தொகையை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடவே பிரதமர் மோடி முன்வந்தார்.இதையடுத்து அந்த பரிசு பொருட்கள் இடம் பெற்ற கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை மத்திய கலாச்சார அமைச்சகம் டெல்லியில் நடத்தியது. இதில் மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட…
-
- 0 replies
- 287 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை லேகியத்தை மருந்தாக வழங்க ஆந்திர அரசு அனுமதி 14 Views ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரின் கிருஷ்ணபட்டிண் கிராமத்தைச் சேர்ந்த போனஜி அனந்தய்யா என்வர் கொரோனா நோயாளிகளுக்காக தயாரித்த கத்திரிக்காய் மூலிகை லேகியத்தை பயன்படுத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம், அவர் தயாரித்த லேகியத்தை மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அவர் குறிப்பிட்ட ஒரு வகை கத்திரிக்காய் கூழ் சேர்த்து தயாரித்த கண் சொட்டு மருந்தை நோயாளிகளுக்கு வழங்க அரசு ஒப்புதல் வழங்கவில்லை. முன்னதாக, அனந்தய்யாவின் தயாரிப்புகளை அரசு நியமித்த மருத்துவ குழு ஆய்வு செய்தது. பிறகு இந்திய ஆயுஷ் அமைச…
-
- 0 replies
- 390 views
-
-
கடவுள் மறுப்பாளரான ஆசிரியரை வலுக்கட்டாயமாக கோவிலில் பூஜை செய்ய வைத்த இந்துத்துவா அமைப்புகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரவின் சுபம் பதவி,பிபிசி தெலுங்கு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, தெலங்கானாவில் நாத்திகவாதியான தலித் ஆசிரியரை கோவிலுக்கு இழுத்துச் சென்று மன்னிப்பு கேட்க வைத்த இந்துத்துவா அமைப்புகள். தெலங்கானாவில் நாத்திகவாதியான தலித் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரை இந்துத்துவா அமைப்புகளும் பாஜக அமைப்பினரும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்தது சர்ச்சையாகியுள்ளது. …
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
சிபிஐ இயக்குனரை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு – உச்ச நீதிமன்றம் January 8, 2019 சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்த வழக்கு விசாரணையை கடந்த டிசம்பர் 6ம் திகதி நிறைவு செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சுற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து ஏற்பபட்ட அதிகார மோதல்கள் காரணமாக மத்திய அரசு இருவரையு…
-
- 0 replies
- 351 views
-
-
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசிய பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு தலீபான் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை இந்திய மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. மேலும், சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷென்பாஸ் ஷெரீப் கடந்த சில…
-
- 0 replies
- 276 views
-
-
இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்! இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ஆயுத கொள்முதலில் இந்திய பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்ய இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அ…
-
- 0 replies
- 55 views
-
-
Published By: Digital Desk 1 03 Sep, 2025 | 09:18 AM பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் மேலும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் …
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு 9 பிப்ரவரி 2022, 06:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மலைப் பிளவில் சிக்கிய பாபு மலை இடுக்கு ஒன்றில் 40 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கிக்கொண்டிருந்த கேரள இளைஞர் இந்திய ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் கடந்த திங்கட்கிழமையன்று மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார்.இதனையடுத்து,…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
வங்கதேசத்தில் சிட்டகாங் அருகே வெடித்துச் சிதறிய கன்டெய்னர்கள்: குறைந்தது 40 பேர் பலி 5 ஜூன் 2022, 09:06 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசத்தின் சிட்டகாங் நகர் அருகே உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் உண்டான தீ மற்றும் வெடிப்புச் சம்பவத்தால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். சீதாகுண்டா எனும் இடத்தில் இருக்கும் இந்த சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதால், நேற்று இரவு உண்டான தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். உள்ளூர் நேரப்படி சனி இரவு ஒன்பது மணிய…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
இந்தியாவின் இரட்டை கோபுரங்கள் டெல்லியில் 12 விநாடிகளில் எப்படி இடிக்கப்படும்? இதனால் ஏற்படும் விளைவு என்ன? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விதிகளை மீறியுள்ளதாகக் கூறி இரண்டு கட்டடங்களையும் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் இரண்டு வானளாவிய கட்டடங்கள் 12 விநாடிகளில் இடிக்கப்படும். ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன. பிறகு அவை…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
சீனாவுடன் நேருக்கு நேர் மோதி இந்திய வீரர்கள் அதீத துணிச்சலை வெளிப்படுத்தினர் - ராஜ்நாத் சிங் By NANTHINI 25 JAN, 2023 | 08:23 PM (ஏ.என்.ஐ) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர். இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், காங்கிரஸ் அரசியல்வாதிகள் பாஜகவை அவதூறு செய்தால், நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், அவர்கள் இந்திய வீரர்களின் துணிச்சலை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஒர…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிர்பஞ்சலில் நிற்கும் ராணுவ வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், மஜித் ஜஹாங்கீர் பதவி, பிபிசி இந்திக்காக ஸ்ரீநகரில் இருந்து 59 நிமிடங்களுக்கு முன்னர் அடர்ந்த காடுகள், எளிதில் செல்ல முடியாத மலைகளால் சூழப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் இந்திய ராணுவத்தின் மீது சமீபத்திய தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு இந்தப் பகுதி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தப் பகுதி தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான என்கவுன்ட்டர்கள்…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
இந்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த கீதா மேதா…. January 27, 2019 மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். இந்திய மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-அமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில…
-
- 0 replies
- 393 views
-
-
நீதேஷ் ராவத் பிபிசி மராத்தி கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த தண்டனையின் காரணமாக அவரது பின்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் பெயர் ஆர்யன் கட்சே. அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், போலீஸார் அமோல் தோர் எனும் ந…
-
- 0 replies
- 554 views
-