Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா மரணங்களில் ஹிந்தியா தற்போது சீனாவை வென்று விட்டது. சீனா கொரோனா தொற்று ஏற்பட்டு.. 3 - 4 மாதங்களுக்குள் அதனை பெருமளவு கட்டுப்படுத்திய பின்னும்... கடந்த ஜனவரியில் இருந்து தொற்றுக் கண்டு வரும் ஹிந்தியாவில் இன்னும் தொற்றுக்கள் அதிகரிப்பதுடன்.. மொத்தக் கொரோனா மரண எண்ணிக்கை தற்போது சீனாவையும் தாண்டி விட்டது. ஆனால்.. இன்னும் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை. Posted at 5:165:16 BREAKINGIndia's death toll passes China More people have now died with Covid-19 in India than China, according to latest figures from India's health ministry. The number of deaths has increased to 4,706 - in comparison, China has confirmed 4,638. Wi…

  2. இந்தியாவில் 1 இலட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று புதிதாக 7300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 65 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 177 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4711 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 70 ஆயிரத்து 920 பேர் சிகிச்சைகளுக்குப் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 89 ஆயிரத்து 755 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். …

  3. வெட்டுக்கிளி படையெடுப்பு சொல்லும் செய்தி என்ன? கரோனா ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நாட்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருகிறது. வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள்தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்ற வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? இப்போது வடமாநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள், நம் பகுதிகளில் சாதாரணமாகக் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள்தான். இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை மிகவும் வ…

  4. நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர் காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார். லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார். இந்திய தளபத…

  5. இந்திய உளவு விமானம்; பாக்., சுட்டு வீழ்த்தியது? இஸ்லாமாபாத்: இந்திய ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில், சீனா படைகளை குவித்து வருவதால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளை குவிக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர், பாபர் இப்திகர் கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, ராக்சிக்ரி பகுதியில், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான, சிறிய ரக, ஆளில்லா உளவு விமானம், பாக்., பகுதிக்குள் 650 மீட்டர் துாரத்துக்கு ஊடுருவியது. அதை, பாக்., படையினர் சுட்டு வீழ்த்தியத…

  6. கொரோனாவை தொடர்ந்து இந்தியாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவில் மீண்டும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலுள்ள விவசாயப் பயிர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு படையெடுத்து விவசாயத்திற்கு "கடுமையான ஆபத்தை" ஏற்படுத்தும் என, ஐ.நா., உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் …

    • 2 replies
    • 765 views
  7. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளடக்கம் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளதுடன், ஜூன் முதலாம் திகதி முதல் ரயில் சேவையும் தொடங்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 139,237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4024 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,745 பேர் கொரோனா ப…

  8. லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா? புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளி…

  9. பாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா? - வேல் தர்மா 2020 ஜனவரியில் இந்திய படைத் தளபதி மனோஜ் நரவானே இந்தியப் பாராளுமன்றம் அனுமதித்தால் தமது படையினர் பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரைக் கைப்பற்றத்தயார் என்றார். 2020 பெப்ரவரி 23-ம் திகதி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தியா பாக்கிஸ்த்தான் ஆக்கிரமித்திருக்கும் கஷ்மீரை “மீளக் கைப்பற்றுவது” செய்யக் கூடிய ஒன்று ஆனால் இலகுவானதல்ல என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் இந்தியா செய்ய வேண்டி படை நடவடிக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. 1. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் தனது அமெரிக்கத் தயாரிப்பு F/A-18 Super Hornet விமானங்களுடனும் மற்ற போர்க்கப்பல்களுடனும் அர…

    • 5 replies
    • 1.2k views
  10. 5400 கோடி ரூபாயை செலுத்துமாறு அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு! சீனாவில் இயங்கி வரும் வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி 5400 கோடி ரூபாயை 21 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் செயற்பட்டு வரும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் அனில் அம்பானியின் நிறுவனங்கள் 2012ம் ஆண்டு வாங்கிய கடன் திரும்ப செலுத்தப்படவில்லை. இது குறித்த வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடன் தொகைக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. ஆகவே சீன வங்கிகளிடம் இருந்து பெற்ற 5400 கோடி ரூபாவை 21 நாட்களுக்குள் …

  11. கோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்! டெல்லி: சீனாவிற்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிராவின் ஜூக்நாத் உடன் தொலைபேசியில் பேசினார். இரண்டு நாடுகளிலும் பொருளாதார ரீதியான முதலீடுகளை செய்ய அவர் ஆலோசனை மேற்கொண்டார். எல்லைகளுக்கு குறி.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தற்போது எல்லையில் மோதல் ஏற்பட தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் இரண்டு நாடுகளும் தொடர்ந்து மோதி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது.இந்த நிலையில் சீனாவிற்கு எதிராக ஆசியாவில் இருக்க…

  12. அயோத்தி ராமர் கோயில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுப்பு- அயோத்தி அறக்கட்டளை ஒரு சிவலிங்கம், சில உடைந்த சிலைகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோயிலுக்காக அயோத்தியில் மிகப்பெரிய எந்திரங்களுடன் நிலத்தைச் சமப்படுத்தும் கட்டுமானப்பணிகள் மே 11ம் தேதி தொடங்கியுள்ளன. அப்போது 5 அடி சிவலிங்கம், 7 கருப்புத்தூண்கள், 6 செம்மணற்கல் தூண்கள், மற்றும் தெய்வங்கள், பெண் தெய்வங்களின் உடைந்த சிலைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அறக்கட்டளை கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள், வீடியோக்…

  13. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மீண்டும் கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடிப்பு: தலைநகரில் நடந்த அவலம்; தவறுதலாக நடந்துவிட்டதாக விளக்கம் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்று சமூகத்தில் குரல்கள் வலுத்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதர்களென்றும் பாராமல் அவர்கள் மீது கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடித்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், தவறுதலாக நடந்துவிட்டது, எந்திரக்கோளாறால் அவர்கள் மீது குழாய் பழுதடைந்து மருந்து தெளிக்கப்பட்டது என்று தெற்கு டெல்லி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நொய்டா, டெல்லி பகுதியில் பணியாற்றிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்…

  14. `1,200 கி.மீ; 7 நாள் சைக்கிள் பயணம்!’ - காயம்பட்ட தந்தையை சொந்த ஊரில் கொண்டுசேர்த்த 15 வயதுச் சிறுமி காயம்பட்ட தனது தந்தையை சைக்கிளில் அமர்த்தி சுமார் 1,200 கி.மீ தூரம் பயணித்து 15 வயதுச் சிறுமி ஒருவர் சொந்த ஊரை அடைந்திருக்கிறார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தற்போது நான்காவது கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வருமானம் ஏதுமின்றித் தினக்கூலி, புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலையில், தங்களைச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட…

  15. ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29-வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், அவரை பற்றிய நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு. மேலும், ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன மாற்றங்களை செய்திருப்பார் என்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தியை பற்றி தங்கபாலு தெரிவித்ததாவது;''இளைய பாரதத்தை கட்டி எழுப்பியவர் ராஜீவ் காந்தி, அவர் கொண்டு வந்த திட்டங்களால் தான் இன்று இந்தியா இந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ராஜீவ்காந்தி தான் அடித்தளமிட்டார். நாட்டின் வளர்…

  16. இந்திய பகுதிகளுக்கு உரிமைகோரும் நேபாளம்; எல்லைக்கு படைகளை அனுப்பியது சுரேந்திர பால் பிபிசிக்காக, காத்மண்டுவில் இருந்து Getty Images இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை, திங்களன்று, ஒப்புதல் அளித்துள்ளது. மகாகாளி (சாரதா) நதி தொடங்கும் இடம் தங்கள் நாட்டு எல்லைக்குள் இருக்கிறது என்று நேபாள அரசு கூறுகிறது. ஆனால் அதை இந்திய அரசு மறுக்கிறது. சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும…

  17. இந்தியாவின் பொருளாதாரம் கொரோனாவால் பாதிப்பு: 'உள்நாட்டு உற்பத்தி இந்தாண்டு சரியும்' - ரிசர்வ் வங்கி Getty Images இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 40 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.4%-இல் இருந்து 4% ஆகக் குறைந்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.75%-இல் இருந்து 3.35% ஆகக் குறைந்துள்ளது. ரெப்போ (repo rate) விகிதம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி, அந்நாட்டிலுள்ள வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். வங்கிகளிடம் இருந்து ஒரு நாட்டின் மத்திய வங்கி வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம்…

  18. விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய மத்திய அமைச்சர். 1987 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ருவிற்றர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் 1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இளம் அதிகாரியாக கடமையாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்துக் கூறி, டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் என மேலும் ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Hardeep Singh P…

  19. இறந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது – டெல்லி அரசு by : Krushnamoorthy Dushanthini கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாமல் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை கையாள்வது குறித்த புதிய கொள்கை முடிவுகளை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது இனி இறந்த உடல்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு குறி…

    • 0 replies
    • 421 views
  20. கொவிட்-19இன் தற்போதைய கட்டம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ’மரணஓலம்’ எம். காசிநாதன் / 2020 மே 18 இந்தியாவில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 ஆயிரத்தைக் கடந்து, இன்னும் சில தினங்களில் ஒரு இலட்சத்தைத் தொட்டுவிடும் நிலை காணப்படுகின்றது. இந்த, நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை, இதுவரை 2,876 பேர்தான் என்பது, முன்கூட்டியே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும், மாநில அரசுகளின் பல்வேறான தீவிர முயற்சிகளின் பலன் என்பது ஒருபுறத்தில் இருந்தாலும், 'கொரோனா வைரஸுடன் வாழப் பழகுவோம்' என்பது, நடைமுறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது. மக்கள் ஆங்காங்கே, முகக்கவசங்களுடன் ஓரிடத்திலிருந்து, வேறோர் இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 'மதுக் கடைகள்' திறக்கலாம் எ…

  21. இந்தியாவில் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்! பொருளாதார பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் ‘இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாக்கும் பொருளாதார சவால்களை சமாளித்தல்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1 இலட்சம் கோடி டொலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய 5 இலட்…

  22. உயிரிழந்த தனது ஒன்றரை வயது குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கவேண்டும் என நினைத்தும் சொந்த ஊருக்கு செல்ல முயலாமல் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் நிலைமையை இந்த புகைப்படம் எடுத்துக்கூறுகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் போக்குவரத்து முடக்கத்தால் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அரசு தரப்பில் இருந்து சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அவை போதுமானதாக இல்லை என்ற பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழில…

  23. பெங்களூருவின்`காட்பாதர்' மரணம்.. இறுதிச்சடங்கில் துப்பாக்கிச் சூடு சர்ச்சை -யார் இந்த முத்தப்பா ராய்?! ரியல் எஸ்டேட் பிசினஸில் இன்றைய தேதியில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான். மனைவி ரேகா இறந்தபிறகு இன்னும் சாதுவாகி மகன்கள் ராக்கி மற்றும் ரிக்கியை இயக்கத்தில் வளர்த்துவிட்டு அந்திமக் காலத்தில் வள்ளல் அவதாரம் எடுத்தார். பெங்களூருவின் `காட்பாதர்' என்று அழைக்கப்பட்ட முத்தப்பா ராய் புற்றுநோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு 68 வயது ஆகிறது. இவரது இறுதிச் சடங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது. யார் இந்த முத்தப்…

  24. "கொரோனா வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. அது சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது" என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆங்கில தொலைக்காட்சியான என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். "இது இயற்கையாக உருவான வைரஸ் இல்லை என்பதால், இதனுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பல நாடுகள் இதற்கான தடுப்பூசி தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன" என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். கொரோனா தொற்று தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இவ்வாறு முதன்முறையாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டு வைக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், கொரோனா வைரஸ் சீன ஆய்…

    • 0 replies
    • 395 views
  25. சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு by : Dhackshala நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இயக்கப்பட்ட 542 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இந்திய ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த 542 சிறப்பு ரயில்களில் இதுவரை 448 ரயில்கள் அந்தந்த ஊர்களை சென்றடைந்துவிட்டன. இன்னமும் 94 ரயில்கள் பயணத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு (1), ஆந்திரம் (1), பீகார் (117), உத்தரப்பிரதேசம் (221), மத்தியப் பிரதேசம் (38), ஒடிசா (29) உள்ளிட்ட ரயில்களும் அடங்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த சிறப்பு ர…

    • 0 replies
    • 385 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.