Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எயார் இந்தியாவின் பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானம்! எயார் இந்தியாவின் பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஒப்புதல் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் எயார் இந்தியா விமானச்சேவை நிறுவனம் 7,600 கோடி இந்திய ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது. இந்த நிலையிலேயே, அந்த நிறுவனத்தின் 95 சதவீத பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/எயார்-இந்தியாவின்-பங்குக/

  2. மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் – சேவைகள் முடக்கம் மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (புதன்கிழமை) நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக பல சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய தூத்துக்குடி துறைமுக பகுதியில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்…

  3. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். …

  4. 9000 கோடியில் ஒரு ரூபாய் கூட விஜய் மல்லையா செலுத்தவில்லை – உச்ச நீதிமன்றில் மத்திய அரசு! 9000 கோடி கடனில் ஒரு ரூபாய் கடனில் விஜய் மல்லையா இதுவரை ஒரு ரூபாயைக்கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதையடுத்து, அவரது சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதனை அடுத்து கடன்களை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாகவும்,‌ தனது மற்றும் தனது உறவினர்களின் சொத்துகளை முடக்கும் வேலைகளை நிறுத்தக் கோரியும் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனு, உச்சநீதிமன்ற த…

  5. ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 600 குழந்தைகள் உயிரிழப்பு! ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுவரை 600 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, குறை பிரசவம், சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களே பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கே.கே.லான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவ…

  6. பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் , மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். பெஷாவரின் சம்கனி போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில், அந்த இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இளைஞர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சங்லா மாவட்டத்தை சேர்ந்த ரவுந்தர் சிங் என்பதும், திருமணத்திற்காக பொருட்கள் வ…

  7. வங்கதேசத்தின், முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு, பண மோசடி வழக்கில், கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர், சுரேந்திர குமார் சின்ஹா, 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த, முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா, தற்போது, அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் மீது, வங்கதேசத்தில் பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக, சின்ஹா உள்ளிட்ட, 11 பேர் மீது, ஊழல் தடுப்பு கமிஷன், வங்கதேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, 10 பேர், விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள், வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்…

    • 0 replies
    • 409 views
  8. சுலைமானி கொல்லப்பட்டது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்கர் ஒருவர் பலியானார். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதல், சுலைமானியின் உத்தரவால் நடத்தப்பட்டது. பல அப்பாவி மக்களின் மரணத்துக்கு அவர் காரணமாக இருந்தார். இந்தியா, இங்கிலாந்தில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களிலும் சுலைமானியின் பங்களிப்பு இருந்தது. அவரது தீவிரவாத ஆட்சி முடிந்து விட்டது. மத்திய கிழக்கு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதத்தை தூண்டி நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியவர் சுலைமானி. அமெரிக்கா நேற்று முன்தினம் செய்ததை, வெகு காலத்துக்கு…

    • 1 reply
    • 864 views
  9. தாதாசாகேப் அமிதாப்: குவியும் வாழ்த்து! மின்னம்பலம் இந்திய சினிமாவுக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய பணியை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய சினிமாவின் மிகவும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை இன்று (டிசம்பர் 29) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சனுக்கு வழங்கினார். இதுவரை நான்கு முறை நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற அமிதாப் பச்சன், தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மற்ற மிகவும் மதிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ளார். 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி படத்தில் அறிமுகமான அமிதாப் பச்சனுக்கு, 1972ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சீர் திரைப்படம் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவதற்கு வித்திட்டது. 1984 இல் உ.பி மாநிலம் அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்…

    • 2 replies
    • 723 views
  10. மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்து, அதனூடாக கடனை ஈடுசெய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மல்லையாவின் யு.பி.ஹெ.ச்.எல்.நிறுவனத்தின் வசமுள்ள பங்குகள் உள்ளிட்டவற்றை வங்கிகளால் விற்பனை செய்ய முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷா் நிறுவனத்தின் உரிமையாளா் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளாா். இந்நிலையில் அவருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. …

  11. 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் உள்ளிட்ட 24 நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிலைக்குழு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்திய கடற்படையிடம் தற்போது 15 மரபுரீதியிலான ((conventional submarines)) நீர்மூழ்கிகள் இருப்பதாகவும், மேலும் ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் குத்தகை அடிப்படையில் ((lease)) பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நீர்மூழ்கிகளில் 13, பதினேழு ((17)) முதல் 31 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று சுட்டிக்காட்டியுள்ள நிலைக்குழு, ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் ஏவுகணை தாங்கும் அரிஹந்த் ரக நீர்மூழ்கிகளுடன் சேர்த்து, 18 மரபுரீதியிலான…

  12. சிங்­கப்­பூரின் அர­ச­க­ரும மொழி­களில் ஒன்­றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணு­வதில் சிங்­கப்பூர் அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. தமிழ்­மொழி சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தில், பாட­சா­லை­களில் தாய்­மொ­ழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அச்சு ஊட­கங்­களும், இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களும் தமி­ழுக்கு மிகவும் ஆத­ர­வாக இருப்­ப­துடன், ஏனைய உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வு­க­ளிலும் தமிழ்­மொழி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம், சீன­மொழி மற்றும் மலே மொழி ஆகி­ய­வற்­றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்­டு­க்களில் அச்­சி­டப்­ப­டு­கி­றது. தமி­ழுக்­கு­ரிய அந்த அந்­தஸ்தை எந்தத் தடங்­க­லு­மின்றித் தொடர்ந்து பேணு­வதில் அர­சாங்கம் முழு­மை­யான உறு­தி­யுடன் இருக்­கி­றது. …

  13. அமைதிப் படையில் பணியாற்றியவர் இந்திய ராணுவத்தின் புதிய தளபதி! மின்னம்பலம் நம் நாட்டின் ராணுவத் தளபதியாக இதுவரை பொறுப்பு வகித்த பிபின் ராவத் இன்றோடு (டிசம்பர் 31) ஓய்வுபெறுவதை ஒட்டி, ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்த ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். புதிய ராணுவத் தளபதியின் வயது 62. இவர் 2022 ஏப்ரல் வரை ராணுவத் தளபதியாக பதவி வகிப்பார். ஜெனரல் ராவத்துக்குப் பிறகு ராணுவத்தில் மூத்த அதிகாரியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் நாரவனே, கடந்த செப்டம்பர் 1 முதல் துணைத் தளபதியாக செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்னர், அவர் இந்திய இராணுவத்தின் கிழக்கு கட்டளைக்கு தலைமை தாங்கினார். ராணுவத்தில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் பணி…

  14. பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படுவதாக மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய வங்கி கணக்கு ஆரம்பிக்க இலட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள, வருமான வரி விலக்கு பெற, 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கும் பான் அட்டை அவசியமாகிறது. இந்நிலையில், பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான காலக்கெடு ஏற்கனவே பலமுறை நீடிக்கப்பட்டது…

  15. நித்யானந்தாவின் ஆசிரமம் இடிப்பு December 29, 2019 சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று (28) இடிக்கப்பட்டுள்ளத. அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் மிகப்பெரிய கல்விக் குழுமப் பாடசாலையின் கிழக்குப் பகுதியில்தான் நித்யானந்தாவின் ஆசிரமம் அமைந்திருந்தது. இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மகள்கள் தற்போது நித்யானந்தாவின் கட்டுமுப்பாட்டில் இருப்பதாக ஜனார்த்தன சர்மா என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் பின்னர்தான் குறித்த பாடசாலை வளாகத்தில் நித்தி ஆசிரமம் இருப்பதே தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரமத்தில் சோதனை நடத்திய குஜராத் அரச அதிகாரிகள் அங்கிருந்த இரு மேலாளர்களைக் க…

  16. பிரியங்காவின் காதை பிடித்து திருகியதாக குற்றச்சாட்டு – பொலிஸ் மறுப்பு உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியை சந்திக்க சென்றபோது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன் கழுத்தைப் பிடித்து திருகியதாக காங்கிரஸ் பொது பிரியங்கா முன்வைத்த குற்றச்சாட்டை பொலிஸார் மறுத்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிவருகின்றன. இந்நிலையில் உ.பி. மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சந்திப்பதற்காக பிரியங்கா சென்றபோது அவரை பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு ம…

  17. டெல்லியில் கடுங்குளிர்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லியில் நிலவும் கடுமையான குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 2.4 டிகிரி செல்சியசுக்கு வெப்ப நிலை சென்றது. டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையிலான பனிக்காலத்தில் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும். இந்த ஆண்டும் வரலாறு காணாத பனிப்பொழிவு உள்ளது. கடந்த சில வாரங்களாகக் குளிர் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் பனி மூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காலையில் நீண்ட நேரமாகியும் மக்க…

  18. ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு! ராஜஸ்தானில் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில், இந்த மருத்துவமனையில் 2014ல் பிறந்த 1198 குழந்தைகளும், இந்தாண்டு டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போதியளவான ஆக்சிஜன் வசதி இல்லாததே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. http://athavannews.com/ராஜஸ்தான…

  19. மதமாவது ? மொழியாவது ? இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் !! அதிரடி ஆர்.எஸ்.எஸ். !! தெலுங்கானா மாநிலம் இப்ராகிம்பட்டினத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டு நாள் ‘விஜய சங்கல்ப சிபிரம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் , . “இந்தியா பாரம்பரியமாகவே ‘இந்துத்துவா’ நாடுதான்; அதனடிப்படையில் நாட்டின் 130 கோடி மக்களையும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ‘இந்து சமூகம்’ என்றே ஆர்எஸ்எஸ் கருதுகிறது” என்று கூறினார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருவரை, ‘இந்து’ என்று அழைக்கும் போது, இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்றே அர்த்தம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பாரதத்…

  20. மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்! மின்னம்பலம் சூரிய கிரகணத்தின் போது, 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். மூட நம்பிக்கையால் இவ்வாறு செய்ததற்கு சமூக ஆர்வலர் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரிய வகை நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது. இன்று காலை 8 மணி தொடங்கி 11.20 வரை தோன்றியது. இதனை பொது மக்கள் சூரிய கண்ணாடி அணிந்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஒரு சில இடங்களில் மேகமூட்டம் இருந்ததால் அதைக் காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இச்சமயத்தில் சில நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன.…

  21. ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள்: ஜெகன்மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை அமைப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியும் அவருடைய அமைச்சர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) முடிவெடுக்கவுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக செல்ல முயன்ற தெலுங்கு தேசம் தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பலரும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமராவதியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்க அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சட்டமன்றத்தில் ஆந்திராவுக்கு கர்னூல், அமராவதி, விசாகப்பட்டினம் ஆகிய மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்…

  22. ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது ஏன்? மின்னம்பலம் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஜார்க்கண்டில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தலில் அதிக இடத்தில் வென்ற ஆளும் கட்சியான பாஜக தோல்வியைச் சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதுவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதியில் 11 தொகுதியில் வெற்றி பெற்றது பாஜக. தற்போது சட்டமன்றத் தேர்தலில் ஜெஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் போட்டியிட்டு வெற்றி பெற…

  23. வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும் தலைமைத் தளபதி செயற்படுவார் எனவும் அவர் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும் தெரியவந்துள்ளது. எனினும் முதலாவது தலைமைத் தளபதி யார் என அறிவிக்கப்படவில்லை. தற்போதைய இராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்…

  24. குடியுரிமை இல்லாதவர்களை அமித்ஷா என்ன செய்யப் போகிறார் தெரியுமா..?? நீங்களே பாருங்கள்..!! குடியுரிமை கிடைக்காதவர்களை தடுத்து வைக்க தடுப்புக்காவல் முகாம்களை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில் அசாமில் தடுப்பு முகாம்கள் அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பாகிஸ்தான் , ஆப்கனிஸ்தான் , வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப் படுத்துவதற்காக கொண்டுவரப்…

  25. ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி – முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கனிமவளங்கள் நிறைந்த மாநிலமான ஜார்க்கண்டில் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 81 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், ஜே.எம்.எம் கட்சியும் மாறி மாறி முன்னிலை வகித்தன. பின்னர் நண்பகல் முதல் ஜே.எம்.எம், காங்கிரஸ் கூட்டணி வலுவாக முன்னிலை பெற்று முன்னேறியது. மாலை 6.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 4…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.