அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, 2024 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துகிறது. கட்டுரை தகவல் பிரபாகர் மணி திவாரி பிபிசி ஹிந்திக்காக கொல்கத்தாவில் இருந்து 27 ஜூன் 2025 மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த முன்னாள் மாணவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாம…
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு,சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, ராணுவ நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சரரோகா பகுதியில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது அவர் உயிரிழந்தார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, ராணுவ அதிகாரி மோயிஸ் ஷா சிறைபிடித்தார். அவரின் இறுதி அஞ்சலி ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர் துறையின்(ஐ.எஸ்.பி.ஆர்) தகவல்களின்படி, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மோஹ்சி…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா! இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகின்றது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 11,000 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து, சுமார் 1,500 கிமீ வரம்புக்குள் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது” ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மற்றும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிரி ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது எனவும் தெரி…
-
- 0 replies
- 165 views
-
-
சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக குறைத்த ஏர் இந்தியா! ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை நடுப்பகுதி வரை அகலமான உடல் வடிவங்கள் கொண்ட விமானங்களின் செயல்பாடுகளை 15% குறைப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பல கூட்டு சவால்களுக்கு மத்தியில் அதிக செயல்பாட்டு ஸ்திரத்தன்மை, சிறந்த செயல்திறன் மற்றும் பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவின் பல ந…
-
- 0 replies
- 90 views
-
-
அகமதாபாத் விமான விபத்து: மன்னிப்புக் கோரினார் டாடா குழுமத் தலைவர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். ,இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 270ஐ தாண்டியது. இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்…
-
- 0 replies
- 110 views
-
-
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்! VigneshkumarPublished: Sunday, June 15, 2025, 23:01 [IST] டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீரென சற்று நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சோனியா காந்தி. 78 வயதான சோனியா காந்தி ஏற்கனவே வயது மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இப்போது ராஜ்யசபா எம்பியாகவே இருக்கிறார். இதற்கிடையே இன்று இரவு திடீரென சோனியா காந்தி மருத்…
-
-
- 9 replies
- 464 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 10:30 AM இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5:20 மணியளவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே, கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக தெளிவற்ற நிலையில் கௌரிகுண்ட் காட்டு பகுதியில் விழுந்து விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாண்ட் மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217490
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
மணிப்பூரில் பதற்றம் – இணையசேவைகள் முடக்கம்! பதிவேற்றுனர்: தமிழ்விழி திகதி: 09 Jun, 2025 மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவரை கைது செய்தமையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளனர் . வன்முறைகளை அடுத்து மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவையை மாநில அரசு தடை செய்துள்ளது. ஜூன் 7 நள்ளிரவிலிருந்து 5 மாவட்டங்களில் இணைய சேவையும், தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன.மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதால், மணிப்பூரின் 5 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களையோ அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையோ வெளியிட பொ…
-
- 0 replies
- 159 views
-
-
Published By: DIGITAL DESK 2 07 JUN, 2025 | 02:58 PM உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் வெள்ளிக்கிழமை (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், 1315 மீற்றர் நீளத்தைக் கொண்டது. நில அதிர்வுகளையும், அதிக காற்று அழுத்தங்களையும் தாங்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் இப்பாலத்தின் வழியாக பயணிக்கக்கூடியதாகும். இந்தப் பெருமைமிகு புதிய பாலம், ஜெர்மன…
-
-
- 8 replies
- 591 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போக்சோ வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட இளைஞரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்துள்ளது. மே 23 அன்று உச்ச நீதிமன்றத்தின், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு போக்சோ குற்றவாளி ஒருவரை விடுதலை செய்து அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. போக்சோ வழக்கின் தன்மை, அதன் நிலை, குழந்தை திருமணங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நிகழ் நேர (real time dash board) கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
03 JUN, 2025 | 01:30 PM காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில்இராணுவ முகாம் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை. சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலங்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி லாசென் லாசுங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களும் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு சிக…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் 2 ஜூன் 2025, 04:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய தினம் (ஜூன் 2, திங்கட்கிழமை) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மத நிகழ்ச்சியில் பங்கேற்காத கிறித்தவ ராணுவ அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அவரின் பணி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில், "ராணுவத்தில் கடந்த 2017-ம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அ…
-
-
- 1 reply
- 424 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஷக்கீல் அக்தர் பதவி, பிபிசி செய்தியாளர் 30 மே 2025, 08:04 GMT இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய 'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்' போர் விமானங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (ஸ்டெல்த் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'ரகசிய' என்று அர்த்தம். எதிரிகளே அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்கு சிக்காமல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவக் கூடியவை) இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்கியுள்ளன. இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது…
-
-
- 9 replies
- 494 views
- 1 follower
-
-
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய பாதுகாப்புப் படையின் ஆயுதங்கள்! ஒபரேஷன் சிந்தூரின் போது, இந்திய நிறுவனங்கள் தயாரித்த ஆயுதங்கள், பாகிஸ்தானின் ஆயுதங்களை விட சிறப்பாக செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது துருக்கி மற்றும் சீன ஆயுதங்களையும் விட சிறப்பாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பாதுகாப்புத்துறையின் ஆயுதங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. அதன்பிறகு, பல நாடுகள் இந்திய பாதுகாப்பு உபகரணங்களில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன. அந்தவகையில் இந்தியாவின் ஆயுத உற்பத்தித்துறையில் சிறந்து விளங்கும், நைப் லிமிட்டெட் (Nibe Limited) நிறுவனம் தற்போது இஸ்ரேலின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிடமிருந்து பெரிய ஒப்பந்தம் ஒன்றை…
-
- 0 replies
- 287 views
-
-
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா! உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது பிடிக்கும் என்று இந்திய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், 2025-26 (FY26) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. இது 2025 நிதியாண்டில் ஜப்பானின் $4.186 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை முந்தியுள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான IMF-இன் கணிப்பு, இந்தியாவிற்கும் …
-
-
- 10 replies
- 612 views
- 1 follower
-
-
கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து! இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருவனந்தபுரம் – விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த கப்பல் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையினால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய நேரப்படி நேற்று இரவு 10.00 மணிக்கு கப்பல் கொச்சி துறைமுகத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் செ…
-
-
- 3 replies
- 305 views
- 1 follower
-
-
ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா! இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாகும். அந்தவகையில் உலகின் வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மூத்த DRDO விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சுதிர் குமார் மிஸ்ரா சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஹைப்பர்சோனிக் எஞ்சின…
-
- 0 replies
- 325 views
-
-
5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானம்! 5ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், சுயாதீனமாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ இந்த திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு…
-
- 0 replies
- 155 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆண்-பெண் இடையே சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும் குற்ற வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில், "மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் 25 வயதான ஓர் இளைஞரும் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நெருக்கமாகப் பழகி வந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஒர் ஆண்டுக்கு மேல் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் மீது அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொ…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்! 19 May 2025, 7:24 PM உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு இந்தியா ஒன்றும் ‘தர்ம சத்திரம்’ அல்ல என்று ஈழ அகதி சுபாஷ்கரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2015-ம் ஆண்டு ஈழத் தமிழரான சுபாஷ்கரன் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுபாஷ்கரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், சுபாஷ்கரனின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 2022-ம் ஆண்டு தண்டனைக் காலம் முடிவடைந்ததால் சிறப்பு முகாமில் அடை…
-
-
- 64 replies
- 3.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கப்புலி (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை கொலை செய்து அந்த புலியின் உடல் பாகங்களை வெற்றிச் சின்னங்களாக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள துசிதிமுக் கிராமத்தில் ஓர் ஆண் ராயல் பெங்கால் புலியை (வங்கப்புலி) அப்பகுதியை சேர்ந்த 1,000 பேர் சேர்ந்து கொலை செய்து அதன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அந்த புலி கடந்த சில வாரங்களில் ஒருவரை தாக்கிக் …
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு! உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றமானது பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் கனமழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளன. நொய்டாவில், பல மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் புயல், மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகிய…
-
- 0 replies
- 197 views
-
-
இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது! பல்லாண்டு காலமாக இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த நக்சலைட் பயங்கரவாதத்திற்கு, இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளன. சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பின் முக்கிய தலைவரான நம்பலா கேஷவ ராவ் என்கிற பசவராஜு உட்பட 27 கிளர்ச்சியாளர்களை இந்திய கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை உறுதிப்படுத்தியுள்ளார். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாவோயிஸ்ட் தலைமையிலான கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து, இந்த இயக்கம் நாட்டின்…
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்! தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இதுவாகும். இந்த மாகாணம் நீண்டகால கிளர்ச்சியின் களமாக இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோத பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உட்பட, பிரிவினைவாத குழுக்கள் தொடர்ச்சியாக இங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குஜ்தார் மாவட்டத்தில் இராணுவத்தால் நடத்தப்…
-
- 1 reply
- 178 views
-
-
நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக பாரிய குற்றச்சாட்டு! நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதற்கட்ட சமர்ப்பிப்புகளின் போது, அமுலாக்கத்துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த அறிக்கையை வெளியிட்டார். 2014 ஜூன் 26 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனிப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான ந…
-
- 0 replies
- 152 views
-