அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானம்! 5ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், சுயாதீனமாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ இந்த திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு…
-
- 0 replies
- 150 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆண்-பெண் இடையே சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும் குற்ற வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில், "மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் 25 வயதான ஓர் இளைஞரும் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நெருக்கமாகப் பழகி வந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஒர் ஆண்டுக்கு மேல் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் மீது அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொ…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்! 19 May 2025, 7:24 PM உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு இந்தியா ஒன்றும் ‘தர்ம சத்திரம்’ அல்ல என்று ஈழ அகதி சுபாஷ்கரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2015-ம் ஆண்டு ஈழத் தமிழரான சுபாஷ்கரன் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுபாஷ்கரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், சுபாஷ்கரனின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 2022-ம் ஆண்டு தண்டனைக் காலம் முடிவடைந்ததால் சிறப்பு முகாமில் அடை…
-
-
- 64 replies
- 3k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கப்புலி (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை கொலை செய்து அந்த புலியின் உடல் பாகங்களை வெற்றிச் சின்னங்களாக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள துசிதிமுக் கிராமத்தில் ஓர் ஆண் ராயல் பெங்கால் புலியை (வங்கப்புலி) அப்பகுதியை சேர்ந்த 1,000 பேர் சேர்ந்து கொலை செய்து அதன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அந்த புலி கடந்த சில வாரங்களில் ஒருவரை தாக்கிக் …
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு! உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றமானது பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் கனமழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளன. நொய்டாவில், பல மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் புயல், மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகிய…
-
- 0 replies
- 192 views
-
-
இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது! பல்லாண்டு காலமாக இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த நக்சலைட் பயங்கரவாதத்திற்கு, இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளன. சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பின் முக்கிய தலைவரான நம்பலா கேஷவ ராவ் என்கிற பசவராஜு உட்பட 27 கிளர்ச்சியாளர்களை இந்திய கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை உறுதிப்படுத்தியுள்ளார். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாவோயிஸ்ட் தலைமையிலான கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து, இந்த இயக்கம் நாட்டின்…
-
- 1 reply
- 150 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்! தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இதுவாகும். இந்த மாகாணம் நீண்டகால கிளர்ச்சியின் களமாக இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோத பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உட்பட, பிரிவினைவாத குழுக்கள் தொடர்ச்சியாக இங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குஜ்தார் மாவட்டத்தில் இராணுவத்தால் நடத்தப்…
-
- 1 reply
- 173 views
-
-
நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக பாரிய குற்றச்சாட்டு! நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதற்கட்ட சமர்ப்பிப்புகளின் போது, அமுலாக்கத்துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த அறிக்கையை வெளியிட்டார். 2014 ஜூன் 26 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனிப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான ந…
-
- 0 replies
- 148 views
-
-
ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இஸ்ரேல் தூதுவர் வலியுறுத்தல்! பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் அழைப்பு விடுத்துள்ளார். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ஹுசைன் ராணாவை அமெரிக்கா ஒப்படைத்தது போல, பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதம் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்று கூறிய இந்திய தூதர், சவாலை எதிர்கொள்ளும் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பை வலியுறுத்தினார். அண்மைய பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதன் பின்னணிய…
-
- 0 replies
- 195 views
-
-
பட மூலாதாரம்,ALI KHAN MAHMUDABAD/FB படக்குறிப்பு,பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் 49 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்ட பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார். யோகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியாணாவின் சோனிபட் காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி, பேராசிரியர் அலி கான் மீது ஹரியாணா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பேராசிரியர் அலி கான், ஹரியாணாவின் அ…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
இந்தியாவில் துருக்கியின் ‘ஸெலெபி ஏவியேஷன்’ நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து! இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக, துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் (Celebi Aviation) நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக, ட்ரோன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான மனித வளங்களை துருக்கி வழங்கியமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,பாகிஸ்தான் பிரதமரை ‘சகோதரர்’ எனவும் உண்மையான நட்புக்கு உதாரணம் எனவும் துருக்கி அதிபர் எர்டோகன், கூறியமையினாலும் துருக்கியின் இதுபோன்ற பகிரங்க பாக்கிஸ்தான்…
-
-
- 1 reply
- 205 views
-
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்! பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை (07) அதிகாலை நடத்திய தொடர் துல்லியத் தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-மொஹமட் (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது தளங்களை எல்லை தாண்டிய நடவடிக்கை குறிவைத்தது. இந்திய மூத்த அதிகாரிகளின் கூற்றுப்…
-
-
- 13 replies
- 738 views
- 1 follower
-
-
தெற்காசிய நாடுகளை அசச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்! கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்ற சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மீண்டும் தெற்காசிய நாடுகளை அச்சுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அந்நகரின் சுகாதார பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, இம் மாதத்தின் முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 176 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் ஜே-10சி போர் விமானம் கட்டுரை தகவல் எழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 14 மே 2025, 05:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்த போது, சீன பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள் அந்நாட்டின் பங்குச் சந்தையில் ஏற்றத்தைக் கண்டன . குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கும் நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றம் காணப்பட்டது. இவற்றில் ஒன்று ஜே-10சி போர் விமானங்களை தயாரிக்கும் அவிக் செங்டு விமான கார்ப்பரேஷன் ஆகும். சீனாவின் ஷென்சென் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவ…
-
-
- 19 replies
- 613 views
- 1 follower
-
-
16 MAY, 2025 | 03:44 PM புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் ஒன்றான குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில்உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர்தான். முழு படம் பின்னர் வெளிப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போ…
-
- 1 reply
- 188 views
- 1 follower
-
-
போர் நிறுத்தத்தை தொடர இந்தியா – பாகிஸ்தான் இணக்கம். மே 10 அன்று இரு நாடுகளும் முடிவு செய்தபடி, எல்லை தாண்டிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான இடைநிறுத்தத்தை நீட்டிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன. தொடர்ச்சியான பதட்டங்களுக்கு மத்தியில், இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஜெனரல்கள் (DGMOs) “நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை” தொடர வியாழக்கிழமை (15) பிற்பகுதியில் முடிவு செய்துள்ளனர். PTI செய்திச் சேவையின் அறிக்கையின்படி, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் டார், பாகிஸ்தான் DGMOs மேஜர் ஜெனரல் காஷிஃப் அப்துல்லா மற்றும் இந்திய DGMOs லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ஆகியோர் வியாழக்கிழமை ஒரு மெய்நிகர் சந்திப்பில் இது தொடர்பான பேச்சுவார்த…
-
- 0 replies
- 103 views
-
-
இந்தியா, அமெரிக்காவிற்கு வரிகள் இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு! மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா வொஷிங்டனுக்கு “சுங்க வரிகள் இல்லாத” வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியதாக வியாழக்கிழமை (15) கூறினார். கட்டாரில் வணிகத் தலைவர்களுடனான ஒரு நிகழ்வில் பேசிய ட்ரம்ப், இந்திய அரசாங்கம் “எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கத் தயாராக இல்லாத ஒரு ஒப்பந்தத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது” என்று கூறியதாக அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை மேற்கொள்காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தியாவின் வெளிப்படையான சலுகை குறித்து ட்ரம்ப் எந்த மேலதிக விவரங்களையும் வழங்கவில்லை. அதேநேரம்,…
-
- 0 replies
- 293 views
-
-
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்! ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 48 மணி நேரத்திற்குள் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தொ…
-
- 0 replies
- 134 views
-
-
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்? – பகுதி 1 13 May 2025, 6:52 PM 2025ஆம் ஆண்டு (ஆராய்ச்சிக்காக ஒரு கற்பனை), பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குகிறார்கள். டிசம்பர் 2001இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த முறை தாக்குதல்களில் இந்திய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி 2002இல் நடந்ததுபோல, இரு தரப்பினரும் நாடுகளுக்கு இடையிலான எல்லையிலும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் தங்கள் படைகளைத் திரட்டி நிறுத்துகிறார்கள். இரு பக்கமும் நிலவும் அதீதப் பதற்றங்கள் காரணமாக மோதல்கள் வெடிக்கின்றன. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள். இந்திய அரசாங்…
-
- 2 replies
- 178 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 10 மே 2025, 12:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அனைத்து வடிவத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும். இந்த நிலை தொடரும் எனவும் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு டெல்லியில் செய்தி…
-
- 13 replies
- 510 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NARENDRA MODI/YOUTUBE 12 மே 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ''ஏப்ரல் 22ம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்களை அவர்களது குடும்பத்தின் முன், அவர்களுடைய குழந்தைகளின் கண் முன்னால் கொல்லப்பட்டனர். இது மிகவும் குரூரமான செயல். இது நமது நாட்டின் நம்பிக்கையை உடைப்பதற்கான செயல், இது என் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.'' என்றார் நரேந்திர மோதி. மேலும், ''இந்த சூழலில் ராணுவத்திற்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்தோம். நமது நாட்டு பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழி…
-
- 2 replies
- 210 views
- 1 follower
-
-
28 JUL, 2024 | 12:56 PM புதுடெல்லி: ‘‘ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பயிற்சியில் ‘எதிரி’ விமானங்களை துல்லியமாக தாக்கின’’ என விமானப்படை கூறியுள்ளது. ரஷ்யாவிடம் எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. இது எதிரி நாட்டு போர் விமானங்களை நடுவானிலே சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை. இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காக 5 எஸ்-400 படைப்பிரிவுகளை ரூ.35இ000 கோடிக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 எஸ்-400 படைப்பிரிவுகளை ரஷ்யா இதுவரை விநியோகம் செய்துள்ளது. மீதமுள்ள 2 எஸ்-400 படைப்பிரிவு 2026-ம் ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விரைந்து விநியோகம் செய்ய இந்தியா வேண…
-
- 1 reply
- 298 views
- 1 follower
-
-
இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வாங்கி தீர்மானம்! காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் மோசமான சேதத்தை சந்தித்துள்ளமையினால் உலக வங்கியிடம் கூடுதல் கடன் தொகையை கோர பாகிஸ்தான் ஆலோசித்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா அணுகியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு நடத்தியதுடன் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்குதான் பயன்படுத்தும் எனவும் இந்தியா கண்டனம் தெரி…
-
- 0 replies
- 102 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மசூத் அசார் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி 9 மே 2025 ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார், முதன்முதலில் ஜனவரி 29, 1994 அன்று வங்கதேச விமானத்தில் டாக்காவிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவரிடம் போர்த்துகீசிய பாஸ்போர்ட் இருந்தது. இந்திரா காந்தி விமான நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் அவரைப் பார்த்து, "நீங்கள் பார்க்க ஒரு போர்த்துகீசியர் போல இல்லை" என்றார். மசூத் உடனே, "நான் குஜராத்தி பூர்வீகம் கொண்டவன்" என்றார். அதைக் கேட்ட பிறகு, அவரை மீண்டும் ஏறெடுத்துப் பார்க்காமல், பாஸ்போர்ட்டில் சீல் வைத்தார் அந்த அதிகாரி. இந்தியா வந்த சில நாட்களுக்குள், ஸ்ரீநகரின் தெருக்களில் உலாவத் தொடங்கினார் மச…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முழு பிராந்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வாகும் (குறியீட்டு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி நிருபர் 40 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை இரவு, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டதகவும் இந்தியா கூறியது. இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மறுத்துள்ளார். "நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது . 25 இந்திய ஆளில…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-