Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சையில் உதவும் தப்லிக் ஜமாத் அமைப்பினர் டெல்லியின் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணமடைந்த பலர் தங்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாக்களை (ஊநீர்) வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னும் பலருக்கு அந்த பிளாஸ்மாக்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்க முடியும். இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று பரவ தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். எனவே தற்போது இந்தியாவின் பல மாநிலங…

  2. இந்தியாவில் உச்சம்... 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 195 பேர் மரணம் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 195 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்பது மாநில அரசுகளின் கருத்து. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் நேற்று மட்டும் 195 பேர் மரணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 14,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவில் மொத்தம் 583…

  3. காஷ்மீரில் இருந்து வெளிமாநிலத்தவர்கள், வெளியேறி வருவதாக... அறிவிப்பு! காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நீடித்து வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரை 11 பேர் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பதால், வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட காடுகளில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http…

  4. அன்னை தெரசா தொடங்கிய 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' அமைப்பு வெளிநாட்டு நிதி பெற அனுமதி மறுத்த இந்திய அரசு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் சமூக சமையலறை உணவு வழங்கும் காட்சி - கோப்புப் படம் அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளது இந்திய அரசு. ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிககளைக் கொண்டுள்ள 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' என்கிற அமைப்பு, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பராமரிப்பு இல்லங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மிக மோசமான உடல் நலம் கொண்டோரைப் பராமரிக்கும் இல்லம் போன்றவை…

  5. இந்தியா... ஆயுத உற்பத்தியில், தற்சார்பு நிலையை அடைய வேண்டும் – நரவனே இந்தியா ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், உக்ரைன் போரை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் இந்தியா போர்களை எதிர்கொள்ள ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். சொந்த நாட்டின் ஆயுத உற்பத்தியை வைத்து போரை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் போர்கள் மூளலாம் . அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உக்ரைன் போர் நமக்கு உணர்த்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1271079 ################## …

  6. யஷ்வந்த் சின்ஹா: குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிப்பு 21 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யஷ்வந்த் சின்ஹா முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சித் தல…

  7. பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பயணிகள் ரயில் தடம் புரண்டதால் எட்டு பேர் காயம்! பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான் மாவட்டத்தின் பேஷி பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் இன்ஜின் உட்பட 8 பெட்டிகள் தடம் புரண்டன. அந்த இடம் மலைப்பாங்கான பகுதியில் உள்ளதால் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்கொள்வதாக துணை ஆணையர் போலன் ஆகா சமியுல்ல…

  8. ஜி-20 மாநாட்டைப் புறக்கணிக்கும் உலகத் தலைவர்கள்: மோடிக்கு பின்னடைவா? SelvamSep 01, 2023 07:56AM இந்தியாவில் செப்டம்பர் 9 -10 தேதிகளில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பேசுப்பொருளாக மாறியுள்ளது; இந்தியப் பிரதமர் மோடிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். டெல…

  9. வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. பதிவு: நவம்பர் 22, 2019 16:53 PM புதுடெல்லி குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் 5388 பேரும்…

  10. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி சட்டபூர்வமானது எனவும் இதனை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பெண் வழக்கறிஞர் புனீத் கவுர் தண்டா என்பவர் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஒரு மனுவை இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார். இந்த மனுவில் “மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியானது எனவும் சட்டப்பூர்வமானது என்றும் அறிவித்து, அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். அரசியல் கட்ச…

  11. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமர் இருந்த மன்மோகன் சிங், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்தவர். அத்துடன் மத்திய நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …

  12. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் சிறைத்தண்டனை இரத்து! மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட்டின் சிறைத்தண்டனையை இரத்துச் செய்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடுகடந்து இலங்கையில் வாழும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட்டிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுச் சிறைத்தண்டனையே தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாலைத்தீவில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த முஹம்மது நஷீட், பின்னர் ஆட்சியை பிடித்த அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் அரசாங்கத்தால் பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆண்டு சிறைக்காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முறையான வகையில்…

  13. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அலட்சியம் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோதி பேசினார். சென்னை அருகே புதன்கிழமை நடந்த அதிமுக தலைமையிலான கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி, "தமிழகம் நலம்பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஜெயலலிதா கனவு கண்ட முன்னேற்ற பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்" என்று பேசினார். சென்னை சென்ட்ரலு…

  14. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்தை, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. மேலும், இதனை நிறைவேற்ற ஐரோப்பிய யூனியனின் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து ஜெர்மனி செயல்பட்டு வருகின்றது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும். அதேநேரம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். எனினும், தற்போது வரை இத்தீர்மானம் மீது ஐரோப்பி…

  15. அரசு பணியில் உள்ள பெண்கள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும், 6 மாதம் பிரசவ விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Published:Today at 6 AMUpdated:Today at 6 AM மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகள் பராமரிப்புக்கு பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் கிடையாது. இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என…

  16. இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு! அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் 80-ஜி(2),(பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இராமர் கோயில் கட்டுவதற்கு பெரிய கம்பனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற வழிவகை ஏற்பட்டிருப்பதாகவும் நன்கொடைத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத…

  17. '1965' போர்: சிறப்பு ஆபரேஷனில் சறுக்கிய பாகிஸ்தான் - இந்தியா சுற்றி வளைத்தது எப்படி? ரெஹான் ஃபைசல் பிபிசி செய்தியாளர், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFENCE.PK படக்குறிப்பு, விமானத்திலிருந்து குதிக்கும் வீரர்கள் 1965 செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தானின் பி -57 விமானம் இந்திய நிலைகள் மீது குண்டு வீச புறப்பட்டபோது, மூன்று சி - 130 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் அதைப் பின்தொடர்ந்து, இந்திய எல்லையை நெருங்கின. ஒவ்வொரு விமானத்திலும் சிறப்புப் படைக் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர். இரவ…

  18. உக்ரைன்- ரஷ்யா போரில்... இந்தியாவின் நிலைப்பாடு, கண்காணிக்கப் பட்டது. இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றை அடுத்து ஊரடங்கு காலம் தொடங்கியதில் இருந்து சுமார் 80 கோடி பேருக்கு இந்தியா உணவளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்பினாலும் அதற்காக இந்தியாவின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் சமரசம் செய்ய முடியாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித…

  19. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பா.ஜ.கவுக்கும் கவலைதான்: அமித் ஷா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பிரச்சனைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வு கொண்டுவர…

  20. ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு: அரியணை ஏறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி ஐ.ஏ.என்.எஸ்ஹைதராபாத், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. அதேசமயம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி இழக்கிறது. ராஜகசேகர் ரெட்டியிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறார். மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 21 இடங…

  21. இந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப். டெல்லி: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா பராமரித்து வரும் பூடானின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை விட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை வெளியேற மறுத்துவிட்டது.இதையடுத்து இந்தியா கடுமையாக போராடி அவர்களை வெளியேற்றியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது போர் தொடுக்கவும் சீனா தயாரானது அதை எதிர்கொள்ள இந்தியாவும் தயாரானது. எனினும் சீன ராணுவத்தினர் டோக்லாமை விட்டு வெளியேறியதால் போர் மூளவில்லை. டோக்லாம் இந்த ப…

  22. கொரோனா இந்தியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது NurPhoto / getty இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 681 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 4,257 பேர் குணமடைந்துள்ளனர். 16,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று பிறப்பித்த அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். …

  23. லடாக் எல்லையில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேர் அணிவகுத்துள்ளதாக தகவல்! லடாக் எல்லையில் ஸ்பாங்கர் கேப் எனுமிடத்தில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேராக கைக்கெட்டும் தூரத்தில் அணி வகுத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் சீனா இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் படைகளைத் திரும்பப்பெற மறுத்து வருகிறது. சீனாவின் ஏராளமான பீரங்கிகளும் அங்கு அணிவகுத்துள்ளன. சிகரங்களில் இந்தியா தனது தேசியக் கொடியைப் பறக்கவிட்ட நிலையில் அந்த சிகரங்களில் உள்ள இந்தியப் படையினரை அங்கிருந்து வெளியேற்ற சீனா முயன்று வருகிறது. சீனப்படைகள் முன்னேற விடாமல் தடுக்க இந்தியாவும் பெருமளவுக்கு படைகளைக் குவித்துள்ளது. …

  24. ஐ.நா.அமைதிப்படையில்... இந்திய இராணுவம், பங்களிப்பு! ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது. உலகெங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையானது, 14 தளங்களில் 5,400 அமைதிப்படையினர் கடமையாற்றி வருவதோடு அதில் எட்டுப்பகுதிகள் சவாலுக்குரியவையாக உள்ளன. உலக அமைதியின் நலனுக்காகவும், மக்கள் ஆணையைப் பாதுகாப்பதற்காகவும் செயற்படும் ஐ.நா.அமைதிப்படைகளில் இந்திய இராணுவக் குழுக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதனால் இந்திய அமைதி காக்கும் படையினரின் தொழில்முறை மற்றும் துணிச்சலான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கோ, லெபன…

  25. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை! ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது அகீஃப் முஹாஜிர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார். முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர். ஆனால, தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.