Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் 4 வாரங்களுக்கு கொரோனா சோதனைகளை நடத்த தடை பரிசோதனை முடிவுகள் தாமதம் காரணமாக மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஜூன் 12, 2020 07:27 AM புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. 32,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி 3-வது இடத…

  2. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் "சக்கா ஜாம்" போராட்டம் புதுடெல்லி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக ஏற்கெனவே அறிவித்தனர். அதன்படி அரியானா மாநிலம் பால்வாலில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும் 3 மணிக்கு தொடர்ந்து 1 நிமிடம் வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சம்யுக்தா கிசான் மோர…

  3. பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம் : விவாதத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு! பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பெகாசஸ் உளவு விவகாரத்தில், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்கட்சிகள் தடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன. பெகாசஸ் உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசதுரோகம், சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். இது தனிய…

  4. இந்தியாவும் – சீனாவும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது – வாங் யி இந்தியாவும் – சீனாவும் பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள வேண்டும் எனவும், ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த வாங் யி தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில், ” சீனாவும், இந்தியாவும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை. இருநாடுகளுக்கு இடையே நிலவும் மாறுபாடுகளை சரியான முறையில் கையாள வேண்டும். இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகள்தானே தவிர போட்டியாளா்கள் அல்ல. இருநாடுகளும் வெற்றிபெற பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள …

  5. டெல்லியில் காதலியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் -ஆறு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, டெல்லி போலீசார் அஃப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர் 52 நிமிடங்களுக்கு முன்னர் ஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லியின் மெஹ்ரோலி பகுதியில் நடந்த கொலை வழக்கில் துப்பு துலக்கப்பட்டுவிட்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்ததான குற்றச்சாட்டின்பேரில் அஃப்தாப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 18 ஆம் தேதி அஃப்தாப் தனது லின் இன் பார்ட்னரான ஷ்ரத்தாவை கொன்றுவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி காட்ட…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது. எழுதியவர், நாகேந்திரசாயி குந்தவரம் பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக அமெரிக்கா தும்மினால், இந்தியாவுக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்று ஒரு கூற்று உண்டு. அது பங்குச் சந்தை விஷயத்திற்கும் பொருந்தும். அமெரிக்க பங்குச் சந்தையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது நேரடியாக நமது பங்குச் சந்தையைப் பாதிக்கும். அங்குள்ள முதலீட்டாளர்களின் திட்டங்கள் மாறினால், அதுவும் நமது பங்குச் சந்தைகளையே முதலில் பாதிக்கும். பத்து ஆண்டுகளாக இதுபோன்று நடப்பது குறைந்திருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக பங்க…

  7. இந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது – நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி… October 15, 2019 இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஊடகம் ஒன்று, அமெரிக்காவில் உள்ள அபிஜித் பானர்ஜியிடம் மேற்கொண்ட செவ்வியின்போது, இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், வ…

  8. பட மூலாதாரம்,ALI KHAN MAHMUDABAD/FB படக்குறிப்பு,பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் 49 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்ட பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார். யோகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியாணாவின் சோனிபட் காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி, பேராசிரியர் அலி கான் மீது ஹரியாணா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பேராசிரியர் அலி கான், ஹரியாணாவின் அ…

  9. 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம் February 18, 2020 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகின்ற அதேவேளை பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த சரிவு 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் தற்போது இந்திய பொருளாதாரம…

  10. டப்பாவாலா’க்களின் வாழ்வை முடக்கிப்போட்ட கொரோனா! காலி டப்பாக்களை மீண்டும் அவர்களது வீடுகளில் கொண்டு போய் சேர்க்கும் மகத்தான பணியை நேர்த்தியாக செய்து முடிப்பவர்கள்தான் இந்த டப்பாவாலாக்கள். பதிவு: ஜூன் 12, 2020 03:45 AM டப்பாவாலாக்கள், மும்பையில் ரொம்பவும் பிரபலம். அலுவலகங்களிலும், கம்பெனிகளிலும் வேலை பார்க்கிறவர்களுக்கு, அவர்களின் வீடுகளில் இருந்து சமைக்கப்பட்ட உணவுகளை டப்பாக்களில் (கேரியர்) பெற்று, அதை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்கிவிட்டு, காலி டப்பாக்களை மீண்டும் அவர்களது வீடுகளில் கொண்டு போய் சேர்க்கும் மகத்தான பணியை நேர்த்தியாக செய்து முடிப்பவர்கள்தான் இந்த டப்பாவாலாக்கள். மும்பையில் வேலை பார்க்கிறவர்களின் வாழ்வோடு இரண்டற கலந்…

  11. வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் – அஜித் தோவல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பரமாா்த் நிகேதன் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்தாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் மட்டுமே, தகுந்த பதிலடியை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதை புதிய பாதுகாப்பு உத்தியாக இந்தியா கொண்டுள்ளது. இந்தியா அதன் சொந்த மண்ணிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு மண்ணிலும் உறுதியுடன் போரிடும். அந்…

  12. மலபார் கடற்படை கூட்டுப்பயிற்சி இன்று ஆரம்பமாகியது! இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் பயிற்சியின் முதல் கட்டம் விசாகப்பட்டினத்தில் ஆரம்பமாகி வங்கக்கடல் கடற்கரைப் பகுதியில் நடைபெறுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பது, வான் வழியில் நடத்தப்படும் தாக்குதல்களை கப்பலில் இருந்து எதிர்கொள்வது உள்ளிட்ட நவீன பயிற்சிகள் இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளன. சீனாவிற்கு எதிராக ஒற்றைக் கருத்துக்களை கொண்ட க்வாட் அமைப்பைச் சேர்ந்த நான்கு நாடுகளும் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:/…

  13. சீன எல்லைப் பகுதியில் ரஃபேல் விமானங்களை நிறுத்தியது இந்தியா! சீனாவுடனான கிழக்கு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் அவ்வவ்போது பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது. அதேநேரம் படைவிலக்கல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் எதிர்வரும் சனிக்கிழமை இரு நாட்டு உயர் இராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்தியா ரஃபேல் போர் விமானங்களை கிழக்கு எல்லையில் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231268

  14. ’ஜெய் பீம்’ முழக்கத்தை முதலில் வழங்கியது யார்? அது எப்படி தொடங்கியது? துஷார் குல்கர்னி பிபிசி மராத்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பாபு ஹர்தாஸ் கடந்த சில நாட்களாக 'ஜெய் பீம்' சினிமா பற்றி நிறையவே பேசப்படுகிறது. சூர்யாவின் இந்தப் படம் ஒரு விளிம்புநிலை சாதியை சேர்ந்த பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கிறது. மகாராஷ்டிராவில் அம்பேத்கர் இயக்கத்தின் லட்சக்கணக்கான தொண்டர்களும், அம்பேத்கருடன் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது 'ஜெய் பீம்' என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவின் மூலை முடுக்கி…

  15. எதிரிகளின் பதுங்குக் குழிகளை தகர்க்கும்... வல்லமை கொண்ட, அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த இந்தியா திட்டம்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் விமானத்தில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குறித்த விமானத்தில் பிரான்ஸின் ஹம்மமர் வகை ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்காவின் JDAM எனப்படும் நேரடி தாக்குதல் நடத்தும் குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் குண்டுகள் 80 கிலோமீற்றர் மற்றும் அதற்கு அப்பல் உள்ள எதிரிகளின் பதுங்குக் குழிகள், விமான ஓடு பாதைகளை தகர்க்கவும் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மோசமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களிலும் இந்த வகைக் குண்டுகளை…

  16. இந்தியாவுக்கு இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் முக்கியமான இறக்குமதி ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அல்லது இரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை தற்போது ‘மேக் இன் இந்தியா’ பாதையின் கீழ் அதன் சீட்டா என்ற திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. இலட்சிய திட்டமான சீட்டாவின் கீழ், இந்திய விமானப்படையானது இஸ்ரேலின் ‘ஹெரான்’ ஆளில்லா வான்வழி விமானங்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறந்த தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் நீண்ட தூரத்தில் இருந்து எதிரி நிலைகளை குறிவைக்கும் ஏவுகணைகளுடன் இந்த ட்ரோன் விமானங்களை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த தி…

  17. 84,328 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத கொள்முதலுக்கு ஒப்புதல்! இந்திய ஆயுதப் படைகளின் போர்த் திறனை வலுப்படுத்தும் நோக்கில், 84,328 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்யும் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் சபை நேற்று (வியாழக்கிழமை) இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்துக்கு 6, விமானப் படைக்கு 6, கடற்படைக்கு 10, கடலோர காவல் படைக்கு 2 என மொத்தம் 24 முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், தரைப்படைக்கான அதிநவீன போர் வாகனங்கள், இலகு ரக கவச வாகனங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், பல்நோக்கு வாகனங்க…

  18. சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிரொலிக்கிறார்கள் - இந்தியப் பிரதமர் மோடி புகழாரம் 10 Jan, 2023 | 06:31 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17 ஆவது பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதன் போது , 'சுரக்ஷித் ஜாயேன் பிராஷிக்ஷித் ஜாயேன் என்ற நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். மேலும் 'ஆசாதி கா அம்ரித் மகோத்ஸவ்'- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு’ என்ற கருப்பொருளில் முதலாவது டிஜிட்டல் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார். வட…

  19. பயணிகள் முன்னிலையில் இயற்கை உபாதையைக் கழித்த நபரால் பரபரப்பு விமானத்தில் நபர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் மலம் மற்றும் சிறுநீரைக் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி டெல்லி நோக்கி பயணித்த எயார் இந்தியா விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த நபரின் செயலைக் கண்டு சக பணிகள் புகார் அளித்துள்ள நிலையில் இந்திய தண்டனை சட்டம் 294 மற்றும் 510 ஆகியவற்றின் கீழ் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு , நியூயோர்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ப…

  20. "பாகிஸ்தான் கடலில் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பலின் முயற்சி முறியடிப்பு" 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திய நீர் மூழ்கிக் கப்பல் (கோப்புப் படம்) பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைவதற்கு திங்கள்கிழமை இரவு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கொண்ட முயற்சி முறியடி…

  21. பன்றிகள் பறக்க ஆசைப்படுகிறார் - கம்பீர் கிண்டல்: ‘தம்பி’ உனக்குத் தெரிஞ்சத மட்டும் பேசு- ஓமர் அப்துல்லா பதிலடி Published : 02 Apr 2019 18:22 IST Updated : 02 Apr 2019 18:22 IST புதுடெல்லி பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 35-ஏ குறித்து ஓமர் அப்துல்லாவை முன்வைத்து கிண்டலாகப் பேச அதற்கு ஓமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பிரிவு 35-ஏவில் ஏதாவது விளையாட நினைத்தால் ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி குடியரசுத்தலைவர் முன்னிலைக்கு வரும் என்று கிண்டலடித்துள்ளார். அதாவது சட்டப்பிரிவு 35ஏ என்பது ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடியிருப்போர் யார் இவர்களின்…

  22. வரலாற்றில் முதன்முறையாக ஐ.நா அமைப்பில் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா பொதுவாக நடுநிலையைப் பின்பற்றும். இஸ்ரேல் நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும் இதுவரை ஐ.நா. அமைப்பில் நடந்த வாக்கெடுப்புகளில் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில்லை. பாலஸ்தீனத்தில் `ஷாகீத்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வில் தங்களை கண்காணிப்பு அங்கத்தினராக்க வேண்டுமென்று ஷாகீத் அமைப்பு கேட்டிருந்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல், ஷாகீத் அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்புடையது. இந்த அமைப்பை அங்கத்தினராக்கக் கூடாது என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இஸ்ரேல…

    • 0 replies
    • 403 views
  23. முப்படைகளும் தயார்...கர்ஜிக்கும் இந்தியா...! எத்தனை நாடுகள் வந்தாலும் பதிலடி உண்டு..! ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று இரவு கூடுகிறது , இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், அதில் தங்கள் நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் மிக ரகசியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், கூட்டம் தொடர்பான தகவல்கள் வெளியில் தெரியாத அளவிற்கு அதில் ரகசியம் காக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்துசெய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டத்தை தெரிவித்ததுடன், சினாவுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்…

  24. புதுடெல்லி: பாகிஸ்தான் திடீரென ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதால் இருநாடுகளிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ தளபதி இன்று காஷ்மீர் செல்ல இருப்பது பரபரப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கி மத்திய அரசு கடந்த 5ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அன்று முதல் காஷ்மீரில் முன்னாள் முதல்வர், கட்சி தலைவர்கள் 174 பேர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவினர் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச…

    • 0 replies
    • 254 views
  25. இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலி இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானில் 57 பேர் பலியாகியுள்ளனர் எனவும் இரண்டுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை இந்தியாவின் காஸ்மீரிலும் பனிச்சரிவு காரணமாக பத்துபேர் உயிரிழந்துள்ளனர். பாக்கிஸ்தானின் நீலும் பள்ளத்தாக்கில் கடும் மழையின் பின்னர் இடம்பெற்றுள்ள பனிச்சரிவு காரணமாக பல கிராமத்தவர்கள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன பலர் காணாமல்போயுள்ளனர் அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.