அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
Published By: RAJEEBAN 30 SEP, 2024 | 02:35 PM நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளம் தலைநகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகள பெருக்கெடுத்துள்ளதால் தலைநகரின் பல நகரங்கள் நீரின் கீழ் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் மண்சரிவு காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன, நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன, மின்கோபுரங்கள் வீழ்ந்துள்ளன என நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன. காலநிலை நெருக்கடி காரணமாகவே நேபாளம் மிக அதிகளவான ஆபத்தான மழையையும் வெள்ளத்தையு…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
அயோத்தியில் மூன்று மாதத்தில் ராமர் கோவில் கட்டப்படும் – அமித்ஷா! அயோத்தியில் மூன்று மாதத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கூட அயோத்தி வழக்கின் தீர்ப்பை கேட்கவில்லை. இது அவர்களது ராமர் கோவில் பற்றிய உண்மையான புரிதலை காட்டுகிறது. ஆனால் நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டுவிட்டது. எனவே இப்போது பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும். இப்போதும் காங்கிரஸ் அரசு இருந்தால் இ…
-
- 0 replies
- 204 views
-
-
26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 16:10 PM மும்பை, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே அதிக அளவாக மராட்டியத்தில் 781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 45 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மும்பையில் உள்ள பிரபல ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள…
-
- 0 replies
- 228 views
-
-
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி தாராவி எப்படி முன்னுதாரணமாக மாறியது; குடிசை குடிசையாக சென்று கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினர்: மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாநகராட்சி அதிகாரிகள் மும்பை ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான தாராவி, கரோனா வைரஸ் பரவலின் முக்கிய கேந்திரமாக இருந்து, வைரஸைக் கட்டுப்படுத்தியதில் தற்போது முன்னுதாரணமான பகுதியாக மாறி உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பு இரண்டுமே முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக மும்பையில்தான் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெய…
-
- 0 replies
- 288 views
-
-
நவம்பர் வரை ஊரடங்கு... கோடிட்டுக் காட்டும் மோடி மின்னம்பலம் மத்திய அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டம், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா ஊரடங்கு முற்று முழுதாக முடிய நவம்பர் மாதம் வரை ஆகிவிடும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் பிரதமர். இன்று (ஜூன் 30) மாலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். கொரோனா காலத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றும் ஆறாவது உரை இது. இந்திமொழியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், நாம் இப்போது அன்லாக் 2 காலகட்டத்துக்குள் நுழைந்திருக்கிறோம். மேலும் சளி, காய்ச்சல் பொதுவாகவே அதிகம் வருகிற காலகட்டம் இது. அதனால் நாம்…
-
- 0 replies
- 456 views
-
-
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புதல்- இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை பயிற்சி பெறவும், அறுவை சிகிச்சை செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொது அறுவை, காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம், முட நீக்கியல், பல்மருத்துவம் ஆகியன சார்ந்த அறுவைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவமனைகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் அரசின் அறிவிப்பு அதைச் சட்டப்படி ஏற்பதற்கானது என்றும் நாட்டு மருத்துவ மத்தியக் குழுத் தலைவர் தெ…
-
- 0 replies
- 263 views
-
-
பிரதமர் நரேந்திர மோதி உரை: “கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை” பட மூலாதாரம், NARENDRA MODI இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறித்து பிரதமர் நரேந்திர மோதி நேரலையில் இன்று உரையாற்றினார். இந்தியா கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, மக்கள் நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதன் தேவை போன்ற அம்சங்கள் குறித்து உரையாற்றினார் மோதி. பிரதமர் மோதியின் உரையிலிருந்து: "கொரோனாவுக்கு எதிராக நாடு பெரிதாக போராடிவருகிறது. சில வாரங்களுக்கு முன் நிலைமை சரியாகிக் கொண்டிருந்த நிலை…
-
- 0 replies
- 324 views
-
-
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்..! இந்தியாவில் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலையில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். பின்னர் விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்துள்ள அவரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதி அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அதன்பின்னர் பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை…
-
- 0 replies
- 326 views
-
-
லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த, வழக்கு விசாரணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு! லக்கீம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து குறித்த வழக்கு சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்கீம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. https://athavannews.com/2021/1243571
-
- 0 replies
- 190 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கு... சுற்றுப்பயணம், மேற்கொள்ளும் மோடி! இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின்போது டென்மார்கில் நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் மாசு ஏற்படுத்தாக தொழிநுட்பம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மோடி பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், உக்ரைன் விவகாரம் ஆகியவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 216 views
-
-
ஐ.எஸ். பயங்கரவாதிகள் 155 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். இதில் குறிப்பிடுவன; ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஐ.எஸ். அமைப்பு சமூக வலைதளங்களில் தங்களின் கொள்கைகள், சித்தாந்தங்களை பல்வேறு வழிகளில் பரப்பி வருகின்றன . அவற்றை தடுக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.இந்த இயக்கத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து பயங்கரவாத பயிற்சி பெற்று வருகின்றனர…
-
- 0 replies
- 290 views
-
-
5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா எம். காசிநாதன் / 2019 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:57 Comments - 0 இந்திய நிதியமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் பின்னணி பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் நிதி நிலை அறிக்கையை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பெண் நிதியமைச்சர் இவர். தேர்தலுக்கு முந்தைய நிதி நிலை அறிக்கையின் தொடர்ச்சி என்றாலும், இந்த நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கும், சிறு தொழில் புரிவோருக்கும், மூத்த குடிமகன்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு- “கோர்ப்பரேட்” நிதி நிலை அறிக்கை என்ற…
-
- 0 replies
- 327 views
-
-
விலங்குகள் போல அடைக்கப்பட்டுள்ளோம்- காஸ்மீரின் முன்னாள் முதல்வரின் மகள் காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர் என மாநிலத்தி;ன் முன்னாள் முதல்வர் மெஹ்மூபா முவ்டியின் மகள் இல்ட்டிஜா ஜாவேட் இந்திய உள்துறை அமைச்சர் அமிட் சாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேதனை வெளியிட்டுள்ளார். இந்திய உள்துறை அமைச்சரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் கைதுசெய்யப்பட்ட பின்னர் நான் வீட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் என முன்னாள் முதல்வரின் மகள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏனைய பகுதிகள் சுதந்திரதினத்தை கொண்டாடும் இந…
-
- 0 replies
- 312 views
-
-
உத்தர பிரதேசத்தில் 2 வயது பெண் புலியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உத்தர பிரதேசத்தின் தூத்வா புலிகள் காப்பகத்தில் இரண்டு வயது பெண் புலி ஒன்று கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சையத் மோசிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்வா புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்றை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். அந்தப் பெண் புலி தாக்கியதால் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அதே புலிகள் காப்பகத்தில் உள்ள மலனி என்ற பகுதியில் மற்றொரு புலி இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தூத்வா புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான டி. ரங்கராஜு இந்த இரண்டு விவகாரம் தொடர்பாகவும் வழக்குப் பத…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது ஏன்? மின்னம்பலம் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஜார்க்கண்டில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தலில் அதிக இடத்தில் வென்ற ஆளும் கட்சியான பாஜக தோல்வியைச் சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதுவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதியில் 11 தொகுதியில் வெற்றி பெற்றது பாஜக. தற்போது சட்டமன்றத் தேர்தலில் ஜெஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் போட்டியிட்டு வெற்றி பெற…
-
- 0 replies
- 412 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆண்-பெண் இடையே சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும் குற்ற வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில், "மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் 25 வயதான ஓர் இளைஞரும் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நெருக்கமாகப் பழகி வந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஒர் ஆண்டுக்கு மேல் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் மீது அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொ…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே – மோடி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பேசிய மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதற்கமைய, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையி…
-
- 0 replies
- 259 views
-
-
கோவிட்-19 | கேரளா வெற்றியின் இரகசியம்IIIIIநிப்பா வைரஸ் கற்றுத்தந்த பாடம் கோவிட்- 19 வைரஸின் கொட்டத்தை அடக்கிய இந்திய மாநிலங்களில் முதன்மையானது கேரளா. உலக நாடுகளில் முதன்மையானது வியட்நாம். இரண்டின் வெற்றிகளுக்கும் காரணம் பொதுப்புத்தி இருந்தமையும், அதைப் பாவித்தமையும். 2018 இல் கேரளாவில் ஒரு வைரஸ் தொற்று வந்தது. அதுவும், சார்ஸ் கொவ்-2 வைப் போல, வெளவாலிலிருந்து (பழ வெளவால்) தொற்றியிருந்தது. 19 நோயாளிகளில் 17 பேர் மரணமடைந்திருந்தனர். முதல் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தாதி உட்பட, பெரும்பாலானவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள். நோய் இன்னது என்று அறியமுன்னரே அது தொற்றுக்கள் பரவி விட்டன. அந்த தொற்றுக்குக் காரணமான வைரஸுக்குப் பெயர் நிப்பா. …
-
- 0 replies
- 364 views
-
-
இந்திய உளவு விமானம்; பாக்., சுட்டு வீழ்த்தியது? இஸ்லாமாபாத்: இந்திய ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில், சீனா படைகளை குவித்து வருவதால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளை குவிக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர், பாபர் இப்திகர் கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, ராக்சிக்ரி பகுதியில், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான, சிறிய ரக, ஆளில்லா உளவு விமானம், பாக்., பகுதிக்குள் 650 மீட்டர் துாரத்துக்கு ஊடுருவியது. அதை, பாக்., படையினர் சுட்டு வீழ்த்தியத…
-
- 0 replies
- 347 views
-
-
அசாம், மேற்குவங்க தேர்தல்: ஒரு பருந்துப் பார்வை! மின்னம்பலம் ஐந்து சட்டப்பேரவைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதலில் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இன்று முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 47 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால், சட்டப்பேரவைத் தலைவர் ஹிதேந்திர கோஸ்வாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா மற்றும் பல அமைச்சர்கள் இன்றைய போட்டியில் இடம்பெற்றுள்ளனர். இந்த தொகுதிகளில் பெரும்பாலும் ஆளும் பாஜக- அசாம் கண பரிசத் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான 10 கட்சி கூட்டணி, புதிய அசாம் ஜாதிய பரிசத் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையேதான் முதன்மைப் போட்டி ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 291 views
-
-
டெல்லியில்... முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை! இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. அந்தவகையில் டெல்லி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 33 பேர் உயிரிழந்துள்…
-
- 0 replies
- 237 views
-
-
இந்திய தேர்தலுக்காக பத்து இலட்சம் கணக்குகளை நீக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய பொதுத் தேர்தலை முன்னிட்டு பத்து இலட்சம் போலிக் கணக்குகளை நீக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த போலிக் கணக்குகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் நேர்மையாகவும், இடையூறு இன்றியும் நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக பணியாற்றி வருகின்றோம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும், பல்வேறு குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை பொதுப்படையாக்க புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இதன்…
-
- 0 replies
- 590 views
-
-
அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல்! டெல்லியில் அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி டெல்லி மாநகர அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அரச-பேருந்துகளில்-பெண்கள/
-
- 0 replies
- 544 views
-
-
Published By: VISHNU 24 APR, 2025 | 09:22 PM தவறுதலாக பாகிஸ்தானில் எல்லைக்குள் சென்றதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. ஓய்வு எடுப்பதற்காக நிழலைத்தேடிச் சென்றபோதே தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் குறித்த இந்திய எல்லைப் பாதுகாப்புடை வீரர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த வீரரை விடுவிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லையில் 182 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.சிங் விவசாயிகளுடன் ஓய்வு எடுக்க நிழல் பகுதிக்கு செல்ல முயன்றபோது, இந்திய எல்லையில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பி.கே. சிங்கை கைது செய்துள்ளனர். இரா…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
அகமதாபாத் விமான விபத்து: மன்னிப்புக் கோரினார் டாடா குழுமத் தலைவர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். ,இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 270ஐ தாண்டியது. இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்…
-
- 0 replies
- 101 views
-